Tuesday, 19 April 2016

Released 2nd List Candidates (Social Activists & Youths) of Puthiya Sakthi Front today Apr 19th - புதிய சக்தி அணியின் இரண்டாம் வேட்பாளர் பட்டியல் (சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள்) இன்று ஏப்ரல் 19 வெளியிடப்பட்டது

Media Release - Apr 19, 2016


              2nd List Candidates (Social Activists & Youths) of Puthiya Sakthi Front Released


We released our 2nd List of Candidates comprising of 21 Social Activists & Youth today. Please find attached the list of Candidates & Photo along with their details. 


பத்திரிகை செய்தி – 19-04-2016


புதிய சக்தி அணியின் இரண்டாம் வேட்பாளர் பட்டியல் (சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள்) வெளியீடு


புதிய அரசியல் கலாச்சாரத்தை முன்வைத்து, ஊழலற்ற ஆட்சி , இலஞ்சமற்ற நிர்வாகம் , மதுவில்லா தமிழகம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாக கொண்டு, சமூக முன்னேற்றத்திற்காக தீவிரமாக செயல்பட்டு வரும் வளர்ச்சி அரசியல் பேசும் சமூக ஆர்வலர்களையும், இளைஞர்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் புதிய சக்தி அணி கடந்த பிப் 23 அன்று உதயமானது.


              அதன் தொடர்சியாக மாற்றான தகுதியான வேட்பாளர்களை, 'புதிய சக்தி அணி'  இந்த தேர்தலில் இனம் காட்டும் முதல் பகுதியாக புதிய சக்தி அணியின் இந்த முதல் வேட்பாளர் பட்டியல் மார்ச் 17 வெளியிடப்பட்டது.  இன்று ஏப் 19 இரண்டாம் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.


இந்த சமூகத்தில் புரையோடிப்போயுள்ள லஞ்சம், ஊழல், மது, சாதி ஆகிய பேய்களை விரட்டி, சமூக  முன்னேற்றம் ஒன்றையே முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் நேர்மையான இயக்கங்களை / கட்சிகளை ஜனநாயகத்தை மீட்டெடுக்க நேர்மையான இயக்கங்களை "புதிய சக்தி அணி"ன்றிணைத்து வருகிறது. அவர்களோடு தங்கள் தொகுதியில் மிகச் சிறப்பாக களப் பணி செய்து, தொடர்ந்து மக்கள் அபிமானத்தை பெற்று வரும் வேட்பாளர்கள் இவர்கள்.

     உங்களுடைய ஆதரவை இவர்களுக்கு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


புதிய சக்தி அணிக்காக,

ஜெகதீஸ்வரன், ஒருங்கிணைப்பாளர்

9791050512 / 8754580270




2016-04-18 19:21 GMT+05:30 Puthiya Sakthi Ani <puthiyasakthiani@gmail.com>:



To the Editors:

 

PRESS MEET INVITE:


Event:  Releasing "Puthiya Sakthi Front" 2nd List of Candidates for Assembly Election.

Date, time: 19-04-2016 (tomorrow), 12noon,

Venue: Satta Panchayat Iyakkam Office, 31, South west boag road, T.Nagar(Near bus stand)

Contact: 9791050512, 8754580270/74 


பத்திரிகையாளர் சந்திப்பு:


சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள "புதிய சக்தி அணி"யின் இரண்டாம் வேட்பாளர் பட்டியல்வெளியீடு

நாள்நேரம்: 19-04-2016, (நாளைநண்பகல் 12மணி

இடம்சட்ட பஞ்சாயத்து இயக்க அலுவலகம், 31, தென்மேற்கு போக் சாலைதி.நகர்சென்னை

தொடர்புக்கு: 9791050512, 8754580270/74

 

Puthiya Sakthi Front Coordinators,

9791050512 - 8754580270/74


Friday, 15 April 2016

PIL Reg Railway Station Amenities - Today High Court Case Hearing Update..

To the Editors:

On 11-02-2016 High court gave order on PIL filed by Satta Panchyayat Iyakkam to provide Toilet, drinking water facilities in Chennai Suburban Railway stations within 60 days. Today, the case came for compliance report filing. On behalf of Satta Panchayat Iyakkam, General Secretary Senthil Arumugam argued the case. We have submitted photos of toilets in worst condition. Railway official submitted a vague status report without "time frame" details regarding when these facilities will be provided in stations. In the case hearing, the chief justice mentioned orally that "...looks like the GM needs to be called to the court". Finally the court gave another 90 days time to provide all the amenities in railway stations and the ordered to list the case for further hearing on July15th,2016.

1min.30sec Video Toilet status in Thiruvanmiyur Railway station Ladies toilet:  https://youtu.be/KYBpf_YOPnM

Attachments:
1. 11-02-2016: Order Copy
2. Affidavit submitted by Railway Officials(on 13/4/2016)
3. Sample photos of Toilets in bad condition

Siva Elango, President,
Satta Panchayat Iyakkam, 8754580274

ஆசிரியர் அவர்களுக்கு,

இரயில் நிலையங்களில் கழிப்பறை,குடிநீர் வசதி செய்துதரக்கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடுத்த பொதுநலவழக்கில் 11-02-2016 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம்(தலைமை நீதிபதி) 60 நாட்களுக்குள் இவ்வசதியினை செய்துதரவேண்டும் என்று கூறியிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இயக்கத்தின் சார்பாக, பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் வாதிட்டார். திருவான்மியூர் உள்ளிட்ட பல ரயில் நிலையங்களில் கழிப்பறைகள் மிகமோசமான நிலையில் உள்ளதை புகைப்பட ஆதாரத்தோடு சுட்டிக்காட்டினோம். ரயில்வே நிர்வாகம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் "..கூடிய விரைவில்" இவ்வசதிகள் செய்துதரப்படும் என்று பொத்தாம் பொதுவான தகவல் தரப்பட்டிருந்தது. இதனை நாங்கள் ஆட்சேபித்தோம், காலவரையறை தரப்படவேண்டும் என்று கோரினோம்.  தலைமை நீதிபதி அவர்கள்,  "...ரயில்வே பொதுமேலாளரை(GM) நீதிமன்றத்திற்கு வரவழைத்தால்தான் பிரச்னைக்கு தீர்வுகிடைக்கும் போல" என்று விசாரணையின்போது குறிப்பிட்டார். ஜீலை 15க்குள் பயணிகளுக்கான அனைத்து வசதிகளுக்கும் செய்துதரப்பட்டிருக்கவேண்டும் என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜீலை15க்கு ஒத்திவைத்தார்.

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் உள்ள பெண்கள் கழிப்பறையின் அவல நிலை வீடியோ(1 நிமிடம் 30 வினாடிகள்) : https://youtu.be/KYBpf_YOPnM

இணைப்பில்:
1. 11-02-2016 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பின் நகல்
2. ரயில்வே நிர்வாகம் 13-04-2016 அன்று அளித்த அறிக்கை(Affidavit)
3. மோசமான நிலையில் ரயில் நிலைய கழிப்பறைகள்(படங்கள்)

சிவ.இளங்கோ, தலைவர்
சட்ட பஞ்சாயத்து இயக்கம், 8754580274