Saturday, 29 October 2022

சட்ட பஞ்சாயத்து இயக்கம் - பத்திரிக்கை செய்தி - எப்பொழுது நடக்கும் சரியான ஏரியா சபை ?

சட்ட பஞ்சாயத்து இயக்கம்


பத்திரிகை செய்தி (28-10-2022)

தொடர்புக்கு : 96292-33892

எப்பொழுது நடக்கும் சரியான ஏரியா சபை ?


வரும் நவம்பர் -1 ஆம் தேதியன்று, தமிழ்நாட்டில் முதல்முறையாக ஏரியா சபை நடைபெறும் என தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்து  இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பின் படி, கூட்டத்தின் தலைவராக அந்தந்த வார்டு கவுன்சிலர் இருப்பார். அதுபோலவே வார்டில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் பகுதி சபை என்ற 'ஏரியா சபா'வின்  ஒருங்கிணைப்பாளராக இருப்பார். தமிழக முதல்வர் சென்னை முதல்வர் பல்லாவரம் தொகுதியில் பம்மல் வார்டில்  கலந்து கொள்வார். ஆனால், நகராட்சி நிர்வாக துறை  செயலாளர், துறை அமைச்சருக்கு சில அடிப்படை  கேள்விகள்.


1 . நவம்பர் - 1  தேதி அறிவிப்பின் படி, ஏரியா வாரியாக, வார்டு வாரியாக எங்கே சபை நடைபெறும் என அறிவிக்கவில்லை. நகர்புறம் சார்ந்த பொதுமக்கள் எங்கு  சென்று கலந்து கொள்வது?


2 . வார்டு உறுப்பினர்களை கவன்சிலரே தேர்ந்தெடுத்ததால், பொது மக்களுக்கு யார் உறுப்பினர்கள் என்றே  தெரியாது. இவ்வாறு இருக்கையில் பகுதிசார்  பிரச்சனைகளை யார் வழியாக எடுத்து சொல்வது?


3 . நடைபெறும் இடம், நேரம்  சம்மந்தமாக எங்கேயேனும் அறிவிப்பு பலகை அல்லது நோட்டீஸ் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. பொது தொலைபேசி எண் இல்லை. மண்டல வாரியாக பேரூராட்சி,  நகராட்சி,  மாநகராட்சி அதிகாரிகளுக்காவது  தெரியுமா ? 


4 . சபை நடைபெறும் முறை, விவாதிக்க  கூட்ட பொருள், விதிமுறைகள்  ஏதேனும் தெரிவிக்கப்ட்டுள்ளதா? அரசாணை ஏதும் இல்லை.



திமுகவின் ஏரியா சபை நடைபெறுகிறது! தமிழ்நாடு அரசாங்கத்திற்கான, நகர்ப்புற பகுதிகளுக்கான ஏரியா சபை சரியான முறையில் எப்போது நடைபெற போகிறது?





                                                                                                 

                                                                                          கி. மணிவாசகம்,
                                                                                  பொது செயலாளர்,
                                                                                  சட்ட பஞ்சாயத்து  இயக்கம் 

                                                                                    88704 72174

ரங்கா பிரசாத் - 99441 88941 

ஜெயந்தி - 99521 82452 

ஊடக பிரிவு 




நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


Satta Panchayat Iyakkam

Member : http://bit.ly/2021spimember |  

Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

Tuesday, 20 September 2022

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பதில் நேரடி பணபரிவார்த்தை தொகையை 2000 ரூபாயாக குறைப்பது மட்டும் முழுமையான வெளிப்படை தன்மை கொண்டுவர சாத்தியப்படுத்துமா?

சட்ட பஞ்சாயத்து இயக்கம்


பத்திரிகை செய்தி (20-09-2022)

தொடர்புக்கு : 96292-33892

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பதில் நேரடி பணபரிவார்த்தை தொகையை  2000 ரூபாயாக குறைப்பது  முழுமையான வெளிப்படை தன்மை கொண்டுவர சாத்தியப்படுத்துமா? 






தேர்தல் ஆணையம் நேரடி பண பரிவர்த்தனை மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதை 20 ,000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய்க்கு குறைக்க மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. உண்மையில், இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதன்மூலம், 2000 ரூபாய்க்கு மேல் நன்கொடை அளிக்கும் நபர்கள் நேரிடையாக வங்கி வழியாகவும் கொடுக்க வாய்ப்பாக அமைவது மட்டுமல்லாமல், ஒரு கட்சியின் பண பரிவர்த்தனை மொத்த நிதியில் 20 சதவீதம் கீழோ அல்லது 20 கோடிக்கு மிகாமல் இருப்பதை வரையறை செய்கிறது. அதேநேரம், தேர்தல் பத்திரங்கள் பற்றி பேசாமல், கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பதில் பணப்பரிவர்த்தனை  தொகையை குறைப்பது மட்டுமே  முழுமையான வெளிப்படைத்தன்மை ஏற்படுத்துகிறதா என்பது பற்றி தேர்தல் ஆணையம் சிந்திக்கவில்லை.


நேற்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், கட்சிகளின் நிதி ஆதார தணிக்கை எளிதாக செய்ய உதவியாக இருக்கும் என்ற பட்சத்திலும் மற்றும் கருப்பு பணம் தேர்தலில் பயன்படுத்துவது கட்டுப்படுத்தப்படும் என நம்பிக்கையில் மத்திய சட்ட அமைச்சரான கிரண் ரிஜ்ஜு வுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர பரிந்துரை செய்திருக்கிறார். ஆனால், தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடி கோடியாக கொடுத்ததை ரகசியம் காக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட திருத்தத்தை மத்திய அரசு 2018 ஆம் ஆண்டு கொண்டு வந்ததை பற்றி தேர்தல் ஆணையம் ஏதும் கருத்து கூறாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது! வாங்குபவர் தன்னுடைய விவரத்தை வங்கிகளுக்கு தெரிவித்தாலும் தேர்தல் பத்திரங்களில் பெயரை குறிப்பிடாமல் இருக்கும் போது மக்களுக்கு பெரிய அளவில் அரசியல் கட்சிக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பு இல்லை; மேலும்  இந்த பத்திரங்கள் வழியாக கிடைக்கும் பணத்தின்  அதிக பட்ச அளவு நிர்ணயிக்கப்படவில்லை. ஆதலால், ஒரே நிறுவனம் அதிக பணம் கொடுப்பதற்கும் தடையையும் நீங்கி விட்டது. இவ்வாறாக, நிதி கிடைக்க பெரும்  அரசியல் கட்சிகள் நேர்மையான முறையில் ஆட்சி செய்யுமா ? அனைவருக்கும் ஒரே முறையில் ஆட்சி வழங்குமா அல்லது தனிநபர்களுக்கு ஆதரவாக இயங்குமா என்பது பற்றி பொதுவெளியில் தேர்தலுக்கு முன்பே தெரிய வாய்ப்பில்லை. இது, தேர்தலுக்கு பின் உருவாகும் ஆட்சியில் ஜனநாயகம் தழைத்தோங்குமா என்பது கேள்விக்குறி.  தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் லோகேஷ் பத்ரா தேர்தல் பத்திரங்கள் விற்பனை ஆய்வு செய்ததில் 10,000  கோடிக்கும் மேலாக பாரத ஸ்டேட் பேங்க் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 29 வங்கிகள் வாயிலாக பெறப்பட்டுள்ளது என தெரிய வருகிறது. ஆனால் இந்த பத்திரங்கள் கொடுத்தவர் பற்றிய பெயர் குறிப்பிட வேண்டியதில்லை என்னும் போது பண பரிவர்த்தனை மட்டும் குறைப்பது எவ்வாறு தீர்வாகும்? எனவே, தேர்தல் ஆணையம் முழுமையான  வெளிப்படை தன்மை இல்லாத தேர்தல் பத்திரத்தின் ஆபத்தை பற்றிய தன் முடிவை பற்றி சட்ட அமைச்சகத்துக்கு எடுத்து சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. இதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தேர்தல் பத்திரங்கள் வழக்கை விரைந்து முடிக்க வழிவகை செய்யும். முடிவில், நியாயமான முறையில் தேர்தல் நிதி ஆதாரங்கள் திரட்டப்படுவதுடன் செலவு செய்வதிலும் ஆடம்பரம் குறைய வாய்ப்பு வாய்ப்புள்ளது.  மேலும் தேர்தலில் மக்களுக்கு பணம் கொடுக்கும் வழிமுறையை தடுக்க மாற்று வழியை தற்காலத்திற்கு ஏற்றார் போல மாற்றியமைக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து தேவையான திருத்தங்களை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என சட்ட பஞ்சாயத்து இயக்க கோரிக்கை வைக்கிறது. 


                                                                                                 

                                                                                          கி. மணிவாசகம்,
                                                                                  பொது செயலாளர்,
                                                                                  சட்ட பஞ்சாயத்து  இயக்கம் 

                                                                                   9629233892

ரங்கா பிரசாத் - 99441 88941 

ஜெயந்தி - 99521 82452 

ஊடக பிரிவு 

சட்ட பஞ்சாயத்து இயக்கம்,





நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


Satta Panchayat Iyakkam

Member : http://bit.ly/2021spimember |  

Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

Thursday, 12 May 2022

ஊராட்சி செயலர்களைஅலுவலர்களே முழுமையாகக் கட்டுப்படுத்த வகை செய்யும் சட்டத் திருத்தத்தினை அரசுஉடனே திரும்பப் பெற வேண்டும்!

ஊராட்சி செயலர்களை அலுவலர்களே முழுமையாகக் கட்டுப்படுத்த வகை செய்யும் சட்டத் திருத்தத்தினை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்!

 

தன்னாட்சி அறிக்கை!

 

12.05.2022

 

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்-1994 இன் படி கிராம ஊராட்சி செயலரை நியமித்தல், பணியிடமாற்றம் செய்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவை ஊராட்சியின் செயல் அதிகாரியாக இருக்கும் கிராம ஊராட்சித் தலைவரின் பொறுப்பாக இருந்தது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  ஊராட்சி தலைவரின் இந்த அதிகாரங்களைப் பறித்து, படிப்படியாக அதனை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கும் பணியினை மாறி மாறி பொறுப்பில் இருக்கும் அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. 

 

1996 ஆம் ஆண்டு முதல், ஊராட்சிகள் நேரடியாக மேற்கொண்டு வந்த ஊராட்சி செயலர்களின் நியமனங்கள், 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை 72 [G.O. Ms. No. 72, Rural Development & Panchayat Raj (E5), 9th July 2013.] யின் படி மாவட்ட அளவிலான நியமனக்குழு மூலம் நடைபெறத் துவங்கின. இருப்பினும், நிர்வாக ரீதியாக ஊராட்சி செயலர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சித் தலைவரிடமே இருந்தது. 

 

இந்நிலையில், ஊராட்சி செயலரை முழுமையாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கில் 10.05.2022 அன்று சட்டமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.  தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 104  (இடமாற்றம்) மற்றும் 106 (தண்டிக்கும் அதிகாரம்) ஆகிய இரண்டு சட்ட பிரிவுகளிலும் கொண்டுவரப்பட்டுள்ள இச்சட்டத் திருத்தங்களின் மூலம், இனி  ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்யும் போது கிராம ஊராட்சி தலைவரையோ அல்லது ஊராட்சி மன்றத்தையோ கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

 

அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரே கிராம ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்வார். அதற்கு முன் ஊராட்சி தலைவரைக் கலந்தாலோசிக்கக்  கூடத் தேவையில்லை என்கிறது இச்சட்டத்திருத்தம்.   மேலும் பிரிவு 106 ன் படி செயலரைத் தண்டிக்கும் அதிகாரம், செயல் அதிகாரியான ஊராட்சி தலைவரிடமிருந்து அரசால் நியமிக்கப்படவிருக்கும் அலுவலருக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

கிராம ஊராட்சி நிதியிலிருந்து ஊதியம் பெறும் ஒரு பணியாளரை, கிராம ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டிய ஒருவரை அவ்வூராட்சியின் நிர்வாக கட்டுப்பாட்டிலிருந்து  முழுமையாக எடுத்து அலுவலர்களின் கட்டுப்பாட்டிற்குக்  கொண்டுசென்றிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. 

 

தமிழ்நாடு  சட்டமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இச்சட்டத்திருத்தத்தினால், கிராம ஊராட்சி செயலரின் நிர்வாக விஷயத்தில் கிராம ஊராட்சிக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லாமல் போகும். இதனால், ஊராட்சித் தலைவருக்கு இணையான அதிகாரமிக்க நபராக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஊராட்சி செயலர் உருவெடுக்கும் எல்லா வாய்ப்புகளும் உள்ளன.

 

 இது இந்திய அரசமைப்பு சட்டம் பிரிவு 243G ன் படி கிராம ஊராட்சியின் சுயாட்சி தன்மையினை கேள்விக்குள்ளாக்குவதாகும். 

 

ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலுக்கு முன், தனி அலுவலர்கள் காலத்தில் எந்தக் கண்காணிப்பும் இல்லாமல் ஊராட்சிகளில் ஊழல் அதிகரித்தது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இச்சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால், மக்கள் பிரதிநிதிகள் இருந்தாலும், அவர்களுக்குக் கட்டுப்படாமல், உயரதிகாரிகளுடன் இணைந்து ஊராட்சி செயலர்கள் ஊழலில் திளைக்கும் வாய்ப்பு மிக அதிகமுள்ளது. இது மக்கள் விரோத முயற்சி என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, ஊராட்சிகளின் அதிகாரத்தைப் பறிக்கும் இந்தச் சட்டத்திருத்தினைத் தமிழ்நாடு  அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென தன்னாட்சி வலியுறுத்துகிறது.

 

க.சரவணன்  

தலைவர்

9751237734                                        

                                                        

நந்தகுமார் சிவா                                            

பொதுச் செயலாளர்

9003232058

 

தன்னாட்சி

(உள்ளாட்சி உங்களாட்சி)

பதிவு எண்: 272/2018

69, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை-600001.

மின்னஞ்சல் : thannatchi@gmail.com

www.thannatchi.in

 

Friday, 6 May 2022

Press Invite_May 08,2022_உள்ளாட்சிகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தும்பஞ்சாயத்து ராஜ் தின சிறப்புக் கருத்தரங்கம்

பத்திரிகையாளர் அழைப்பு

 

உள்ளாட்சிகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தும் பஞ்சாயத்து ராஜ் தின சிறப்புக் கருத்தரங்கம் சென்னையில் நடைபெறுகிறது.

 

கிராமசபை, 100 நாள் வேலைத்திட்டம், உள்ளாட்சிக்கான நிதிப் பகிர்வில் இருக்கும் மாநில அரசின் அணுகுமுறைகள், ஊராட்சி நிர்வாகத்தில் அலுவலர்களின் தலையீடு மற்றும் திட்டமிட்ட ஊழல், நகர்ப்புற உள்ளாட்சிக்கான சீர்திருத்தங்கள் எனக் கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தில் இருக்கும் சவால்களையும் அவற்றை எதிர்கொண்டு தீர்வு காண்பதற்கான வழிமுறைகளையும் விவாதிக்கும் கருத்தரங்கம் வரும் 08.05.2022, ஞாயிறு அன்று சென்னை சமூகப்பணி கல்லூரி, எழும்பூரில் நடைபெறுகிறது. தன்னாட்சி அமைப்பு ஒருங்கிணைக்கும் இந்த கருத்தரங்கில் கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், நகர்ப்புற மாமன்ற உறுப்பினர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் பங்கேற்கிறார்கள். 

 

மேலும், சிறப்பு அழைப்பாளர்கள்

 

திரு.சமஸ், பத்திரிக்கையாளர், அருஞ்சொல்

திரு.மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,

திரு.சாவித்திரி கண்ணன், பத்திரிக்கையாளர், Aram Online

திரு.R.ஜெயராமன், மாமன்ற உறுப்பினர், பெருநகர சென்னை மாநகராட்சி, CPI(M)

 

ஆகியோர் கருத்துக்களை வழங்க உள்ளார்கள். உள்ளாட்சி தொடர்பான இக்கருத்தரங்கிற்கு தங்கள் ஊடகத்திலிருந்து செய்தியாளரை அனுப்பி, நிகழ்வினை பதிவு செய்து செய்தியாக்க வேண்டுகிறோம். 

 

நாள்:  08-05-2022(ஞாயிறு)


இடம்: டாக் உள்ளரங்கம், (TAG Auditorium) சென்னை சமூகப்பணி கல்லூரி,

 காசா மேஜர் சாலை, எழுப்பூர்


நேரம்:  காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை


தொடர்புக்கு:  9445700758

 

M. ஜாஹிர் ஹுசைன்

துணைத் தலைவர்


தன்னாட்சி

(உள்ளாட்சிஉங்களாட்சி)

69, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை

மின்னஞ்சல்: thannatchi@gmail.com

www.thannatchi.in

Saturday, 30 April 2022

100வது மாத நிதி நிலை அறிக்கை வெளியீட்டு விழா! கிராமசபை கூட்டப்பொருள் கோரிக்கை!

 

பத்திரிகை செய்தி (01-05-2022)

தொடர்பு எண்கள் :  88704-72174  

100வது மாத நிதி நிலை அறிக்கை வெளியீட்டு  விழா! 

 

"சட்டத்தின் ஆட்சி", "அனைவருக்கும் வளர்ச்சி" தரும் "நல்லாட்சியை" மலரச் செய்வதற்கான மக்கள் இயக்கமே சட்ட பஞ்சாயத்து இயக்கமாகும்.  வெளிப்படைத்தன்மையை முன்னிறுத்தி இயக்கத்தின் வரவு-செலவு கணக்கை மக்களின் பார்வைக்கு மாதந்தோறும் வெளியிடுவோம் என்று இயக்கம் துவங்கிய நாள் 14-12-2013 அன்று உறுதி ஏற்றோம். தொடர்ந்து 99 மாதங்களைக் கடந்து, 100 வது மாத அறிக்கை வெளியீட்டு விழா திருவான்மியூரில் உள்ள லட்சுமி மினி ஹாலில் நடைபெற்றது. நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் 100 மாத நிதி நிலை அறிக்கையை சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் திரு. சம்சுகனி வழங்கி, திரு.ஜெயராம் வெங்கடேசன்,ஒருங்கிணைப்பாளர்(அறப்போர் இயக்கம்)மற்றும் திரு.வெ.பொன்ராஜ்,தலைமை வழிகாட்டி(அப்துல் கலாம் லட்சிய இந்திய இயக்கம் ) இணைந்து வெளியிட்டனர். நிகழ்ச்சியில் இயக்க நிறுவனர்களான திரு. சிவ.இளங்கோ மற்றும் திரு. செந்தில் ஆறுமுகம், அ.ஜெய்கணேஷ் மற்றும் மாநில நிர்வாகிகள், மதுரை, நெல்லை , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகை, திருவண்ணாமலை திருப்பத்தூர் உள்ளிட்ட அனைத்து  மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.  

மேலும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடமும், உள்ளாட்சி துறை முதன்மை செயலாளர், மற்றும் தலைமை செயலாளரிடம் கிராம சபை வரவு - செலவு கணக்குளை பஞ்சயாத்து அலுவலகம் முன் மக்களுக்கு தெரியும் படி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். தற்போது, அரசாங்கம் அறிவித்த மே 1 கிராமசபையின் கூட்டபொருளில் இக்கோரிக்கை  இடம் பெற்றுள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். அடுத்தடுத்து வரும் கிராமசபையில் முந்தய காலாண்டு கணக்குளை வைப்பதற்கும், நடைமுறைப்படுத்தாத கிராம ஊராட்சிகளை அரசாங்கம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இயக்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். 

 

செய்தி தொடர்பாளர்கள்:

ரங்க பிரசாத் - 99441 88941
ஜெயந்தி - 99521 82452

                                                                                            கி. மணிவாசகம்,
                                                                                            பொது செயலாளர்,
                                                                                            சட்ட பஞ்சாயத்து  இயக்கம்.
                                                                                                88704-72174  


நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


Satta Panchayat Iyakkam

Member : http://bit.ly/2021spimember |  

Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

Friday, 15 April 2022

வாணி தமிழ் எழுத்துப்பிழை திருத்தி இணையத்தளம் www.VaaniEditor.com வெளியீட்டு விழா

வாணி தமிழ் எழுத்துப்பிழை திருத்தி இணையத்தளம் வெளியீட்டு விழா

வலைத்தமிழ் ஏற்பாட்டில் கணினித் தமிழ் ஆர்வலர் நீச்சல்காரன் உருவாக்கிய வாணி பிழை திருத்தியின் புதிய இணையத்தளம் (www.VaaniEditor.com),  சித்திரை 1ந்தேதி (14-04-2022) அன்று வெளியிடப்பட்டது. இந்திய மொழிகளில் பிழைதிருத்தத்திற்கென்று பிரத்தியேகமாக உருவான முதல் இணையத்தளம் இதுவாகும். கனடா தமிழ் இலக்கியத் தோட்டக் கணிமை விருது மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கணினித் தமிழ் விருதினைப் பெற்ற மென்பொருள் வாணி என்பது குறிப்பிடத்தக்கது.  பன்னாட்டு நிறுவனங்கள் முதல் பாமர மக்கள் வரை பிழையின்றி அழகு தமிழில் எழுத இந்த வாணி தளம் உதவும்.

எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், தமிழ் மென்பொருள் நிறுவனங்கள் என்று அனைவருக்கும் பயன்படும் தொழில்நுட்பத் தளமாக  வாணி வெளியிடப்பட்டது.

இந்தியாவில் எந்த மொழிக்கும் இந்த அளவிற்கு மென்பொருட்கள் உருவாக்கப்படவில்லை. அறம் சார்ந்த சிந்தனைகள் தமிழில் உள்ளது போலத் தொழில்நுட்பம் சார்ந்த படைப்புகள் தமிழில் பெருக வேண்டும். அதற்கு இளைஞர்கள் பலர் வருவது நம்பிக்கையளிக்கிறது என்று மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் குறிப்பிட்டார்.  மேலும், அடுத்து நடக்கவிருக்கும் ஈரோடு புத்தகத்திருவிழாவில் வாணி மென்பொருளை பதிப்பாளர்களுக்கு கொண்டுசெல்ல முயற்சிப்போம் என்று தெரிவித்தார்.

ஒரு நூல் பிழையில்லாமல் வெளியாகப் பதிப்பாளர்கள் அடையும் சிரமத்தை இந்த மென்பொருள் தீர்க்கும் என்ற நம்பிக்கையை அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தேசியத் தலைவர் முனைவர் கோ.பெரியண்ணன் அவர்கள் வெளிப்படுத்தினார். ஒரு எழுத்தாளனின் எழுத்து என்பது அவருக்கு மட்டும் சொந்தமில்லை அது பலருக்கும் போய்ச் சேரும் என்பதால் பிழையில்லாமல் எழுத வேண்டும். வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு இத்தகைய கருவிகள் மிகுந்த பயனளிக்கும் என்று மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பெ. இராஜேந்திரன் அவர்கள் பாராட்டினார்.
 
ஆங்கிலத்தைப் பிழையுடன் எழுதினால் அதை வாசகர்கள் ஏற்றுக் கொள்வதில்லை ஆனால் தமிழில் நாம் எழுதினால் பொறுத்துக் கொள்கிறோம். பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் போகாமல் நம் மொழியின் ஆளுமை நம்மிடம் இருக்க வேண்டும் என்று கணினித்தமிழ் அறிஞர் மணி மணிவண்ணன் வலியுறுத்தினார். மேலும் சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தின் முனைவர் வேணுகோபால் அவர்கள்  உட்பட பலரும் வாழ்த்துரை வழங்கினர். வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி அவர்கள்  வரவேற்புரையாற்றினார், நிகழ்ச்சியை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் இரா. இராஜ்குமார் அவர்கள் நெறியாள்கை செய்தார்.

 பிழைதிருத்தி என்பது மொழியில் உள்ள பிழைகளைத் திருத்த உதவும் மென்பொருளாகும். ஆங்கிலத்திற்கும் கிராமர்லி, ரைட்டர் போன்ற பல மென்பொருட்கள் உள்ள நிலையில் இந்திய மொழிகளுள்  அவ்வாறு இணையத்தில் திருத்தும் நவீன பிழைதிருத்திகள் மிகக் குறைவு. ஆனால் தமிழில் முதன்முதலில் 2014 இல் வாணி திருத்தி அறிமுகமானது. கடந்த பல ஆண்டுகளாக மேம்பட்டு அதன் நவீன பதிப்பு இன்று வெளியானது. இன்றுவரை இணையத்தில் தமிழில் செயல்பாட்டில் உள்ள ஒரே பிழைதிருத்தி இதுவாகும். இந்தப் பிழை திருத்தி மூலம் தட்டுப்பிழை, சந்திப்பிழை, புணர்ச்சிப்பிழை, திணைப்பிழை, மரபுப்பிழை போன்ற பிழைகளைத் திருத்திக் கொள்ள முடியும்.

 இந்தத் தளத்தில் நுழைந்து உள்ளடக்கத்தை இட்டு, திருத்துவதற்கு வசதியாக மூன்று இடைமுகங்கள் உள்ளன. முதல் வகையில் முழு நூலையோ பெரிய கட்டுரையையே இட்டு, ஒவ்வொன்றாகத் திருத்திக் கொள்ளும் வகையில் உள்ளது. இரண்டாவது இடைமுகத்தில் ஒரு சொல்லாளருக்கு இணையான வசதிகளுடன் உள்ளடக்கத்தை அழகூட்டவும் மேம்படுத்தவும் வசதியுடன் உள்ளது. மூன்றாவது இடைமுகத்தின் மூலம் தட்டச்சும் போதே பக்கவாட்டில் பரிந்துரைகளைக் கண்டு திருத்திக் கொள்ள முடியும்.  கூகிள் குரோம்(Google Chrome), கூகிள் டாக்ஸ்(Google Talk) போன்ற இடங்களில் நேரடியாக வாணியைப் பயன்படுத்த முடியும்.

வாணி திருத்தியில் 65 ஆயிரம் அடிச்சொற்களுடன் சுமார் 13 கோடிக்கும் மேற்பட்ட சொற்களைத் தமிழில் புரிந்துகொள்ளும் திறனைக் கொண்டது. இந்த மேம்பட்ட பதிப்பில் தனி இணையத்தளம், தனிப்பயனாக்கம் (Customization), நிகழ்நேரப் பிழைதிருத்தம் (Real time validation), மூன்று வித இடைமுகங்கள், பொதுப்பயன்பாட்டு ஏ.பி.ஐ. இடைமுகம்(API) மற்றும் பைத்தான் பொதி (Python Package) ஆகியவை சிறப்பம்சங்களாக உள்ளன.

நிகழ்வில் பங்கேற்றவர்கள்

வரவேற்புரை:

திரு. ச.பார்த்தசாரதி,
நிறுவனர், வலைத்தமிழ். புரவலர்.
https://www.youtube.com/watch?v=LuHivPnU0-k


நோக்கவுரை:

திரு. நீச்சல்காரன் ராஜாராமன்,
வாணியை உருவாக்கியவர்.
https://www.youtube.com/watch?v=BwLusFiN6C4


வாழ்த்துரை:

  1. திரு. ஸ்டாலின் குணசேகரன்,
    தலைவர், ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை,
    ஒருங்கிணைப்பாளர், ஈரோடு புத்தக திருவிழா.
    https://www.youtube.com/watch?v=NZ9Av9c6l3E
  1. நல்லாமூர் முனைவர் கோ.பெரியண்ணன்
    தேசியத் தலைவர், அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
    https://www.youtube.com/watch?v=zGJC0Z0aWbA
  1. திரு. பெ.இராஜேந்திரன்,
    தலைவர், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்.
    https://www.youtube.com/watch?v=33HFAJb5KJs
  1. திரு. மணி மணிவண்ணன்,
     கணினித் தமிழ் ஆர்வலர், கலிபோர்னியா,அமெரிக்கா.
    https://www.youtube.com/watch?v=djsbGrFlCZM
     
  2. முனைவர். வேணுகோபால்,
    கல்வி அமைச்சகம், சிங்கப்பூர்.
    https://www.youtube.com/watch?v=9KzDJ0eBXqg

தொடர்புக்கு : அ. சுரேஷ், +91 9884411637

Monday, 1 November 2021

முல்லை பெரியாறு அணை- தமிழ்நாட்டின் மாநில உரிமையை காவு கொடுத்துவிட்டது திமுக. நடந்த தவறுக்கு பொறுப்பேற்று, நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் பதவி விலக வேண்டும்.

சட்ட பஞ்சாயத்து இயக்கம்


பத்திரிகை செய்தி (1-10-2021)

தொடர்புக்கு : 88704-72174



முல்லை பெரியாறு அணை- தமிழ்நாட்டின் மாநில உரிமையை காவு கொடுத்துவிட்டது திமுக. நடந்த தவறுக்கு பொறுப்பேற்று, நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் பதவி விலக வேண்டும். 



இன்று நவம்பர் -1 , தமிழ்நாடு எல்லை வரையறுக்கப்பட்ட நாள். பின்னாளில் பல போராட்டங்களுக்கு பிறகு, கன்னியாகுமரி பகுதி எல்லை கூடுதலாக பெறப்பட்டு இன்றும் அந்த மாவட்ட மக்களால் கன்னியாகுமரி உருவான தினம் கொண்டாடப்பட்டு  வருகிறது. இந்த முக்கியமான நாளில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முல்லை பெரியாறு அணையில்  142 அடி மட்டத்திற்கு நீர் தேக்கும் உரிமையை தி மு க அரசாங்கம் காவு கொடுத்து இருக்கிறது. பல நாள் சட்ட போராட்டத்திற்கு பின்பு தான் 142  அடி வரை தண்ணீர் தேக்கும் உரிமை நமக்கு கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, அணையை சுற்றி உள்ள சிற்றன்னையை சரி செய்ய விடாமல் கேரளா அரசாங்கம் தடங்கல்களை உருவாக்கி வருகிறது. அதனால், முல்லை பெரியாறு அணையின் முழு கொள்ளளவை எட்ட முடியாமல் தமிழகம் தவித்து வருகிறது.  நிலைமை இவ்வாறு இருக்க, தமிழ்நாட்டின் அணையை கேரளா மந்திரிகள் ஒரு வாரம் ஆய்வு செய்து, தமிழ்நாடு அணை பொறியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து 137  அடி இருந்தபோதே தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இது தவிர, அணையின் உறுதித்தன்மையை பற்றி கேரள நடிகர்கள் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். அனைத்தையும் அமைதியாக இந்த அரசாங்கம் பார்த்து வருகிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு, முழுப்பூசணிக்காக்கையை சோற்றில் மறைத்து நீர்வளத்துறை அமைச்சர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவருக்கு சில கேள்விகள் சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேக்க விரும்புகிறோம்.

தனி நபர் வழக்கு காரணமாக  142  அடி நீர் அணையில் சேமிக்க கொண்டு வர முடியாது என்றால், திமுக உச்ச நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தாமல் தோற்று போய் விட்டதா? சரி, அவ்வாறு ஆயினும் மாதந்தோறும்  நிர்ணயிக்கப்பட்ட அளவை விட,137  அடியிலேயே தண்ணீர் திறந்து விட காரணம் என்ன? கேரள மந்திரிகள் ஆய்வு செய்வதை எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? அணையின் நீர் திறப்புக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் ஏன்  இன்னும் பார்வை இட வர வில்லை? ஏன் என்ற  கேள்வி எழுகிறது. இவ்வளவு நடந்த பின்னரும் தலைமை பொறியாளரை மட்டும் ஆய்வு செய்ய அனுப்பி வைக்கிறது. ஏற்கனவே, கர்நாடக அரசாங்கம் மார்க்கண்டேய நதியை  ஒட்டி முழு அணையை கட்டி விட்டது. அதற்கு ஆரம்பிக்கப்பட வேண்டிய சட்ட போராட்டம் என்ன ஆனது ? மேலும், மேடையில் பேசுவதை கேட்டு அவதூறு  வழக்கு தொடர்வதில் மும்மரமாக உள்ள இந்த அரசாங்கம், பொய் பிரச்சாரம் செய்யும் கேரள நடிகர்கள் மேல் வழக்கு தொடரலாமே? இதை விட கொடுமை கேரள நீர்வளத்துறை அமைச்சர் இன்னும் மதகு திறக்க கேட்டுள்ளோம் என பத்திரிக்கை செய்தி வெளி வருகிறது. அடுத்த நாள், ஞாயிறு(அக்டோபர் 31 ,2021 ) அன்று அவர் சொன்னபடியே மதகு திறக்கப்படுகிறது. அதற்கான அவசியம் என்ன? என பல கேள்விகள் எழுகிறது. தமிழ்நாட்டில் நடப்பது திமுக அரசாங்கமா ? அல்லது கேரள அரசாங்கமா என்பதை முதல்வர் தெரிவுபடுத்த வேண்டும். வாழ்வாதார பிரச்சனையில், பொறுப்பற்ற முறையில் பூசி முழுகும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களை மாற்றி வேறு ஒரு நல்ல அமைச்சரை நியமிக்க வேண்டும் என சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டு கொள்கிறது. 


மணிவாசகம்

துணை தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்

தொடர்பு எண்: 88704-72174




செய்தி தொடர்பாளர்கள்:

ரங்க பிரசாத் - 99441 88941
ஜெயந்தி - 99521 82452

நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


Satta Panchayat Iyakkam

Member : http://bit.ly/2021spimember |  

Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269