Thursday, 20 December 2018

தமிழ்நாட்டில் கஜா புயலால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவுவது தொடர்பான - ஊடகச்‌ செய்தி

ஊடக நண்பர்களுக்கு வணக்கம்,

தமிழ்நாட்டில் கஜா புயல் ஏற்படுத்தியுள்ள  மிகப்பெரிய பேரழிவு, ஏற்பட்ட உயிரிழப்புகள், வீழ்ந்துள்ள 20-30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பல லட்சம் மரங்கள், மடிந்த கால்நடைகள், தரைமட்டமான வீடுகள், தூர்ந்து போய் கிடக்கும் விவசாயத் தோட்டங்கள்  என்று அனைத்து ஒட்டுமொத்த காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பதினைந்து-இருபது ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுள்ளது.  இந்த முக்கியத் தருணத்தில் தமிழ்நாட்டை சாரந்தவர்களும், வெளிமாநில, வெளிநாட்டுவாழ் தமிழர்களும் அரசுடன் ஒருங்கிணைந்து இந்த இழப்பிலிருந்து  பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுக்கொண்டுவர புயல் அடித்த முதல் நாளிலிருந்து  பொறுப்புணர்வுடன் களத்தில் நிற்கும் ஊடங்களின் பங்கு மகத்தானது.  இது மேலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தரவுகள் (Data Analytics) அடிப்படையில் வளர்ந்த நாடுகளில் மீட்புகள் மேம்பட்டு தொழில்நுட்பம், தரவுகள் அடிப்படையில் நடப்பது போல் துல்லியமாகத் திட்டமிட்டு உரிய பகுதிக்கு உரிய மீட்பு உதவியை வழங்க வேண்டியதற்கு நாம் இன்னும் நீண்ட பயணம் மேற்கொள்ளவேண்டியுள்ளது.  

இந்த நிலையில் சென்னை வெள்ளத்தில் நிவாரண ஒருங்கிணைப்பில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு அப்போது வெளியிடப்பட்ட“Disaster Relief NEED & SUPPORT Management System” தளத்தை மேம்படுத்தி www.GAJAHELP.ValaiTamil.Com தகவல் தளம் கஜா பாதித்த பகுதிகளை முழுமையாக ஆராய்ந்து, 2011 மக்கள் தொகையுடன் இணைத்து, கூகுள் வரைபடம் இணைத்து ஒரு முழுமையான தகவல் தளமாக கஜா புயல் அடித்த சில நாட்களில்  வலைத்தமிழ்.காம்   வெளியிடப்பட்டது.  இதில் புயலால் அதிகம் பாதித்த நான்கு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 1188  மொத்த கிராமங்களின் விவரங்களின் பட்டியலையும், அதில் உதவி கிடைத்துள்ள 54 கிராமங்களையும், உதவி கிடைக்காத 1134  கிராமங்களை  வெளியிட்டுள்ளோம்.  இது மட்டுமல்லாமல் பாதித்த கிராமங்களுக்கு உதவும் தான்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்களுக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்க அறிஞர் குழு ஏற்படுத்தப்பட்டு “Delta Agri Innovation” , “Low cost housing Solution”  “ Gaja Relief Smart Technology Solution” உள்ளிட்ட பல அறிஞர் குழுக்கள் அவரவர் துறையில் போதிய அனுபவத்தை தொகுத்து ஆராய்ந்து அறிக்கை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவைகளை பாதிக்கப்பட்ட மாவட்ட நிர்வாத்துடன் பகிர்ந்து அவர்களுக்கு உரிய முடிவுகள் எடுக்க எங்கள் ஆலோசனையை தொடர்ந்து ஆட்சியர் கூட்டங்களின் வழியாகவும் செய்து வருகிறோம். 

குறிப்பாக இந்த மீட்பு நடவடிக்கைகளில்  அரசுத்துறை அறிவிப்புகள் மற்றும் பல்வேறு தொண்டு அமைப்புகளின் உதவிகள் உள்ளிட்டவைகளையும், நிபுணர்களிடமிருந்து வரும் புதிய சிந்தனைகளை தொகுத்தும் வெளியிட்டு வருகிறோம்.

குறிப்பாக இந்த தகவல் தளத்தில்: 

தேவைகள் மற்றும் உதவிகள் - http://gajahelp.valaitamil.com/index.php

பாதிக்கப்பட்ட கிராமங்களின் முழு விவரம்;  http://gajahelp.valaitamil.com/villages/

தன்னார்வ அமைப்புகள் உருவாக்கியுள்ள சோலார் தெரு விளக்குகள்   ( http://gajahelp.valaitamil.com/innovation-349.html )

வீழ்ந்துபோன மரங்களை பொடியாக்கி ( wood chipper) பல நிறுவனங்கள் பயன்படுத்தும் உத்தி ( http://gajahelp.valaitamil.com/news-updates-383.html )

வெளிநாட்டு வாழ் தமிழர்கள் எப்படி உதவுவது என்ற வழிகாட்டுதல் (https://www.youtube.com/watch?time_continue=6&v=b3CzNHiuXhw )

விலை குறைவான வீடுகள் அதன் வெளிப்படையான செலவு விவரங்கள் (http://gajahelp.valaitamil.com/innovation-376.html)

மீட்புப் பொருள்களை மொத்தமாக விலை குறைவாக கிடைக்கும் இடங்கள் http://gajahelp.valaitamil.com/Material-Suppliers/

ஒவ்வொரு பாதிக்கப்பட்ட ஊரின் ஒரு தன்னார்வலர் விவரம் http://gajahelp.valaitamil.com/villages/

உதவிகள் கிடைக்காத கிராமங்களின் விவரங்கள்  http://gajahelp.valaitamil.com/villages/

அரசுத் திட்டங்கள், உடனடி களத்தேவைகள் என்று பல்வேறு தகவல்களை “Gaja Helpline Coordinators”  என்ற தன்னார்வக் குழுவை ஒருங்கிணைத்து வலைத்தமிழ்.காம் செய்துவருகிறது.

இதில் கிராமங்களுக்கு இரண்டாம் கட்ட உதவிகள், மூன்றாம் கட்ட மறுசீரமைப்பு உதவிகளை செய்துவரும் அனைத்து அமைப்புகளும் அவரவர் உதவி செய்து வரும் கிராமங்களின் விவரங்கள் மற்றும் அந்த அமைப்பின் விவரங்களை  www.GAJAHELP.ValaiTamil.Com -ல் சேர்த்து மீதம் எத்தனை கிராமங்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறது என்ற துல்லியமான விவரங்களை தொண்டு அமைப்புகளுக்கு கிடைக்கச் செய்வதும்,  அதன்மூலம் பாதிப்படைந்த 1188 கிராமங்களும் உதவி பெருவததுமே இதன் நோக்கம்.  இந்த கஜா உதவி தகவல் தளத்தை பார்வையிட்டு இதில் உள்ள தரவுகளை ஊடங்கங்கள் பயன்படுத்தி பகிர்வதுடன் இந்த தகவல் தளம் குறித்த செய்தியை பகிர்ந்து உதவுமாறு பணி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

நன்றி,

ச.பார்த்தசாரதி, ஒருங்கிணைப்பாளர், 
“GAJA Helpline Coordinators” Team
www.GAJAHELP.ValaiTamil.com
E-mail: GajaHelp@ValaiTamil.com

 

No comments:

Post a Comment