அன்புடையீர் வணக்கம்,
அண்மையில் தமிழகத்தைத் தாக்கிய மழை வெள்ளப் பேரிடரினைத் தொடர்ந்து ஏற்பட்ட உடல் நலக்குறைவினையும், நோய்களையும் நீக்கும் பொருட்டு உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் சார்பாக இலவச சித்த மருத்துவ முகாம் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாரப்பகுதியில் மார்ச் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. அறிவிப்பிதழ் (notice) இணைத்துள்ளோம் இந்த, விவரத்தினை உங்கள் ஊடகத்தின் வாயிலாக மக்களுக்கு அறிவிக்க வேண்டுகிறோம்.
இது தொடர்பான ஊடகவியலாளர்கள் சந்திப்பு பூதம்பாடி கிராமம் ஊராட்சி மன்றத் தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் தாங்கள் கலந்துக்கொண்டு சித்த மருத்துவ முகாம் பற்றிய செய்தியினை பலதரப்பட்ட மக்களுக்கு உங்கள் ஊடகம் கொண்டு சேர்க்க வேண்டுமென விரும்புகிறோம்.
ஊடகவியலாளர்கள் சந்திப்பு
நாள், நேரம்: 6.3.2016. மதியம் 12 மணி.
இடம்: ஊராட்சி மன்றத் தொடக்கப்பள்ளி, பூதம்பாடி, குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம்.
நன்றி.
இப்படிக்கு,
தலைவர், உலக சித்த மருத்துவ அறக்கட்டளை, சென்னை,
மருத்துவர். ப. செல்வ சண்முகம்.
No comments:
Post a Comment