Friday, 24 June 2016

PRESS RELEASE: "No More New TASMAC Shops" Satta Panchayat demands Policy Announcement : ”புதிதாக மதுக்கடைகள் திறக்கப்படாது” என்று தமிழக அரசு அறிவிக்கவேண்டும்...

புதிதாக மதுக்கடைகள் திறக்கப்படாது" என்று தமிழக அரசு அறிவிக்கவேண்டும்...

                - சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை

தமிழக அரசு மதுவிலக்கை அமல்படுத்தும் முயற்சிகளின் முதற்கட்டமாக டாஸ்மாக் விற்பனை 2 மணிநேரம் குறைப்பு, 500 மதுக்கடைகள் மூடல் போன்ற நடவடிக்கைகள் எடுத்தது வரவேற்புக்குரியது. பொதுமக்கள் போராட்டங்கள் நடத்திய மதுக்கடைகள், பள்ளி-கல்லூரி-வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள், சந்தை போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள மதுக்கடைகள், அதிகம் பேர் குடிக்கும் மதுக்கடைகள்(அதிக வருமானம் உள்ள கடைகள்) போன்ற கடைகளைப் பட்டியலிட்டு மூடியிருந்தால் இம்முயற்சி மிகுந்த பலனைத் தந்திருக்கும்.

2013ல் நடைபெற்ற நிகழ்வோடு பொருத்திப்பார்க்கும்போது ஒரு சந்தேகம் எழுகிறது. 2013ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலையின் அருகில் இருந்த 504 மதுக்கடைகள் மூடப்பட்டன. ஆனால், 2015ல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்திலுள்ள  மதுக்கடைகளின் எண்ணிக்கை குறித்தான பட்டியலை வாங்கிப் பார்த்தபோது மொத்த எண்ணிக்கை குறையவில்லை என்ற விவரம் தெரியவந்தது. இதுகுறித்து மேலும் ஆராய்ந்தபோது, மூடப்பட்ட கடைகளில் மிகப்பெரும்பாலான கடைகள்  அருகிலோ வேறு இடத்திலோ திறக்கப்பட்டது தெரியவந்தது. 
இதுபோன்ற நடைமுறையில் மூடப்பட்ட 500 மதுக்கடைகள் வேறு இடத்தில் திறக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. ஆகவே, தமிழக அரசு "..இனிமேல் புதிதாகவோ, மூடப்பட்ட மதுக்கடைகளை இடமாற்றம் செய்தோ டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு/டாஸ்மாக் நிர்வாகம் அறிவிக்கவேண்டும்" 

அதேபோல், அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு பார்களை மூடுதல், மறுவாழ்வு மையங்கள் துவங்குதல் போன்றவற்றில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

கேரளா அரசானது ஆண்டுக்கு 10% மதுக்கடைகளை மூடி 10 ஆண்டுகள் அனைத்து மதுக்கடைகளையும் மூடிவிடுவோம் என்று தெளிவான காலவரையறை கொண்ட திட்டத்தை அறிவித்துள்ளது. அதுபோல், தமிழக அரசும் பூரண மதுவிலக்கை நோக்கிய தனது திட்டம் என்ன என்பதை(காலவரையறையோடு) அறிவிக்கவேண்டும்.

செந்தில் ஆறுமுகம்,
மாநில பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
8754580274

Wednesday, 22 June 2016

ஊடக வெளியீடு - சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். Media Release - Tamilnadu Assembly Proceedings should be telecasted Live

<Please scroll down for the English version>

 

ஊடக வெளியீடு  (22-ஜூன்-16)

 

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்

 

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான திரு.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளதை காட்சி மற்றும் ஊடகங்களின் இணையதளம் மூலம் அறிகிறேன்.

 

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்று 2012 முதல் பல்வேறு கையெழுத்து இயக்கங்கள், போராட்டங்கள், அரசிடம் மனு ஆகியவை லோக்சத்தா கட்சி சார்பாக செய்துவந்துள்ளேன். கடைசியாக 2012 ஆம் ஆண்டு இதற்காக லோக்சத்தா சர்பாக நான் ஒரு பொது நல வழக்கும் தொடர்ந்தேன். வழக்கை தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வந்த அரசு கடைசியாக, சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய  60 கோடி வரை செலவாகும் என்றும் அவ்வளவு நிதி அரசிடம் இல்லை என்றும் பொய்யுரைத்தது.

 

அதன் பிறகும் லோக்சத்தா சார்பாக திமுக உள்ளிட்ட எல்லா அரசியல் கட்சிகளையும் சந்தித்து இது தொடர்பாக மனு கொடுத்து எங்கள் கோரிக்கையை வலியுறுத்தினோம். தமிழகத்தில் அதிமுக தவிர்த்து எல்லா கட்சிகளும் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதையே விரும்புகிறார்கள்.

 

இன்றும் ஆளுநர் உரை பொதிகை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதும், சட்டமன்றத்தின் எல்லா நிகழ்வுகளும் தினம் பதியப்பட்டு வருவதும் எல்லோரும் அறிந்ததே. ஆக இதற்காக அரசுக்கு 60 கோடி செலவு ஏற்படும் என்பது முதல் பொய். அதே சமயம் 60 கோடி கூட இல்லாத நிதிப் பற்றாக்குறையில் ஒரு அரசு இயங்குகிறது என்பது எந்த காலத்திலும் நகைப்புக்குரியதே,

 

கடந்த அரசை விட இந்த முறை அதிகமான எதிர்க்கட்சி உறுப்பினர்களாக  தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் கேட்கும் கேள்விகள், செய்யும் விவாதங்கள் இந்தமுறையும் இருட்டடிப்பு செய்யப்படுவதை மக்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். ஆளுங்கட்சி பேசுவதை மட்டும் காட்சி ஊடகங்களுக்கு வழங்கும் போக்கும் இனி செல்லாது. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிக்கும் முக்கியமான பங்கிருப்பதால்தான் பெருவாரியான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு மக்களால் அனுப்பப்பட்டுள்ளார்கள் என்பதை ஆளும் அரசும் உணர்ந்து சட்டமன்ற நேரடி ஒளிபரப்பை உடனடியாக ஆவணம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

ஒரு வேளை மீண்டும் ஏதாவது காரணம் சொல்லி அரசு இழுத்தடிக்கும் பணியில் ஈடுபட்டால், எதிர்க்கட்சிகள் இணைந்து சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

 

 

- தெ.ஜெகதீஸ்வரன்

அரசியல் செயற்பாட்டாளர்

9791050512

 

----------------------------------------------------

 

Media Release (22-06-2016) 

 

Tamilnadu Assembly Proceedings should be telecasted Live

 

 

I understand from Visual Media & Internet that TN Opposition Leader & DMK Treasurer Thiru.M.K.Stalin demands to Live Telecast TN Assembly proceedings. This is a welcome move.

 

Right from 2012, Loksatta is demanding for Live Telecast of Assembly proceedings through various demonstrations, petitions and signature campaigns and I was part of it.And it 2012, I have filed a petition on behalf of Loksatta in Madras High Court which is pending with the court since the Govt is dragging it for many years. During the last tenure, this Govt lied that around 60 crores will be needed to telecast the Assembly proceedings Live for infrastructure and other expenses.

 

Loksatta delegates met various political parties including DMK treasurer M.K.Stalin and demanded that they talk about this in the Assembly. All parties except ADMK is of the opinion that the Assembly should be telecasted Live.


Even today the Governor speech at the first day of the Assembly is Live in Podhigai channel and all the proceedings are recorded. So the Govt saying that it needs 60 crores for infrastructure is a blatant lie. At the same time it is laughable at any time to know that the Govt does not have 60 crores to spend on this.


Compared to the last tenure, this demand gets more importance now, since the number of opposition members is huge and the people have elected them in more number to save & uplift Democracy through meaningful debates. One cannot be continuously cheated by giving the visual media the edited portions where only the ruling party members speak. We urge the Govt to understand the people's mandate and start telecasting the Assembly proceedings Live immediately.


If the ruling Govt is still hesitant to do this, we request the Opposition parties to bring a resolution in the Assembly for the same.



- Jagadheeswaran.D

Political Activist

Mob: 9791050512

fb.com/jagadheeswaran.dhakshinamoorthy