Wednesday, 7 June 2023

அறவழியில் போராடிய மக்கள் தலைவர்களைக் கண்ணியமற்ற முறையில் கைது செய்வதா? - தன்னாட்சியின் கண்டன அறிக்கை

அறவழியில் போராடிய மக்கள் தலைவர்களக் 

கண்ணியமற்ற முறையில் கைது செய்வதா?

தன்னாட்சியின் கண்டன அறிக்கை


மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சார்ந்த ஊராட்சித் தலைவர்கள், 'கொள்ளிடம் ஒன்றிய ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு' சார்பாக புளியந்துறை ஊராட்சித் தலைவர் தோழர் நேதாஜி அவர்கள் முன்னிலையில் கடந்த மே 18, 2023 அன்று 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி கிராம முன்னேற்றத் திட்டம் (PMAGY) தொடர்பான மின்னணு ஒப்பந்தப்புள்ளிகளுக்கு (E-Tenders) ஒன்றிய அளவில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து சாலை மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். அவ்வாறு போராடிய கிராம ஊராட்சித் தலைவர்களை காவல்துறையினர் மிக மோசமாக நடத்தி, இழுத்துச் சென்று கைது செய்துள்ளனர். அதைக் கண்டித்து காவல்துறைக்கு எதிராகப் போராடிய கிராம மக்கள் மீதும் தடியடி நடத்தியுள்ளனர் காவல்துறையினர்.

 

ஏற்கனவே ஒன்றிய அளவில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்துப் பல புகார்களை ஊராட்சித் தலைவர்கள் மாவட்ட அளவில் அளித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக பல கட்ட பேச்சுவார்த்தைகளையும் ஊராட்சித் தலைவர்கள் நடத்தியுள்ளனர். கடைசியாகக் கூட்டமைப்பின் ஊராட்சித் தலைவர்கள் அனைவரும் மே 5, 2023 அன்று ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய அளவிலான அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து ஊராட்சித் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர். இவ்வாறு அறவழியில் அவர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் காவல்துறையினர் அவர்களைச் சட்ட விதிமுறைகளை மீறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் என்றும் பாராமல் சட்டையைப் பிடித்தும், குண்டு கட்டாகத் தூக்கியும் இழுத்துச் சென்று கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் இந்த கண்ணியமற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறது தன்னாட்சி.  

 

ஊராட்சி அளவில் எந்த ஒரு திட்டம் செயல்படுத்தப்படுவதாக இருந்தாலும் கிராம ஊராட்சியின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் செயல்படுத்தக் கூடாது என்பது விதியாகும். குறிப்பாக பட்டியல் பிரிவு மற்றும் பட்டியல் பழங்குடிகளுக்குப் பயன்படும் விதமாக வடிவமைக்கப்பட்ட பிரதம மந்திரி கிராம முன்னேற்றத் திட்டம் (PMAGY) கிராம ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் தான் செயல்படுத்தப்பட வேண்டும். மேலும் எந்த ஒரு இந்தியக் குடிமகன்களுக்கும் அறவழியில் போராடுவது என்பது அரசமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட உரிமையாகும். ஆனால் மேலுள்ள எந்த ஒரு சட்ட விதிமுறைகளையும் மதிக்காமல் நடந்து கொண்ட ஒன்றிய அளவிலான அலுவலர்கள், ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினர் அனைவரின் மேலும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறது தன்னாட்சி. மேலும் தோழர் நேதாஜி உள்ளிட்ட ஊராட்சித் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது தன்னாட்சி.

 

மேலும் இது போன்று ஊராட்சி அளவில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஒன்றிய அலுவலர்கள் மற்றும் ஆளுங்கட்சியினர் தலையீடுகள் இருப்பதாகக் கூறி ஊராட்சித் தலைவர்கள் போராடுவது தமிழ்நாடு முழுவதும் தொடர்கதையாகி வருகிறது. அரசு உடனடியாக இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசிற்குத் தன்னாட்சி கோரிக்கை வைக்கிறது.


வினோத் குமார் 

பொது செயலாளர்

தன்னாட்சி 

9445700758 

thannatchi.in



Tuesday, 6 June 2023

அதிகாரப்பரவலுக்கு எதிரான தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை அரசு ஏற்கக் கூடாது!

அதிகாரப்பரவலுக்கு எதிரான

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை

அரசு ஏற்கக் கூடாது!

 

தன்னாட்சி அறிக்கை


தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம், கடந்த மே 15, 2023 முதல், சென்னை பனகல் மாளிகை அருகில் தொடர் காத்திருப்புப் போராட்டம் (மே 18, 2023 வரைநடத்தியதுஅரசு கருவூலத்திலிருந்து ஊதியம், TNPSC மூலம் பணியிடங்களை நிரப்புதல்மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஒன்றியத்துக்குள் பணியிட மாற்றம் மற்றும் அரசு பணியாளர்களுக்கான சலுகைகள் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டனசமீபத்தில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தங்களை (பிரிவு 104 மற்றும் 106) உள்ளடக்கிய பணிவிதிகள் அரசாணையை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் முதன்மையாக வைக்கப்பட்டது.

அதாவதுஊராட்சி செயலாளர்கள் கிராம ஊராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்க விரும்பவில்லை என்பதையே இந்தப் போராட்டம் உணர்த்துகிறதுஅவர்களின் கோரிக்கைகள், அவர்கள் கிராம ஊராட்சியின் பணியாளர்களாக இல்லாமல் தமிழ்நாடு அரசின் பணியாளர்களாக வேண்டும் என்பதையே வெளிப்படுத்துவதாக உள்ளதுஇது அடிப்படையில் உள்சுயாட்சி அரசுகளின் சுயாட்சித் தன்மையை (இந்திய அரசமைப்புச் சட்டம் 243G) கேள்விக்குள்ளாக்குகிறது.

ஏற்கனவே (மே 12, 2022)தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப் பிரிவுகள் 104 மற்றும் 106 இல் மேற்கொள்ளப்பட்டத் திருத்தங்கள்ஊராட்சி செயலாளர்களை ஊராட்சி தலைவர்களுக்கு இணை அதிகாரம் மிக்க நபர்களாக மாற்றும் என்பதையும் ஊராட்சி செயலாளர்களை ஊராட்சி மன்றமோ அல்லது கிராமசபையோ கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகும் என்பதையும் விளக்கி அந்தச் சட்டத் திருத்தங்களைத் திரும்பப்பெறக் கோரி தன்னாட்சி வலியுறுத்தியுள்ளது. (அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது)

ஊராட்சி அளவில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கான நிதியைக் கையாளும் PFMS இல் MAKER (இணையவழியில் பணப்பரிமாற்றத்தை துவங்கும்) அதிகாரம் உள்ள ஊராட்சி செயலர்களை இடமாற்றம் செய்வதுதண்டிப்பது போன்ற கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் ஊராட்சி மன்றத்திடம் இருப்பதை உறுதி செய்வதே எளிய மக்கள் பெரும்பாலானோர் பிரதிநிதிகளாக (50 சதவீதத்திற்கும் மேல் பெண் பிரதிநிதிகள்; 18 சதவீதத்துக்கு மேல் பட்டியல் பிரதிநிதிகள்இருக்கும் ஊராட்சி அரசுகளை வலுப்படுத்துவதாகவும் அதிகாரப்பரவலை உறுதி செய்வதாகவும் இருக்கும்.

ஏற்கனவேபல இடங்களில் ஊராட்சித் தலைவர்கள் ஊராட்சி சார்ந்த பல பணிகள் தங்களுக்கு தெரியாமல் ஒன்றிய அளவிலே முடிவு செய்யப்படுவதாகக் கூறி போராட்டங்கள் நடத்திவரும் சூழலில்ஊராட்சி செயலாளர்கள் தமிழ்நாடு அரசின் பணியாளர்களாக அதாவது ஒன்றிய அளவிலான அலுவலர்களின் கட்டுப்பாட்டில் செல்லும் வகையில் முடிவெடுப்பதுஅதிகாரப்பரவலுக்கும் கிராம உள்ளாட்சி அதிகாரங்களுக்கும் எளிய மக்களுக்கும் எதிராக அமையும் என்பதை அரசு மறந்துவிடக்கூடாது.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்கும் எந்த முடிவும்ஊராட்சி செயலாளர்கிராம ஊராட்சியின் செயல் அலுவலரான கிராம ஊராட்சி தலைவருக்கும் ஊராட்சி மன்றத்திற்கும் கட்டுப்பட்டவராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை தன்னாட்சி அழுத்தமாக வலியுறுத்துகிறது.


வினோத் குமார் 

பொது செயலாளர்

தன்னாட்சி 

9445700758 

thannatchi.in

Thursday, 25 May 2023

என்.எல்.சி.க்கு எதிரான கிராமசபைத் தீர்மானங்களுக்காக ஊராட்சி செயலர்களை பணியிடமாற்றம் செய்வதா?

என்.எல்.சி.க்கு எதிரான கிராமசபைத் தீர்மானங்களுக்காக ஊராட்சி செயலர்களை பணியிடமாற்றம் செய்வதா?

தன்னாட்சி கண்டன அறிக்கை

கடலூர் மாவட்டத்தில், கடந்த மே 1 அன்று நடந்த கிராமசபையில், மேல்புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட கத்தாழை, சின்ன நெற்குணம், மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, நெல்லிக்கொல்லை, எறும்பூர் ஆகிய 6 கிராம ஊராட்சிகளில், மக்கள் கோரிக்கைகளின் அடிப்படையில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி இந்தியா நிறுவனம் (NLC India) தனது சுரங்கப் பணி விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்த்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஊராட்சிகளின்,  ஊராட்சி செயலாளர்கள் 6 பேரை, அந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் நிர்வாகக் காரணங்களுக்காக பணியிடமாற்றம் செய்துள்ளதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

என்.எல்.சிக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய குறிப்பிட்ட 6 ஊராட்சிகளின் ஊராட்சி செயலாளர்கள் மட்டும் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பது, "அரசுக்கு எதிராக, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துத் தீர்மானம் நிறைவேற்ற ஒத்துழைத்தால் தண்டிக்கப்படுவீர்கள்" என்று ஊராட்சி செயலாளர்களுக்கு விடுக்கப்படும் மறைமுக மிரட்டலன்றி வேறல்ல. கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலரின் (கிராம ஊராட்சி) இந்த மக்கள் விரோதச் செயலைத் தன்னாட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒரு கிராம ஊராட்சி, தனது எல்லைக்குட்பட்ட பொதுப் பிரச்சனைகளில், ஊராட்சியின் சட்டப்படியான அதிகாரங்களுக்குட்பட்டு, மக்களின் முடிவின் அடிப்படையில், கிராமசபையில் தீர்மானங்களை நிறைவேற்ற உரிமை உண்டு. அப்படிப்பட்டத் தீர்மானங்களை ஆய்வுக்குட்படுத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய வாய்ப்பளித்து, தேவைப்பட்டால் அவற்றை  நிராகரிக்கும் அதிகாரத்தை, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 202, ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு (மாவட்ட ஆட்சியர்) வழங்கியுள்ளது.

இந்நிலையில், கிராமசபையில் ஒரு பொதுப் பிரச்னை குறித்த மக்களின் விவாதங்களை, முடிவுகளை தொடக்கத்திலேயே ஊராட்சி செயலர்கள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும் கிராமசபையின் அதிகாரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் ஊராட்சி செயலாளர்களை பணியிடமாற்றம் செய்திருக்கும் மேல்புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது, துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடலூர் மாவட்டத்தின் ஊராட்சிகளின் ஆய்வாளர் (மாவட்ட ஆட்சியர்) அவர்களுக்கு தன்னாட்சி கோரிக்கை வைக்கிறது.

தோழமையுடன்

வினோத் குமார்
பொதுச் செயலாளர்
தன்னாட்சி
9445700758

thannatchi.in 

Thursday, 23 February 2023

சட்ட பஞ்சாயத்து இயக்கம் பத்திரிகை செய்தி - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் புகார்

சட்ட பஞ்சாயத்து இயக்கம்


பத்திரிகை செய்தி (24-02-2023)

தொடர்புக்கு : 9942288439

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் புகார் 


தமிழகத்தின் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27, 2023 அன்று நடைபெற உள்ளது. இதற்காக, அரசியல் கட்சிகளின் இடைத்தேர்தல் பிரச்சாரம் என்ற போர்வையில் சட்டவிரோதமான செயல்கள் மற்றும் மோசமான உத்திகளை கையாண்டு வெற்றி பெற முயற்சி செய்கின்றனர். மேற்படி சட்ட விரோதமான செயல்கள், இந்திய ஜனநாயகத்திற்கு அவமானம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்காளர்களுக்கு எதிர்மறையான மற்றும் சட்டவிரோதமான முறையில் செல்வாக்கு செலுத்துவதற்கு ஏதாவது ஒரு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. வாக்காளர்களுக்கு பணமும் பரிசுகளும் ஏராளமாக வழங்கப்படுகின்றன, மற்ற வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்திப்பதை தவிர்க்க மக்களுக்கு பணம் கொடுத்து தேர்தல் பணிமனைகள் என்ற பெயரில் அனுமதி வாங்காமல் செயல்படும் கொட்டகைகளில் மக்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். இது சம்மந்தமாக, சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உரிய ஆதாரங்களுடன்  தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் அனுப்பியுள்ளோம். எனவே, தேர்தல் ஆணையம் இந்த புகாரை விசாரித்து இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.




                                                                                                 

அருள் முருகானந்தம்,
பொது செயலாளர்,
9942288439            


நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


Satta Panchayat Iyakkam

Member : http://bit.ly/2021spimember |  

Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

Monday, 20 February 2023

அடிப்படை நோக்கத்திலிருந்து திசை மாறுகிறதா நூறு நாள் வேலைத் திட்டம்? Does MGNREGS deviate from its core objectives?


English content is given below

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிற்கான அழைப்பு

MGNREGS ஆய்வறிக்கை வெளியீடு

நாள்: 21/02/2023 - செவ்வாய்க்கிழமை

நேரம்: காலை 11.30 மணி

இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம்சென்னை

தொடர்பு: 9884989588/ 9445700758

 

ஒருங்கிணைப்பு: Institute of Grassroots Governance (IGG) மற்றும் தன்னாட்சி 

 

தமிழ்நாட்டின் கிராம ஊராட்சிகளில் MGNREGS திட்டத்தின் செயல்பாடு பற்றி தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களுக்கு ஒரு கிராம ஊராட்சி வீதம்  37 கிராம ஊராட்சிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தியதன் மூலம் கண்டறியப்பட்ட ஆய்வறிக்கையை வரும் செவ்வாய்க்கிழமை அன்று பத்திரிக்கையாளர் முன்னிலையில் சென்னையில் வெளியிட உள்ளோம். தமிழ்நாட்டில் MGNREG திட்டம் எவ்வாறு திட்டமிடப்படுகிறது? எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? அதன் மீதான சமூக தணிக்கை எவ்வாறு நடைபெறுகிறது? திட்டம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடமும் ஊராட்சி பிரதிநிதிகள் இடமும் எந்த வகையில் உள்ளது? போன்ற பல பரிமாணங்களை ஆராயும் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டு விளக்க பத்திரிக்கையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் உரிமையுடன் அழைக்கிறோம்.

 

ஏற்கனவே இந்திய அரசின் பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 33% அளவில் 60,000 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆய்வறிக்கை மற்றும் அதைச் சார்ந்த பரிந்துரைகள் தமிழ்நாட்டின் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கும் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சிக்கும் உதவும் என்ற நம்பிக்கையுடன் கூட இருக்கும் இக்கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

இந்த முக்கிய சந்திப்பிற்கு தங்களது நிரூபரை அனுப்பி இந்த ஆய்வறிக்கையின் தகவல்களை/ கண்டறிதல்களை தமிழ்நாடு அரசுக்கும் கிராம மக்களுக்கும் கொண்டு செல்ல ஒத்துழைக்க வேண்டுகிறோம்.


நன்றி!


இரா. வினோத் குமார்

பொதுச் செயலாளர், தன்னாட்சி

 

மு. பிரபாகரன் 

Institute of Grassroots Governance (IGG)



Press Invite

Does MGNREGS deviate from its core objectives?

 

Releasing the research report of MGNREGS in Tamil Nadu

 

Date: 21/02/2023 – Tuesday

Time: 11.30AM

Place: Chennai Press Club, Chennai

Contact: 9884989588/ 9445700758

 

By: Institute of Grassroots Governance (IGG) and Thannatchi

 

For the past six months, we have undertaken a field research titled "A study on planning, implementation and auditing of Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS) in Village Panchayats of Tamil Nadu". The research was conducted in 37 village panchayats i.e., one village panchayat per district (Except Chennai) in Tamil Nadu. We are releasing the research report on Tuesday at Chennai Press club in front of the press and other media networks.

 

The report explains I) how this scheme is being implemented in Tamil Nadu II) How the auditing is being conducted III) How the elected representatives in village panchayats are aware about this scheme.

 

We will also share the key findings of the research report and recommendations.

 

As you all know that, this year union budget allocation for this scheme has been reduced by 33% as compared to last year. This report and its recommendations will be a useful resource that benefits the welfare of MGNREGA workers as well as for the empowerment of village panchayats in Tamil Nadu.

 

For this important meeting, we kindly request you to send your reporters/resource persons to cover the event and take this key findings and recommendations to the knowledge of Tamil Nadu government which will benefit a larger section of people.


Thank You!

 

 R. Vinoth Kumar

General Secretary, Thannatchi


M. Prabagaran

Institute of Grassroots Governance (IGG)    

Monday, 23 January 2023

நூறு நாள் வேலை திட்டம் - தென்னிந்திய மாநிலங்களுக்கான நிதியைக் கட்டுப்படுத்தக் கூடாது!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தினைச் (MGNREGA-2005) சீரமைக்கிறோம் என்ற பெயரில், தென்னிந்திய மாநிலங்களுக்கான நிதியைக் கட்டுப்படுத்தக் கூடாது!

தன்னாட்சி அறிக்கை / 21.01.2023

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் - 2005 இன் செயல் திறனை ஆய்வு செய்யவும் அதனை மறுக்கட்டமைக்க பரிந்துரைகளைக் கோரியும், ஒன்றிய அரசு, ஊரக வளர்ச்சித் துறையின் முன்னாள் செயலாளர் மற்றும் பிரதமரின் ஆலோசகரான திரு. அமர்ஜீத் சின்ஹா தலைமையில், 9 பேர் கொண்ட குழுவை, கடந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி அமைத்தது. 3 மாதங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டிய அக்குழு, கடந்த நவம்பர் மாதம் முதல் முறை கூடியது.

இந்நிலையில், இச்சட்டத்தின் மூலம் வறுமை அதிகம் உள்ள பீகார் போன்ற மாநிலங்களில், ஒரு உறுதியான மாற்றத்தை ஏற்படுத்த போதுமான பணிகளை உருவாக்க இயலாத சூழலில், பொருளாதார ரீதியாக சிறந்து விளங்கும் கேரளா போன்ற மாநிலங்களோ சொத்து உருவாக்கத்திற்காக இத்திட்டத்தை பயன்படுத்துகின்றன என்றும் பீகாருக்கு MGNREGA அதிகம் தேவைப்பட்டாலும், திட்டத்தின் தற்போதைய கட்டமைப்பின் காரணமாக, கேரளாவிற்கான நிதியை ஒன்றிய அரசால் மறுக்க முடியாது என்றும் பொருள்படும் வகையில் சின்ஹா குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறியதாக, கடந்த நவம்பர் 26, 2022 'தி ஹிந்து' நாளிதழ்ச் செய்தி கூறுகிறது. மேலும் அச்செய்தியில், இச்சட்டம் வறுமையை ஒழிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டது என்று வளர்ச்சித் துறையை அறிந்த ஒரு மூத்த அலுவலர் கூறியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ், டிசம்பர் 4, 2022 அன்று வெளியிட்டச் செய்தியொன்றின் படி, பிரதமர் மோடி அவர்கள், கிராமப்புறங்களில் MGNREGA திட்டத்தை ஏழைகள் பயன்பெறுமாறு மாற்றியமைக்க விரும்புவதாகவும் ஏழை மாநிலங்கள் முன்னேறும் வகையில் இந்தத் திட்டம் இருப்பதற்குப் பதிலாக, வசதி வாய்ப்புகள் பெற்ற மாநிலங்களையே மேலும் மேம்படுத்துவதாக உள்ளது என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார் என்றும் பெயர் சொல்ல விரும்பாத இரண்டு மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

எனில் திரு. அமர்ஜீத் சின்ஹா தலைமையிலான குழு, இத்திட்டத்திற்காக  ஒதுக்கப்பட்ட நிதியளவைக் குறைக்க, குறிப்பாக சிறப்பாகச் செயல்படும் தென்னிந்திய மாநிலங்களுக்கு நிதியைக் குறைக்கவும் குறிப்பிட்ட பகுதிகளில்/ மாவட்டங்களில் மட்டும் திட்டத்தைச் செயல்படுத்தவும் குறிப்பிட்ட மக்கள் மட்டும் பயன்பெறும் வகையிலும் திட்டத்தினை மாற்றியமைக்கப்  பரிந்துரைக்குமா என்ற ஐயம் எழுகிறது. ஏற்கனவே, கடந்த இரண்டு ஆண்டுகளில், ரூபாய் 1,06,000 மற்றும் ரூபாய் 1,11,000 கோடிகளாக இருந்த திட்டச் செலவுக் கணக்கு, இந்த நிதியாண்டு ரூபாய் 73,000 கோடியாகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் முதல் பக்கத்திலேயே கிராமப்புற குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்தவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டதாகக் குறிப்பு உள்ளதே தவிர, எந்த இடத்திலும் வறுமையை ஒழிக்க இச்சட்டம் கொண்டுவரப்பட்டதாகக் குறிப்பிடப்படவில்லை. அப்படியே வறுமையை ஒழிக்க MGNREGS பயன்படுகிறது என்று வைத்துக்கொண்டால் கூட, தென்னிந்திய மாநிலங்களில் வறுமையை ஒழித்து பொதுச் சொத்துகளை உருவாக்க முடிவதற்கான அதே வாய்ப்புகள் தான் அனைத்து மாநிலங்களுக்கும் உள்ளன. எனவே உரிய வழிகாட்டுதல்களுடன் இத்திட்டத்தை முறையாகப் பயன்படுத்தினால் அனைத்து மாநிலங்களிலும் வறுமையை ஒழிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என்பதே உண்மை.

தவிர, இச்சட்டத்தின்படி, திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் குறிப்பாகத் தொழிலாளர் நிதி மதிப்பீடு (Labor budget) தயாரித்து நிதியைப் பெறுவதில் ஒன்றிய அரசின் பங்கை விட, மாநிலங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் பங்கே மிக அதிகம். ஒவ்வொரு கிராம ஊராட்சியும் அதன் தொழிலாளர் நிதி மதிப்பீட்டில் கோரியுள்ள நிதியினை, அந்தக் கிராம சபை ஒப்புதல் அளித்து இருந்தால், அதை மறுக்காமல் வழங்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை என்பதைச் சட்டம் தெளிவாகக் கூறுகிறது. சின்ஹா குழு உறுப்பினர் குறிப்பிட்டுள்ளவாறு பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள கிராம ஊராட்சிகளும் மாநில அரசும் ஒன்றிணைந்து முறையாகத் தங்கள் தொழிலாளர் நிதி மதிப்பீட்டினைத் தயாரித்து வழங்கினால் அவர்கள் கேட்கும் நிதி சட்டப்படி கிடைக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் அவர்கள் செய்ய நினைக்கும் பணிகளை பெற முடியும் என்பதே உண்மை. 'தேவையின் அடிப்படையில் வேலை' (demand based work) என்று இயங்கும் இத்திட்டத்தில் அவர்கள் குறிப்பிடும் பீகார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் தங்களுக்குத் தேவையான வேலையைக் கோராததால் அவர்களுக்கு குறைந்த அளவு நிதியும் அதே வேளையில் கேரளா போன்ற மாநிலங்கள் அவர்களுக்குத் தேவையான வேலையைக் கோருவதால் அவர்களுக்கு அதிக அளவு நிதியும் ஒதுக்கப்படும் நிலையில், தென்னிந்திய மாநிலங்கள் மட்டும் அதிக நிதியைப் பெறுகிறது என்ற வகையில் கருத்துருவாக்கம் செய்யப்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே,

1.     சின்ஹா தலைமையிலான குழு, ஒருவேளை தென்னிந்திய மாநிலங்களின் MGNREGS பணிகளை / நிதியைக் கட்டுப்படுத்தப் பரிந்துரைத்தால், அதை ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது.

 

2.     அதேபோல், வறுமையுள்ள மாநிலங்களாக ஒன்றிய அரசு கருதும் மாநிலங்களின் கிராம ஊராட்சிகளுக்கு MGNREGA சட்டம் மற்றும் திட்டம் தொடர்பான முறையான வழிகாட்டுதல்களும் பயிற்சியும் கிடைக்கப் பெறுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்.

 

என்று தன்னாட்சி கோருகிறது.

References:

 

The Hindu News:

https://www.thehindu.com/news/national/government-forms-panel-to-look-into-mgnregas-efficacy/article66183754.ece

 

Hindustan Times News:

https://www.hindustantimes.com/india-news/modifavours-nregs-recast-to-help-poorest-101670090279959.html

 

நன்றியுடன்

 

இரா. வினோத் குமார்

பொதுச் செயலாளர்

9445700758 / 7200297276