Saturday, 24 November 2018

Representation to Income Tax Dept -Reg 2400Cr Kickbacks - 2400கோடி இலஞ்சம் தொடர்பாக வருமான வரித்துறைக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு..


ரூ.2400 கோடி லஞ்சம்(சத்துணவுத் திட்டத்தில்) : கிறிஸ்டி நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை  மத்திய,மாநில அரசுகளுக்கு உடனே அனுப்பி வைக்கவேண்டும் - வருமான வரித்துறைக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு (Representation)

மனுவின் சுருக்கம்:   (  முழுவிவரம் படிக்க:   https://spipressrelease.blogspot.com/2018/11/rs2400cr-kickbacks-income-tax.html )

ரூ.2400 கோடி லஞ்சம்(சத்துணவுத் திட்டத்தில்) !!  இதில் நடந்துள்ள இலஞ்ச-ஊழல் குறித்தான விசாரணை உடனடியாகத் தொடங்கப்படவேண்டும். அதற்கு,  கிறிஸ்டி நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில்(ஜீலை 2018) கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறையானது உடனடியாக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கவேண்டும். இந்த ஆவணங்களில்  எந்தெந்த அரசியல்வாதிகளுக்கு, அதிகாரிகளுக்கு எவ்வளவு கோடி இலஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது குறித்தான "ரகசிய வார்த்தைகள்"(Code word)  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வருமான வரித்துறையிடமிருந்து பெறப்படும் ஆவணங்களின் அடிப்படையில் சத்துணவுத் திட்டத்தில் நடந்துள்ள இலஞ்ச-ஊழல் குறித்தான விசாரணைக்கு தமிழக அரசு உடனே உத்தரவிடவேண்டும்.

செந்தில் ஆறுமுகம், 8754580274
பொதுச்செயலாளர்
சட்ட பஞ்சாயத்து இயக்கம்

No comments:

Post a Comment