Thursday, 31 March 2016

மக்கள் துரோக அரசு போட்ட தேசத்துரோக வழக்கு…- ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கும் அதிமுக அரசு

We Condemn, booking of Sedition case against Anti Liquor Activists.

- Senthil Arumugam, General Secretary, Satta Panchayat Iyakkam, 8754580274





மதுவிலக்குப் போராட்டத்தை அடக்கிஒடுக்க
மக்கள் துரோக அரசு போட்ட
தேசத்துரோக வழக்கு…

- ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கும் அதிமுக அரசு


சட்ட பஞ்சாயத்து இயக்கம் பத்திரிகை செய்தி ( 31-03-2016):

----------------------------------------------------------------------------------------------------------------------

தமிழகத்தில் மதுவிலக்கு கோரி நடத்தப்பட்ட எண்ணற்ற போராட்டங்களைக் கண்டுகொள்ளாத தமிழக அரசு, இப்போராட்டங்கள் நடத்துவோரை அடக்கி ஒடுக்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரி 14ம் தேதி "மக்கள் அதிகாரம்" அமைப்பினர் நடத்திய "மூடு டாஸ்மாக்கை" மாநாட்டில் மதுஒழிப்பு குறித்துப் பேசிய சமூக ஆர்வலர்கள் ராஜீ, காளியப்பன், டேவிட்ராஜ், ஆனந்தியம்மாள், வாஞ்சிநாதன், தனசேகரன் ஆகிய 6 பேர் மீது தேசத்துரோக வழக்கு போட்டிருப்பது இப்போக்கிற்கு சமீபத்திய உதாரணம்((வழக்கு எண்:132/16, தேதி:26.03.2016 பிரிவுகள் 124A, 504, 505(1)(b)). குறிப்பாக, தேர்தல் அறிவிப்பு வெளியாகி "காபந்து அரசாக" செயல்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்திலும் அதிமுக அரசானது இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து இவ்வரசானது கடந்த 5 ஆண்டு ஆட்சிகாலத்தில் காவல்துறையை சமூகப் போராளிகளுக்கு எதிராக எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.


"எது தேசத்துரோகம்"?  குடிகெடுக்கும் டாஸ்மாக் கடையை மூடுங்கள் என்று கேட்பது தேசத்துரோகமா?  மாணவர்களைச் சீரழிக்கும் மதுக்கடையை மூடுங்கள் என்று கேட்பது தேசத்துரோகமா? 


2011 தேர்தலில் அதிமுக கூட்டணி அரசு பெற்ற மொத்த வாக்குகள்: 1.91 கோடி. கிட்டத்தட்ட 2 கோடி. இதில் சரிபாதியோ, அதற்கு மேலோ பெண்களின் வாக்காக இருந்திருக்கும். இப்படி 1 கோடி பெண்களின் வாக்கை வாங்கி ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, டாஸ்மாக் கடைகள் நடத்தி பெண்களின் வாழ்க்கையைச் சீரழிக்கிறது. தங்கள் வாழ்க்கை மேம்படும் என்று நம்பி வாக்களித்த 1 கோடி பெண்களுக்கு டாஸ்மாக் மூலம் அதிமுக செய்வது பச்சைத் துரோகம். டாஸ்மாக் கடைகள் குடும்பங்களைச் சீரழிக்கிறது என்பது தெரிந்தும், விடாப்பிடியாக மதுக்கடைகள் நடத்தும்  ஜெயலலிதா அரசை "மக்கள் துரோக அரசு" என்று அழைப்பதுதான் சரியாக இருக்கும். ஓட்டுப்போட்ட கோடிக்கணக்கான மக்களுக்குத் துரோகம் செய்த அரசு இன்று சமூக ஆர்வலர்கள் மீது தேசத்துரோக வழக்குப்போடுவது வேடிக்கையாக இருக்கிறது.


பேச்சுரிமை, கருத்துரிமைக்கு மதிப்பளிக்காமல் 6 பேர் மீதும் வழக்குப்போட்டு ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் அதிமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆர்வலர்கள் 6 பேர் மீது போடப்பட்டது பொய்வழக்கு என்று விரைவில் நிரூபணமாகும். அவர்கள் விடுதலையாவார்கள். இவர்கள் பொய்வழக்கிலிருந்து விடுதலையாகும் சமயத்தில்  "மக்கள் துரோக அரசு" நடத்துவோர் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம்.


                                                                                                        செந்தில் ஆறுமுகம், 

                                                                                                  மாநில பொதுசெயலாளர்,                                                                                                       சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
                                          8754580274
                                                                                                                                             

 





Thursday, 17 March 2016

Re: PRESS MEET : Releasing 1st List Candidates (Social Activists & Youths) of Puthiya Sakthi Front - புதிய சக்தி அணியின் முதல் வேட்பாளர் பட்டியல் (சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள்) வெளியீடு - Mar 17th (Tomorrow), Thursday 12 noon

      

Media Release - Mar 17, 2016


              1st List Candidates (Social Activists & Youths) of Puthiya Sakthi Front Released


We released our 1st List of Candidates comprising of 11 Social Activists & Youth today. Please find attached the list of Candidates & Photo along with their details. 


      

பத்திரிகை செய்தி – 17-03-2016


புதிய சக்தி அணியின் முதல் வேட்பாளர் பட்டியல் (சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள்) வெளியீடு


புதிய அரசியல் கலாச்சாரத்தை முன்வைத்து, ஊழலற்ற ஆட்சி , இலஞ்சமற்ற நிர்வாகம் , மதுவில்லா தமிழகம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாக கொண்டு, சமூக முன்னேற்றத்திற்காக தீவிரமாக செயல்பட்டு வரும் வளர்ச்சி அரசியல் பேசும் சமூக ஆர்வலர்களையும், இளைஞர்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் புதிய சக்தி அணி கடந்த பிப் 23 அன்று உதயமானது.


              அதன் தொடர்சியாக மாற்றான தகுதியான வேட்பாளர்களை, 'புதிய சக்தி அணி'  இந்த தேர்தலில் இனம் காட்டும் முதல் பகுதியாக புதிய சக்தி அணியின் இந்த முதல் வேட்பாளர் பட்டியல் இன்று – மார்ச் 17 வெளியிடப்படுகிறது. 


இந்த சமூகத்தில் புரையோடிப்போயுள்ள லஞ்சம், ஊழல், மது, சாதி ஆகிய பேய்களை விரட்டி, சமூக  முன்னேற்றம் ஒன்றையே முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் நேர்மையான இயக்கங்களை / கட்சிகளை ஜனநாயகத்தை மீட்டெடுக்க நேர்மையான இயக்கங்களை "புதிய சக்தி அணி"ன்றிணைத்து வருகிறது. அவர்களோடு தங்கள் தொகுதியில் மிகச் சிறப்பாக களப் பணி செய்து, தொடர்ந்து மக்கள் அபிமானத்தை பெற்று வரும் வேட்பாளர்கள் இவர்கள்.


     உங்களுடைய ஆதரவை இவர்களுக்கு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.இத்துடன் வேட்பாளர் பட்டியல் மற்றும் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.


                  

தொடர்புக்கு: 9791050512, 8754580270/74

 

Puthiya Sakthi Front Coordinators,

9791050512 - 8754580270/74


2016-03-16 18:01 GMT+05:30 Puthiya Sakthi Ani <puthiyasakthiani@gmail.com>:


To the Editors:

 

PRESS MEET INVITE:


Event:  Releasing "Puthiya Sakthi Front" 1st List of Candidates for Assembly Election.

Date, time: 17-03-2016 (tomorrow), 12noon,

Venue: Satta Panchayat Iyakkam Office, 31, South west boag road, T.Nagar(Near bus stand)

Contact: 9791050512, 8754580270/74 


பத்திரிகையாளர் சந்திப்பு:


சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள "புதிய சக்தி அணி"யின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நாள், நேரம்: 17-03-2016, (நாளை) நண்பகல் 12மணி

இடம்: சட்ட பஞ்சாயத்து இயக்க அலுவலகம், 31, தென்மேற்கு போக் சாலை, தி.நகர், சென்னை

தொடர்புக்கு: 9791050512, 8754580270/74

 

Puthiya Sakthi Front Coordinators,

9791050512 - 8754580270/74

 


Thursday, 3 March 2016

இலவச சித்த மருத்துவ முகாம் - கடலூர் மாவட்டம், ஊடகவியலாளர்கள் சந்திப்பு

அன்புடையீர் வணக்கம்,

அண்மையில்  தமிழகத்தைத் தாக்கிய மழை வெள்ளப் பேரிடரினைத்  தொடர்ந்து ஏற்பட்ட  உடல் நலக்குறைவினையும், நோய்களையும் நீக்கும் பொருட்டு  உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் சார்பாக இலவச சித்த மருத்துவ முகாம் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாரப்பகுதியில் மார்ச் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. அறிவிப்பிதழ் (notice) இணைத்துள்ளோம் இந்த, விவரத்தினை உங்கள் ஊடகத்தின் வாயிலாக மக்களுக்கு அறிவிக்க வேண்டுகிறோம். 

இது தொடர்பான ஊடகவியலாளர்கள் சந்திப்பு பூதம்பாடி கிராமம் ஊராட்சி மன்றத் தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் தாங்கள் கலந்துக்கொண்டு சித்த மருத்துவ முகாம் பற்றிய செய்தியினை பலதரப்பட்ட  மக்களுக்கு உங்கள் ஊடகம் கொண்டு சேர்க்க வேண்டுமென விரும்புகிறோம்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பு

நாள், நேரம்: 6.3.2016.  மதியம் 12 மணி. 
இடம்: ஊராட்சி மன்றத் தொடக்கப்பள்ளி, பூதம்பாடி, குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர்  மாவட்டம்.

நன்றி.
இப்படிக்கு,
தலைவர், உலக சித்த மருத்துவ அறக்கட்டளை, 
சென்னை,
மருத்துவர். ப. செல்வ சண்முகம்.

தொடர்பிற்கு98948 28968

Tuesday, 1 March 2016

traditional food seminar photos

Devaamirtham conducted one day. seminar and Exhibition of Tamil Traditional and Nature Food at M.G.R. janagi collage.
Photo 1.  Mr. Sagayam IAS See the rice.
Photo 2. Mr. Sagayam Book Relase the book Mr. Sri Ramulu receive the book. Book Name is Unavil uraiyum valvial aram. auther savithri kannan

அன்புடன்,
சாவித்திரிகண்ணன்,
9444427351.

PRESS-MEET: Illegal Sand Mining in Paalaar River - VIDEO RELEASE(Contempt of Court)


PRESS-MEET: 

Tomorrow(feb2nd),12noon: Illegal Sand Mining in Paalaar river -VIDEO RELEASE(Contempt of Court)-
Village public from Vellore participating @Satta Panchayat Office,T.Nagar,8754580270,8754580274