டாஸ்மாக் கடையை மூடக்கோரும் ஒரு கிராம பஞ்சாயத்தின் தீர்மானம்
கிராம தன்னார்வலர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய விண்ணப்பம்
அற வழியில் தொடர்ந்து தன் கிராம நலனுக்காகச் செயலாற்றி வருபவர் திரு.தென்னரசு. திருவாரூர் மாவட்டம் மணக்கால் கிராமம்தான் இவரது ஊர். கடந்த 16.11.2016 தேதி அன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை (பஞ்சாயத்துத் தீர்மானத்தை ஏற்று டாஸ்மாக் கடையை மூட வேண்டும்) தங்கள் கிராம மக்களுக்கான நல் வாய்ப்பாகக் கருதி, ஏற்கெனவே தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை (கடை எண் 9711) அகற்றக்கோரி அவரது மணக்கால் ஊராட்சியில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்துடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு விண்ணப்பத்தை உடனடியாக அனுப்பிவைத்தார். அதன்
நகலும், பஞ்சாயத்தின் தீர்மான நகலும்
இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும்,
மாவட்ட ஆட்சியருக்கு நாம்
அனுப்பவேண்டிய விண்ணப்பப் படிவமும் இணைக்கப்பட்டுள்ளது.
இ
வை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறோம். நன்றி.தங்கள் உண்மையுள்ள
ஒருங்கிணைப்பாளர்
உள்ளாட்சி உங்களாட்சி
9710230036/8144849884
இணைப்பு:
1) மாவட்ட ஆட்சியருக்கு தென்னரசு அனுப்பியுள்ள விண்ணப்பத்தின் நகல்
2) தங்கள் பகுதி டாஸ்மாக் கடையை அகற்றக்கோரும் மணக்கால் ஊராட்சியின் தீர்மானம்
3)
மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பவேண்டிய விண்ணப்பப் படிவம் (உயர்நீதிமன்ற தீர்ப்பின் விவரம், பஞ்சாயத்துக்குள்ள அதிகாரத்தின் விவரம் ஆகியவை விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது)
No comments:
Post a Comment