Tuesday, 12 May 2026

கோவில் மற்றும் பள்ளிகளுக்கு அருகே உள்ள “717” மதுபான கடைகளை மூட உத்தரவிட்ட முதலமைச்சர் திரு. C.ஜோசப் விஜய் மற்றும் அவரது தலைமையிலான அரசாங்கத்திற்கு வாழ்த்துக்கள்!

                                                                                                         பத்திரிகை செய்தி (12-05-2026) 

         தொடர்புக்கு : 88704-72174

கோவில் மற்றும் பள்ளிகளுக்கு அருகே உள்ள “717” மதுபான கடைகளை மூட உத்தரவிட்ட முதலமைச்சர் திரு. C.ஜோசப் விஜய் மற்றும் அவரது தலைமையிலான அரசாங்கத்திற்கு வாழ்த்துக்கள்!

மது மற்றும் போதை பொருள்களுக்கு எதிரான நடவடிக்கை:

நடந்து முடிந்த 17வது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றி கழகத்திற்கும், அதன் தலைவர் முதலமைச்சர்  திரு. விஜய் அவர்களுக்கு  சட்ட பஞ்சாயத்து இயக்கம் தன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. 

சட்ட பஞ்சாயத்து இயக்கம் 2016 ஆம் ஆண்டு மது விலக்கு ஆண்டாக அறிவித்து பல அற வழி போராட்டங்களை கையில் எடுத்தது. ஆனால், இதுவரை படிப்படியாக  மது விலக்கு கொண்டு வரும் முயற்சியை பெரிதாக முந்தைய ஆட்சியாளர்கள் எடுக்கவில்லை. குறிப்பாக பெண்கள் படும் இன்னல்களும், இளைஞர்களும் தவறான பாதைக்கு செல்லும் பழக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், ஆட்சி வந்த முதல் நாட்களிலேயே போதை பொருளை கட்டுப்படுத்த தனிப்படை அலகுகள் மற்றும் கோவில்,பேருந்து நிலையம்  மற்றும் பள்ளிகளுக்கு அருகே அமைந்துள்ள “717”  மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூட உத்தரவிட்டதின் மூலம், மது மற்றும் போதைப்பொருளால் மக்கள் படும் பாட்டை அறிந்து, கட்டுப்படுத்த, புதிதாக பொறுப்பேற்ற அரசாங்கம் எடுத்த நல்ல முயற்சியை சட்ட பஞ்சாயத்து இயக்கம் முழு மனதோடு வரவேற்கிறது. இத்துடன் நிற்காமல், மேலும் மதுக்கடைகளை மூடவும் மற்றும் மாற்று பொருளாதார வலிமையை உருவாக்க  தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம். மேலும்  2024-25 நிதியாண்டின் படி தமிழ்நாடு அரசாங்கத்திற்கு மதிப்பு கூட்டு வரி(VAT) மற்றும் கலால் வரி(excise duty) வாயிலாக 48,344 கோடி ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது. அதில் குறைந்தபட்சம்  ஒரு சதவீதமான 480 கோடி ரூபாய் ஒதுக்கி போதை மறுவாழ்வு மையம் புதிதாக ஏற்படுத்திடவும், பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் நடவடிக்கை  வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மேலும், வெளிப்படையான நிர்வாகம் என்பது நல்ல அரசாங்கத்தின் அணிகலன். அதற்கேற்ப, திரு. விஜய் அவர்கள் வெள்ளை அறிக்கை வெளியிடவும், வெளிப்படையான, ஊழலற்ற அரசாங்கம் அமைப்பேன் என உறுதி அளித்து இருக்கிறார். இந்த நல்ல சமிக்ஞையை, சட்ட பஞ்சாயத்து இயக்கம் முழு மனதோடு வரவேற்கிறோம்.

அதை எடுத்து காட்டும் விதமாக,  அடுத்தடுத்த செயல்பாடுகளாக,
லோக் ஆயுக்த சட்ட திருத்தம்,
சேவை உரிமை சட்டம் அமல்படுத்த,
தகவல் அறியும் சட்டம் சிறப்பாக செயல்பட, 
உள்ளாட்சிகளுக்கு அதிகார பகிர்வு கொடுத்திட ,
அரசியல் தலையீடு இல்லாமால் லஞ்ச ஒழிப்பு துறை  இயங்க,
அரசு அதிகாரிகளை கண்காணிக்க திடமான உத்தரவுகளை இட வேண்டும் என இயக்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

நல்ல அரசாங்கம் செயல்பட ஆரம்ப நாள்களே மிக முக்கியமானது. ஆகையால், நல்லாட்சி கொடுத்திட மேலே குறிப்பிட்ட அனைத்து நடவடிக்கைகள் எடுக்க விரைந்து முடிவு எடுத்து, நடைமுறைப்படுத்திட சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டு கொள்வதோடு, திரு. C.ஜோசப் விஜய் அவர்களுக்கும் வெற்றி பெற்ற அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்த நிலைப்பாட்டை பொதுமக்களாகிய நீங்கள் ஆதரிக்கும் பட்சத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்துடன் இணைந்து பயணிக்க அழைக்கிறோம்.(87545 - 80269 )

நீங்கள் இந்த நிலைப்பாட்டிற்கு missed call (7667 -100 -100 ) கொடுத்தும் ஆதரிக்கலாம்!

K.சம்சுகனி ,

தலைவர்,
88704-72174

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269

Satta Panchayat Iyakkam

Member : http://bit.ly/2021spimember |  

Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

Monday, 5 January 2026

SPI Press Release - பொருளாதார சமூக அநீதியை கண்டிக்கிறோம்! தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் -Tamil Nadu Assured Pension Scheme (TAPS) - மக்கள் வரிப்பணத்தை அரசு அதிகாரிகளுக்கு வாரி இறைக்கும் திமுக அரசு

                                                                         சட்ட பஞ்சாயத்து இயக்கம்

பத்திரிகை செய்தி (5-01-2026) 

தொடர்புக்கு : 9942288439

பொருளாதார சமூக அநீதியை கண்டிக்கிறோம்!

கடைநிலை தூய்மை பணியாளருக்கும் , சுகாதார பணியாளருக்கும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க இல்லாத  வரிப்பணம் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு   மட்டும் இருப்பது ஏன் ?

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் -Tamil Nadu Assured Pension Scheme (TAPS) - மக்கள் வரிப்பணத்தை அரசு அதிகாரிகளுக்கு வாரி இறைக்கும் திமுக அரசு 

 தமிழ்நாடு பட்ஜெட்டில் ஆபத்தான நிதிச்சுமை:

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் ரூ. 3 லட்சத்து 86,797 கோடி கடன் வாங்கிக் குவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் 2024–25 மற்றும் 2025–26 நிதிநிலை அறிக்கைகள் (Budget Citizen's Guide) காட்டும் உண்மை ஒன்று தான் – மாநில நிதி நிலை இன்று மிகக் கடுமையான நெருக்கடியில் உள்ளது. இன்று அரசு கஜானா திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்ட கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், அரசியல் லாபத்திற்காக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (TAPS) அறிவிக்கப்பட்டிருப்பது, மாநிலத்தின் நிதி மேலாண்மையையும் சமூக நீதியையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

2024–25 பட்ஜெட்: சம்பளம் – ஓய்வூதியம் ஏற்கனவே மிகப் பெரிய சுமை

மொத்த வருவாய் செலவீடு (Revenue Expenditure): ₹3,48,289 கோடியாகும்

சம்பளச் செலவு : ₹84,932 கோடி

ஓய்வூதியம் மற்றும் ஓய்வுபெறல் பலன்கள் : ₹34,722 கோடி

சம்பளம் + ஓய்வூதியம் = ₹1,22,596 கோடி. 

இது மொத்த வருவாய் செலவீட்டில் சுமார் 44% ஆகும்.

மேலும், மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் (State Own Tax Revenue – SOTR) சுமார் 62% ஆகும். பெரும்பங்கு அரசு ஊழியர் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கே செலவிடப்படுகிறது.

2025–26 பட்ஜெட் மதிப்பீட்டின் படி,

சம்பளச் செலவு : ₹90,464 கோடி

ஓய்வூதியம் & ஓய்வுபெறல் பலன்கள் : ₹41,290 கோடி

சம்பளம் + ஓய்வூதியம் = ₹1,31,754 கோடி.

இந்த நிலைமைக்கிடையில், TAPS மூலம், வருடத்திற்கு அரசுக்கு கூடுதல் செலவாக ₹13,000 கோடி.

இதனால், மொத்த சுமை = ₹1,44,754 கோடி

மாநில சொந்த வரி வருவாயில் சுமார் 65% ! மொத்த வருவாய் செலவீட்டில் சுமார் 44%! 

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கே செலவிடப்படும் நிலை. அடுத்தடுத்து வரும் வருடங்களில் உயர வாய்ப்பு உள்ளது.

TAPS செலவை யார் ஏற்கப் போகிறார்கள்?

முதலமைச்சர் "TAPS-க்கு கொண்டு வருவதற்கு மொத்த தேவையான ₹13,000 கோடியை அரசு ஏற்றுக்கொள்ளும்" என்று அறிவித்துள்ளார்.

ஆனால் அந்தப் பணமானது முதலமைச்சரின் சொந்த பணமா?  திமுக கட்சியின் சொந்த பணமா?

மக்களிடமிருந்து வரி என்ற பெயரில் வசூலிக்கப்படும் பணமே. இந்த நிதிச் சுமையை சரிகட்ட ஒன்று தமிழக மக்கள் மீதான வரி அதிகரிக்கப்படும் இல்லையென்றால் தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு சேவைகளுக்கான பணம் இதற்காக செலவிடப்படும் எப்படி பார்த்தாலும் மக்களுக்கு மிகப்பெரும் சுமையாகவே இந்த புதிய உறுதியளிக்கப்பட்டய்வூதியத் திட்டம் இருக்கப்போகிறது

TAPS காரணமாக,ஒரு தமிழ்நாட்டு குடிமகன் ஆண்டுக்கு சுமார் ₹1,530.

 நான்கு பேர் கொண்ட குடும்பம் ஆண்டுக்கு சுமார் ₹6,120 கூடுதல் வரிச்சுமையை ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

மிகச்சரியாக சொல்ல வேண்டுமானால் 2% மக்களுக்காக 98% மக்களின் உழைப்பு காற்றில் பறக்கவிடப்படுகிறது?!

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மொத்த மக்கள் தொகையில் சுமார் 2% மட்டுமே. ஆனால்,20 லட்சம் அரசு ஊழியர்களுக்காக,8.5 கோடி தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்படுகிறது.

இது சமூக நீதியா?

அல்லது சமூக பொருளாதார நீதியா?

அல்லது அரசியல் சமரசமா?

ஓய்வூதியத்தின் அடிப்படை நோக்கம் மறக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியத்தின் நோக்கம்:

ஓய்வூதியம் என்பது ஒரு அரசு அதிகாரி அடிப்படை வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, மரியாதையான வாழ்க்கை வாழாத்தானேயொழிய செல்வம் சேர்க்க அல்ல.

வளர்ந்த நாடுகளில் அரசு  அதிகாரிகளுக்கென்ற தனி ஓய்வூதியம் கிடையாது.

அனைத்து முதியவர்களுக்கும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அடிப்படையான ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது . 

ஆனால் TAPS, ஓய்வூதியத்தை சமூக பாதுகாப்பு திட்டமாக அல்ல, தேர்தல் அரசியலுக்கான வாக்குறுதியாக மாற்றுகிறது. 

இதனால் மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆபத்து. தமிழ்நாடு அரசு ஏற்கனவே, கல்வி,சுகாதாரம்,ஊட்டச்சத்து,வேலைவாய்ப்பு,கிராம & நகர்ப்புற மேம்பாடு

போன்ற துறைகளுக்கு நிதி தேவைப்படும் நிலையில் உள்ளது.

இந்தச் சூழ்நிலையில்,மேலும் ₹13,000 கோடி ஓய்வூதியச் சுமை

எதிர்காலத்தில் மக்கள் நலத் திட்டங்களை நேரடியாக பாதிக்கும்.

JACTTO–GEO நியாமில்லாத கோரிக்கை போராட்டம்:
மக்கள் நலனில் அக்கரை உள்ளவர்கள் போல் காட்டிக்கொள்ளும் ஜாக்டோ  ஜியோ அமைப்பினர்,  லஞ்சம் வாங்கும் ஊழியர்களை யூனியனில் சேர்த்து கொள்ளமாட்டோம், அரசு அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் இயற்றி அதற்கு போராட தயாரா? அரசை மிரட்டி மக்களை வதைத்து சுயநலன்களை நிறைவேற்றி கொல்ல தான் உங்களுக்கு யூனியங்களும் சங்கங்களும் தேவைப்படுகின்றதா?

TAPS அறிவிப்புடன், தற்போது JACTTO–GEO போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், சம வேலை – சம ஊதியம்,ஊதிய முரண்பாடு,மற்ற நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளன. 

TAPS என்பது,
            தவறான நிதி மேலாண்மை!

மக்கள் வரிப்பணத்தை பொறுப்பின்றி ஊதாரித்தனமாக செலவிடும் செயல்!

மாநிலத்தின் எதிர்கால கஜானாவை காலியாக்கும் திட்டம்!

திமுக அரசு இன்று,

98% மக்களுக்கான அரசாக அல்லாமல்,

2% அரசு ஊழியர்களுக்கான அரசாகவே செயல்படுகிறது.

கடைநிலை தூய்மை பணியாளர் நியாமான போராட்டத்தை அடக்குமுறையை கொண்டு அடக்கியது. சுகாதார பணியாளரின் நியாமான சம்பள உயர்வு கோரிக்கையை இழுத்து அடிக்கிறது. இவை இரண்டுமே திமுக வாக்குறுதியில் இருந்தவை.

இந்த சமூக பொருளாதார அநீதியான TAPS திட்டத்தை சட்ட பஞ்சயாத்து இயக்கம் கடுமையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு மிகக் கடுமையான நிதிச் சுமையில்த்தளித்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் உரிய நிதி ஆதாரங்களை ஏற்படுத்தாமல் கொண்டுவரப்படும் இந்த ஓய்வூதிய திட்டம் தமிழகத்தின் நிதி மேலாண்மை மற்றும் நிதி பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். எனவே உரிய நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி, அரசு கஜானா வளமையான பிறகு வேண்டுமானால் இந்த TAPS ஓய்வூதியத் திட்டத்தை பரிசீலிக்கலாம். 

ஆ.ஜெய்கணேஷ்                                                                                                                                                                     பொது செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்.

தொடர்புக்கு,                                                                                                                                        

அருள் முருகானந்தம்
மாநில செயலாளர் 9942288439 

சட்ட பஞ்சாயத்து இயக்கம்.

Satta Panchayat Iyakkam

Member : http://bit.ly/2021spimember |  

Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

Saturday, 20 December 2025

Wednesday, 16 October 2024

பத்திரிகையாளர்கள் செய்தி - சட்ட பஞ்சாயத்து இயக்கம் Vs தமிழ்நாடு தகவல் ஆணையம்! - மக்கள் உரிமைக்கு கிடைத்த வெற்றி! விடுதலை!

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

பத்திரிகை செய்தி

சென்னை

                                                                                                                        16-10-2024

சட்ட பஞ்சாயத்து இயக்கம் Vs தமிழ்நாடு தகவல் ஆணையம்!

மக்கள் உரிமைக்கு கிடைத்த வெற்றி! விடுதலை!

மாநில தகவல் ஆணைய விசாரணையின் போது நாற்காலியில் அமர்ந்து பதில் அளித்ததால் சட்ட பஞ்சாயத்து இயக்க நிறுவனர் திரு. சிவ இளங்கோ மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்கு - 140 வாய்தா, 10 ஆண்டுகள் விசாரணையை கடந்த நிலையில் நேற்று 15-அக்டோபர்-2024 செவ்வாய் கிழமை சைதாப்பேட்டை 18-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திரு. சிவ இளங்கோ அவர்களை விடுதலை செய்து தீர்ப்பு!

இன்று மாநிலத் தகவல் ஆணையத்தில், தகவல் ஆணையர் முன்பு அமர்ந்து பேசும் ஒவ்வொரு குடிமகனின் உரிமைக்காகவே, எண்ணற்ற ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், உண்ணாவிரதம், பொய் வழக்கு-விசாரணை, சிறைவாசம், பத்து ஆண்டுகால வழக்கு விசாரணை அலைக்கழிப்பு என அனைத்து நெருக்கடிகளையும் கடந்து விடுதலைப் பெற்றுள்ளோம்.

10 ஆண்டுகள் வழக்கு விசாரணை, 140 வாய்தா என்று பல்வேறு திருப்பு முனைகளுடன், மக்கள் உரிமைக்காக நிற்கும் சட்ட பஞ்சாயத்து இயக்க நிறுவனர் திரு. சிவ இளங்கோ அவர்களுக்கும் அதிகாரத் திமிரில் பொய் வழக்கு தொடுத்த முன்னாள் தலைமைத் தகவல் ஆணையர் திரு.  கே.எஸ்.ஸ்ரீபதி அவர்களுக்குமான வழக்கில் நேற்று செவ்வாய்க்கிழமை 15-10-2024 சைதாப்பேட்டை 18-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திரு. சிவ இளங்கோ அவர்களை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த நீண்ட நெடியப் போராட்டத்தில் உடனிருந்து பங்களித்த இயக்க நிர்வாகிகள், இயக்க உறுப்பினர்கள், இயக்க ஆதரவாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், ஊடக நண்பர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இணைப்பு: 

பத்திரிகை செய்திசட்ட பஞ்சாயத்து இயக்கம் Vs தமிழ்நாடு தகவல் ஆணையம்! மக்கள் உரிமைக்கு கிடைத்த வெற்றி! விடுதலை!

சம்சுகனி

தலைவர்

சட்ட பஞ்சாயத்து இயக்கம்         

தொடர்பு: 99521 82452 | 87545 80269

Satta Panchayat Iyakkam

Member : http://bit.ly/2021spimember |  

Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

Tuesday, 9 April 2024

ஊடகச் செய்தி.. ஏப்ரல் 9, 2024 | "சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாடு"

ஊடகச் செய்தி.. ஏப்ரல் 9, 2024

சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் "Thirukkural Translations in World Languages" என்ற முக்கியத்துவம் வாய்ந்த திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த ஆய்வுநூல் வெளியிடப்பட்டது.

ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாடு, ஏப்ரல் 5-7, 2024 தேதிகளில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்று முடிந்தது. இவ்விழாவில் உலகத்தின் பல நாடுகளிலிருந்து ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், திருக்குறள் ஆர்வலர்கள், அமெரிக்காவின் பல்வேறு தமிழ்ச்சங்க மக்கள், மாணவர்கள் என்று அனைவரும் சங்கமிக்கும் ஒரு பெரும் மாநாடாக நடந்தேறியது. இம்மாநாட்டை சிகாகோ தமிழ்ச்சங்கம் முன்னெடுத்துப் பல அமைப்புகளையும் ஒருங்கிணைத்துச் செய்துள்ளது.

அதன் ஒரு பகுதியாகத் தமிழறிஞர் -பட்டிமன்ற நாயகர் பேராசிரியர் திரு சாலமன் பாப்பையா அவர்களால், வலைத்தமிழ் பதிப்பக வெளியீடாக வந்துள்ள உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் (Thirukkural Translations in World Languages) என்ற ஆங்கில நூல் நேற்று சிகாகோவில் வெளியிடப்பட்டது. இந்நூலை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவைத் தலைவர் முனைவர். பாலா சாமிநாதன், சிகாகோ தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. நம்பிராஜன் வைத்திலிங்கம், தமிழறிஞர் முனைவர்.மருதநாயகம், ஹார்வார்ட் தமிழிருக்கை புரவலர்கள் மருத்துவர். விஜய் ஜானகிராமன், மருத்துவர் சம்பந்தம், திருக்குறள் ஆர்வலர் திரு. தாமஸ் ஹிட்டோஷி புருக்ஷ்மா உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

இதற்கான ஒருங்கிணைப்பை சிகாகோ தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் திரு.சரவணக்குமார் மணியன் , நூலாசிரியர்கள் திரு. இளங்கோ தங்கவேல், மிசௌரி, திரு. செந்தில் துரைசாமி, டெக்ஸாஸ் ஆகியோர் மிக நேர்த்தியாகச் செய்திருந்தனர்.

திருக்குறள் இதுவரை எத்தனை மொழிகளில் உலக அளவில் இதுவரை வெளியிடப்பட்டுள்ளது என்பதற்குச் சரியான தரவுகள் இல்லை, ஆவணப்படுத்தப்படவில்லை , இதுகுறித்து இதுவரை ஒருங்கிணைந்த முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்பதையும், ஆங்காங்கே முன்னெடுக்கப்பட்ட சில முயற்சிகள் முழுமையடையவில்லை என்பதை அறிந்து வட அமெரிக்காவில் ஒரு குழு அமைத்து "உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை வாசிங்டன் வட்டாரத்தைத் தமிழ்ச்சங்கத்தின் மேனாள் தலைவர், வலைத்தமிழ் நிறுவனர் வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி 2018 ஆம் ஆண்டு தொடங்கினார்.
 
இத்திட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளராக மிசௌரி மாகாணத்தில் வசிக்கும் திரு.இளங்கோ தங்கவேலு பொறுப்பேற்றார். மேலும் டெக்சாஸிலிருந்து திரு.செந்தில் துரைசாமி, இந்தியாவிலிருந்து மொழி பெயர்ப்பு சேகரிப்பு பணியில் 25 ஆண்டுகள் கள அனுபவம் வாய்ந்த கானுயிர் மருத்துவர் NVK அஷ்ரஃப் ,வள்ளுவர் குரல் குடும்பத்தின் நிறுவுநர்-ஒருங்கிணைப்பாளர் சி இராஜேந்திரன் IRS ( Retd) ,அஜெய் செல்வன் என்ற குறளார்வம் கொண்ட இளைஞர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இக்குழு உலக நாடுகளைத் தொடர்புகொண்டு அனைத்து நாடுகளிலும் வெளிவந்துள்ள திருக்குறள் மொழிபெயர்ப்புகளைத்  தொகுத்து , அச்சுப்பிரதிகளை சென்னைக்குக் கொண்டுவந்து தொகுத்தல் , எத்தனை மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு வந்துள்ளது, எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கவேண்டும் என்ற முழுத் தகவலுடன் ஒரு ஆய்வறிக்கையை ஒரு முழு நூலாக அனைவரும் இனி நம்பிக்கையுடன் பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டது.

கடும் தொடர் முயற்சிகளின் விளைவாக 220 பக்கங்கள் கொண்ட உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் என்ற பல வண்ண ஆங்கில நூல் தற்போது வெளிவந்துள்ளது.

உலகப் பொதுமறை என்று வழங்கப்படும் திருக்குறள் உலகில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கிறது. முதல் மொழிபெயர்ப்பு 1595 ஆம் ஆண்டு மலையாளத்தில் வந்தது என அறியப்படுகிறது . அதன் பிறகு 1730 ஆம் ஆண்டு லத்தின் மொழியில் வீரமாமுனிவர் மொழிபெயர்த்தார். அது முதல், காலந்தோறும் திருக்குறள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வந்தது . ஜி யு போப்  திருக்குறள் முழு நூலையும் ஆங்கிலத்தில் முதன் முதலாக மொழி பெயர்த்தார் என்பதுபோன்ற பல்வேறு அரிய தகவல்களை ஆண்டு வாரியாக, மொழி வாரியாக பட்டியலிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

திருக்குறள் இதுவரை ஆங்கிலத்தில் 130 முறையும் , மலையாளத்தில் 30 முறையும், இந்தியில் 20 முறையும்,
 தெலுங்கில் 19 முறையும் , பிரென்ச் மொழியில் 16 முறையும், கன்னடத்தில் 12 முறையும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதுபோன்ற அரிய ஆய்வுத் தகவல்கள் ஆண்டுவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது. .

இந்த மொழிபெயர்ப்பு முயற்சிகள் ,பெரும்பகுதி தனி மனிதர்களின் ஆர்வத்தினால் தான்  நடைபெற்று வந்தது. ஆனால் மத்தியச் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தொடங்கிய பிறகு சற்றே இந்தப் பணிகள் வேகமெடுத்தது.

திருக்குறள் தேசிய நூலாக்கப்பட வேண்டும் ,திருக்குறளுக்கு யுனெஸ்கோவின் "மனித இனத்தின் பாரம்பரிய நூல்" என்ற அங்கீகாரம் பெற வேண்டும் என்ற முயற்சிகள் பல்லாண்டு காலமாக நடைபெற்று வருகின்றது.

இந்த முயற்சிகள் முழுதாக வெற்றி பெற வேண்டும் என்றால் இதுவரை திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்ற தகவல் உறுதுணையாக இருக்கும். வெளிவந்த மொழிபெயர்ப்புகளில் பல இன்று அச்சில் இல்லை. அனைத்தையும் அடையாளம் கண்டு மீட்டுருவாக்கம் செய்து , இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழிகளும், வெளிநாடுகளில் அவரவர் தாய்மொழியிலும் கிடைக்கச் செய்வதே உலகப்பொதுமறை என்பதன் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றவும், திருக்குறள் பரவலாக்கல் முழுமையாக நடைபெறவும் உதவும்.

இத்திட்டக் குழுவின் ஆய்வில் இதுவரை திருக்குறள் 29 இந்திய மொழிகளிலும், 29 வெளிநாட்டு மொழிகளிலும்  மொழிபெயர்க்கப்பட்டுள்ளது . ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு அலுவல் மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் யுனெஸ்கோவின் பத்து அலுவல் மொழிகளில் போர்ச்சுக்கீஸ் தவிர மற்ற ஒன்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது பெரும் செய்தி.

உலக நாடுகள் அனைத்திலும் திருக்குறள் சென்று சேர வேண்டுமானால் உலக நாடுகளில் அலுவல் மொழியாக உள்ள 158 மொழிகளில் இன்னும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட வேண்டும் . அவ்வாறு செய்தால் எல்லா நாடுகளின் ஒரு அலுவல் மொழியிலாவது திருக்குறள் மொழிபெயர்ப்பு வந்திருக்கும் என்ற நிலையை எட்டி விடலாம் .

இதற்காக உலகமெங்கும் உள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் ஆங்காங்கே மொழிபெயர்ப்பாளர்களை இனம் கண்டு தனியாகவோ அல்லது செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் வழியாகவோ இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற முழுமையான திட்டத்துடன் "திருக்குறள் 2030" என்ற திட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதற்கான சிறப்பு இலச்சினை (Logo ) சிகாகோ விழாவில் வெளியிடப்பட்டது.

1. இதுவரை வெளிவந்துள்ள 58 திருக்குறள் மொழிபெயர்ப்புகளில் அச்சில் இல்லாத மொழிபெயர்ப்புகளை அடையாளம் கண்டு மீட்டுருவாக்கம் செய்வதும், (ஆ)வெளிநாடுகளில் வெளியிடப்பட்டு பெரிய அளவு பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் மொழிபெயர்ப்புகளை உரியப் புரிந்துணர்வுடன் அச்சிடுவதும், (இ) இதற்கென சென்னையில் திருக்குறளுக்கான ஒரு தனித்த பதிப்பகத்தை உருவாக்கிக் கிடைக்கச் செய்வதும் இத் திட்டத்தில் அடங்கும் .

2. இதுவரை மொழிபெயர்க்கப்படாமல் இருக்கும் ஐக்கிய நாடுகள் அவையில் உள்ள உறுப்பு நாடுகளின் 158 அலுவல் மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பைக் கொண்டுவர உலகத் தமிழ்ச் சமூகத்திடம் கொண்டுசென்று அனைத்து மொழிபெயர்ப்புகளையும் சாதகமான வழிகளில், வாய்ப்புள்ள அமைப்புகளின் வழியே செய்துமுடித்தல்.

3. தமிழ்நாட்டில் தொடங்கி வெவ்வேறு மாநில தமிழ்ச்சங்கங்களுடன் இணைந்து அந்தந்த மாநில முதல்வர்களைச் சந்தித்து அவர்கள் மொழியில் உள்ள திருக்குறள் மொழிபெயர்ப்புகளை மாநில பரிசுப்பொருளாகப் பயன்படுத்த வேண்டுகோள் வைத்தல்.

4. உரிய வழிகளில் அனைத்து நாட்டுத் தூதர்களையும் சந்தித்து அவர்கள் நாட்டு மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பையும், ஆங்கில மொழி பெயர்ப்பையும் பரிசுப் பொதியாகக் கொடுத்து அதை அவர்கள் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் அலுவல் சார்ந்த சந்திப்புகளில் பரிசாகப் பயன்படுத்தக் கோரிக்கை வைப்பது.

5. Thirukkural Translations in World Languages நூலைப் பல நாடுகளில், இந்தியாவின் பல மாநிலங்களில் , தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில், அமெரிக்காவின் பல மாநிலங்களில் அடுத்த 7 ஆண்டுகளில் அறிமுக விழா நடத்தி திருக்குறள் மொழிபெயர்ப்புகளைச் செய்யும் “திருக்குறள் 2030” தன்னார்வலர்களை ஊக்குவிப்பது.

6. திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கச் செய்தல். 50 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கோரிக்கையை நடைமுறைப்படுத்தச் சரியான காலமாக உணர்ந்து செய்துமுடிக்க உரிய வழிகளை ஏற்படுத்துதல்.
 
7. நீண்டநாள் கோரிக்கையாக உள்ள யுனெஸ்கோ அமைப்பு திருக்குறளை "Heritage Book of Mankind” என்று அறிவிப்பதை உறுதிசெய்யச் சரியான நடைமுறை சாத்தியங்களை ஏற்படுத்துதல். ஆகிய நோக்கங்களுக்காகப் பல்வேறு துறைசார் அனுபவம் கொண்ட ஆளுமைகளின் குழுக்கள் அமைக்கப்படுகிறது.
 
வெளியிடப்பட்ட நூலின் விவரம்: 218 பக்கங்கள், முழு வண்ண நூல், வலைத்தமிழ் பதிப்பகம்,
நூலை வாங்க: https://estore.valaitamil.com  (அமெரிக்கா, இந்தியா)

நூல் மதிப்புரை செய்ய, நூலாசிரியர்களிடம் நேர்காணல் செய்ய, திருக்குறள் 2030 திட்டம் குறித்த முழுவிவரம் அறியத் தொடர்புகொள்ளவும்.
 
ஊடகத் தொடர்புக்கு: அ.சுரேஷ் ,
thirukural2030@gmail.com | கைப்பேசி: +91 9884411637
 
சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாடு | ஊடகச் செய்தி.. ஏப்ரல் 9, 2024

ஊடகச் செய்தி.. ஏப்ரல் 9, 2024

சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் "Thirukkural Translations in World Languages" என்ற முக்கியத்துவம் வாய்ந்த திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த ஆய்வுநூல் வெளியிடப்பட்டது.

ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாடு, ஏப்ரல் 5-7, 2024 தேதிகளில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்று முடிந்தது. இவ்விழாவில் உலகத்தின் பல நாடுகளிலிருந்து ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், திருக்குறள் ஆர்வலர்கள், அமெரிக்காவின் பல்வேறு தமிழ்ச்சங்க மக்கள், மாணவர்கள் என்று அனைவரும் சங்கமிக்கும் ஒரு பெரும் மாநாடாக நடந்தேறியது. இம்மாநாட்டை சிகாகோ தமிழ்ச்சங்கம் முன்னெடுத்துப் பல அமைப்புகளையும் ஒருங்கிணைத்துச் செய்துள்ளது.

அதன் ஒரு பகுதியாகத் தமிழறிஞர் -பட்டிமன்ற நாயகர் பேராசிரியர் திரு சாலமன் பாப்பையா அவர்களால், வலைத்தமிழ் பதிப்பக வெளியீடாக வந்துள்ள உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் (Thirukkural Translations in World Languages) என்ற ஆங்கில நூல் நேற்று சிகாகோவில் வெளியிடப்பட்டது. இந்நூலை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவைத் தலைவர் முனைவர். பாலா சாமிநாதன், சிகாகோ தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. நம்பிராஜன் வைத்திலிங்கம், தமிழறிஞர் முனைவர்.மருதநாயகம், ஹார்வார்ட் தமிழிருக்கை புரவலர்கள் மருத்துவர். விஜய் ஜானகிராமன், மருத்துவர் சம்பந்தம், திருக்குறள் ஆர்வலர் திரு தாமஸ் ஹிட்டோஷி புருக்ஷ்மா உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

இதற்கான ஒருங்கிணைப்பை சிகாகோ தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் திரு.சரவணக்குமார் மணியன் , நூலாசிரியர்கள் திரு. இளங்கோ தங்கவேல், மிசௌரி, திரு. செந்தில் துரைசாமி, டெக்ஸாஸ் ஆகியோர் மிக நேர்த்தியாகச் செய்திருந்தனர்.

திருக்குறள் இதுவரை எத்தனை மொழிகளில் உலக அளவில் இதுவரை வெளியிடப்பட்டுள்ளது என்பதற்குச் சரியான தரவுகள் இல்லை, ஆவணப்படுத்தப்படவில்லை , இதுகுறித்து இதுவரை ஒருங்கிணைந்த முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்பதையும், ஆங்காங்கே முன்னெடுக்கப்பட்ட சில முயற்சிகள் முழுமையடையவில்லை என்பதை அறிந்து வட அமெரிக்காவில் ஒரு குழு அமைத்து "உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை வாசிங்டன் வட்டாரத்தைத் தமிழ்ச்சங்கத்தின் மேனாள் தலைவர், வலைத்தமிழ் நிறுவனர் வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி 2018 ஆம் ஆண்டு தொடங்கினார்.
 
இத்திட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளராக மிசௌரி மாகாணத்தில் வசிக்கும் திரு.இளங்கோ தங்கவேலு பொறுப்பேற்றார். மேலும் டெக்சாஸிலிருந்து திரு.செந்தில் துரைசாமி, இந்தியாவிலிருந்து மொழி பெயர்ப்பு சேகரிப்பு பணியில் 25 ஆண்டுகள் கள அனுபவம் வாய்ந்த கானுயிர் மருத்துவர் NVK அஷ்ரஃப் ,வள்ளுவர் குரல் குடும்பத்தின் நிறுவுநர்-ஒருங்கிணைப்பாளர் சி இராஜேந்திரன் IRS ( Retd) ,அஜெய் செல்வன் என்ற குறளார்வம் கொண்ட இளைஞர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இக்குழு உலக நாடுகளைத் தொடர்புகொண்டு அனைத்து நாடுகளிலும் வெளிவந்துள்ள திருக்குறள் மொழிபெயர்ப்புகளைத்  தொகுத்து , அச்சுப்பிரதிகளை சென்னைக்குக் கொண்டுவந்து தொகுத்தல் , எத்தனை மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு வந்துள்ளது, எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கவேண்டும் என்ற முழுத் தகவலுடன் ஒரு ஆய்வறிக்கையை ஒரு முழு நூலாக அனைவரும் இனி நம்பிக்கையுடன் பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டது.

கடும் தொடர் முயற்சிகளின் விளைவாக 220 பக்கங்கள் கொண்ட உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் என்ற பல வண்ண ஆங்கில நூல் தற்போது வெளிவந்துள்ளது.

உலகப் பொதுமறை என்று வழங்கப்படும் திருக்குறள் உலகில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கிறது. முதல் மொழிபெயர்ப்பு 1595 ஆம் ஆண்டு மலையாளத்தில் வந்தது என அறியப்படுகிறது . அதன் பிறகு 1730 ஆம் ஆண்டு லத்தின் மொழியில் வீரமாமுனிவர் மொழிபெயர்த்தார். அது முதல், காலந்தோறும் திருக்குறள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வந்தது . ஜி யு போப்  திருக்குறள் முழு நூலையும் ஆங்கிலத்தில் முதன் முதலாக மொழி பெயர்த்தார் என்பதுபோன்ற பல்வேறு அரிய தகவல்களை ஆண்டு வாரியாக, மொழி வாரியாக பட்டியலிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

திருக்குறள் இதுவரை ஆங்கிலத்தில் 130 முறையும் , மலையாளத்தில் 30 முறையும், இந்தியில் 20 முறையும்,
 தெலுங்கில் 19 முறையும் , பிரென்ச் மொழியில் 16 முறையும், கன்னடத்தில் 12 முறையும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதுபோன்ற அரிய ஆய்வுத் தகவல்கள் ஆண்டுவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது. .

இந்த மொழிபெயர்ப்பு முயற்சிகள் ,பெரும்பகுதி தனி மனிதர்களின் ஆர்வத்தினால் தான்  நடைபெற்று வந்தது. ஆனால் மத்தியச் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தொடங்கிய பிறகு சற்றே இந்தப் பணிகள் வேகமெடுத்தது.

திருக்குறள் தேசிய நூலாக்கப்பட வேண்டும் ,திருக்குறளுக்கு யுனெஸ்கோவின் "மனித இனத்தின் பாரம்பரிய நூல்" என்ற அங்கீகாரம் பெற வேண்டும் என்ற முயற்சிகள் பல்லாண்டு காலமாக நடைபெற்று வருகின்றது.

இந்த முயற்சிகள் முழுதாக வெற்றி பெற வேண்டும் என்றால் இதுவரை திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்ற தகவல் உறுதுணையாக இருக்கும். வெளிவந்த மொழிபெயர்ப்புகளில் பல இன்று அச்சில் இல்லை. அனைத்தையும் அடையாளம் கண்டு மீட்டுருவாக்கம் செய்து , இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழிகளும், வெளிநாடுகளில் அவரவர் தாய்மொழியிலும் கிடைக்கச் செய்வதே உலகப்பொதுமறை என்பதன் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றவும், திருக்குறள் பரவலாக்கல் முழுமையாக நடைபெறவும் உதவும்.

இத்திட்டக் குழுவின் ஆய்வில் இதுவரை திருக்குறள் 29 இந்திய மொழிகளிலும், 29 வெளிநாட்டு மொழிகளிலும்  மொழிபெயர்க்கப்பட்டுள்ளது . ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு அலுவல் மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் யுனெஸ்கோவின் பத்து அலுவல் மொழிகளில் போர்ச்சுக்கீஸ் தவிர மற்ற ஒன்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது பெரும் செய்தி.

உலக நாடுகள் அனைத்திலும் திருக்குறள் சென்று சேர வேண்டுமானால் உலக நாடுகளில் அலுவல் மொழியாக உள்ள 158 மொழிகளில் இன்னும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட வேண்டும் . அவ்வாறு செய்தால் எல்லா நாடுகளின் ஒரு அலுவல் மொழியிலாவது திருக்குறள் மொழிபெயர்ப்பு வந்திருக்கும் என்ற நிலையை எட்டி விடலாம் .

இதற்காக உலகமெங்கும் உள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் ஆங்காங்கே மொழிபெயர்ப்பாளர்களை இனம் கண்டு தனியாகவோ அல்லது செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் வழியாகவோ இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற முழுமையான திட்டத்துடன் "திருக்குறள் 2030" என்ற திட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதற்கான சிறப்பு இலச்சினை (Logo ) சிகாகோ விழாவில் வெளியிடப்பட்டது.

1. இதுவரை வெளிவந்துள்ள 58 திருக்குறள் மொழிபெயர்ப்புகளில் அச்சில் இல்லாத மொழிபெயர்ப்புகளை அடையாளம் கண்டு மீட்டுருவாக்கம் செய்வதும், (ஆ)வெளிநாடுகளில் வெளியிடப்பட்டு பெரிய அளவு பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் மொழிபெயர்ப்புகளை உரியப் புரிந்துணர்வுடன் அச்சிடுவதும், (இ) இதற்கென சென்னையில் திருக்குறளுக்கான ஒரு தனித்த பதிப்பகத்தை உருவாக்கிக் கிடைக்கச் செய்வதும் இத் திட்டத்தில் அடங்கும் .

2. இதுவரை மொழிபெயர்க்கப்படாமல் இருக்கும் ஐக்கிய நாடுகள் அவையில் உள்ள உறுப்பு நாடுகளின் 158 அலுவல் மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பைக் கொண்டுவர உலகத் தமிழ்ச் சமூகத்திடம் கொண்டுசென்று அனைத்து மொழிபெயர்ப்புகளையும் சாதகமான வழிகளில், வாய்ப்புள்ள அமைப்புகளின் வழியே செய்துமுடித்தல்.

3. தமிழ்நாட்டில் தொடங்கி வெவ்வேறு மாநில தமிழ்ச்சங்கங்களுடன் இணைந்து அந்தந்த மாநில முதல்வர்களைச் சந்தித்து அவர்கள் மொழியில் உள்ள திருக்குறள் மொழிபெயர்ப்புகளை மாநில பரிசுப்பொருளாகப் பயன்படுத்த வேண்டுகோள் வைத்தல்.

4. உரிய வழிகளில் அனைத்து நாட்டுத் தூதர்களையும் சந்தித்து அவர்கள் நாட்டு மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பையும், ஆங்கில மொழி பெயர்ப்பையும் பரிசுப் பொதியாகக் கொடுத்து அதை அவர்கள் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் அலுவல் சார்ந்த சந்திப்புகளில் பரிசாகப் பயன்படுத்தக் கோரிக்கை வைப்பது.

5. Thirukkural Translations in World Languages நூலைப் பல நாடுகளில், இந்தியாவின் பல மாநிலங்களில் , தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில், அமெரிக்காவின் பல மாநிலங்களில் அடுத்த 7 ஆண்டுகளில் அறிமுக விழா நடத்தி திருக்குறள் மொழிபெயர்ப்புகளைச் செய்யும் "திருக்குறள் 2030" தன்னார்வலர்களை ஊக்குவிப்பது.

6. திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கச் செய்தல். 50 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கோரிக்கையை நடைமுறைப்படுத்தச் சரியான காலமாக உணர்ந்து செய்துமுடிக்க உரிய வழிகளை ஏற்படுத்துதல்.
 
7. நீண்டநாள் கோரிக்கையாக உள்ள யுனெஸ்கோ அமைப்பு திருக்குறளை "Heritage Book of Mankind" என்று அறிவிப்பதை உறுதிசெய்யச் சரியான நடைமுறை சாத்தியங்களை ஏற்படுத்துதல். ஆகிய நோக்கங்களுக்காகப் பல்வேறு துறைசார் அனுபவம் கொண்ட ஆளுமைகளின் குழுக்கள் அமைக்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட நூலின் விவரம்: 218 பக்கங்கள், முழு வண்ண நூல், வலைத்தமிழ் பதிப்பகம்,
நூலை வாங்க: https://estore.valaitamil.com  (அமெரிக்கா, இந்தியா)

நூல் மதிப்புரை செய்ய, நூலாசிரியர்களிடம் நேர்காணல் செய்ய, திருக்குறள் 2030 திட்டம் குறித்த முழுவிவரம் அறியத் தொடர்புகொள்ளவும்.

ஊடகத் தொடர்புக்கு: அ.சுரேஷ் ,
thirukural2030@gmail.com | கைப்பேசி: +91 9884411637

Saturday, 2 March 2024

'நம்ம ஊரு விளையாட்டுத் திடல்’ என்ற பெயரில் ஊராட்சிகளின் உரிமைகளைப் பறிப்பதா? - தன்னாட்சி கண்டன அறிக்கை

'நம்ம ஊரு விளையாட்டுத் திடல்' என்ற பெயரில் ஊராட்சிகளின் உரிமைகளைப் பறிப்பதா?

தன்னாட்சி கண்டன அறிக்கை

100 நாள் வேலைத் திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் - 2005, (MGNREGA-2005) பகுதி 16(1) இன் படி இத்திட்டத்தின் கீழ் என்ன வேலைகளைச் செய்ய வேண்டும்; எங்கு, எப்பொழுது செய்ய வேண்டும்; அதற்கான பட்ஜெட், ஆண்டு வேலைத் திட்டம் போன்ற அனைத்தையும் முடிவு செய்து, ஒப்புதலளிக்கும் அதிகாரம், தொடர்புடைய கிராம ஊராட்சியின் கிராமசபைக்கே உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் நடைமுறையில் இதில் பல குளறுபடிகள் நடந்து வருவதாகவும், முடிவுகள் ஊராட்சி ஒன்றிய அலுவலக அளவில் எடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது சார்ந்த போராட்டங்களும் ஆங்காங்கே நடந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில் பிப்ரவரி 2, 2024 அன்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் (RC No 30450/ 2023/ MGNREGS I-2 Dt.: 2/2/2024), 'நம்ம ஊரு விளையாட்டுத் திடல்' என்ற பெயரில் தமிழ்நாடு பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டதை, 2023-24 நிதியாண்டின் MGNREGA வேலைகளில் விளையாட்டு திடல் அமைப்பதையும் சேர்க்கச் சொல்லியும் கிராமசபையில் ஒப்புதல் வாங்கி மார்ச் 31, 2024 க்குள் பணிகளை முடிக்கும்படியும் விளையாட்டுப் பொருட்களை வாங்குவதற்கு ஊராட்சிகளின் நிதிகளான மத்திய நிதிக்குழு ஆணைய நிதி, மாநில நிதிக்குழு ஆணைய நிதிகளோடு, நமக்கு நாமே திட்ட நிதி, மாவட்ட சுரங்க நிதி மற்றும் தனியார் நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதிகள் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஆணை பிறப்பித்துள்ளது தமிழ்நாடு அரசு.

MGNREGS இன் 2023-2024 க்கான திட்ட வழிகாட்டுதல்களின் படி, அடுத்த நிதியாண்டில் செய்ய வேண்டிய வேலைகளைக் கண்டறியும் பொறுப்பு கிராம ஊராட்சியைச் சார்ந்ததாகும். கிராம ஊராட்சி வேலைகளைக் கண்டறிந்து அதைப் பணிகளின் தொகுப்பாக (Shelf of Projects) மாற்றி கிராமசபையில் ஒப்புதல் பெற வேண்டும். பின்பு அதற்கான தொழிலாளர் வரவுசெலவு அறிக்கையை (Labour Budget) ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலர்களின் உதவியுடன் தயாரித்து அதையும் அடுத்த ஆண்டிற்கான பணித்திட்டமாகத் தயாரித்து (Annual Action Plan) கிராமசபையில் ஒப்புதல் பெற வேண்டும். ஒருவேளை கணக்கிட்ட மக்களை விட அதிக மக்கள் வேலை கேட்டால் அதற்கான மறுபரிசீலனை செய்யப்பட்ட லேபர் பட்ஜெட்டையும் (Revised Labour Budget) தயாரித்து கிராமசபையில் வைத்து ஒப்புதல் வாங்க வேண்டும். அதனடிப்படையிலேயே இந்திய ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் நிதிகளை வழங்க வேண்டும் என்பதையே சட்டமும் அதன் வழிகாட்டுதல்களும் கூறுகின்றன. ஆனால் இவை எதையும் கடைபிடிக்காமல் குறிப்பாகக் கிராம ஊராட்சிகளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல், இந்த விளையாட்டுத் திடல் அமைக்கக் கூறி மாநில அரசு இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளது. அதையும் இந்த நிதியாண்டின் இறுதியிலேயே அவசர கதியில் முடிக்கக் கூறுகிறது இக்கடிதம். கிராம ஊராட்சிகளில் நிறைவேற்றக்கூடிய மக்கள் திட்டங்கள் கீழிருந்து மேலே செல்ல வேண்டும் (Bottom Up Planning Approach) என்ற MGNREGA சட்டத்தின் அடிப்படைக் கருத்தாக்கத்திற்கு முற்றும் எதிராக உள்ளது அரசின் இந்தச் செயல்பாடு. அரசின் உள்ளாட்சி அதிகாரங்களுக்கு எதிரான போக்கிற்கு தன்னாட்சி கடும் கண்டனங்களைப் பதிவு செய்கிறது.

மேலும் தமிழ்நாடு அரசு, மாநில அளவில் திட்டங்களை அறிவித்துவிட்டு அதற்கான நிதியை ஊராட்சிகளின் சொந்த நிதியில் இருந்து எடுத்துச் செய்ய ஊராட்சிகளை நிர்பந்திப்பது என்பதைத் தொடர்ச்சியாக செய்து வருகிறது. தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள இந்த விளையாட்டுத் திடல் திட்டத்திற்கான நிதியையும் மாநில அரசு அதன் சொந்த நிதியிலிருந்து ஒதுக்காமல், ஊராட்சிகளின் நிதியான MGNREGA திட்ட நிதியைப் பயன்படுத்தக் கூறியிருக்கிறது. மேலும் கிராம ஊராட்சிகளுக்கு வரவேண்டிய நிதிகளான மத்திய நிதிக்குழு ஆணைய நிதி, மாநில நிதிக்குழு ஆணைய நிதி போன்றவற்றைப் பயன்படுத்தி விளையாட்டுப் பொருட்களை வாங்குமாறும் இக்கடிதம் கூறுகிறது. தமிழ்நாடு அரசின் நிதியைக் கையாள்வதற்கு தமிழ்நாடு அரசுக்கு எந்த அளவுக்குச் சுதந்தரம் உள்ளதோ அதேபோல் ஊராட்சிகளின் நிதியைக் கையாளுவதற்கு ஊராட்சிகளுக்கு முழுச் சுதந்தரம் உண்டு. மக்களுக்கு சரியான வழியில் திட்டங்களைக் கொண்டு சேர்ப்பதில் முனைப்பு காட்டுவதை விட, மக்களுக்கான திட்டங்களை மக்களே முடிவெடுத்து செய்யும் படி அவர்களை அதிகாரப்படுத்துவதே முக்கியமானது என்ற அடிப்படையில், ஊராட்சிகளுக்கு அவர்கள் நிதியைக் கையாளுவதற்கான சுதந்தரமும் பயிற்சியும் வழங்காமல், ஊராட்சிகளை கிராமசபைகளை அதிகாரப்படுத்தாமல், அலுவலர்களை வைத்து ஆட்சி நடத்திய ஆங்கிலேய காலனி ஆட்சி முறையை, உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை, அதன் மன்றங்களை, குறிப்பாகக் கிராமசபையைத் துளி கூட மதிக்காமல் மாவட்ட ஆட்சியர், நகர உள்ளாட்சி ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள் போன்றோரை வைத்தே ஆட்சி நடத்தலாம் என்ற எண்ணத்தை, செயலை மாநில சுயாட்சி கேட்கும் நமது தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

எனவே,

1. அரசு தற்போது வெளியிட்டிருக்கும் 'நம்ம ஊரு விளையாட்டுத் திடல்' திட்டத்தை, மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது தன்னாட்சி. ஒருவேளை அது முடியாவிட்டால், திட்டத்தை அவசர கதியில் நடைமுறைப்படுத்தாமல், உரிய சட்ட வழிமுறைகளின் படி, கிராமசபையின் முறையான ஒப்புதலோடு விருப்பப்படும் ஊராட்சிகள் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும். 

2. இத்திட்டம் மூலம் விளையாட்டுப் பொருள்களை வாங்குவதற்கு ஊராட்சிகளின் நிதியான மத்திய நிதிக்குழு ஆணைய நிதி, மாநில நிதிக்குழு ஆணைய நிதி போன்றவற்றை ஊராட்சிகளின் முறையான அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது எனக் கோருகிறது தன்னாட்சி.

3. மாநில சுயாட்சி எவ்வளவு முக்கியமோ, அதே போல் உள்ளாட்சியிலும் தன்னாட்சி அவசியம் என்பதைப் புரிந்து கொண்டு, உள்ளாட்சிகளை வலுப்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.