சட்ட பஞ்சாயத்து இயக்கம்
பத்திரிகை செய்தி (14-03-2018)
தொடர்புக்கு : 87545 80270 / 88704 72179
சமூகநலப் பணிகளில் ஈடுபட்டுவரும்
சென்னை ட்ரெக்கிங் கிளப் மீது அநியாய நடவடிக்கை எடுத்தால் இளைஞர்கள், பொதுநல அமைப்புகளைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்
சட்ட பஞ்சாயத்து இயக்கம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை
Satta Panchayat Iyakkam strongly condemns the ruling AIADMK government for shifting the blame on Chennai Trekking club for its failure to handle a crisis situation. SPI strongly urges the government to drop the charges against CTC and frame regulations to avoid such accidents in the future. SPI will not stay silent if Government acts in a arbitrary way and take action on CTC.
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கி மலையேற்ற பயிற்சிக்கு சென்றுருந்த 11 பேர் உயிர் இழந்துள்ளது ஒட்டுமொத்த தமிழகத்தை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து இருந்த சென்னை டிரெக்கிங் கிளப்பின் (CTC) மேல் பழியை சுமத்தி, அரசு தப்பித்து கொள்ள பார்ப்பது கடும் கண்டனுத்துக்குரியது.
சுமார் 10 வருடங்களாக மலையேற்ற பயிற்சி, நீச்சல், மராத்தான், மிதிவண்டி பந்தயம் போன்ற உடலுக்கு புத்துணர்ச்சி தரும் பயிற்சிகளை சென்னை டிரெக்கிங் கிளப் சிறப்பாக நடத்தி வருகிறது. இது தவிர நெகிழி கழிவுகளை அகற்றுவதில் தொடங்கி சென்னை வெள்ள மீட்பு பணிகள் வரை பல சமூக பணிகளில் சென்னை ட்ரெக்கிங் கிளப் ஈடுபட்டு வருகிறது. 4000 ரத்த தான முகாம்கள், பல நூறு டன் பிளாஸ்டிக்கை நீர்நிலைகளில் இருந்து அகற்றுதல், 20000 மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்தல் என்று இயற்கையை நேசிக்கும் லாப நோக்கமற்ற அமைப்பு சென்னை டிரெக்கிங் கிளப்.
பல ஆயிரம் பேர் CTCயுடன் சேர்ந்து பயணிக்கும் நிலையில், பெண்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பு டிரெக்கிங் நிகழ்வை ஏற்பாடு செய்துருந்தது. மலையேறுதலில் தேர்ச்சி பெற்று, ஏழு ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள இளைஞர்களின் உதவியோடு 37 பேர் (27) கொண்ட குழு மலையேற்றம் மேற்கொண்டது. வனத்துறை அதிகாரிகளிடம் 200 ரூபாய் செலுத்தி அனுமதி சீட்டு பெற்று இருக்கிறார்கள் என்று CTC கூறுவதை தேனி SP உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், அரசின் மேல் பழி விழுந்துவிடும் என்கிற பயத்தில், தமிழக அரசு சென்னை ட்ரெக்கிங் கிளப் மேல் பழியை சுமத்தி அதன் முக்கிய நிர்வாகிகளை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. எதிர்பாராமல் நடந்த விபத்திற்கு அப்பாவி இயற்கை ஆர்வலர்கள் மற்றும் CTC மீதும் நடவடிக்கை எடுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
3000 ஹெக்டர் காடுகளை நிர்வகிக்க 225 வன அதிகாரிகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 107 அதிகாரிகள் (50%) மட்டுமே இருக்கின்றனர். இந்நாள் வரை மலை ஏறுதலுக்கென்று நெறிமுறைகள் ஏதும் வகுக்கப்படவில்லை. பல ஆன்டுகளாக இம்மலையில் மலை ஏறுதல் நடைபெற்று வரும் நிலையில் CTC மேல் பழி சுமத்துவது அநியாயமான அக்கிரமம். விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 31 கிமீ தொலைவில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படவுள்ள நிலையில் அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். நியூட்ரினோ திட்ட பணிகளுக்காக தான் காட்டை கொளுத்தி விட்டார்கள் என்று வதந்தி பரப்புபவர்களை கண்டுபிடித்து தண்டிப்பதற்கு பதிலாக அரசு மவுனம் காப்பது ஒரு வேளை அது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை பலர் மனதில் எழுப்பி மேலும் பல வதந்திகள் பரவ காரணமாகிறது.
அரசு செய்யவேண்டிய வேலைகளை (நீர்நிலைகளை பாதுகாப்பது, குப்பை அகற்றுதல்) பல வருடமாக செய்துவரும் அமைப்பின் மேல் பழியை சுமத்த முயல்வது சந்தர்ப்பவாதம். இக்கட்டான நிலையில், பல்லாயிரம் இளைஞர்களை கொண்ட அமைப்பை தட்டி கொடுத்தால் சமூகத்திற்கும் அரசிற்கும் பக்கபலமாக இருப்பார்கள். 2015 வெள்ள மீட்பு பணிகளில் அரசை விட இளைஞர்களும் சமூக ஆர்வர்கள் தான் சிறப்பாக செயல்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை புறந்தள்ளி, உயிர்ப்பாக இல்லாமல், லாப நோக்கமற்ற அமைப்பை குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். புதிய நெறிமுறைகளை வகுத்து, இனிமேல் விபத்து நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் பொறுப்பு. மீறி சிடிசி மேல் அரசு நடவடிக்கை எடுக்குமேயானால், அனைத்து சமூக ஆர்வலர்களையும் ஒன்று இணைத்து, சட்ட பஞ்சாயத்து இயக்கம் அரசின் தோல்வியை தோல் உரித்து காட்டும்
சிவ.இளங்கோ

தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்
Contact Number: 87545-80270
Contact Number: 87545-80270
நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269
New Memberships : spinewmember@gmail.com
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269
Satta Panchayat Iyakkam,
| 31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)
Member : member.sattapanchayat.org | Donate Online : donate.sattapanchayat.org
Helpline : 7667 100 100 | http://sattapanchayat.org/ | https://www.facebook.com/sattapanchayath
" Aiyarathil Oruvan " : 1001.sattapanchayat.org
Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution
Other Contact:
SPI Accounts Team : spiaccts@gmail.com,New Memberships : spinewmember@gmail.com
Speak about SPI / Billing Issues : 8754580269
No comments:
Post a Comment