தினகரனின் தில்லாலங்கடிகள்
பத்திரிகை செய்தி(07-04-2017)
தமிழில் விரிவான அறிக்கை கீழே...
To the Editor,
Today we have released a publication detailing the "HAWALA" "FERA" cases on TTV.DINAKARAN.
Details about why he was delinked from Disproportionate Asset case where he was Accused No:5. Full version of the publication is attached. Photos of the publication release can also be found in attachment..
Here is an specific point from our study:
In 2004- election affidavit, the PAN card number of Dinkaran is: AAMPD5644B
In 2017 - election affidavit, the PAN card number of Dinkaran is: ABKPD2771Q ( both affidavit page is attached)
This raises a question whether he uses different PAN cards for different elections.. why..? Does he try to hide his property or money transaction details..? Satta Panchayat demands that, Income tax department and Election commmision should probe this. If found guilty, case should be filed against TTV.Dinakaran for this double PAN card matter.
Senthil Arumugam,
General Secretary, Satta Panchayat Iyakkam, 87545-80274,87545-80270
தினகரனின் தில்லாலங்கடிகள்
பத்திரிகை செய்தி(07-04-2017)
ஓமந்தூரார், காமராஜர், அண்ணா போன்ற தியாகிகளும், அறிவார்ந்த ஆளுமைகளும் அமர்ந்த முதல்வர் நாற்காலியில் தமிழகத்தின் மிகப்பெரிய பினாமி, மாபியா என்ற "சிறப்புத் தகுதி" மட்டுமே கொண்ட திருமதி.சசிகலா அவர்கள் முன்னிறுத்தப்பட்ட போது இலஞ்ச-ஊழலுக்கு எதிராகப் போராடி வரும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் இதனைக் கடுமையாக எதிர்த்தது. உண்ணாவிரதம், கருத்துக்கணிப்பு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு என ஒரு "பினாமி" முதல்வராவதை எதிர்த்து இயக்கம் பலவகையில் போராடியது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டபோது அவரின் குடும்பத்திலிருந்து டி.டி.வி.தினகரனை துணைப்பொதுச்செயலாளராக்கி தற்போது ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஆர்.கே.நகரில் தினகரன் ஜெயித்தால் நாளையே அவர் முதல்வராக முயற்சிப்பார் என்பது உறுதி.
இந்த சூழலில், அன்னியச்செலவாணி முறைகேட்டில் பல லட்சம் டாலர்கள் முறைகேடு செய்து, அரசை ஏமாற்றி, அரசுத் திட்டங்களில் கொள்ளையடித்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்து, ஹவாலா முறைகேடுகளில் ஈடுபட்டதோடு 22 வருடங்களாக நீதிமன்றத்தில் தன்மீதான வழக்குகளை இழுத்தடித்து வரும் தினகரனின் முழுமையாக மறுபக்கத்தை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் இந்த பிரசுரத்தை வெளியிடுகிறது.
வழக்குகள் வரும்போது தன்னை சிங்கப்பூர் பிரஜை என்று கூறியது, 2004 தேர்தலில் ஒரு பான் கார்டு, 2017 தேர்தலில் ஒரு பான் கார்டு(இணைப்பில் விவரங்கள்) என தேர்தல் ஆணையத்தை, மக்களை ஏமாற்றுவது என தினகரன் செய்த தில்லாலங்கடிகள் ஏராளம்
இப்படிப்பட்டவர் நாளை தமிழக முதல்வரானால் தமிழகமே சூறையாடப்படும்..
தமிழக மக்களே.. சிந்திப்பீர்..
கையேட்டை எழுதிய திரு.சண்முகானந்தம், சட்ட பஞ்சாயத்து இயக்கப் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், தலைவர் சிவ.இளங்கோ, அமைப்புச் செயலாளர் ஜெய்கணேஷ் மற்றும் இயக்கநிர்வாகிகள் மணிவாசகம், விஜயவர்மன் ஆகியோர் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றனர்.
நன்றி,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
87545-80274, 87545-80270
No comments:
Post a Comment