Wednesday, 10 August 2016

Ulaga Siddhar Marabu Thiruvizha 2016 - Press release 10-08-2016

அன்புடையீர்,

வணக்கம்

இன்றைய நவீன வாழ்வியல் சூழலில்  உருவாகியுள்ள பல்வேறு தீராத உடல் நலக் கோளாறுகள் மக்களை நவீன மருத்துவத்திற்கு  அப்பால் மாற்று மருத்துவ முறைகளை, பாரம்பரிய முறைகளை நோக்கி கவனம் செலுத்த வைத்துள்ளது. இதற்கு ஒரு சான்றுதான் சமீபத்தில் சீன பாரம்பரிய மருத்துவத்திற்கு கிடைத்த நோபல் அங்கீகாரம்.  தமிழ் மக்களுக்கென்று காலம் காலமாக நம் சமூகம் பயன்படுத்திவரும் சித்த மருத்துவம், நம் சித்தர்களால் வாழ்வியல் ஆய்வுகளின் மூலம் பல நூறு ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் பக்க விளைவுகளற்ற மருத்துவ முறையாகும்.  இதை இன்றைய நவீன ஆய்வுகளின் அடிப்படையில் அறிவியல் படுத்தி உலக மக்களுக்கு ஏற்றுக்கொள்ளும் வகையில் அறிவியலின் துணைகொண்டு கொண்டுவர கடந்த ஆண்டு  உருவாக்கப்பட்டதுதான் "உலக சித்த மருத்துவ அறக்கட்டளை". பல்வேறு களப்பணிகளை செய்துவரும் நம் அறக்கட்டளை, இவ்வாண்டு நம் வாழ்வியலில் உள்ள மரபுக் கூறுகளை ஒன்றிணைத்து "உலக சித்தர் மரபுத் திருவிழா 2016" ஒன்றினை வரும் ஆகஸ்ட் 13,14 ஆகிய இரண்டு தேதிகளில் காலை  9:00 மணி முதல் மாலை 9:00 மணி  வரை டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28 யில் பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு பல்வேறு துறைசார்ந்த வல்லுனர்களைகளப்பணியாளர்களை  அழைத்து சித்த மருத்துவ  வளர்ச்சியை, ஆய்வுகளை  அடுத்த கட்டத்திற்கு நகர்த்த திட்டமிட்டுள்ளது. இதற்கு உங்களைப்போன்ற மரபு வாழ்வியலை, பாரம்பரிய முறைகளை ஊக்குவிக்கும் பலரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.  இன்று நகரத்தின் நவீன வாழ்வியலில் அதிக நாட்டம் கொண்டுள்ள மக்களுக்கு கிராமப்புற இயற்கையுடன் இயைந்த  வாழ்வியலில் முக்கியத்துவம் குறித்த புரிதலை,விழிப்புணர்வை ஏற்படுத்தவும்  இதுபோன்ற சந்திப்புகள்,உரையாடல்கள், கண்காட்சிகள், கருத்தரங்கங்கள் நம் மரபு வாழ்வியலை மறுமீட்டெடுப்பு செய்யவும், இளைய தலைமுறை இதன்மேல் கவனம் செலுத்தவும்  உதவும் .. நல்ல விதை இல்லையேல் நல்ல விவசாயம் இல்லை, நல்ல விவசாயம் இல்லையேல் நல்ல உணவு இல்லை, நல்ல உணவு இல்லையேல் நல்ல உடல்நலம் இல்லை .. இறுதியில் மருத்துவத்தில் கொண்டு முடியும் வாழ்வியலை அதன் சங்கிலித்தொடரை இணைக்க இந்தத் திருவிழா ஒருங்கிணைந்த மரபுத் திருவிழாவாக அமையவிருக்கிறது .. இதற்கு மக்களின்மேல் , இரசாயனமற்ற வாழ்வியலின்மேல் அக்கறைகொண்ட உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். இதுகுறித்து எழுதி மக்களுக்கு தெரிவியுங்கள். ..  இது நமக்கும், நம் அடுத்த தலைமுறைக்கும் நாம் செய்யும் முக்கியப்பணி..

இந்த நிகழ்ச்சியில் இடம் பெரும் சில கருத்தாக்கங்கள்:

- சித்த மருத்துவ முகாம் (Siddha Health Camp)
- நூற்றுக்கணக்கான மூலிகைகளைக் கொண்ட மூலிகைக் கண்காட்சி
- மரபு விளையாட்டுகள்
- கட்டிடக்கலை, சிற்பக்கலை
-  வீட்டுத் தோட்டம் பயிற்சி
- 300க்கும் மேற்பட்ட நம் பாரம்பரிய நெல் மற்றும் மரபு விதைகள் கண்காட்சி
-  தமிழ் இசைக்கருவிகள்
- பல்வேறு கல்லூரி மாணவ-மாணவிகள் வழங்கும் மரபுக் கலைநிகழ்ச்சிகள்
- தமிழிசை
- முழுதும் வித்தியாசமான பாரம்பரிய உணவுகள் மூன்று வேளையும் 
- பாரம்பரிய சமையல் பயிற்சிப்பட்டறை
- மரபுக் கால்நடைகள் வரவழைக்கப்பட்டுள்ளது

- மரச்செக்கு எண்ணெய் செய்தல் மற்றும் மண்பாண்டம் செய்து காண்பித்தல்
- கவனகம், பல செயல்களை செய்ய மூலையை எப்படி பழக்குவது, நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள வழிமுறைகள்
- ஓகம் (Yoga)
- வர்மக்ககலை
- இயற்கை விவசாயம்
- பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே மரபு குறித்து நடத்திய போட்டிகளின் முடிவுகள் அறிவித்து பரிசுத்தொகை வழங்குதல்.

என்று எண்ணற்ற மரபு வாழ்வியல் குறித்து அனைத்தும் ஒரே இடத்தில்....

உலக சித்தர் மரபுத் திருவிழாவில் கிடைக்கும் உணவுகள்
:

காலை, மாலை:

உளுந்தங்களி, வெந்தயக்களி, அல் கேசரி, குதிரைவாலி பொங்கல், வாழைப்பூ வடை
கீரை வடை, முடக்கற்றான் தோசை, கம்பு, சோள தோசை, கேழ்வரகு புட்டு, கம்பு, கேழ்வரகு கூழ்,
பச்சை பயறு தோசை, சோள பனியாரம், கருப்பு எள்ளு கொழுக்கட்டை, கோதுமை ரவை உப்புமா, திணை அல்வா

மதியம் சாப்பாடு:

சாப்பாடு
ஆவாரம்பூ சாம்பார்
வேப்பம்பூ ரசம்
பிரண்டை துவையல்
பூண்டு காராமணி குழம்பு
கடலை மிட்டாய்
இஞ்சி மோர்

சிறு சாதம்:

வரகு தயிர்சாதம்
சீரகசம்பா  Veg. பிரியாணி
சாமை கீரை சாதம்
சாமை சாம்பார் சாதம்

மூலிகை உணவகம்:

மூலிகை சூப் வகைகள்
சிறுதானிய இனிப்பு, கார வகைகள்.

-----------

Greetings from World Siddha Trust and  Dr. MGR Janaki College of Arts and Science for Women!

For the past two decades traditional medical systems are growing all over the world. Recently Chinese traditional medical system received Nobel Prize. The growth of traditional medical system is mainly due to cost effectiveness, no side effects and permanent cure for many life style disorders. Our traditional medicine (Siddha) is an ancient medical system of the world and formed by our sage scientist also called siddhar.

World Siddha Trust is a non-profit, non-governmental organization, is formed (Inaugurated on 15-08-2015) to promote our traditional knowledge to all over the world using accepted scientific methodology. We are planned to conduct a World Siddha Festival 2016    (Ulaga Siddhar Marabu Thiruvizha 2016) on 13th and 14th of August ( 9 am to 9 pm) at  Dr. MGR Janaki College of Arts and Science for Women, Chennai. In this festival we include Siddha System, Traditional Food, Traditional agriculture, Traditional Seed, Traditional architecture, Yoga, Varmam, Traditional music, Traditional games & sports, etc. We also planned to conduct competition for School and College students about our Traditional System. In this festival we invited experts from various field related our traditional knowledge to share their knowledge to public. As the part of this event we need your support for spreading this news to our people.   This event is planned exclusively for the physical and mental health improvement of the society.

Highlights of this event:

1. Siddha Health Camp
2. Herbal Exhibition
3. Traditional  Games & Sports
4. Traditional architecture
5. Home gardening
6. Traditional  Organic Seeds
7. Traditional Music
8. Traditional Cultural programmes
9. Tamil Music
10. Traditional Food
11. Memory training workshops 
12. Yoga
13. Varmam
14. Traditional Agriculture
15. Traditional Sculpture
16. Pottery


This unique concept has to reach the benefits society join with us in the mega event.

Attached PDF copy.

தங்கள் உண்மையுள்ள,
மரு. ப.செல்வசண்முகம்
தலைவர், உலக சித்த அறக்கட்டளை, சென்னை,
செயலர், இந்திய நலவாழ்வு நல்லறம், சென்னை,
ஆய்வுப் பேராசிரியர், World Institute of Scientific Exploration

http://www.worldsiddha.org | http://www.facebook.com/worldsiddha

For further details contact press meet coordinator for event:
A.SURESH, 98844 11637






No comments:

Post a Comment