Friday, 14 May 2021

பத்திரிக்கை செய்தி (14/05/2021, 4PM )

பத்திரிக்கை செய்தி  (14/05/2021, 4PM ) 

38 மாவட்டங்களிலும் 185 சித்த மருத்துவர்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்த தன்னார்வத் தொண்டு செய்ய கைகோர்த்தனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கடந்தகாலங்களில் தமிழ்நாட்டுக்கு வந்த பெருந்தொற்று நோய்களான, டெங்கு, சிக்குங்குனியா மற்றும் கோரோனாவின் முதல் அலையின்போது சித்தமருத்துவம் பெரும்பங்கு வகித்தது நாம் அனைவரும் அறிந்ததே. . இதன் அடிப்படையில், கோரோனா இராண்டாம் தொற்றின்போதும், சித்தமருத்துவம் மக்களுக்கு பயன்படவேண்டும் என்ற அடிப்படையில் அரசு சிறப்பு கவனம் செலுத்திவருகிறது.


வலைத்தமிழ் ஒருங்கிணைப்பில் சித்தமருத்துவர்கள் இணைந்து, "மக்களைக் காக்கும் சித்தமருத்துவம்" என்ற தொடர் நிகழ்ச்சியை கடந்த ஓராண்டாக நடத்திவருகிறார்கள். அதில், பிரபல சித்தமருத்துவ ஆளுமைகளை அழைத்து, எப்படி சித்தமருத்துவத்தை மக்கள் பயன்பாட்டுக்கு  மேலும் எடுத்துச் செல்வது என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது.


இத்தொடரில் 24-வது  நிகழ்வாக தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் இக்கட்டான கொரோனா சூழலை கருத்தில் கொண்டு   மாவட்ட அளவில் உள்ள சித்த மருத்துவர்கள் அந்தந்த மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்துடன் கைகோர்த்து தன்னார்வலர்களாக, காணொளி வழியாக (Tele Medicine )  ஆயுஷ் அமைச்சகமும், தமிழ்நாடு அரசும் வகுத்துள்ள வழிகாட்டலின்படி ஆரம்பகட்ட நிலையில் உள்ள மக்களுக்கு உதவ நம்முன் உள்ள வாய்ப்புகளைக் குறித்து கலந்துரையாட வரும்படி தனியார் சித்தமருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  அதில் இதுவரை 185 மருத்துவர்கள் பதிவுசெய்திருந்தார்கள்


இந்நிலையில்,  நேற்று 13 மே 2021 ல் இரவு 9 மணிக்கு , அனைவரையும் அழைத்து ஒரு சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் 38 மாவட்டங்களிலிருந்து பதிவுசெய்த  சித்தமருத்துவர்கள் கலந்துகொண்டு, இன்று நாம் சந்திக்கும் சவால்கள், அவர்களின் கள அனுபவங்கள்,  இதற்கு நாம் எப்படி அரசுடன் கைகோர்த்து மக்களைக் காக்கும் பணியில் துணைநிற்பது என்று விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், மருத்துவர்கள் தன்னார்வலர்களாக இணைந்து கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க அரசுக்கு ஒத்துழைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, டெலிமெடிசின் என்று சொல்லப்படும் முறையில் அனைத்து சித்த மருத்துவர்களும், அவரவர் வீடு அல்லது மருத்துவமனையில் இருந்தவாறே மக்களுக்கு பணி செய்யும் உத்தியை செய்ய முன்வந்துள்ளனர். கொரோனா குறித்த சந்தேகங்கள், வருமுன் காப்பது, குறிகுணம் இல்லாத கோவிட், குறைந்த குறிகுணம் உடைய கோவிட், மிதமான குறிகுணம் உள்ள கோவிட், கோவிட் குணமான பின் மருத்துவ முறை, வீட்டில் இருந்தே ஹோம் குவாரன்டைன் முறையில் நோயாளி தன்னை பராமரிப்பது, எந்த நிலையில் மருத்துவமனை செல்வது, உணவுப்  பழக்கம், என அனைத்தையும் அரசின் வழிகாட்டுதல்களின் பேரில் மக்களுக்கு தொலைபேசி/வீடியோ வழியாக தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள மக்களுக்கு பயன்படும் வகையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், மருத்துவ மனைகளில் குவியும் கூட்டத்தை ஒழுங்கு படுத்த முடியும். தேவையான நோயாளிகள் மட்டுமே மருத்துவமனை செல்லும் போது, மருத்துவ பணியாளர்களுக்கும் பணிச்சுமை குறையும். தேவையான நோயாளிகளிக்கு படுக்கையும் தயாராக இருக்கும். இத்திட்டம், தமிழக அரசுக்கு பக்க பலமாக இருக்கும் என்று முடிவுசெய்யப்பட்டது.

தேசீய சித்த மருத்துவ இயக்குநர்  டாக்டர்.மீனாகுமாரி அவர்கள் இந்த தன்னார்வக்குழுவின் முயற்சியைப் பாராட்டி, இது அவசியமான சேவை என்று குறிப்பிட்டு இதற்கு பக்கபலமாக இருப்பதாக  உறுதியளித்தார்.  இக்கூட்டத்தில் பேசிய இயக்குநர்  அவர்கள் , இந்த டெலிமெடிசின் திட்டத்தில்  ஈடுபடும் சித்த மருத்துவர்களுக்கு உரிய பயிற்சிறையும், அரசின் வழிகாட்டுதல்களையும் தனது குழு வழங்கும் என்று தெரிவித்தார். தேசீய சித்த மருத்துவ நிறுவன பேராசிரியர் டாக்டர்.கிறிஸ்டியன் பேசுகையில்  ஒருங்கிணைந்த மருத்துவ முறையில் நவீன மருத்துவத்துடன் சித்த மருந்துகளையும் இணைத்து செய்யும் போது, வேகமாக முன்னேற்றம் கிடைக்கிறது என்றும், இறப்பு விகிதம் வெகுவாக குறைகிறது என்றும் தெரிவித்தார். மணிப்பால் பல்கலைகழகத்தின்  சித்த மருத்துவப்  பிரிவின் ஆராய்ச்சியாளர் டாக்டர். அருள் அமுதன் அவர்கள், இந்த திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தலாம் என்று விவரித்தார். மாவட்டம் தோறும் 20 சித்த மருத்துவர்கள் தன்னார்வலர்களாக செயல்பட்டால், ஒருவர் தினமும் 10 நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கினால், தினமும் 200 நோயாளிள் வீதம், ஒரு மாதத்தில் 6000 நோயாளிகள் ஒரு மாவட்டத்தில் பயன்பெறுவர். இப்படி 38 மாவட்டங்களிலும் சேர்த்து வெகுவாக பயன்பெறுவர் என்று குறிப்பிட்டார். நோயாளிகளை நோய் தீரும்வரை தொடர்ந்து கண்காணித்து வருதல் மற்றும் அவர்களின் தகவல்கள் ஆராய்ச்சிக்காக அரசிடம்  ஒப்படைத்தல் என இந்த திட்டத்தை ஆராய்ச்சிப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

வேலுமயில் சித்தா மருத்துவகல்லூரி பேராசிரியர் டாக்டர்.செந்தில் குமார் அவர்கள், அனைத்து மக்களுக்கும் தேவையான சித்தா மருந்துகள் மற்றும் மூலிகை பொருட்கள் கிடைக்கவும் இந்த திட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும் என்ற கருத்தை தெரிவித்தார். சாய்ராம் சித்தா மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர்.அனிதா அவர்கள்,  MBBS படித்த சித்த மருத்துவர்கள் மற்றும் சித்தமருத்துவம் மீது நம்பிக்கை உள்ள நவீன மருத்துவர்களையும் இணைத்து ஒருங்கிணைந்த சிகிட்சை முறைக்கான அடித்தளத்தை இந்த திட்டத்திலேயே செயல்படுத்தும் சாத்திய கூறுகளை தெரிவித்தார்.

சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர். கீதசுதீர் அவர்கள் இரண்டாம் கோவிட் அலையில், முதல் அலையை விடவும் வீரியம் மிகுந்த சித்த மருந்துகளை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவரின் அனுபவந்த்தையும் பகிர்ந்தார். ஆட்டிசம் சிறப்பு மருத்துவரும் சுவாபிமான் நிறுவனருமான டாக்டர் பார்த்தீபன் அவர்கள், நவீன நோய்கணிப்பு முறைகளின் அடிப்படையில் சித்த மருந்துகளை பரிகரிக்கவும், துணை நோய்களை உடையவர்களுக்கு சிறப்பு சித்தா சிகிட்சைகளை செய்யவும் இந்த திட்டத்தில் வழிவகை செய்யுமாறும் வலியுறுத்தினார்.  மருத்துவர் கார்த்திகேயன் இக்குழுவுடன் ஆங்கில மருத்துவர்களையும் இணைத்து செய்தால் சிறப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார்.  மருத்துவர்.சிவஞானம் இன்றிய ஆக்சிஜன் குறித்தான தேவையை குறிப்பிட்டு பேசினார்.

ஆயுஷ்பதி சங்கத்தின் தலைவர் டாக்டர்.அலெக்ஸ், இந்த திட்டத்தினை வெற்றிகரமாக செய்ய அனைத்து சித்த மருத்துவர்களும் இணைந்து மாவட்ட அளவில் அரசுடன் கைகோர்த்து செயல்படுவதன் அவசியத்தையும், இந்த திட்டத்தின் மூலம் மக்கள அடையபோகும் நன்மையை முன்னிறுத்தி செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.

இந்த திட்டத்தில், மருந்துகள் குழு, தன்னார்வ அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு ,  அரசின் புதிய வழிகாட்டுதல்கள் குழு, மருத்துவர்களின் பயிற்சி குழு, திட்ட ஒருங்கிணைப்பு குழு, ஒருங்கிணைந்த மருத்துவர் குழு, அவசர மருத்துவர்கள் குழு, இணைய குழு,  என பல்வேறு குழுக்கள் அமைக்கப்படும். அனைத்து குழுவும் அரசின் வழிகாட்டுதலின் பேரில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்த பணியை செய்து முடிப்பது என்று ஒருமனதாக முடிவெடுக்கப் பட்டது,

மேலும் அனைத்து சித்த மருத்துவர்களின் பல்வேறு கருத்துக்களும் பகிரப்பட்டு, குறிப்பு எடுக்கப்பட்டது. விரைவில் இந்த குழு தன் பணியை செவ்வனே தொடங்கி, தமிழகத்தில் கோரோனாவை ஒழிக்க அரசுடன் இணைந்து செயல்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. தமிழக அரசின் கோரோனா வாடிக்கையாளர் சேவை  எண்ணான 104 உடன் இந்த திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தில் ஆர்வமுள்ள அனைவரது விவரங்களுடன் அரசுக்கு தெரிவித்து உரிய வழிகாட்டலைப் பெற்று இதை உடன் நடைமுறைக்கு கொண்டுவர முயற்சிமேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. மாவட்ட அளவில் சித்த மருத்துவர்கள் ஒருங்கிணைப்பு, மருத்துவர்களுக்கான பயிற்சி , ஒருங்கிணைந்த  இணையதளம், வாட்ஸப்  உதவி எண் , மாவட்ட அளவில் இதில் இணைந்து கைகொடுக்க விரும்பும் தன்னார்வ அமைப்புகளை  அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல கோணங்களில் தன்னார்வக் குழுவினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.


தொடர்புக்கு :

மக்களைக்காக்கும் சித்த மருத்துவக்குழு,

மருத்துவர். அருள் அமுதன், MD (சித்தா), M.Sc(Medical Pharmacology), P.hd.

மருத்துவர். செந்தில்குமார், MD (சித்தா)

மருத்துவர். அனிதா, MD (சித்தா), PGDY


Wednesday, 10 March 2021

Social activist Senthil Arumugam, Siva Elango contesting from Pallavaram, Tambaram on behalf of MNM

வணக்கம்,

மக்கள் நீதி மய்யம் சார்பாக நான் பல்லாவரம் தொகுதியிலும், சிவ இளங்கோ தாம்பரம் தொகுதியிலும் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ளோம். சமூக ஆர்வலர்களை ஆரத்தழுவி வரவேற்று, தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ள மய்யத்தின் தலைவர் திரு.கமலஹாசன் அவர்களுக்கும், மய்யத்தின் நிர்வாகிகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மக்களிடம் தேர்தல் நிதி வசூலித்து, எவ்வித முறைகேடுகளையும் செய்யாமல், நேர்மையாக தேர்தலை சந்திக்க இருக்கிறோம். எங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இத்துடன் எங்களை பற்றிய முழு தகவல்களையும் இணைத்துள்ளோம்.

அன்புடன்
செந்தில் ஆறுமுகம் மற்றும் சிவ இளங்கோ
தொடர்பு எண் : 87545 80274 | 87545 80270


We have been announced as candidates for Tamilnadu elections 2021 on behalf of the Makkal Neethi Maiyam - myself, Senthil Arumugam in Pallavaram constituency and Siva Elango in Tambaram constituency. We extend our heartfelt thanks to Dr. Kamal Hassan, Chairman, mnm and to the MNM Administrators for welcoming social activists and giving them the opportunity to contest the elections.

We are going to face the election honestly, collecting election funds only from the people, strictly being non-compliant towards committing any fraudulent or dishonest activities. Kindly consider this as a humble request to help us reach the people of Tamilnadu.

We have attached the complete information about us herewith.

Yours sincerely,
Senthil Arumugam & Siva Elango
87545 80274 | 87545 80270



"சமூகப்  போராளி" 

செந்தில் ஆறுமுகம் (43), MCA





  • தமிழகத்தில் "நேர்மையான அரசியலின் மூலம் நல்லாட்சி" மலரவேண்டும் என்ற இலட்சியத்திற்காக கடந்த 20 ஆண்டுகளாக உழைத்துவருபவர்.

 

  • சமூக ஆர்வலர், எழுத்தாளர், பேச்சாளர், களப்போராளி மற்றும் தகவல் பெறும் உரிமைச்சட்ட வல்லுநர்.

 

  • MCA பட்டதாரி. தகவல்தொழில்நுட்பத் துறையில் 7 ஆண்டுகள் பணிபுரிந்தார். பல லட்சங்களை சம்பளமாக வாங்கிவந்த செந்தில் ஆறுமுகம், தனது இலட்சியத்திற்காக 2005ல், தன் அமெரிக்க பணியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர சமூக ஆர்வலராக மக்கள் பணியாற்றத் துவங்கினார்.

 

  • "வீட்டுக்கு ஒருவர்; நாட்டுக்கு ஒருவர்" என்று தனது மனைவியும் இவரும் எழுதப்படாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருமணம் செய்து கொண்டனர். பணிக்கு சென்று வீட்டை மனைவி கவனித்து வருகிறார், சமூக - அரசியல் மாற்றத்திற்காக செந்தில் ஆறுமுகம் உழைத்து வருகிறார்.

 

  • மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனரும், சிந்தனை சிற்பியுமான டாக்டர். எம். எஸ். உதயமூர்த்தியிடம் அரசியல் பயின்று, அவரின் உயரிய கொள்கைகளின் வழி நடப்பவர் செந்தில் ஆறுமுகம்.

 

  • சிந்தனை சிற்பிகள் இயக்கம், மக்கள் சக்தி கட்சி என்று பல்வேறு அமைப்புகளின் மூலம் சமூக - அரசியல் மாற்றத்திற்காக உழைத்தவர். 

 

  • 2013ல் சட்ட பஞ்சாயத்து இயக்கம் எனும் மக்கள் இயக்கத்தை நிறுவியவர். சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மூலம் இலஞ்ச-ஊழலுக்கு எதிரான செயல்பாடுகள், சட்ட விழிப்புணர்வு, உள்ளாட்சிகளை வலுப்படுத்துதல், மதுத்திணிப்புக்கு எதிராகக் குரல்கொடுத்தல் போன்ற பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தவர்.

 

  • சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த இவர், இயக்கத்தின் தொலைபேசி சேவை மையத்தின் வழியாக 2 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பிரச்னைகளுக்கு வழிகாட்டப்படுவதற்கு பின்புலமாக இருந்தவர்.

 

  • வேளச்சேரி-கடற்கரை உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் கழிப்பறை,குடிநீர்,பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகள் செய்துதரக்கோருவது, VAO தாங்கள் பணி செய்யும் இடத்திலே தங்க கோருதல், சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய கோருதல் உள்ளிட்ட பல பொதுநல வழக்குகளைத் தொடுத்து உயர்நீதிமன்றத்தில் வாதிட்டவர். சசிகலா பதவி ஏற்பதை தடுக்க இரவோடு இரவாக உச்சநீதிமன்றம் சென்று பொதுநல வழக்கு தொடுத்து தடுக்க முயன்றவர்.

 

  • தூங்கும் தகவல் ஆணையத்தை தட்டி எழுப்ப, "சங்கூதும் போராட்டம்", "பாய் விரித்து தூங்கும் போராட்டம்" என்று பல வித்தியசமான போராட்டங்களை நடத்தியவர். ஆட்சியாளர்கள் மது ஆலை நடத்துவதை எதிர்த்து, சாராயத்தை கீழே ஊற்றி, போயஸ் கார்டன்  முன்பு போராட்டம் நடத்தி, 

 

  • முட்டை ஊழல் உட்பட, திமுக - அதிமுக - பாஜக - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பல ஊழல்கள், டெண்டர் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத செயல்களை வெளிக்கொண்டுவந்துள்ளார்.

 

  • தமிழகத்தில் கிராம சபையை மக்களிடையே பிரபலபடுத்தியதில் இவரின் பங்கு மிக முக்கியமானது. மக்கள் நீதி மய்யத்திற்கு கிராம சபை சம்மந்தப்பட்ட விஷயங்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.

 

  • 1000+ தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தள நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று மக்களின் குரலாக ஊடகங்களில் ஒலித்து வருபவர்.

 

  • சமூக,அரசியல் பிரச்னைகளுக்காக பத்திரிகைகள், முகநூலில் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியுள்ளார். "என்றும் வற்றாத காவிரி அரசியல்" , "ஸ்டெர்லைட் மூடப்பட்டது ஏன்?" போன்ற புத்தங்கங்களையும் எழுதியுள்ளார்.

 

  • பள்ளி,கல்லூரிகளில் பல்வேறு சமூக விழிப்புணர்வு வகுப்புகள், சட்டப் பயிற்சிகள் கொடுத்துள்ளார்.

 

  • சிறந்த சமூக சேவைக்காக விகடன் விருது, கலாம் விருது, சமூக நட்சத்திரம் விருது,  "துருவா" விருது உட்பட பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

 

  • மக்களிடம் இருந்து பெறும் நன்கொடையை மட்டுமே வைத்து சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார். இயக்கம் ஆரம்பித்த பொழுதில் இருந்து தற்போது வரை, தொடர்ந்து 87 மாதங்களாக, இயக்கத்தின் வரவு செலவு கணக்குகளை பொது தளத்தில் வெளிப்படையாக தாக்கல் செய்து வருகின்றது.

 

  • இப்பொழுது மக்களிடம் இருந்து மட்டும் பணம் பெற்று, "ஒரு_ரூபாய்_கூட செலவழிக்காமல்" (#Zero_Budget_Campaign) மக்களை நம்பி தேர்தலில் நிற்க இருக்கிறார்.

 

  • அரசியலை வருமானத்திற்கான வழியாகப் பார்க்காமல், சமூக மாற்றத்திற்கான வழியாகப் பார்க்கும் நேர்மறை சிந்தனை கொண்டவர்.

 

  • வளர்ச்சி அரசியல்-நேர்மை அரசியலை முன்வைத்து தொடர்ந்து களப்பணியாற்றினால் தேர்தல் அரசியலில் மக்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்ற அசராத நம்பிக்கை கொண்டவர்.!!

 

           செந்தில் ஆறுமுகம் 

           தொடர்பு எண்: 87545 80274 | 87545 80270