பத்திரிகை செய்தி (26-08-2017)
கல்லா கட்ட உதவாததால் கல்விச் செயலர் மாற்றம் ?? !!
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன்.ஐ.ஏ.எஸ் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதைக் கண்டிக்கிறோம்.... முழு அதிகாரமிக்க செயலாளராக மீண்டும் மாற்ற சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை..
உதயச்சந்திரன் IAS மதுரை ஆட்சியராக இருந்த பொழுது பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்ராமங்கலம் ஆகிய பஞ்சாயத்துகளில் பத்து ஆண்டுகளாக உள்ளூர் கலகம் காரணமாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தலை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். 2011இல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக இருந்த பொழுது ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட வந்த தேர்வாணையத்தின் தலைவருக்கு எதிராக புகார் கொடுத்து பதவி விலக செய்து நேர்மைக்கும் திறமைக்கும் எடுத்துகாட்டாக விளங்கியவர் உதயச்சந்திரன் IAS.
2017 மார்ச்சில் பள்ளிக்கல்வி செயலாளராக பதவி ஏற்ற பின் பல சீர்திருத்தங்களை முன்னெடுத்து, செயல்படாத ஊழல்-பினாமி அரசிலும் பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்று பெயர் வாங்கி கொடுத்த அதிகாரியை, ஊழலுக்கு உடன்படாத காரணத்திற்காக அதிகாரம் இல்லாத செயலாளராக மாற்றியதின் மூலம் இந்த அரசு தன் உண்மையான ஊழல் முகத்தை மீண்டும் ஒரு முறை நிருபித்து காட்டி இருக்கிறது. பத்துவருடங்களுக்கு மேல் மாற்றப்படாமல் இருக்கும் தமிழ்நாடு பாடதிட்டதை மாற்றும் நடவடிக்கை அசுர வேகத்தில் நடைபெற்றுகொண்டு இருக்கிறது. +1 பொது தேர்வு,தேர்வு முறை மாற்றம்,ரேங்க் முறை ஒழிப்பு,புதிய சீருடை என்று அனுதினமும் புதிய சீர்திருத்த அறிவிப்புகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. மாற்றத்தை எதிர்நோக்கி இருந்த கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை இந்த அறிவிப்பு பேரடியாக வந்து தாக்கி இருக்கிறது.
சமீபத்தில் தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் இருந்த பள்ளிகளை தரம் உயர்த்த அரசாணை வெளியிட்டது.இதையடுத்து ஏற்கெனவே காலியாக இருந்த இடங்களையும் சேர்த்து 2950 ஆசிரியர் பணியிடங்களை இடமாறுதல் மூலம் நிரப்பப்பட வேண்டிய சூழல் உருவானது. முதற்கட்டமாக 700-க்கும் கூடுதலான ஆசிரியர்கள் நிர்வாக இடமாறுதல் என்ற பெயரில் இடமாற்றம் செய்யப்பட்டனர். நிர்வாக இடமாறுதல் வழங்கப்பட்ட 700 ஆசிரியர்களிடமும் தலா 5 லட்சம் வீதம் ரூ.35 கோடி கையூட்டு பெறப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஒத்துழைக்காமல் இருந்ததனால் உதயச்சந்திரன் அவர்களுக்கு இந்தபதவி இறக்க பரிசு கிடைத்துள்ளது.உதயச்சந்திரனின் இடமாற்றம் குறித்த சர்ச்சை மாத தொடக்கத்திலேயே வந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உதயச்சந்திரனைப் பாடத்திட்டங்களை முழுமையாக மாற்றி அமைக்கும் வரை பணிமாற்றத்திற்கு தடை விதித்தது. இப்போது அந்த சர்ச்சை ஓரளவுஅடங்கியுள்ள நிலையில், அவரை அதிகாரமற்ற செயலாளராக, கீழிறக்கப்பட்டு பாடத்திட்டங்கள் மாற்றங்களுக்கான குழுவில் மட்டும் செயலாளராக மாற்றி இருக்கிறது தமிழக அரசு. பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவின் கட்டுப்பாட்டில் தான் செயல்பட வேண்டும் என்ற ஆணையின்மூலம் பாடத்திட்ட பணியையாவது உதயச்சந்திரன் முழுமையாக செய்யமுடியுமா என்பதும் கேள்விக்குறியாகிஉள்ளது.
குட்கா ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு ஆணையர் , DGP போன்ற உயர்த்த பதவிகள் பரிசாக கிடைக்கிறது. க்ரானைட், தாது மணல் உள்ளிட்ட ஊழல்களை தோலுருத்திகாட்டிய சகாயத்திற்குகொலை மிரட்டல், பதவி இறக்கம் கொடுக்கப்படுகிறது.இதன் மூலம் ஆட்சியாளர்கள் அரசு ஊழியர்களுக்கு மறை முகமாக கொடுக்கும் எச்சரிக்கை என்னவென்றால் எங்களுடன் சேர்ந்து ஊழலுக்கு துணை நின்றால் பதவி உயர்வும், பணமும், பாதுகாப்பும் பரிசாக கிடைக்கும்.எதிர்த்தால் பதவி இறக்கமும் , கொலை மிரட்டலும் பரிசாக கிடைக்கும் என ஆட்சியாளர்கள் மறைமுகமாக அரசு ஊழியர்களை எச்சரிக்கிறார்கள்.
நீட் போன்ற தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சோபிக்க முடியாத அளவுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறையை சீரழித்து, மாணவர்களின் எதிர்காலத்தை வீணடித்து, மத்திய அரசிடம் விலக்கு கேட்டு கெஞ்சி கொண்டு இருக்கிறது தமிழக அரசு. இந்த அவல நிலையை போக்க வந்த அதிகாரிகளையும் அரசு மதிக்காமல் ஊழல்-லஞ்சம் வாங்குவது தங்களுடைய ஒரேகுறிக்கோள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையை சட்ட பஞ்சாயத்து இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. உதயச்சந்திரன் IAS அவர்களை முழு சுதந்திரம் மற்றும் அதிகாரத்துடன் செயல்பட இந்த அரசு அனுமதிக்க வேண்டும். சகாயம் உதயச்சந்திரன் போன்ற திறமையான நேர்மையான அதிகாரிகளை ஒதுக்கிவைத்துவிட்டு இந்த அரசு சிறப்பாக செயல்பட முடியாது என்பதை இந்த அரசிற்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269
New Memberships : spinewmember@gmail.com
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269
Satta Panchayat Iyakkam,
| 31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)
Member : member.sattapanchayat.org | Donate Online : donate.sattapanchayat.org
Helpline : 7667 100 100 | http://sattapanchayat.org/ | https://www.facebook.com/sattapanchayath
" Aiyarathil Oruvan " : 1001.sattapanchayat.org
Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution
Other Contact:
SPI Accounts Team : spiaccts@gmail.com,New Memberships : spinewmember@gmail.com
Speak about SPI / Billing Issues : 8754580269
No comments:
Post a Comment