தன்னாட்சி
உள்ளாட்சி உங்களாட்சி
69, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை-600001.
மின்னஞ்சல் : thannatchi@gmail.com
பெறுநர்
தலைமை நிருபர்
பத்திரிகையாளர் அழைப்பு
டாஸ்மாக் மதுக்கடைகள் வேண்டுமா வேண்டாமா என முடிவெடுக்கும் அதிகாரம் கிராமசபைகளுக்கு வேண்டி
ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டம்!
இடம்: அரசு விருந்தினர் மாளிகை அருகில், சேப்பாக்கம், சென்னை.
நாள் & நேரம்: 15.02.2020, சனிக்கிழமை / காலை 9:00 மணி-மாலை 5:00 மணி வரை
தொடர்புக்கு: நந்தகுமார் 90032 32058 / 7200297276
கடந்த 21.01.2020 அன்று சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வின் முன் வந்த வழக்கில், டாஸ்மாக் கடைகள் அமைக்க முடிவெடுக்கும் அதிகாரத்தை பஞ்சாயத்து மற்றும் கிராமசபைகளுக்கு வழங்குவது குறித்து அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும், மதுக்கடைகள் விஷயத்தில் ஹரியானா , மஹாராஷ்ரா மாநிலங்களில், கிராமசபைகளே முடிவெடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டிலும் சட்டத்திருத்தம் வேண்டுமென வலியுறுத்தி இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்..
உள்ளாட்சிகளைக் குறிப்பாகக் கிராம ஊராட்சிகளை வலுப்படுத்த இயங்கி வரும் 'தன்னாட்சி' அமைப்பு ஒருங்கிணைக்கும் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து, சமூக ஆர்வலர்கள், காந்திய அமைப்புகளின் பிரதிநிதிகள், மதுவிலக்கு ஆர்வலர்கள், மகளிர் குழுக்கள், கிராம முன்னேற்றப் பணியாளர்கள் எனப் பலர் கலந்து கொள்ள உள்ளார்கள். மக்கள் சக்தி இயக்கம், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்ட பல சமூக அமைப்புகளும் போராட்டத்தில் பங்கெடுக்கின்றன.
இந்த முக்கிய நிகழ்ச்சிக்கு உங்கள் செய்தியாளரை அனுப்பி, கிராமசபைகளை வலுப்படுத்த உதவுமாறு கேட்டு கொள்கிறோம். நன்றி!
மிக்க நட்புடன்,
எஸ். நந்தகுமார்
பொதுச் செயலாளர்
Tinted titanium damascus knives - Classic Arms
ReplyDeleteA few years ago, Steve's mens titanium watches Steve built a new Tinted blade-like titanium jewelry Tinted for snow peak titanium flask his titanium nipple bars Tinted. revlon titanium max edition For the last 20 years, he has built his own original Tinted,