அன்புடையீர் வணக்கம்,
அமெரிக்காவில் இயங்கும் 45-க்கும் மேற்பட்ட தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America - FeTNA, www.Fetna.org) அமெரிக்காவில் தமிழ் மரபைப் பேணிப் பாதுகாக்கவும்,அடுத்த தலைமுறையினர் தமிழை பயன்பாட்டில் கொள்ளவும் பல்வேறு தமிழ்க் காப்புப் பணிகளை செய்து வருகிறது. இதன் அமைப்பு, தமிழர்களின் தாயகமான தமிழகத்தில் தமிழிசைப் பணியை முன்னெடுக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழிசை விழாவை நடத்திக் கொண்டுள்ளது. சென்னையில் உள்ள இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 11-ஆம் ஆண்டு விழாவில், 3-ஆவது ஆண்டாக தொடர்ந்து தமிழிசை விழாவை மிகச்சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகச்சியில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.நாஞ்சில் இ.பீற்றர், முன்னாள் தலைவர்கள் திரு.கருப்பையா சிவராமன் மற்றும் முனைவர் V.G.தேவ் , வி.ஐ.டி வேந்தர் முனைவர் ஜி.விஸ்வநாதன் , தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் க.பாஸ்கரன், வேளான்மைத்துறை செயலர் செ.இராஜேந்திரன் IAS, தமிழக நிதித்துறை செயலாளர் திரு.உதயசந்திரன் IAS, விஜிபி குழுமம் தலைவர் முனைவர் வி.ஜி.சந்தோசம் மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மக்கள் தொடர்புக்குழு ஒருங்கிணைப்பாளர் திரு.கொழந்தவேல் இராமசாமி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். (இணைப்பினைக் காண்க)
தமிழிசை ஆர்வலர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் தாங்கள் தங்கள் ஊடகத்தின் சார்பாக கலந்துகொண்டு தமிழிசை விழாவினை மக்களுக்கு எடுத்துச் செல்லவும், தமிழிசை வளர்ச்சிக்கு கைகொடுக்கவும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் இசைக்கடல் பண்பாட்டு நடுவம் ஆகியவற்றின் சார்பில் அன்போடு அழைக்கிறோம்.
நாள்: 29.12.2015, செவ்வாய்க் கிழமை, பிற்பகல் 2 மணி முதல்.8:30 மணி வரை
இடம்: ஆனந்த் சந்திரசேகர் அரங்கம் , 56, தம்பையா சாலை, மேற்கு மாம்பலம்
நன்றி.
தமிழிசை விழாக் குழுவினர்
தொடர்பிற்கு:
கொழந்தவேல் இராமசாமி, மக்கள் தொடர்புக்குழு ஒருங்கிணைப்பாளர்-வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை,8056704095
திருபுவனம் G. ஆத்மநாதன், நிறுவனர், இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை, 9380125989