Saturday, 28 May 2016
Monday, 23 May 2016
பத்திரிகை செய்தி - சட்ட பஞ்சாயத்து இயக்கம்.
இன்று முதல்வராக பதவியேற்ற செல்வி. ஜெயலலிதா அவர்களின் பூரண மதுவிலக்கை நோக்கிய முதல் படியாக அறிவித்துள்ள டாஸ்மாக் நேரம் குறைப்பு மற்றும் 500 கடைகளை மூடுவது ஆகியவற்றை சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனப்பூர்வமாக வரவேற்கிறது.
இந்த அறிவிப்பை வரவேற்கும் அதே நேரத்தில் சில முக்கிய கோரிக்கைகளையும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் முதல்வர் முன்னிலையில் வைக்கிறது.
1. புதிய கடைகள் இனி திறக்கப்படாது என்று அறிவிக்க வேண்டும்.
2. மூடப்படும் கடைகள் அதன் அருகே வேறு எந்த பகுதிகளிலும் துவக்கப்படாது என்று அறிவிக்க வேண்டும்.
3. டாஸ்மாக் நேரம் குறைப்பு விஷயத்தில் இந்த விதியை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
4. நேர அறிவிப்பை மீறுபவர்கள் மீது புகார் அளிக்க பிரத்யேக புகார் எண் அறிமுகப்படுத்தப்படவேண்டும். அல்லது ஏற்கனவே உபயோகத்தில் உள்ள 10581 என்ற எண்ணை பொது மக்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டும்.
5. டாஸ்மாக் பார்கள் மூடுவது குறித்த முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும்.
6. மீதமுள்ள 6300 கடைகளை மூடுவது குறித்த திட்டத்தை பொது மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
செந்தில் ஆறுமுகம்
மாநில பொது செயலாளர்
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
8754580274
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269
Satta Panchayat Iyakkam,
| 31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)
Member : member.sattapanchayat.org | Donate Online : donate.sattapanchayat.org
Helpline : 7667 100 100 | http://sattapanchayat.org/ | https://www.facebook.com/sattapanchayath
" Aiyarathil Oruvan " : 1001.sattapanchayat.org
Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution
Other Contact:
SPI Accounts Team : spiaccts@gmail.com,New Memberships : spinewmember@gmail.com
Tuesday, 17 May 2016
PIL Reg Election..தேர்தல் குறித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் பொதுநல வழக்கு..
Here is our prayers in the PIL: ( To read full affidavit: http://spicourtdocs.blogspot.in/ )
11.1 To ensure "Free and Fair" Election in 134.Aravakurichi Constituency and 174. Thanjavur Constituency & to ensure the voters to vote without any influence, vote counting for ALL the constituencies to be conducted on May25th or any other date preferred by Election Commission of India. We pray that, results for 234 constituency should be announced on the same date.
11.2 As per the Election Commission of India(ECI) order dated 14.05.2016 to
postpone 134.Aravakurichi constituency election & ECI Order dated 15.05.2016 to postpone 174.Thanjavur constituency election shows evidences of corrupt practices by DMK and AIADMK candidates to influence voters. Hence, these both party candidates should be disqualified to contest in the election to be conducted on23.05.2016 for the above said two constituencies.
11.3 As per the Election Commission of India(ECI) order dated 14.05.2016 to postpone 134.Aravakurichi constituency election & ECI Order dated 15.05.2016 to postpone 174.Thanjavur constituency election shows evidences of corrupt practices by DMK and AIADMK candidates to influence voters. Hence, both the above said parties to be de-recognised by Election Commission of India, which will send a strong message to political parties those who involve in corrupt practices.
Sunday, 15 May 2016
POSTPONE Election Results Announcement in Tamilnadu to May25th...Satta Panchayat Iyakkam - Representation
Tamil version of the Representation can be found at the bottom of English version:
15/05/2016
From:
Siva. Elango,
President, Satta Panchayat Iyakkam,
31, South west Boag Road, T. Nagar, Chennai - 600017.
Cell: 8754580274, 8754580270
To,
Chief Election Commissioner,
Election Commission of India,
New Delhi.
Sir,
Subject: Regarding Postponement of Tamil Nadu state assembly election vote counting day to 25/05/2016 for all 234 constituencies
Election Commission of India has announced that 15thstate assembly election for Tamil Nadu will be conducted on 16/05/2016 and the votes will be counted for all 234 constituencies in same day on 19/05/2016. Yesterday(14/05/2016) the Election Commission of India has deferred the polling for Aravakurichi constituency of Karur District separately to 23/05/2016 and its counting to 25/05/2016. This announcement came after seizure of cash in crores yesterday and complaints against parties like DMK and ADMK for trying to bribe voters. This declaration will create further fuss in the constituency.
Counting on same day is the usual procedure followed by the Election Commission for any multiphase election. This practice provides opportunity to hold an honest and fair election. But in contrast to this conventional process, if the election for Aravakurichi commence on 23/05/2016, the results announced on 19/05/2016 for other constituencies will have a huge impact on the voters. If a hung situation appears, the parties will try to bribe with even more cash to the Aravakurichi voters. The Election Commission would become a reason for this. The field officers at Aravakurichi constituency will also be forced to work in favor of the party which won majority of seats. This will not allow to conduct an honest election as expected by the commission. So we request
- The vote counting should be pursued for all 234 constituencies in the same day on 25/05/2016 after the Aravakurichi election, to have an honest and fair election
- The candidates of the party to which the seized cash belongs to, should be disqualified and their names should be removed from the candidate list before the election takes place. Also the election commission should suspend the recognition of the parties related to this issue. This will give the people hope on fair elections and the parties will not try to bribe again with cash to voters
We request the Election Commission to take an immediate action on the above demands. Otherwise we have no option but to take legal measure on this.
Yours'
Siva. Elango
President, Satta Panchayath Iyakkam
**"தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை 234 தொகுதிக்கும் ஒரே நாளில் நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு மனு:"
15/05/2016
----------------------------------------
அனுப்புனர்:
சிவ. இளங்கோ,
தலைவர்,சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
31, தென் மேற்கு போக் சாலை, தி.நகர், சென்னை - 600017
8754580270, 8754580274
பெறுதல்:
தலைமை தேர்தல் அலுவலர் அவர்கள்,
இந்திய தேர்தல் ஆணையம்,
தலைமைச் செயலகம், சென்னை-600009
ஐயா,
பொருள்: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை 234 தொகுதிக்கும் ஒரே நாளில் 25/05/2016 அன்று நடத்த கோரி.
**தமிழகத்தின் 15 வது சட்டமன்றத் தேர்தல் 16/05/2016 அன்று நடைபெறும் என்றும், 19/05/2016 அன்று 234 தொகுதிக்கும் ஒரே நாளில் வாக்கு எண்ணப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் நேற்று 14/05/2016 இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்புப்படி கரூர் மாவட்ட அரவக்குறிச்சி தொகுதியில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த பணம் பல கோடிகள் கைப்பற்றப் பட்டதால் அரவக்குறிச்சி தொகுதிக்கு மட்டும் தேர்தலை 23/05/2016 தள்ளி வைக்கப் பட்டுள்ளதாகவும் 25/05/2016 அன்று வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரவக்குறிச்சி தொகுதியில் மேலும் பல தாக்கத்தை ஏற்படுத்தும்.
**ஒரு மாநிலத்தில் தேர்தல் பல கட்டங்களாக நடந்தாலும் வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் நடத்தப்படுதல் இது வரை தேர்தல் ஆணையம் பின்பற்றி வந்த விதிமுறையாகும். இதனால் சம வாய்ப்பு , சம தள தேர்தலை நடத்த முடியும் என்ற உயரந்த நோக்கத்தால் இந்த விதிமுறை கடைபிடிக்கப்படுகிறது. விதிமுறைகள் இப்படி இருக்க அரவக்குறிச்சி தொகுதிக்கு மட்டும் 23/05/2016 தேதி தேர்தல் நடந்து 25/05/2016 வாக்குகள் எண்ணப்பட்டால், தமிழகம் முழுவதும் 19/05/2016 வாக்குகள் எண்ணப்பட்டு யார் வெற்றி பெற்றுள்ளார்களோ அவர்களின் தாக்கம் அரவக்குறிச்சி தொகுதி வாக்காளர்களிடம் அதிகம் இருக்கும். மேலும் தேர்தலில் இழுபறி நிலை ஏற்பட்டால் அரவக்குறிச்சி தேர்தலில் மேலும் பணம் பட்டுவாடா கோடிக் கணக்கில் நடக்கும். இதற்கு தேர்தல் ஆணையமே வழி வகுத்ததாகிவிடும். அங்கு பணி செய்யும் அதிகாரிகளும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகும் கட்சிக்கு சாதகமாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் அங்கு தேர்தல் ஆணையம் உண்மையாக எதிர்பார்த்த நியாயமான தேர்தல் நடக்காது.
எனவே
1.அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் முடிந்து 234 தொகுதிக்கும் 25/05/2016 அன்று ஒரே நாளில் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே தேர்தலில் சம நிலையை ஏற்படுத்த முடியும்
2.அரவக்குறிச்சி தொகுதியில் எந்த கட்சியினரிடம் பணம் கைப்பற்றப்பட்டதோ அந்த கட்சி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து வேட்பாளர் பட்டியலிலிருந்து அவர்களது பெயரை நீக்கி தேர்தலை நடத்த வேண்டும். மேலும் சம்பந்ததப்பட்ட கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமே தேர்தல் களத்தில் மக்களுக்கு நம்பிக்கை வரும். அரசியல் கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முன் வரமாட்டார்கள்.
**மேற்கண்ட கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழிகள் தெரியவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தங்கள் உண்மையுள்ள,
சிவ. இளங்கோ
தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்
Friday, 6 May 2016
Election Survey Results.. Press Release...
Thursday, 5 May 2016
மதிப்பிற்குரிய செய்தி ஆசிரியர் அவர்களுக்கு
மதிப்பிற்குரிய செய்தி ஆசிரியர் அவர்களுக்கு
நமது இந்திய திருநாட்டில் சாதிய வன்கொடுமைகளையும் தீண்டாமை செயல்களையும் பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறை முற்றிலும் ஓழிக்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் இன்றைய தருணத்தில் எங்களது ஊராகிய இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்தில் உள்ள எஸ். தரைக்குடி கிராமத்தில் ஊர் விலக்கிவைத்தல், நன்மை தீமைகளில் கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது, வியாபாரம் மற்றும் கொடுக்கல் வாங்கல் செய்தல் கூடாது போன்ற வன்கொடுமைகள் தற்போதும் நடந்து வருகிறது. இக்கொடுமையினை காவலதுறையிலும் அரசு நிர்வாக துறையிலும் பலமுறை புகார் செய்தும் கண்டும் காணாமல் உள்ள நிலைதான் மிச்சம், எனவே இதை மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்ல தங்களின் மேலான ஓத்துழைப்பை விரும்புகின்றோம். நடந்த நிகழ்வுகளின் விபரம் வருமாறு:
இஸ்லாம் மார்க்கத்திலும் பல பிரிவுகள் உள்ளது என்பதனை தாங்கள் அறீவீர்கள்.
எனது தம்பி அதில் ஒரு பிரிவில் நம்பிக்கையுடன் செயல் பட்டுவருகின்றான்.
கடந்த 22.-10.2015 அன்று எங்கள் தந்தை இறுதி சடங்கின் போது ஊர் முஸ்லிம் ஜமாத்தார்கள் என் தம்பியை இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் அதற்கு நான் சம்மதித்தால் தான் இறுதிச்சடங்கை நடத்த விடுவோம் என்று என்னிடம் தகராறு செய்தார்கள். தம்பியை திருப்பி அனுப்பிவைத்து விட்டு என்னிடம் கட்டாயப்படுத்தி எழுதிவாங்கி கொண்டு காலம் தாழ்த்தி தான் சடங்குகள் நிறைவேறியது. அத்தோடு இல்லாமல் மீண்டும் உன் தம்பி ஊருக்கு வரக்கூடாது, பெற்ற தாயை பார்க்க வரக்கூடாது. நீ உன் தம்பியிடம் எந்த வித உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று என்னை கட்டாயப்படுத்தினார்கள். அதற்கு நான் உடன்பட மறுத்ததினால் எனது குடும்பத்தையும் ஊர் விலக்கி வைத்து
யாரும் தொடர்பு வைத்துகொள்ளக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தார்கள்.
அதை எதிர்த்து நாங்கள் காவல் துறையிலும், வருவாய் துறையிலும் புகார் அளித்தோம். அதன் மீது இதுநாள் வரை எங்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கணவனை இழந்த பின் இஸ்லாம் மார்க்கத்தின் படி, நான்கு மாதம் தவனைக்காலம் முடிவடைந்து எங்களின் தாயார் வீட்டிற்கு வெளியே வந்துள்ள சூழ்நிலையில் 3.05.2016 அன்று ஊர் முஸ்லிம் ஜமாத்தார்கள் மீண்டும் எனது தாயார், தங்கை குடும்பத்தினர் மற்றும் அத்தை குடும்பத்தினர் ஆகிய மூன்று குடும்பத்தையும் ஊர் விலக்கிவைத்து ஊரில் உள்ள மளிகை கடை.கள், மற்றும் ஹோட்டல்களில் அத்தியாவாசிய பொருட்கள், உணவு பொருட்கள் விற்ககூடாது என கட்டுப்பாடு வைத்துள்ளார்கள் மேலும் எங்களுக்கு கட்டுப்பட்டு நாங்கள் கூறியபடி தான் வாழ வேண்டும் இல்லையெனில் இங்கு நிம்மதியாக வாழவிடமாட்டோம் என்று அச்சுறுத்தியும் மிரட்டியும் வருகிறார்கள்.
இச்செயல் இந்திய இறையாண்மைக்கு எதிரானது, தனிமனித சுதந்திரத்திற்கு விரோதமானது.
ஆகவே இந்த வன்கொடுமையிலிருந்து எங்களின் குடும்பத்தினரை பாதுகாக்கவும், அரசாங்க நிர்வாகத்தினரின் கவனத்துக்கு கொண்டு செல்ல தங்களின் ஊடகம் வழியாக உதவியை செய்து பின் வரும் இந்திய சமூகம் இதுபோன்ற அவலங்களை சந்திக்காமல் பாதுகாக்க கேட்டுக் கொள்கின்றோம்
தங்களின் உயரிய ஓத்துழைப்பை நம்பி நிற்கும்
அபூபக்கர் மற்றும் குடும்பத்தார்கள் 8015716952 / 9176448388
எஸ். தரைக்குடி போஸ்ட், கடலாடி தாலுகா, இராமநாதபுரம் மாவட்டம் 623135
வியாபார விலாசம்: 1, சூரியபிரகாசம் தெரு, கிருஸ்னாபுரம், அம்பத்தூர் ஒ டி, சென்னை -600053




