Friday, 25 June 2021

SPI PR - விகடன் இணையத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை பற்றி வந்த செய்தி தொடர்பான மறுப்பு செய்தி.


சட்ட பஞ்சாயத்து இயக்கம்


பத்திரிகை செய்தி (26-06-2021)

தொடர்புக்கு : 88704-72174



விகடன் இணையத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை பற்றி வந்த செய்தி தொடர்பான மறுப்பு செய்தி.



ஊடக நண்பர்களுக்கு வணக்கம், 


சட்ட பஞ்சாயத்து இயக்கம் 2013  ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்  தொடங்கி கிட்டத்தட்ட எட்டு ஆண்டுக்கும் மேலாக 6000  க்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும், 40 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளையும் கொண்டு இயங்கி வருகிறது. முதலில் மது விலக்கு, ஊழலை ஒழித்தல் என இரு பணிகளை மட்டும் கவனம் செலுத்தி வந்த நிலையில். இன்று சட்டத்தின் ஆட்சி ! அனைவருக்கும்  வளர்ச்சி ! என்ற நோக்கத்துடன் நல்லாட்சி அமைய இயக்கத்தால் செய்ய முடிந்த அனைத்து மக்கள் நல பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.. இயக்கத்தின் தலைவராக சிவ. இளங்கோ அவர்களும், பொது செயலாளராக செந்தில் ஆறுமுகம் அவர்களும் பணியாற்றி வந்தது நீங்கள் அறிந்ததே. அவர்கள் இருவரும் தற்போது இயக்க பணியில் கடந்த மார்ச் மாதம், 2021ஆம் ஆண்டு முதல் தங்களை விடுவித்து கொண்டு மக்கள் நீதி மையத்தில்  இணைந்து அரசியல் பணிகளை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்தார்கள். அதன்படி, முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை குழு அவர்களின் பணிகளை எடுத்து செய்யும் என கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் நடைபெற்ற இயக்கத்தின் ஆண்டு விழாவில் முடிவெடுக்கப்பட்டு அதன்படி செயல்பட்டு வருகிறோம்.. மேலும் இயக்கத்தை கட்சியாக மாற்றவோ வேறொரு கட்சியுடன் இணைக்கவோ எந்தஒரு முடிவும் இயக்கத்தால் என்றும் எடுக்கப்பட்டதில்லை. அதுமட்டுமின்றி சட்ட பஞ்சாயத்து இயக்கமானது  அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு, முறைப்படி 80G பெறப்பட்டு மக்கள் நன்கொடையில் இயங்கி வருகிறது. எனவே கொள்கை ரீதியாகவும் சட்ட ரீதியாகவும், இயக்கம் கட்சியாக மாற வாய்ப்பு இல்லை. இந்நிலையில், கீழே கொடுக்கப்பட்ட செய்தியில்,
https://www.vikatan.com/government-and-politics/politics/kamal-hasans-makkal-neethi-maiam-appointed-some-new-cadre


"மேலும் சட்டப்பஞ்யாத்து இயக்கம் உள்ளிட்ட சில இயக்கங்கள் மய்யத்தில் இணைக்கப்பட உள்ளது" என்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகி கூறியதாக உள்ளது. இது குறித்து வந்த செய்தியில் உண்மை இல்லை என தெளிவுபடுத்த விரும்புகிறோம். அதே போல், திரு. செந்தில் ஆறுமுகம் மற்றும் திரு. சிவ இளங்கோ அவர்களின் புதிய அரசியல் பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறோம். தொடர்ந்து சட்ட பஞ்சாயத்து இயக்கமானது எந்தவொரு அரசியல் சார்புமின்றி மக்கள் பணிகளில் ஈடுபடும் இயக்கமாக இயங்கும் எனவும் அதற்கான ஆதரவை பொதுமக்களும் பத்திரிக்கை நண்பர்களும் அளிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

மணிவாசகம்

துணை தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்

தொடர்பு எண்: 88704-72174


செய்தி தொடர்பாளர்கள்:
ரங்க பிரசாத் - 99441 88941
ஜெயந்தி - 99521 82452



Satta Panchayat Iyakkam

 31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

" Aiyarathil Oruvan " : 1001.sattapanchayat.org

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

No comments:

Post a Comment