சட்ட பஞ்சாயத்து இயக்கம்
பத்திரிகை செய்தி (28-10-2022)
தொடர்புக்கு : 96292-33892
எப்பொழுது நடக்கும் சரியான ஏரியா சபை ?
வரும் நவம்பர் -1 ஆம் தேதியன்று, தமிழ்நாட்டில் முதல்முறையாக ஏரியா சபை நடைபெறும் என தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்து இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பின் படி, கூட்டத்தின் தலைவராக அந்தந்த வார்டு கவுன்சிலர் இருப்பார். அதுபோலவே வார்டில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் பகுதி சபை என்ற 'ஏரியா சபா'வின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். தமிழக முதல்வர் சென்னை முதல்வர் பல்லாவரம் தொகுதியில் பம்மல் வார்டில் கலந்து கொள்வார். ஆனால், நகராட்சி நிர்வாக துறை செயலாளர், துறை அமைச்சருக்கு சில அடிப்படை கேள்விகள்.
1 . நவம்பர் - 1 தேதி அறிவிப்பின் படி, ஏரியா வாரியாக, வார்டு வாரியாக எங்கே சபை நடைபெறும் என அறிவிக்கவில்லை. நகர்புறம் சார்ந்த பொதுமக்கள் எங்கு சென்று கலந்து கொள்வது?
2 . வார்டு உறுப்பினர்களை கவன்சிலரே தேர்ந்தெடுத்ததால், பொது மக்களுக்கு யார் உறுப்பினர்கள் என்றே தெரியாது. இவ்வாறு இருக்கையில் பகுதிசார் பிரச்சனைகளை யார் வழியாக எடுத்து சொல்வது?
3 . நடைபெறும் இடம், நேரம் சம்மந்தமாக எங்கேயேனும் அறிவிப்பு பலகை அல்லது நோட்டீஸ் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. பொது தொலைபேசி எண் இல்லை. மண்டல வாரியாக பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்காவது தெரியுமா ?
4 . சபை நடைபெறும் முறை, விவாதிக்க கூட்ட பொருள், விதிமுறைகள் ஏதேனும் தெரிவிக்கப்ட்டுள்ளதா? அரசாணை ஏதும் இல்லை.
திமுகவின் ஏரியா சபை நடைபெறுகிறது! தமிழ்நாடு அரசாங்கத்திற்கான, நகர்ப்புற பகுதிகளுக்கான ஏரியா சபை சரியான முறையில் எப்போது நடைபெற போகிறது?
கி. மணிவாசகம்,
பொது செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
88704 72174
ரங்கா பிரசாத் - 99441 88941
ஜெயந்தி - 99521 82452
ஊடக பிரிவு
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269
Satta Panchayat Iyakkam,
Member : http://bit.ly/2021spimember |
Donate Online : donate.sattapanchayat.org
Helpline : 7667 100 100 | http://sattapanchayat.org/ | https://www.facebook.com/sattapanchayath
Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution
Other Contact:
SPI Accounts Team : spiaccts@gmail.com,New Memberships : spinewmember@gmail.com