Friday, 28 December 2018

Fwd: ஊடக வெளியீடு / Press Release (28-12-2018) - "டெல்டா மாவட்ட மறு கட்டமைக்க ஓராயிரம் கரங்கள் தேவை - குழு உருவாக்கம் - நோக்கம், பணிகள்


Dear Sir,
Please find both Tamil & English versions of the Press Release attached with the picture.

வணக்கம்,
கடந்த மாதம் கஜா புயலடித்த மரு கணத்திலிருந்து பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில்  தொடர்ச்சியாக இந்த தருணம் வரை களப்பணியாற்றி  தொடர்ந்து உதவிக்கொண்டிருக்கும் 
 இயக்கங்கள், தன்னார்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 

"டெல்டா மாவட்ட 
மறு கட்டமைப்பு குழு"

உருவாக்கியிருக்கிறோம். 

இந்த  குழுவின் நோக்கம், இந்த குழு டெல்டா மக்களுக்கு  ஆற்ற முடிவு செய்துள்ள பணிகள் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. 

இன்று வெளியிட்ட ஊடக வெளியீட்டை இத்துடன் இணைத்துள்ளோம்.

நன்றி
நடிகர் ஆரி, ஜெகன், ஹரி, நல்லோர் வட்டம் பாலு, தினேஷ், Inspire ரேவதி. "டெல்டா மாவட்ட மறு கட்டமைப்பு குழு"

Thursday, 27 December 2018

Press Meet | எங்க VAO எங்கே? State Wide campaign | 30 December 2018 | Nellai Aryas hotel

எங்க  VAO எங்கே?

PRESS MEET: Take Action against VAO's who dont stay and work in their respective villages, State wide Campaign against Tamilnadu government and VAO's, Press meet in Tirunelveli

  

Date : 30/12/2018

Time : 11AM

Place : Hotel Aryas, Tirunelveli Junction

Contact Number :  99441 88941 / 88833 18171

 

கிராமங்களில் தங்கி வேலை பார்க்காத கிராம நிர்வாக அலுவலர்கள் மேல் வழக்கு தொடுக்க ஆதாரங்களை திரட்டும் மாநில அளவிலான பிரச்சார துவக்கம்

 

பத்திரிகையாளர் சந்திப்பு:

நாள்  : 30-12-2018-ஞாயிறு

நேரம் : நண்பகல் 11 மணி

இடம் : ஹோட்டல் ஆர்யாஸ், திருநெல்வேலி ஜங்ஷன் 

தொடர்பு எண் : 99441 88941 / 88833 18171

 

கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் சேரும் போதே பணி செய்யும் கிராமத்திலேயே தங்கி வேலை செய்வோம் என்று ஒப்புக்கொண்டு தான் பணியில் இணைகிறார்கள்.அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் VAOக்களை அந்த கிராமத்திலேயே தங்க பல முறை வலியுறுத்தியும் இவர்கள் செவி சாய்ப்பதில்லை. VAOக்கள் கட்டாயம் அந்தந்த கிராமங்களில் தங்கி தான் வேலை செய்ய வேண்டும் என்று 2016இல் சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. VAOக்கள் நீதிமன்ற உத்தரவை மதிக்காத காரணத்தால் இயக்கம் சார்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இது சம்மந்தமாக மாநில அளவிலான பிரச்சாரத்தை நெல்லையில் ஞாயிறு அன்று துவங்கவுள்ளோம்.

 தங்கள் பத்திரிக்கையாளர்களை அழைக்கிறோம்...

 

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் ஆறாம் ஆண்டு துவக்க விழா அழைப்பிதழ்

ஊடக நண்பர்களுக்கு வணக்கம்,

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் ஆறாம் ஆண்டு துவக்க விழா நெல்லையில் வரும் 30ஆம் தேதி (30/12/2018) நடக்கவிருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக "ஊழலுக்கு பெரிதும் காரணம் -- அரசியல்வாதிகளே? அரசு ஊழியர்களே ? " என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. ஆறாம் ஆண்டு துவக்க விழாவிலும் பட்டிமன்றத்திலும் தாங்கள் கலந்துக்கொள்ள வேண்டுமென சட்ட பஞ்சாயத்து இயக்கம் அன்போடு அழைக்கிறது.

செந்தில் ஆறுமுகம் & சிவ.இளங்கோ
சட்ட பஞ்சாயத்து இயக்கம்






Thursday, 20 December 2018

தமிழ்நாட்டில் கஜா புயலால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவுவது தொடர்பான - ஊடகச்‌ செய்தி

ஊடக நண்பர்களுக்கு வணக்கம்,

தமிழ்நாட்டில் கஜா புயல் ஏற்படுத்தியுள்ள  மிகப்பெரிய பேரழிவு, ஏற்பட்ட உயிரிழப்புகள், வீழ்ந்துள்ள 20-30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பல லட்சம் மரங்கள், மடிந்த கால்நடைகள், தரைமட்டமான வீடுகள், தூர்ந்து போய் கிடக்கும் விவசாயத் தோட்டங்கள்  என்று அனைத்து ஒட்டுமொத்த காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பதினைந்து-இருபது ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுள்ளது.  இந்த முக்கியத் தருணத்தில் தமிழ்நாட்டை சாரந்தவர்களும், வெளிமாநில, வெளிநாட்டுவாழ் தமிழர்களும் அரசுடன் ஒருங்கிணைந்து இந்த இழப்பிலிருந்து  பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுக்கொண்டுவர புயல் அடித்த முதல் நாளிலிருந்து  பொறுப்புணர்வுடன் களத்தில் நிற்கும் ஊடங்களின் பங்கு மகத்தானது.  இது மேலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தரவுகள் (Data Analytics) அடிப்படையில் வளர்ந்த நாடுகளில் மீட்புகள் மேம்பட்டு தொழில்நுட்பம், தரவுகள் அடிப்படையில் நடப்பது போல் துல்லியமாகத் திட்டமிட்டு உரிய பகுதிக்கு உரிய மீட்பு உதவியை வழங்க வேண்டியதற்கு நாம் இன்னும் நீண்ட பயணம் மேற்கொள்ளவேண்டியுள்ளது.  

இந்த நிலையில் சென்னை வெள்ளத்தில் நிவாரண ஒருங்கிணைப்பில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு அப்போது வெளியிடப்பட்ட“Disaster Relief NEED & SUPPORT Management System” தளத்தை மேம்படுத்தி www.GAJAHELP.ValaiTamil.Com தகவல் தளம் கஜா பாதித்த பகுதிகளை முழுமையாக ஆராய்ந்து, 2011 மக்கள் தொகையுடன் இணைத்து, கூகுள் வரைபடம் இணைத்து ஒரு முழுமையான தகவல் தளமாக கஜா புயல் அடித்த சில நாட்களில்  வலைத்தமிழ்.காம்   வெளியிடப்பட்டது.  இதில் புயலால் அதிகம் பாதித்த நான்கு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 1188  மொத்த கிராமங்களின் விவரங்களின் பட்டியலையும், அதில் உதவி கிடைத்துள்ள 54 கிராமங்களையும், உதவி கிடைக்காத 1134  கிராமங்களை  வெளியிட்டுள்ளோம்.  இது மட்டுமல்லாமல் பாதித்த கிராமங்களுக்கு உதவும் தான்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்களுக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்க அறிஞர் குழு ஏற்படுத்தப்பட்டு “Delta Agri Innovation” , “Low cost housing Solution”  “ Gaja Relief Smart Technology Solution” உள்ளிட்ட பல அறிஞர் குழுக்கள் அவரவர் துறையில் போதிய அனுபவத்தை தொகுத்து ஆராய்ந்து அறிக்கை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவைகளை பாதிக்கப்பட்ட மாவட்ட நிர்வாத்துடன் பகிர்ந்து அவர்களுக்கு உரிய முடிவுகள் எடுக்க எங்கள் ஆலோசனையை தொடர்ந்து ஆட்சியர் கூட்டங்களின் வழியாகவும் செய்து வருகிறோம். 

குறிப்பாக இந்த மீட்பு நடவடிக்கைகளில்  அரசுத்துறை அறிவிப்புகள் மற்றும் பல்வேறு தொண்டு அமைப்புகளின் உதவிகள் உள்ளிட்டவைகளையும், நிபுணர்களிடமிருந்து வரும் புதிய சிந்தனைகளை தொகுத்தும் வெளியிட்டு வருகிறோம்.

குறிப்பாக இந்த தகவல் தளத்தில்: 

தேவைகள் மற்றும் உதவிகள் - http://gajahelp.valaitamil.com/index.php

பாதிக்கப்பட்ட கிராமங்களின் முழு விவரம்;  http://gajahelp.valaitamil.com/villages/

தன்னார்வ அமைப்புகள் உருவாக்கியுள்ள சோலார் தெரு விளக்குகள்   ( http://gajahelp.valaitamil.com/innovation-349.html )

வீழ்ந்துபோன மரங்களை பொடியாக்கி ( wood chipper) பல நிறுவனங்கள் பயன்படுத்தும் உத்தி ( http://gajahelp.valaitamil.com/news-updates-383.html )

வெளிநாட்டு வாழ் தமிழர்கள் எப்படி உதவுவது என்ற வழிகாட்டுதல் (https://www.youtube.com/watch?time_continue=6&v=b3CzNHiuXhw )

விலை குறைவான வீடுகள் அதன் வெளிப்படையான செலவு விவரங்கள் (http://gajahelp.valaitamil.com/innovation-376.html)

மீட்புப் பொருள்களை மொத்தமாக விலை குறைவாக கிடைக்கும் இடங்கள் http://gajahelp.valaitamil.com/Material-Suppliers/

ஒவ்வொரு பாதிக்கப்பட்ட ஊரின் ஒரு தன்னார்வலர் விவரம் http://gajahelp.valaitamil.com/villages/

உதவிகள் கிடைக்காத கிராமங்களின் விவரங்கள்  http://gajahelp.valaitamil.com/villages/

அரசுத் திட்டங்கள், உடனடி களத்தேவைகள் என்று பல்வேறு தகவல்களை “Gaja Helpline Coordinators”  என்ற தன்னார்வக் குழுவை ஒருங்கிணைத்து வலைத்தமிழ்.காம் செய்துவருகிறது.

இதில் கிராமங்களுக்கு இரண்டாம் கட்ட உதவிகள், மூன்றாம் கட்ட மறுசீரமைப்பு உதவிகளை செய்துவரும் அனைத்து அமைப்புகளும் அவரவர் உதவி செய்து வரும் கிராமங்களின் விவரங்கள் மற்றும் அந்த அமைப்பின் விவரங்களை  www.GAJAHELP.ValaiTamil.Com -ல் சேர்த்து மீதம் எத்தனை கிராமங்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறது என்ற துல்லியமான விவரங்களை தொண்டு அமைப்புகளுக்கு கிடைக்கச் செய்வதும்,  அதன்மூலம் பாதிப்படைந்த 1188 கிராமங்களும் உதவி பெருவததுமே இதன் நோக்கம்.  இந்த கஜா உதவி தகவல் தளத்தை பார்வையிட்டு இதில் உள்ள தரவுகளை ஊடங்கங்கள் பயன்படுத்தி பகிர்வதுடன் இந்த தகவல் தளம் குறித்த செய்தியை பகிர்ந்து உதவுமாறு பணி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

நன்றி,

ச.பார்த்தசாரதி, ஒருங்கிணைப்பாளர், 
“GAJA Helpline Coordinators” Team
www.GAJAHELP.ValaiTamil.com
E-mail: GajaHelp@ValaiTamil.com

 

Wednesday, 19 December 2018

Sri Sri Meets Lebanon President Michel Aoun, Discuss Civil War, President Lauds Sri Sri's Efforts In Conflict Resolution

Dear Editor,
After a historic visit to the UAE, global humanitarian and voice for peace and diversity, Gurudev Sri Sri Ravi Shankar was accorded a warm welcome in Lebanon, where he met Lebanese President Michel Aoun and Prime Minister Saad Hariri and discussed the ongoing civil war in Lebanon. Aoun lauded Gurudev's efforts in conflict resolution in the region. Gurudev was visiting the middle eastern country after 15 years. 
Please find the detailed press release below along with the translations and pictures here.




Sri Sri Meets Lebanon President Michel Aoun, Discuss Civil War, President Lauds Sri Sri's Efforts In Conflict Resolution

_Sri Sri-founded organization has been relentlessly working in Lebanon for peace and rehabilitation_

*Bengaluru, 19 December 2018*: After a historic visit to the UAE, global humanitarian and voice for peace and diversity, Gurudev Sri Sri Ravi Shankar was accorded a warm welcome in Lebanon by statesman, scholars, policy makers and the general public alike. 

 
During his brief visit, Gurudev met Lebanese President Michel Aoun at his presidential palace and Prime Minister Saad Hariri to discuss the ongoing civil war in Lebanon. Aoun lauded Gurudev's efforts in conflict resolution in the region. Gurudev was visiting the middle eastern country after 15 years. The founder of The Art of Living in his interaction with the state leaders discussed solutions to root out the trauma from the difficult past that the country has been through and usher in an era of peace and stress-free living.

Sri Sri Ravi Shankar-founded International Association For Human Values has been working with the locals and the refugee communities (including Syrian refugees) in Lebanon and Jordan to provide rehabilitation and trauma relief with a vision to help them rebuild their lives more meaningfully.


"Our main thing is to see that we are all connected," Gurudev said as part of an interactive session with Prof. Louis Saliba, author and Indianist scholar at an event titled 'Celebrating Diversity - Intercultural and Interfaith Reflections', "All religions are connected and it all comes down to the root of them all which is spirituality. Differences should not lead one to conflicts and unity should not weaken our roots."


Welcoming Gurudev as "one of the global ambassadors of peace, goodwill, brotherhood, cultural understanding," Mr. Sanjiv Arora, Indian Ambassador to Lebanon, shared while speaking at Waves of Happiness event in Beirut which was attended by over 1700 participants, "Wherever he travels, he makes friends and I would say that, that is very true of Lebanon, a country with whom, India's friendly relations are steeped in history. His brief visit here brings this message of peace, love, brotherhood and also reaffirms the historic ties of friendship between Lebanon and India."

Gurudev later also visited the Children's Cancer Center in Lebanon that treats children with cancer for free.

Through a series of workshops in Lebanon and Jordan (in and around Syrian refugee camps - Al-Za'tare, Al Mafraq, Al Zarqa and Al Azara governorates), Sri Sri Ravi Shankar-founded International Association For Human Valued has reached out to over 3000 war-affected children, 350 vulnerable youth,  frontline workers, caregivers and families in highly vulnerable areas of Jordan and Lebanon since December 2016.

Art of Living in Jordan and Lebanon

● Gurudev Sri Sri Ravi Shankar has visited Jordan and Lebanon earlier as part of his peace mission. During the 2006 Lebanon-Israel conflict, The Art of Living and IAHV volunteers actively helped people on both sides of the conflict cope with the severity of the situation.

● Around 2500 people have taken the Art of Living programs in Lebanon.

● The foundation has been operational in refugee camps in Tripoli since last 2 years.

● Programs for women are being conducted in South Lebanon

● To reduce these symptoms and help the children cope with their new reality, IAHV has conducted Stress Relief and Resilience (SRR) workshops for numerous children.

● In December 2016 , IAHV also spearheaded an 18 month long project co-funded by the European Union , "Healing, Resilience, and Non-Violent Empowerment of Children impacted by Armed Conflict in Jordan Lebanon" with an aim to enhance the well-being, resilience and psychological reintegration of 8,000 children impacted by armed conflict

With kind regards,

Rajalakshmi
Media Corodinator 
9884017767

Friday, 14 December 2018

ரபேல் தீர்ப்பு : OPPosition and OPP.. Rafale Judgement

OPP - (O)FFSET -(P)RICE - (P)ROCEDURE -  & OPPosition
- செந்தில் ஆறுமுகம்

”செருப்புக்கேற்றவாறு காலை வெட்டிய கதை” இதுதான் ரபேல் விவகாரம். ஒப்பந்தம் போட்டுவிட்டு அதற்கேற்றவாறு விதிமுறைகள் மாற்றப்பட்டன.!!

ரபேல் தீர்ப்பு:  சட்டத்தின் பார்வையில், அரசிற்கு இராணுவ கொள்முதல் விதிமுறைகளை மாற்றுவதற்கு உரிமை இருக்கிறது. 
நமது பார்வையானது, அப்படி அவசர அவசரமாக விதிமுறைகளை மாற்றியது யார், யார் பயனடைவதற்கு என்பதே..!!  ( தற்போதுள்ள Offset policy, விதிமுறைகளின்படி யார் நினைத்தாலும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் Offset Partner ஆக வருவதை யாராலும் தடுக்க முடியாது 
என்பது வேறுவிவகாரம்..!!)  பிரதமர் மோடி ஏப்ரல் 2015ல் 36ரபேல் விமானங்கள் வாங்க பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் போட்ட பிறகு இந்தியாவின் இராணுவ கொள்முதல் விதிமுறைகள்(DPP) சட்டம் 2013ல் திருத்தம் கொண்டுவந்தது(ஜீன் 2015ல்) மற்றும் ஏற்கனவே போடப்பட்ட 126 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவது குறித்தான விதிமுறைகளானது, புதிய ஒப்பந்தம் போட்டுவிட்டு வந்து சாவகாசமாக நிறைவேற்றியது போன்றவை “யாருக்கோ” , “ஏதோ” உதவி செய்வதற்காகத்தான் என்ற சந்தேகத்தை வலுவாக்குகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், நீதிமன்றம் இதுபோன்றவற்றை எல்லாம் ஆதாரமாக எடுத்துக்கொள்வதில்லை..!! 

- செந்தில் ஆறுமுகம், சட்ட பஞ்சாயத்து இயக்கம், 87545-80274

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்பித்த அறிக்கை(Affidavit) - 





Thursday, 13 December 2018

Press Release - Madurai Bench of the Madras High Court Acknowledges Art of Living Had All The Permissions In Place

Dear Editor,

In today's hearing by the Madurai Bench of the Madras High Court, in the Thanjavur Temple Case, the Honorable Judges recognized that the Art Of Living had obtained all necessary permissions from the appropriate authorities, which includes erecting a temporary tent within the temple grounds in order to conduct the spiritual and cultural program called Vigyan Bhairav. They also noted that there is a precedence of private events being held within the temple like film shootings. 

Please find the detailed press release below along with Tamil translation. 

Madurai Bench of the Madras High Court Acknowledges Art of Living Had All The Permissions In Place

13 December 13, 2018, Bengaluru: In today's hearing by the Madurai Bench of the Madras High Court, in the Thanjavur Temple Case, the Honorable Judges recognized that the Art Of Living had obtained all necessary permissions from the appropriate authorities, which includes erecting a temporary tent within the temple grounds in order to conduct the spiritual and cultural program called Vigyan Bhairav. They also noted that there is a precedence of private events being held within the temple like film shootings. 

"Unlike film shootings, the meditation event organised by the Art Of Living was in-line with the activities that can be conducted within a temple as outlined in Article 25 - 26 of the Indian Constitution. " says Ravi Ananth Padmanabhan, advocate of the Art Of Living.

Also, the World Culture Festival 2016 case reference taken by the petitioner was completely rejected by the Honorable Judges with full force.

அன்புள்ள ஆசிரியருக்கு, 

சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை பெஞ்ச், இன்றைய விசாரணையில், தஞ்சாவூர் கோவில் வழக்கில், மாண்பு மிகு  நீதிபதிகள், தி ஆர்ட் ஆஃப் லிவிங்  விங்ஞான்  பைரவ் என்னும் ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிக்காக கோவில் மைதானத்தில் தாற்காலிக கொட்டகை அமைப்பு ஏற்படுத்துவது உட்பட அனைத்து ஏற்பாடுகளுக்கும் ஏற்புடைய அதிகாரிகளிடமிருந்து தேவையான  அனுமதிகளை  பெற்றுள்ளனர் என்பதைக் கண்டறிந்த னர். மேலும் சினிமா படப்பிடிப்புகள் போன்ற  தனியார் நிகழ்வுகள் இதற்கு முன்னர்  கோவிலுக்குள் நிகழ்ந்திருப்பதையும்  இருப்பதையும் அவர்கள் குறித்தறிந்து  கொண்டனர்.

மொழிபெயர்ப்புடன் சேர்த்து விரிவான பத்திரிகை வெளியீட்டைக் கீழே காணவும்.

சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை பெஞ்ச்,  தி ஆர்ட் ஆஃப் லிவிங் அனைத்து அனுமதியையும் பெற்றுள்ளது என்பதை ஏற்றுக் கொண்டது

13 டிசம்பர் 13, 2018, பெங்களூரு: சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை பெஞ்ச், தஞ்சாவூர் கோவில் வழக்கில் இன்றைய விசாரணையின்போது, தி ஆர்ட் ஆஃப் லிவிங் விங்ஞான்  பைரவ் என்னும் ஆன்மீக கலாச்சார நிகழ்ச்சிக்காக   கோவில் மைதானத்தில் தாற்காலிக கொட்டகை அமைப்பு ஏற்படுத்துவது உட்பட அனைத்து ஏற்பாடுகளுக்கும்  உரிய  அதிகாரி களிடமிருந்து தேவையான அனைத்து அனுமதியையும் பெற்றுள்ளது என்பதை மாண்பு மிகு    நீதிபதிகள் கண்டறிந்தனர். மேலும் சினிமா படப்பிடிப்புகள் போன்ற  தனியார் நிகழ்வுகள் இதற்கு முன்னர்  கோவிலுக்குள் நிகழ்ந்திருப்பதையும்  அவர்கள் குறித்தறிந்து  கொண்டனர்

"திரைப்படப் படப்பிடிப்புகள் போன்றல்லாமல்  இந்திய அரசியலமைப்பின் 25 -26  பிரிவு களில்  குறிப்பிடப்பட்டுள்ள  கோவிலுக்குள் நடத்தப் படக் கூடிய  நிகழ்ச்சி முறைமைப் படியே இந்த  தியான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது" என்று தி ஆர்ட் ஆஃப் லிவிங்கின்  வழக்கறிஞர் ரவி அனந்த் பத்மநாபன் கூறுகிறார்.

மேலும், உலக கலாசார விழா 2016 வழக்குரை மனுவை குறிப்பிட்ட மனுதாரரின் வாதத்தை மாண்பு மிகு நீதிபதிகள் முழுமையான அதிகாரத்துடன் நிராகரித்து விட்டனர்.


Friday, 7 December 2018

The Art of Living Statement


Dear Editor,


Our volunteers are doing a lot of work in Gaja Cyclone affected areas of  Vedaranyam and Pudukottai. Gurudev Sri Sri Ravi Shankar was scheduled to go there to oversee the rehabilitation work. While he was there, the local people wanted Gurudev to facilitate a meditation program. 

Our local organizers had obtained all permissions from both the Hindu endowment board and the Archaeological Survey of India to organize this program in the Shiva temple in Thanjavur.  Since it is normal to have spiritual discourses in temples, the program was organised here. This is the first time a discourse on Kashmiri Shaivism is happening in South Tamil Nadu.

It is unfortunate that a couple of people with vested interests, who are least bothered about the temple, are quoting false allegations of the Yamuna flood plains and have approached the courts to prevent these spiritual activities from taking place in Tamil Nadu.

We have made alternative arrangements and the program is will taking place at the nearby Kaveri Mantapam.

Thursday, 6 December 2018

Art of Living volunteers work in Gaja affected villages in South India

Chennai: December 6, 16.00 IST: In the aftermath of the cyclone Gaja, the Art of Living volunteers swung into action to provide relief materials to the affected villages of Thanjavur, Thiruvarur, Pudukottai and Nagapattinam. As on 5th December, we have covered 154 villages, benefiting 21456 families and distributed 81 tons worth materials, including essential supplies like potable water, rice, dals, milk powder, bread, etc. Tarpaulin sheets for those whose homes were damaged. Approximately 100+ volunteers are physically working on this project, everyday, backed by many more volunteers who are working hard to procure and reach the supplies to the common relief centre for the 4 districts.

 

Besides providing relief materials, under the guidance of Swami Sarveshwar, Brahmmachari SriTej, Senthil Subramaniyan, Youth Co-ordinator for Tamil Nadu and counsellors Rakesh Babu and Dr. Damodaran taught meditation & breathing exercises to the affected families. Mr. Senthil Subramaniyan  shared that, "It was heartening to see some of the villagers share that more than the relief materials which would last 3-4 days, the mediation sessions gave them mental peace and hope to face Life challenges." As part of long term relief measures, these sessions will continue in the affected districts.

For any further media related information, please call Rajalakshmi at 9884017767

 

Warm regards,


Rajalakshmi

Twitter: @aoltn

              @aol_chennai


Wednesday, 5 December 2018

LIVE TELECAST-ASSEMBLY-மேகதாது - சிறப்பு சட்டமன்றக்கூட்டம் - கேரளா,கர்நாடகா போல் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்..

05-12-2018
சென்னை

அனுப்புநர்:
செந்தில் ஆறுமுகம்,
மாநில பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
H42/3,மேற்கு அவென்யூ,
காமராஜ் நகர், திருவான்மியூர்,
சென்னை-600041
87545-80274

பெறுநர்:
1. சபாநாயகர்
2. சட்டசபைச் செயலாளர்,
3. தலைமைச் செயலாளர்
4. முதலமைச்சர்
தலைமைச் செயலகம்,
சென்னை-600009

வணக்கம்,
பொருள்: மேகதாது-சிறப்பு சட்டமன்றக் கூட்டம்- தொலைக்காட்சி, இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு கோரி...

தமிழக கவர்னர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆணையின்படி நாளை(06-12-2018) மாலை 4 மணிக்கு, தமிழக சட்டசபையின் சிறப்புக்கூட்டம் நடைபெற இருப்பதாக அறிய வருகிறேன். மேகதாது அணை கட்ட
கர்நாடக அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து விவாதித்து, தீர்மானம் இயற்றுவதற்காக இக்கூட்டம் கூட உள்ளதாகவும் அறிகிறேன்.

தமிழக டெல்டா பகுதிகள் கஜா புயலால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளது. இந்த சூழலில், காவிரியில் நமக்குக் கிடைக்கவேண்டிய தண்ணீர் உரிய அளவில் கிடைக்கவில்லை என்றால், அது விவசாயிகளுக்கு மட்டுமல்ல அதைக் குடிநீராகப் பயன்படுத்தும் பல இலட்சம் பேருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை உணர்ந்து, இதுகுறித்து தமிழக அரசு சட்டசபையில் சிறப்புக்கூட்டம் நடத்துவது வரவேற்கத்தக்க  நல்ல முயற்சியே..!!

இந்த சிறப்புக்கூட்டத்தில் ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரதிநிதிகளாக ஆளுங்கட்சி,எதிர்கட்சி,கூட்டணிக்கட்சிகளின் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் தங்கள் நிலைப்பாடுகளை,கருத்துக்களை முன்வைத்துப் பேச உள்ளார்கள். மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கும் வாதங்கள் மக்களுக்கு முழுமையாக சென்று சேரவேண்டும் என்று கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருக்கும் என்று நம்புகிறேன். மேலும், வாக்களித்த பொதுமக்களுக்கு தங்கள் பிரதிநிதிகளின் சட்டமன்ற செயல்பாடுகளை முழுமையாகத் தெரிந்து கொள்ள உரிமையும் உண்டு. இதனைச் சாத்தியமாக்க, இந்த சிறப்புச் சட்டமன்ற நிகழ்வை நேரடியாக தொலைக்காட்சி, இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.

மேகதாது அணை பிரச்னை மற்றும் அதனால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை ஆளுங்கட்சி, எதிர்கட்சியினர் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்வதன் மூலம் கடைக்கோடி டெல்டா கிராமத்தில் உள்ள விவசாயி கூட தன்னுடைய பிரச்னை பற்றி சட்டமன்றத்தில் என்ன கருத்து முன்வைக்கப்பட்டது என்பதை அறிந்துகொள்ள இயலும். மேலும், செய்தியை விரிவாகப் பதிவு செய்ய ஊடகங்களுக்கும் இது உதவியாக இருக்கும். 

கேரளா-கர்நாடகாவில் நேரடி ஒளிபரப்பு:

பக்கத்து மாநிலமான கேரளாவில் சட்டமன்ற நிகழ்வுகள் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ( http://103.251.43.36/indexnew.htm?source=rtmp://103.251.43.36/live/livestream&type=vod ). தற்போதுகூட கேரளத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது(டிசம்பர் 13 வரை). கேரள அரசு சட்டசபையின் இணையதளத்தில், சபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு கொடுக்கப்படுவதோடு, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் பேசியவற்றையும் இணையத்தில் வீடியோக்களாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய விவாத்தில்(04-12-2018) பேசிய 33 எம்.எல்.ஏக்களின் வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் உள்ளது, யார் வேண்டுமானாலும் இதைப் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்.


   ( கேரளாவில் இணையத்தில் நேரலையில் சட்டமன்றம் )

கர்நாடகாவின் சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய தனியார் தொலைக்காட்சிகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. இந்த வழிமுறையைத் தமிழகமும் பின்பற்றினால், மாநில அரசிற்கு எந்தவித செலவுமின்றி சட்டசபை நிகழ்வுகளை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பார்க்கச்செய்ய முடியும்.

இதனைக் கருத்தில்கொண்டுதான், நாடாளுமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதுபோல்,  சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி 2012ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தோம்(WP14824/2012 - வழக்கு தொடுத்த குழுவில் நானும் ஒருவன்). தமிழக அரசு பல்வேறு காரணங்களை முன்வைத்து நேரடி ஒளிபரப்பு தர மறுத்துவருவதும், இவ்வழக்கு நிலுவையில் இருப்பதும் உங்களுக்கு நன்கு தெரியும். 

சட்டமன்றத்தின் சிறப்பு நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்று எங்கள் வழக்கிற்கு சட்டசபை செயலாளர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில்(03-09-2012) குறிப்பிடப்பட்டுள்ளது. கவர்னர் உரை, பட்ஜெட் உரை போன்ற சிறப்பு நிகழ்வுகள் ஏற்கனவே நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அந்த அடிப்படையில், மேகதாது அணை குறித்து நாளை(06-12-2018) நடைபெறவுள்ள சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தையும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யக்கோருகிறோம். ( உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல்  செய்த பதில் மனுவின்படி, மேகதாது குறித்தான இச்சிறப்பு நிகழ்வானது நேரடி ஒளிபரப்பு கொடுக்கப்பட்டதா இல்லையா என்பதைக் குறிப்பிட்டு, அடுத்த விசாரணையின்போது  நாங்கள் மனுத்தாக்கல் செய்ய உள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.)

எங்களின் பொதுநலவழக்கிற்கு, நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த ஆவணத்தின்படியும், கடைக்கோடி விவசாயி ஒருவரும் தன்னுடைய பிரச்னை குறித்து சட்டமன்றத்தில் என்ன பேசப்பட்டது என்பதை "முழுமையாக" அறியும் உரிமை அந்த விவசாயிக்கு உள்ளது என்ற அடிப்படையிலும் நாளை சட்டமன்றத்தில் நடைபெறவுள்ள "மேகதாது அணை" குறித்தான சிறப்பு விவாதம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ஜனநாயகம் என்பது மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்களுடைய அரசாங்கம். இதில் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் இருப்பது மிக அவசியம். இதனைக் கருத்தில் கொண்டும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். 

இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு தருவதோ;  தனியார் தொலைக்காட்சிகள் சட்டசபை நிகழ்வுகளை முழுமையாகப் படம்பிடிக்க அனுமதிப்பதோ, எதுவாக இருந்தாலும் அதுபோன்றதொரு நிகழ்வு இதுதான் தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக இருக்கும். அப்படிப்பட்டதொரு முதல் முயற்சியை தாங்கள் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்த சமயத்தில், "சிறப்பு நிகழ்வுகள்" மட்டுமில்லாமல் சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் முழுமையாக நேரடி ஒளிபரப்பக் கோரும் எங்களது பொதுநல மனு மீதான அடுத்த விசாரணையின் போது, இதற்கு அரசு தயாராக உள்ளது என்று சாதகமான பதில் மனுவைத் தாக்கல் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி !! 

செந்தில் ஆறுமுகம்,
பொதுச்செயலாளர்
87545-80274