அன்புடையீர் வணக்கம்,
அண்மையில் சென்னையைத் தாக்கிய பேரிடரினைத் தொடர்ந்து பல பகுதிகளில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது, இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது. இவற்றை நீக்கும் நடவடிக்கையை உலக சித்த மருத்துவ உறுப்பினர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக சென்னை தியாகராய நகரில் உள்ள செ.தெ.நாயகம் தியாகராய நகர் மேல்நிலை பள்ளியில் இலவச சித்த மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. செ.தெ.நாயகம் தியாகராய நகர் மேல்நிலை பள்ளி, குண்டூர் சுப்பையா பிள்ளை பெண்கள் மேல்நிலை பள்ளி, நெல்லை நாயகம் தியாகராயநகர் தொடக்கப்பள்ளியில் பயிலும் சுமார் 1600 மாணவ மாணவிகளும், அவர்கள் பெற்றோர்களும் , உறவினர்களும் பயனடையும் வகையில் இந்த மருத்துவ முகாம் நடைப்பெற்றது. 12 சித்த மருத்துவர்கள் இதில் கலந்து கொண்டனர் மற்றும் சித்த மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.
நிகழ் நாள் : 26.1.2016, செவ்வாய்க்கிழமை
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 3.30 வரை
நிகழிடம் : சென்னை செ.தெ.நாயகம் தியாகராய நகர் மேல்நிலை பள்ளி, 31,வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர் , சென்னை-600017.
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 3.30 வரை
நிகழிடம் : சென்னை செ.தெ.நாயகம் தியாகராய நகர் மேல்நிலை பள்ளி, 31,வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர் , சென்னை-600017.
புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி.
இப்படிக்கு,
தலைவர், உலக சித்த மருத்துவ அறக்கட்டளை, சென்னை,
மருத்துவர். ப. செல்வ சண்முகம்.
No comments:
Post a Comment