Monday, 22 February 2016

PRESS MEET : Launching "Puthiya Sakthi Front" for Assembly Election - ”புதிய சக்தி அணி” துவக்கம்.. Feb 23rd,Tuesday 12noon



To the Editors:

PRESS MEET INVITE:

Event:  Launching "Puthiya Sakthi Front" for Assembly Election
Date, time: 23-02-2016, 12noon,
Venue: Satta Panchayat Iyakkam Office, 31, South west boag road, T.Nagar(Near bus stand)
Contact: 9791050512, 8754580270/74 

பத்திரிகையாளர் சந்திப்பு:

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள "புதிய சக்தி அணி" குறித்த அறிவிப்பு

நாள், நேரம்: 23-02-2016, நண்பகல் 12மணி
இடம்: சட்ட பஞ்சாயத்து இயக்க அலுவலகம், 31, தென்மேற்கு போக் சாலை, தி.நகர், சென்னை
தொடர்புக்கு: 9791050512, 8754580270/74

Puthiya Sakthi Front Coordinators,
9791050512 - 8754580270/74

Thursday, 11 February 2016

Reg Amenities in Railway Stations.. Satta Panchayat PIL..

To the editors:

Today, Satta Panchayat Iyakkam's(SPI) Public Interest Litigation(PIL) demanding toilet, drinking water facilities in railway stations came to hearing as first case in first bench.(Affidavit can be found at : http://spicourtdocs.blogspot.in/ ) I, myself argued for SPI as Party in Person. Railway officials submitted that, they have already called for tenders.
In the court, we have mentioned that 80% toilets in Chennai and Suburban stations don't have  functional toilets(referred our field survey done in 2014 November in 47 stations). Chief justice ordered to arrange temporary arrangement to give amenities. Also he ordered railway official to file compliance status on April 25th, 2016 detailing the amenities that they have provided in railway stations.

PLS LOOK AT THE ATTACHED PHOTOS. THESE WERE TAKEN TODAY(11TH FEB) AT 8.35AM AT THIRUVANMIYUR RAILWAY STATION(TIDEL PARK). BOTH, GENTS,LADIES TOILETS WERE CLOSED. BUT THE STICKER INFRONT OF THE GENTS TOILET DOOR SAYS "...YOU CAN GET THE KEY FROM STATION OFFICE". It is to be noted that, platform is in 2nd floor and office is in ground floor..!!  Does it mean the passenger needs to run down 2 floors to get toilet door key ?? 

Central govt is spearheading the campaign "Swach Bharath". But 80% stations in chennai city does not have toilet..!!??

Requesting media to write about it to ensure 15 lakhs passengers who travels daily in these stations get basic amenities. Thanks.

Senthil Arumugam,
General Secreatary,
Satta Panchayat Iyakkam,
8754580274


Tuesday, 9 February 2016

சட்ட பஞ்சாயத்து -ஜனவரி 2016 ; Satta Panchayat- January 2016

To the editors:

Satta Panchayat Iyakkam advocates transparency in Governance.
We feel keeping our accounts transparent as our moral obligation.
Everymonth we are publishing our accounts in our website and social media.
We are doing this for last 24 months.. You can visit http://spiaccounts.blogspot.in/  to see this.
With this mail we have attached the accounts for January 2016.
Expecting your continued support in our efforts towards Good Governance..

Thank you,
Senthil Arumugam, General Secretary
Satta Panchayat Iyakkam, 8754580274

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை வலியுறுத்தும் சட்ட பஞ்சாயத்து இயக்கம், தன்னுடைய வரவு-செலவு விவரங்களை வெளிப்படையாக்குவதை தார்மீகக் கடமையாகக் கருதுகிறது.  ஒவ்வொரு மாதம் 5ம்தேதியும் இணையதளத்திலும், சமூக வலைத்தளத்திலும் எங்களின் கணக்குகளை வெளியிட்டுவருகிறோம். இந்த இணையத்தில் ( http://spiaccounts.blogspot.in/ ) கடந்த 24 மாதங்களுக்கான வரவு-செலவுகளை பார்க்கலாம். இந்த மெயிலுடன், ஜனவரி 2016த்திற்கான கணக்குகளை இணைத்துள்ளோம். நல்லாட்சியை(Good Governance) நோக்கிய எங்கள் செயல்பாடுகளுக்கு என்றும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.

செந்தில் ஆறுமுகம்,
பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
8754580274

Thursday, 4 February 2016

Government Order Protecting Corruptive Officials.. Making DVAC as POST OFFICE... PRESS RELEASE

Press Release:
Government Order Protecting Corruptive Officials.. Making  DVAC as POST OFFICE

Hereafter Let's call "DVAC"(Directorate of Vigilance & Anti Corruption") as "POAC"(Post Office for Anti Corruption) since,they r only going to forward the complaints. Thanks to G.O(Ms)No:10 Dt 02.02.16. LOKAYKTHA is not enacted but GO to Protect Corruptive Official is passed. We condemn&this GO should be withdrawn.Uniformity can be applied by NOT seeking prior approval for any category of Officers. -SATTA PANCHAYAT IYAKKAM,


Siva Elango, President, Satta Panchayat Iyakkam, 
8754580274,8754580270

                    அரசானை எண்:G.O(Ms): No:10
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தை "தபால் நிலையமாக்கும்" – ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பளிக்கும் அரசாணை…
                    பத்திரிகைச் செய்தி, 04-02-2016


பிப்ரவரி 2ம் தேதியன்று(2016) தலைமைச் செயலாளரால் வெளியிடப்பட்ட அரசாணையின்படி(G.O(Ms): No:10) இனிமேல் எந்த அரசு ஊழியர் மீதும் இலஞ்ச-ஊழல் குற்றச்சாட்டு வந்தால், அதனை உடனடியாக விசாரிக்க வேண்டிய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம்(DVAC), கண்காணிப்பு ஆணையத்தின்(Vigilance Commission) ஒப்புதலைப் பெறவேண்டும். கண்கானிப்பு ஆணையம், அரசின் கருத்தைக் கேட்டுப்பெற்ற பிறகு அனுமதியளிக்க வேண்டும் என்கிறது.


இலஞ்ச-ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை என்று எங்களைப் போன்ற சமூக அமைப்புகள் போராடிவருகின்ற சூழலில் இந்த அரசாணையானது ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பளிக்கும் விதத்தில் உள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


இதற்கு முன்னர், உயர்நிலை அலுவலர்களின் மீது ஊழல் வழக்குகள் தொடர அரசின் முன் அனுமதிபெறவேண்டும் என்ற நிலை இருந்தது; இது அரசு ஊழியர்களிடையே பாரபட்சம் காட்டுகிறது மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று வழக்கு தொடுக்கப்பட்டது.. உண்மையிலேயே, இந்த அரசாங்கம் இலஞ்ச-ஊழலை ஒழிக்கும் எண்ணத்தில் இருந்திருந்தால், இனிமேல் எந்த  நிலை அரசு ஊழியர் மீதும் ஊழல் புகார் வந்தால் அரசின் முன் அனுமதி இன்றி DVAC வழக்குதொடுக்கலாம் என்று அரசாணை வெளியிட்டிருக்கலாம். அதற்குபதிலாக, அனைத்துநிலை ஊழியர்கள் மீதும் வழக்குத்தொடர அரசின் முன் அனுமதி பெறவேண்டும் என்று அரசாணை வெளியிட்டிருப்பது, இலஞ்சத்தில் திளைக்கும் அரசு ஊழியர்களுக்குத்தான் சாதகமாக முடியும். இந்த அரசாணையை உடனே திரும்பப்பெறவேண்டும் என சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோருகிறது.


ஆதாரத்துடன் இலஞ்ச-ஊழல் புகார் வந்தால், முதல் அமைச்சர், மந்திரிகள், உயர் அதிகாரிகள் உட்பட அனைவரது அலுவலகம், வீடுகளில்கூட எந்த முன் அனுமதியும் இன்றி சோதனையிடும் உரிமை பெற்ற தன்னிச்சையாக செயல்படும்(Independent) இலஞ்ச-ஊழல் ஒழிப்பிற்கான  "லோக் ஆயுக்தா" சட்டத்தை 2015ம் ஆண்டு ஜனவரி மாதமே தமிழக அரசு நிறைவேற்றியிருக்கவேண்டும். ஆனால், ஒரு ஆண்டு தாமதமாகியும் பல்வேறு சிறு காரணங்களைச் சுட்டிக்காட்டி "லோக் அயுக்தா" சட்டத்தைக் கொண்டுவர தமிழக அரசு மறுக்கிறது.

ஆளுங்கட்சியினர், வாக்குச்சாவடி முறைகேடுகளில் ஈடுபடும்போது அதனை அரசு ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு இந்த அரசாணை உதவும் என்று ஆளுங்கட்சி எண்ணுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.


மேலும் இந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ள "….ஊழல் கண்கானிப்பகம்(Vigilance Commission)" , அரசு தரும் குறிப்பின்(Remarks) அடிப்படையில் முடிவெடுக்கவேண்டும்" என்ற வரிகள் தெளிவில்லாததாக இருக்கிறது. "அரசு" என்றால் யார்..?  முதலமைச்சரா..? அமைச்சரா..?
தலைமைச் செயலாளரா..? . யாராக இருந்தாலும் அது தவறான வழிமுறையாகத்தான் இருக்கும். ஏனெனில், அமைச்சர் மீதோ, தலைமைச் செயலர் மீதோ புகார் வந்தால் எப்படி அவர்களே அவர்கள் மீது வழக்குத்தொடர அனுமதியளிக்கமுடியும் ?


DVAC, VIGILANCE COMMISSION ஆகிய அமைப்புகளைக் கலைத்துவிட்டு தன்னிச்சையாக இயங்கும் லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்தினால்தான் இலஞ்ச-ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்.

                                                                 சிவ.இளங்கோ, தலைவர்

                                                           Satta Panchayat Iyakkam,                                                                8754580270,8754580274