சட்ட பஞ்சாயத்து இயக்கம்
பத்திரிகை செய்தி (25-04-2018)
தொடர்பு எண்கள் :87545 80270 / 88704 72179
வேண்டும் உள்ளாட்சியில் சுயாட்சி
24th April was observed as National Panchayat day throughout India and various celebrations happened across the country. However there has been no concrete steps taken so far to empower the local bodies to transfrom India into a participative democracy from representative democracy. Even after 25 years of recognizing Local governance in Constitution through 73 and 74th amendments, Local bodies remain as sub units of Central and State governments. Satta panchayat Iyakkam strongly urges the Central and state governments to empower the Local bodies so that they function as real self-government. |
இந்திய திருநாட்டின் தந்தை, மகாத்மா காந்தியடிகளின் கனவான, "தற்சார்பு கிராமங்களை" ஏற்படுத்த வரலாற்று சிறப்புமிக்க "பஞ்சாயத்து ராஜ்" அரசியல்சாசன சட்டதிருத்தம் (73&74 Constitutional amendments) மேற்கொள்ளப்பட்ட நாளை (24 ஏப்ரல் 2018), தேசிய பஞ்சாயத்து தினமாக கொண்டாடி வருகிறோம். சுதந்திர இந்தியாவில் காந்தி கண்ட கனவை நிறைவேற்றுவதற்கே 40 ஆண்டுகள் மேல் ஆனது என்பது வருத்தத்திற்குரிய செய்தி. அரசியல் சாசன அங்கீகாரம் கொடுக்கப்பட்டு கால் நூற்றாண்டு காலம் கடந்த பிறகும் நமது உள்ளாட்சி அமைப்புகள் பெயரளவிற்கே உள்ளது என்பது மிக வருத்தமான செய்தி.
DEMOCRATIC DECENTRALIZATION - ஜனநாயக பரவலாக்கம்:
ரத்தம் சிந்தி போராடி பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும் என்றால் ஜனநாயக பரவலாக்கம் மிக அவசியம். ஆனால் நம்மை இதுவரை ஆண்டுவந்த மத்திய-மாநில அரசுகள் அதிகார குவியலையே விரும்புகிறது.ஆண்ட்ரு பாஸ்டர், அன்வர் ஷா, ஜேம்ஸ் மேனோர் போன்ற ஆய்வறிஞர்கள் எழுதிய ஆராய்ச்சி அறிக்கையில், இந்தியாவில் தன்னாட்சி பெற்ற அமைப்பாக உள்ளாட்சி அரசு உருவாவதற்கானசாத்தியங்கள்தென்படவில்லைஎன்றுதெரிவிக்கிறது.
கம்யூனிச நாடான சீனாவில் கூட உள்ளாட்சிகளுக்கு இந்தியாவை விட அதிகளவில் நிதி கொடுப்படுகிறது. உலகின் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்காவிலும் உள்ளாட்சி மற்றும் மாநில அரசுகளின் பட்ஜெட் சரிசமமாக இருக்கின்றன. வெளிநாட்டு பயணங்கள் செல்லும் பாரத பிரதமர் மோடி, ஒவ்வொரு நாட்டிலும் அதன் முக்கிய நகரங்களின் மேயர்களை (உதாரணத்திற்கு லண்டன்,கியோட்டோ) சந்திக்கின்றார். இதுவரை இந்தியா வந்துள்ள அயல்நாட்டு தலைவர்கள் நமது உள்ளாட்சி பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்களா? பெயரளவில் மட்டும் குடியரசு, ஜனநாயகம் இருந்தால் போதாது என்று நம் அரசியல்வாதிகள் உணரவேண்டும்.
ARTICLE 40, Directive principle of State policy
அரசியல்சாசனத்தில், (Article 40 DPSPயில்), உள்ளாட்சி அமைப்புகள் சுதந்திரமுள்ள தன்னாட்சி அமைப்பாக உருவாக்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
"The State shall take steps to organise village panchayats and endow them with such powers and authority as may be necessary to enable them to function as units of self-government". உள்ளாட்சி அரசு, சுயசார்புள்ள தன்னாட்சி பெற்ற 3ஆம் நிலை அரசாக இருக்கவேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். ஆனால் உள்ளாட்சி அமைப்புகளை தன் கீழ் உள்ள துறை போல் மத்திய-மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. போதுமான அதிகாரங்கள் மற்றும் நிதி கொடுக்கப்பட்டு, உள்ளாட்சி அரசு சுதந்திரமாக செயல்பட்டால் மட்டுமே Article 40's நோக்கம் நிறைவுபெறும்.
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஏன் ஊதியம் தருவதில்லை?
30 நிமிடங்களில் தங்களுடைய சம்பளத்தை 100% அதிகமாக உயர்த்திக்கொண்ட தமிழக எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு (பஞ்சாயத்து தலைவர்) குறைந்தபட்ச ஊதியம்/நல்ல கொடுப்பனவு (Allownce) கொடுப்பது பற்றி சிந்திக்ககூடவில்லை (கேரளாவில் தரப்படுகிறது). உள்ளாட்சி பிரதிநிதிகள் செழுமையாக பணியாற்றவேண்டும் என்றல் முக்கியமான பதவிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் தரவேண்டும்.
தமிழகத்திலும் அதே நிலை:
இந்தியாவிலே மாநில சுயாட்சிக்கு அதிக குரல் கொடுத்துள்ள தமிழ்நாடு கூட தன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு (3ஆம் நிலை அரசு) அதிகாரம் கொடுக்க விரும்பவில்லை. மத்திய அரசு மாநில அரசுகளுக்கு தரும் 42% போதவில்லை என்று சொல்லும் மாநில அரசு, உள்ளாட்சிகளுக்கு 10% மட்டுமே தருகிறது. அண்டை மாநிலமான கேரளாவில், மாநில நிதியிலுருந்து 23.5% உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் உருவான தெலங்கானாவில் கூட, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு 2018இல் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே, தமிழ்நாட்டில் உத்திரமேரூர் போன்ற இடங்களில் குடவோலை முறை மூலம் தேர்தல் நடத்தி உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிராமங்களை நிர்வகித்ததாக வரலாற்று சுவடுகள் தெரிவிக்கன்றன. ஆனால் அதே தமிழ்நாட்டில், 20ஆம் நூற்றாண்டில், ஒன்றரை வருடமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருக்கிறது என்பது எவ்வளவு பெரிய அவமானம் என்பதை ஆளும் அதிமுக அரசு உணரவேண்டும்.
வார்டு சபை:
74வது அரசியல்சாசன திருத்தத்தின்படி, வார்டு சபைகள் நகர்ப்பகுதிகளில் அமைத்தல்வேண்டும். 25 வருடங்கள் ஆன பிறகும் வார்டு சபைகள் அமைக்காமல், மக்கள் பங்கேற்பு இல்லாமல் நகரங்களில் உள்ளாட்சி அரசு செயல்பட்டுவருகிறது. தமிழகத்தில் வார்டு சபைகள் அமைக்கப்படவேண்டும் என்று இயக்கம் பல வருடங்களாக வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிராம சபைகளை முறையாக நடத்தவேண்டும்:
ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 நடத்தப்படவேண்டிய கட்டாய கிராம சபைகளையே அரசு ஒழுங்காக நடத்துவதில்லை. சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அணைத்து நடைமுறைகளையும் பின்பற்றி, முறையாக கிராம சபைகளை நடத்தவேண்டும் என்று தொடர்ந்து இயக்கம் சார்பாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
எதிர்வரும் மே 1 கிராமசபைகளை முறையாக நடத்தக்கோரி இயக்கத்தின் சார்பாக ஆட்சியருக்கு (பஞ்சாயத்து ஆய்வாளர்) பல மாவட்டங்களில் (ஈரோடு, திருச்சி, விழுப்புரம், மதுரை) மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது தவிர அணைத்து பஞ்சாயத்து அதிகாரிகளுக்கும் (BDO office, AD Panchayath) தொலைபேசி மூலம் அழைத்து முறையாக கிராம சபை நடத்தக்கோரி வலியுறுத்தி வருகிறோம்.
ஒரு பக்கம் ஜனநாயகத்தை வலுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்த குரல் கொடுக்கும் நேரத்தில், தமிழகத்தில் தேர்தலே நடத்தப்படாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமை. உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் அல்லது உள்ளாட்சி அமைப்புகள் ஆரோக்கியமான நிலையில் இல்லையென்றால், 14வது நிதி ஆணையம் பரிந்துரைத்த (2000 கோடி) மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்காது. மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்காமல், சுயநலம் பாராமல் உள்ளாட்சி தேர்தலை இனியும் காலந்தாழ்த்தாமல் நடத்தப்படவேண்டும் என்று அதிமுக அரசை இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு திட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் நடத்துவதோடு அரசாங்கத்தின் கடமை முடிந்துவிட்டது என்று ஆளும் அரசுகள் நினைக்கின்றன. என்று பஞ்சாயத்துகளுக்கு போதிய அதிகாரங்கள் மற்றும் நிதியாதாரம் கொடுக்கப்படுகிறதோ, அன்று மட்டுமே காந்தியடிகள் கண்ட கனவு நிறைபெறும். வரும் காலங்களிலாவது தேசிய பஞ்சாயத்து தினமான ஏப்ரல் 24ஐ, உண்மையான ஜனநாயக திருவிழாவாக கொண்டாட மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆவண செய்யவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது. உள்ளாட்சியில் சுயாட்சி கிடைக்கும் வரை இயக்கத்தின் போராட்டம் தொடரும்!
சிவஇளங்கோ
தலைவர், சட்டபஞ்சாயத்துஇயக்கம்
Contact Number :87545 80270 / 88704 72179
நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269
Satta Panchayat Iyakkam,
Speak about SPI / Billing Issues : 8754580269