ஊடகச் செய்தி மற்றும் செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு நேரம் : பிற்பகல் 12:10 - 12:40
திருக்குறள் ஐம்பெரும் விழா -2024
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம், வலைத்தமிழ் , வள்ளுவர் குரல் குடும்பம், சர்வீஸ் டு சொசைட்டி, கற்க கசடற, அமைப்புகள் இணைந்து நடத்தும் திருக்குறள் ஐம்பெரும் விழா.
பிப்ரவரி 11 , ஞாயிற்றுக்கிழமை (நாளை) காலை 9:30 மணி முதல் மாலை 3 மணி வரை
இடம்: திருவள்ளுவர் அரங்கம், இந்தியன் ஆபிசர்ஸ் அசோசியேஷன் (IOA), இராயப்பேட்டை , அஜந்தா பஸ் நிறுத்தம்.
அமெரிக்கா, மியான்மர், டென்மார்க் உள்ளிட்ட பல நாட்டு திருக்குறள் ஆர்வலர்கள், ஆளுமைகள் கலந்து கொள்கிறார்கள்.
திருக்குறள் சார்ந்த ஐந்து நிகழ்வுகள்:
1. திருக்குறள் வரலாற்றில் இதுவரை விடை தெரியாத கேள்வியாக , ஆய்வு, செய்ய முடியாத பன்னாடு சம்பந்தப்பட்ட, நூற்றாண்டு கால தலைப்பாக இருக்கும் "திருக்குறள் இதுவரை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது? எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கவேண்டும்? தேசிய நூலாகக் கொண்டுவர என்ன செய்யவேண்டும்? யுனெசுகோ அங்கீகாரம் பெற என்ன செய்யவேண்டும் ? அரசுகள் என்ன செய்யவேண்டும்? அமைப்புகள் என்ன செய்யவேண்டும்? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு நாளை காலை 11 மணிக்கு இந்த நூல் விடைசொல்லும்.. ஐந்து ஆண்டு கால ஆய்வில் தொகுத்த விவரங்களை ஆய்வறிக்கை நூலாக வெளிவரும் "Thirukkural Translations in World Languages" நூல் வெளியீடு.
வெளியிடுபவர்: மாண்புமிகு நீதியரசர் அரங்க மகாதேவன்
பெறுபவர்கள்: முனைவர் ஔவை ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை,
முனைவர். சி.சுப்பிரமணியம், மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்
கலைமாமணி டாக்டர் .வி.ஜி.சந்தோசம் , வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கம்
2. "நவில்தொறும் நூல்நயம்" பொன்விழா வாரம்
தலைமையுரை: பேராசிரியர் இ சுந்தரமூர்த்தி, துணைத்தலைவர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்
சிறப்புரை: வ சுப மாணிக்கனார் "வள்ளுவம்" நூல் குறித்து இலக்கிய மாமணி பேராசிரியர் அரங்க இராமலிங்கம் நயவுரை.
3. தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு திருக்குறள் நூல் மூன்றாம் பதிப்பு வெளியீடு - உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை,சிகாகோ அமெரிக்கா , *
நூல் அறிமுகம்: பேராசிரியர் இ சுந்தரமூர்த்தி, துணைத்தலைவர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்
ஒருங்கிணைப்பாளர்கள்: அரசு பள்ளிகளுக்கு ஆண்டு தோறும் 80000 திருக்குறள் நூல்கள் வழங்கும் உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை, சிகாகோ , அமெரிக்கா
4. உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் - இரண்டாம் ஆண்டு விழா
தமிழ்நாடு, புதுவையின் திருக்குறள் முற்றோதல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பயிற்சியாளர்கள், புரவலர்கள், ஆர்வலர்கள், அமைப்புகள் , ஆளுமைகள்.
"குறள் வழி" பிப்ரவரி மாத இதழ் இதழ் வெளியீடு
மருத்துவர். சுந்தரேசன் சம்மந்தம், இயக்குநர், தமிழிருக்கை குழுமம், அமெரிக்கா
மாவட்டத்திற்கு ஆண்டுக்கு 2000 நூல்கள், ஆண்டுக்கு 80000 நூல்கள், ஐந்து ஆண்டுகளுக்கு 4 லட்சம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நூல்கள் வழங்கும் திட்டம்: விளக்கவுரை
மருத்துவர், விஜய் ஜானகிராமன், உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம்,
தமிழிருக்கை குழுமம், அமெரிக்கா
5. உலக அளவில் புதிதாக வெளிவந்த திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் அறிமுகம்
புதிய மொழிபெயர்ப்புகள் அறிமுகம் , நூல்களைக் கையளித்தல்:
· திரு.கஜேந்திரன் நாகலிங்கம், டென்மார்க், டேனிஷ் மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்
· திரு.கண. இளங்கோவன், பொதுச் செயலாளர், தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம். மியன்மார்.
இரு திருக்குறள் சார்ந்த கண்காட்சிகள் அரங்கில் இடம்பெறும்
• திருக்குறள் அதிகாரங்கள் - கண்காட்சி
• உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் - நூல்கள் கண்காட்சி
தொடர்புக்கு:
அ .சுரேஷ், 9884411637
மின்னஞ்சல் : thirukkural@valaitamil.com