Wednesday, 10 March 2021

Social activist Senthil Arumugam, Siva Elango contesting from Pallavaram, Tambaram on behalf of MNM

வணக்கம்,

மக்கள் நீதி மய்யம் சார்பாக நான் பல்லாவரம் தொகுதியிலும், சிவ இளங்கோ தாம்பரம் தொகுதியிலும் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ளோம். சமூக ஆர்வலர்களை ஆரத்தழுவி வரவேற்று, தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ள மய்யத்தின் தலைவர் திரு.கமலஹாசன் அவர்களுக்கும், மய்யத்தின் நிர்வாகிகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மக்களிடம் தேர்தல் நிதி வசூலித்து, எவ்வித முறைகேடுகளையும் செய்யாமல், நேர்மையாக தேர்தலை சந்திக்க இருக்கிறோம். எங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இத்துடன் எங்களை பற்றிய முழு தகவல்களையும் இணைத்துள்ளோம்.

அன்புடன்
செந்தில் ஆறுமுகம் மற்றும் சிவ இளங்கோ
தொடர்பு எண் : 87545 80274 | 87545 80270


We have been announced as candidates for Tamilnadu elections 2021 on behalf of the Makkal Neethi Maiyam - myself, Senthil Arumugam in Pallavaram constituency and Siva Elango in Tambaram constituency. We extend our heartfelt thanks to Dr. Kamal Hassan, Chairman, mnm and to the MNM Administrators for welcoming social activists and giving them the opportunity to contest the elections.

We are going to face the election honestly, collecting election funds only from the people, strictly being non-compliant towards committing any fraudulent or dishonest activities. Kindly consider this as a humble request to help us reach the people of Tamilnadu.

We have attached the complete information about us herewith.

Yours sincerely,
Senthil Arumugam & Siva Elango
87545 80274 | 87545 80270



"சமூகப்  போராளி" 

செந்தில் ஆறுமுகம் (43), MCA





  • தமிழகத்தில் "நேர்மையான அரசியலின் மூலம் நல்லாட்சிமலரவேண்டும் என்ற இலட்சியத்திற்காக கடந்த 20 ஆண்டுகளாக உழைத்துவருபவர்.

 

  • சமூக ஆர்வலர்எழுத்தாளர்பேச்சாளர்களப்போராளி மற்றும் தகவல் பெறும் உரிமைச்சட்ட வல்லுநர்.

 

  • MCA பட்டதாரிதகவல்தொழில்நுட்பத் துறையில் 7 ஆண்டுகள் பணிபுரிந்தார்பல லட்சங்களை சம்பளமாக வாங்கிவந்த செந்தில் ஆறுமுகம்தனது இலட்சியத்திற்காக 2005ல்தன் அமெரிக்க பணியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர சமூக ஆர்வலராக மக்கள் பணியாற்றத் துவங்கினார்.

 

  • "வீட்டுக்கு ஒருவர்நாட்டுக்கு ஒருவர்" என்று தனது மனைவியும் இவரும் எழுதப்படாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருமணம் செய்து கொண்டனர்பணிக்கு சென்று வீட்டை மனைவி கவனித்து வருகிறார்சமூக - அரசியல் மாற்றத்திற்காக செந்தில் ஆறுமுகம் உழைத்து வருகிறார்.

 

  • மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனரும்சிந்தனை சிற்பியுமான டாக்டர்எம்எஸ்உதயமூர்த்தியிடம் அரசியல் பயின்றுஅவரின் உயரிய கொள்கைகளின் வழி நடப்பவர் செந்தில் ஆறுமுகம்.

 

  • சிந்தனை சிற்பிகள் இயக்கம்மக்கள் சக்தி கட்சி என்று பல்வேறு அமைப்புகளின் மூலம் சமூக - அரசியல் மாற்றத்திற்காக உழைத்தவர்

 

  • 2013ல் சட்ட பஞ்சாயத்து இயக்கம் எனும் மக்கள் இயக்கத்தை நிறுவியவர். சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மூலம் இலஞ்ச-ஊழலுக்கு எதிரான செயல்பாடுகள்சட்ட விழிப்புணர்வுஉள்ளாட்சிகளை வலுப்படுத்துதல்மதுத்திணிப்புக்கு எதிராகக் குரல்கொடுத்தல் போன்ற பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தவர்.

 

  • சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த இவர்இயக்கத்தின் தொலைபேசி சேவை மையத்தின் வழியாக 2 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பிரச்னைகளுக்கு வழிகாட்டப்படுவதற்கு பின்புலமாக இருந்தவர்.

 

  • வேளச்சேரி-கடற்கரை உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் கழிப்பறை,குடிநீர்,பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகள் செய்துதரக்கோருவது, VAO தாங்கள் பணி செய்யும் இடத்திலே தங்க கோருதல்சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய கோருதல் உள்ளிட்ட பல பொதுநல வழக்குகளைத் தொடுத்து உயர்நீதிமன்றத்தில் வாதிட்டவர். சசிகலா பதவி ஏற்பதை தடுக்க இரவோடு இரவாக உச்சநீதிமன்றம் சென்று பொதுநல வழக்கு தொடுத்து தடுக்க முயன்றவர்.

 

  • தூங்கும் தகவல் ஆணையத்தை தட்டி எழுப்ப"சங்கூதும் போராட்டம்", "பாய் விரித்து தூங்கும் போராட்டம்" என்று பல வித்தியசமான போராட்டங்களை நடத்தியவர்ஆட்சியாளர்கள் மது ஆலை நடத்துவதை எதிர்த்துசாராயத்தை கீழே ஊற்றிபோயஸ் கார்டன்  முன்பு போராட்டம் நடத்தி

 

  • முட்டை ஊழல் உட்படதிமுக - அதிமுக - பாஜக - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பல ஊழல்கள்டெண்டர் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத செயல்களை வெளிக்கொண்டுவந்துள்ளார்.

 

  • தமிழகத்தில் கிராம சபையை மக்களிடையே பிரபலபடுத்தியதில் இவரின் பங்கு மிக முக்கியமானதுமக்கள் நீதி மய்யத்திற்கு கிராம சபை சம்மந்தப்பட்ட விஷயங்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.

 

  • 1000+ தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தள நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார்தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று மக்களின் குரலாக ஊடகங்களில் ஒலித்து வருபவர்.

 

  • சமூக,அரசியல் பிரச்னைகளுக்காக பத்திரிகைகள்முகநூலில் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியுள்ளார்"என்றும் வற்றாத காவிரி அரசியல்" , "ஸ்டெர்லைட் மூடப்பட்டது ஏன்?" போன்ற புத்தங்கங்களையும் எழுதியுள்ளார்.

 

  • பள்ளி,கல்லூரிகளில் பல்வேறு சமூக விழிப்புணர்வு வகுப்புகள்சட்டப் பயிற்சிகள் கொடுத்துள்ளார்.

 

  • சிறந்த சமூக சேவைக்காக விகடன் விருதுகலாம் விருதுசமூக நட்சத்திரம் விருது,  "துருவாவிருது உட்பட பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

 

  • மக்களிடம் இருந்து பெறும் நன்கொடையை மட்டுமே வைத்து சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார்இயக்கம் ஆரம்பித்த பொழுதில் இருந்து தற்போது வரைதொடர்ந்து 87 மாதங்களாகஇயக்கத்தின் வரவு செலவு கணக்குகளை பொது தளத்தில் வெளிப்படையாக தாக்கல் செய்து வருகின்றது.

 

  • இப்பொழுது மக்களிடம் இருந்து மட்டும் பணம் பெற்று"ஒரு_ரூபாய்_கூட செலவழிக்காமல்" (#Zero_Budget_Campaign) மக்களை நம்பி தேர்தலில் நிற்க இருக்கிறார்.

 

  • அரசியலை வருமானத்திற்கான வழியாகப் பார்க்காமல்சமூக மாற்றத்திற்கான வழியாகப் பார்க்கும் நேர்மறை சிந்தனை கொண்டவர்.

 

  • வளர்ச்சி அரசியல்-நேர்மை அரசியலை முன்வைத்து தொடர்ந்து களப்பணியாற்றினால் தேர்தல் அரசியலில் மக்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்ற அசராத நம்பிக்கை கொண்டவர்.!!

 

           செந்தில் ஆறுமுகம் 

           தொடர்பு எண்: 87545 80274 | 87545 80270

Saturday, 16 January 2021

Press Invite_உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பரவல் தேர்தல் அறிக்கை - 2021


பெறுநர்

தலைமை நிருபர்

உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பரவல் தேர்தல் அறிக்கை-2021

பத்திரிகையாளர் சந்திப்பு

நாள்: 18-01-2021/ திங்கட்கிழமை
இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்
நேரம்: காலை 11:30 மணி
தொடர்புக்கு: 9445700758/ 9976783073/ 9944849744

தமிழகத்தில் பல ஆண்டுகள் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் இன்றுவரை 9 மாவட்டங்களில் நடத்தப்படாமல் இருக்கும் ஊரக மற்றும் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள், முறையான நிதிப்பகிர்வின்மை, பேக்கேஜ் டெண்டர் போன்ற ஊராட்சிகளின் அதிகாரத்தில் தலையீடு செய்யும் செயல்பாடுகள், கொரோனாவைக் காரணம் காட்டி கிராமசபையை ஏறத்தாழ ஓராண்டாக நடத்தாமல் இருப்பது, மத்திய அரசின் மாதிரி நகர ராஜ் மசோதா 2006-ன் அடிப்படையில், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் சார்ந்த சட்டங்களில் (Act 35 of 2010) கொண்டு வந்த திருத்தங்களுக்கு விதிகள் இன்னும் வகுக்கப்படாமல் இருப்பது ஆகியவை உள்ளாட்சிகளைத் தமிழக அரசு கிள்ளுக்கீரையாக நினைப்பதேயே காட்டுகிறது.

இந்தச் சூழலில், தன்னாட்சி, மக்களின் குரல் (Voice of People), Institute of Grassroots Governance [IGG], தோழன் இயக்கம், அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் தொகுக்கப்பட்டுள்ள கிராமப்புற மற்றும் நகரப்புற உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பரவல் தேர்தல் அறிக்கையினை வெளியிட்டு விளக்க, பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறோம்.

இந்த முக்கிய சந்திப்பிற்கு, தங்களது நிருபரை அனுப்பி, உள்ளாட்சிகளுக்கான கோரிக்கைகளை மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் கொண்டு செல்ல ஒத்துழைக்க வேண்டுகிறோம். நன்றி!

17.01.2021,
சென்னை.

(M. ஜாஹிர் ஹுசைன்)
துணைத் தலைவர்,
தன்னாட்சி
(உள்ளாட்சிஉங்களாட்சி)
69, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை
மின்னஞ்சல்: thannatchi@gmail.com

Monday, 7 December 2020

உச்சநீதிமன்ற உத்தரவின்படி உள்ளாட்சித் தேர்தல்களை உடனடியாக நடத்தக் கோருதல் - தொடர்பாக.

பெறுநர்

 

முனைவர் இரா. பழனிசாமி, இ.ஆ.ப (ஓய்வு)

மாநில தேர்தல் ஆணையர்,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்,

எண். 208/2, ஜவகர்லால் நேரு சாலை,

(கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில்),

அரும்பாக்கம், சென்னை 600 106.

 

ஐயா,

 

பொருள்: உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தில் நடைபெறவேண்டிய விடுபட்ட 9  மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் அனைத்து நகர உள்ளாட்சிகளுக்கானத் தேர்தல்களை உடனடியாக நடத்தக் கோருதல் தொடர்பாக.

 

வணக்கம்! தமிழகத்தில் உள்ளாட்சிகளை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு களப்பணிகள், விழிப்புணர்வுப் பரப்புரைகள் போன்ற முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் அமைப்பு, தன்னாட்சி.

 

கடந்த 06.12.2019 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் [IA No. 182868/2019 in CIVIL APPEAL NOS. 5467-5469/ 2017] தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகியவை நீங்கலாக, அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு அனுமதித்ததோடு, மேற்குறிப்பிட்ட 9 மாவட்டங்களுக்கும் உரிய வார்டு மறு வரையறைகளை மேற்கொண்டு, 4 மாத காலத்திற்குள் தேர்தல்களை நடத்தி முடிக்க உத்தரவிட்டது தாங்கள் அறிந்ததே!

 

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் கொரோனா ஊரடங்கு காரணத்தால் நடைபெறவில்லை என ஊடகங்கள் மூலம் அறிய வருகிறோம். தற்போது படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டிருகிறது.

 

மேலும், கடந்த மாதங்களில், பீகார் மாநிலத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. கேரள மாநில தேர்தல் ஆணையம், தள்ளி வைத்த உள்ளாட்சித் தேர்தல்களை இந்த மாதத்தில் நடத்த இருக்கிறது. கர்நாடகத்திலும் இதே சூழல் உள்ளது. அதே போல தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் நகர உள்ளாட்சித் தேர்தலும், ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்களும் அண்மையில் நடந்து முடிந்துள்ள. இவை அனைத்தும் தமிழகத்திலும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடிக்க முடியும் என்பதையே காட்டுகின்றன.

 

இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்த 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை நீதிமன்றங்கள் தொடர்ந்து குறிப்பிடப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் அனைத்து நகர உள்ளாட்சித் தேர்தல்கள் தமிழகத்தில் நடைபெறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த டிசம்பர் 2019 இல் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள் ஆகியோரின் முக்கியத்துவம் தற்போது பெருமளவில் உணரப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த் தொற்று மற்றும் பருவகாலத்தினால் ஏற்படும் கடும் புயல், மழை போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் மக்களுக்குத் தேவையான உதவிகளை இவர்கள் முறையாக மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தல் நடைபெறாத காலத்தில்  பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் தடைபட்டப் பல பணிகள் தற்போது நடைபெற்று வருவதைப் பார்க்க முடிகிறது.  

 

அதே போன்று 15வது மத்திய நிதிக்குழு நிதியினை முறையாகத் திட்டமிட்டு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கும், ஜல் ஜீவன் மிஷன், மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலை உறுதித் திட்டம் போன்ற பல ஊரக வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கு மிகவும் அவசியமாகிறது.

 

அதேபோன்று, சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சுகாதார மேம்பாடு மற்றும் பேரிடர் மேலாண்மைப் பணிகளை மாநில அரசோடு இணைந்து மேற்கொள்ளவும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்களிப்பு இன்றியமையாததாகிறது.

 

எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், மேற்குறிப்பிட்ட மக்கள் நலப்பணிகளைக் கருத்தில் கொண்டும் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் அனைத்து நகர உள்ளாட்சிகளுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்திட ஆவன செய்ய வேண்டுகிறோம்.

 

தங்கள் உண்மையுள்ள,

 

க.சரவணன்   

தலைவர்   

 

எஸ்.நந்தகுமார் 

பொதுச் செயலாளர்   

 

07.12.2020

 

தன்னாட்சி

(உள்ளாட்சிஉங்களாட்சி)

பதிவு எண்: 272/2018

69, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை-600001.

மின்னஞ்சல் :thannatchi@gmail.com    

www.thannatchi.in

 

Tuesday, 6 October 2020

பத்திரிகையாளர் சந்திப்பு - 07 October 2020 - கிராமசபை

பத்திரிகையாளர் சந்திப்பு

காந்தி ஜெயந்தியான அக்.2 அன்று நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கிராம வளர்ச்சிக்கு முக்கியமான இக்கூட்டங்களை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் இதுகுறித்தான முக்கிய செயல்திட்டங்களை அறிவிக்கவும் பல்வேறு சமூக நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பில், 07-10-2020(புதன்கிழமையன்று) பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து பத்திரிகையாளர்களும் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

நாள்: 07-10-2020(புதன்கிழமை)
இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்
நேரம்: மதியம் 3 மணி
தொடர்புக்கு: 9003232058, 8754580274


கலந்துகொள்ள உள்ள அமைப்புகள்: தன்னாட்சி இயக்கம், அறப்போர் இயக்கம், மக்களின் குரல், தோழன் இயக்கம், சட்டப்பஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள்.

நன்றி,  




நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


Satta Panchayat Iyakkam

 31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Member : member.sattapanchayat.org |  Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

" Aiyarathil Oruvan " : 1001.sattapanchayat.org

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269