பத்திரிகை செய்தி – 05-05-2016
2016 தமிழக சட்டமன்ற தேர்தல்
புதிய சக்தி அணியின் சார்பில் 113 வேட்பாளர்களை அடையாளம் காட்டுகிறோம்.
புதிய அரசியல் கலாச்சாரத்தை முன்வைத்து, ஊழலற்ற ஆட்சி , இலஞ்சமற்ற நிர்வாகம் , மதுவில்லா தமிழகம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாக கொண்டு, சமூக முன்னேற்றத்திற்காக தீவிரமாக செயல்பட்டு வரும் வளர்ச்சி அரசியல் பேசும் சமூக ஆர்வலர்களையும், இளைஞர்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் புதிய சக்தி அணி கடந்த பிப் 23 அன்று உதயமானது.
அதன் தொடர்சியாக தகுதியான வேட்பாளர்களை, 'புதிய சக்தி அணி' இந்த தேர்தலில் இனம் காட்டும் முதல் பகுதியாக புதிய சக்தி அணியின் இந்த முதல் வேட்பாளர் பட்டியல் மார்ச் 17 வெளியிடப்பட்டது. இரண்டாவது வேட்பாளர் பட்டியல், ஏப்ரல் 19 அன்று வெளியிடப்பட்டது.
இந்த சமூகத்தில் புரையோடிப்போயுள்ள லஞ்சம், ஊழல், மது, சாதி ஆகிய பேய்களை விரட்டி, சமூக முன்னேற்றம் ஒன்றையே முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் நேர்மையான இயக்கங்களை / கட்சிகளை ஜனநாயகத்தை மீட்டெடுக்க "புதிய சக்தி அணி" ஒன்றிணைத்து வருகிறது. புதிய சக்தி அணியின் சார்பில் 29 பேர் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். நல்லவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவோம் என்று ஏற்கனவே சொன்னதின் அடிப்படையில் அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம், இளைய பாரதம், விடுதலை தேடும் இந்தியர்கள் கட்சி, வருங்கால இந்தியா கட்சி, காந்திய சமதர்ம கட்சி, மக்கள் நல்வாழ்வு கட்சி, அப்துல்கலாம் இலட்சிய இந்திய கட்சி, பச்சை தமிழகம், காந்திய மக்கள் கட்சி, இளைஞர் கூட்டமைப்பு, இளைஞர் மாணவர் கட்சி உள்ளிட்ட கட்சிகள், இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் போட்டியிடும் 113 வேட்பாளர்களை புதிய சக்தி அணி சார்பில் அடையாளம் காட்டுகிறோம். இவர்களின் தொகுதி, வேட்பாளர்களின் பெயர், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னம் ஆகியவற்றை இத்துடன் இணைத்துள்ளோம்.
உங்களுடைய ஆதரவை தொடர்ந்து இவர்களுக்கு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
புதிய சக்தி அணிக்காக,
ஜெகதீஸ்வரன், ஒருங்கிணைப்பாளர
9791050512 / 8754580270
No comments:
Post a Comment