Saturday, 30 September 2017

உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் மத்திய அரசு தமிழகத்திற்கு 4000 கோடி தர மறுப்பு!!

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

 

பத்திரிகை செய்தி (30-09-2017)

தொடர்புக்கு : 87545 80270

 

உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் மத்திய அரசு தமிழகத்திற்கு 4000 கோடி தர மறுப்பு!!

 

உள்ளாட்சி தேர்தல் நடத்தாத காரணத்தால் தமிழக  உள்ளாட்சி அமைப்புகளுக்கு தர வேண்டிய 4000 கோடியை மத்திய அரசு தர மறுப்பு. அக்டோபர் 2 அன்று நடைபெற உள்ள கட்டாய கிராம சபையை முறையாக தமிழகம் முழுவதும் நடத்த கோரியும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தவும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை.

 

மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு வருடமும் நிதி அளித்து வருகிறது. 12 மாநகராட்சி, 124 நகராட்சி, 528 பேரூராட்சி மற்றும் 12528 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 4000 கோடி தர வேண்டும் என்று மத்திய அரசிற்கு இவ்வருடம் மத்திய நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் முறையாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாத  காரணத்தால் மத்திய அரசு இத்தொகையை தர மறுக்கின்றது. பலமுறை தில்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து வரும் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இந்த நிதியை பெற எந்த கோரிக்கையும் வைக்காமல் இருப்பது வியப்பளிக்கிறது.

 

கோவைக்கு 60 கோடி, சென்னைக்கு 200 கோடி இழப்பு

இந்நிதியின் மூலம் கோவை மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய 60 கோடி கிடைக்காததினால் 500 துப்பரவு பணியாளர்களுக்கு சம்பளம் தர முடியாமல் தவிக்கின்றது. கடந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு முன் தேர்தலை எதிர்நோக்கி பல இடங்களில் அளவிற்கு மீறி பணம் செலவழிக்கப்பட்டதால் தற்பொழுது ஊழியர்களின் சம்பளத்திற்கே திண்டாட வேண்டியுள்ள நிலை நிலவுகிறது. அதிகபட்சமாக சென்னை மாநகராட்சிக்கு 200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர மத்திய தணிக்கை குழு சமீபத்தில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், சென்னை மாநகராட்சி - சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்க குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்கபடாத காரணத்தால் 2000 கோடி (17 வருடங்களுக்கு) வரை சென்னை மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது. தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்புகளில்  இல்லாததினாலும், தங்கள் பதவிகளை காப்பாற்றி கொள்வது மட்டுமே தங்களுடைய தலையாய பணி என்றிருக்கும் மாநில அரசிற்கும் இப்பிரச்சனைகளை பற்றியெல்லாம் கவலை இருப்பது போல் தெரியவில்லை.

 

 

டெங்கு உயிரிழப்பு  

 

அதிகார பகிர்வின் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் 29 துறைகளை கவனித்துக்கொள்ள இந்திய அரசியல் சாசனம் (Article 243G) அனுமதி அளித்திருக்கிறது. சுகாதாரத்தை பேணி காப்பது உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியமான பணி. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல்  பரவி வரும் இந்த வேளையில் உள்ளாட்சி அமைப்புகள் குப்பை அள்ளுவதற்கும் சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு கூட பணம் இல்லாமல் தவித்து வருகிறது. தேர்தல் நடந்து உள்ளாட்சி பொறுப்பாளர்கள் இருந்திருந்தால் அடுத்த தேர்தலுக்கு அஞ்சி ஓரளவிற்காவது நடவடிக்கை எடுத்திருப்பார்கள். தற்போது நியமிக்கபப்பட்டுள்ள சிறப்பு அலுவலர்களுக்கு  கிராம மக்களோடு எந்த பிணைப்பும் இல்லாததால் எவ்வித துரித நடவடிக்கை எடுக்காமல் 30க்கும் அதிகமான உயிர்களை டெங்குவிற்கு பலி கொடுத்துருக்கிறது தமிழகம்.

 

உள்ளாட்சி தேர்தலை சந்தித்தால் பின்னடைவு ஏற்படும் என்பதால் தேர்தலை நடத்த விடாமல் கடந்த வருடம் வழக்கு தொடர்ந்து திமுக  முட்டுக்கட்டை போட்டது. தற்பொழுது அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி பிரச்சனைகளால் தேர்தலை சந்திக்க பயந்து பலமுறை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தேர்தலை நடத்த ஒத்துழைக்காமல் அரசு செயல்பட்டு வருகிறது. அம்மாவும் இல்லாமல் இரட்டை இலை சின்னமும் இல்லாமல் தேர்தலை சந்தித்தால்  கடும் வாக்கு சரிவை சந்திக்க நேரிடும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த விருப்பம் இல்லாமல் இருக்கிறது அதிமுக அரசு. இரட்டை இலை சின்னம் வரும் வரை தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்பது தான் வருத்தத்துக்குரிய நிதர்சமான உண்மை. இரண்டு திராவிட கட்சிகளின் சுயநல அரசியலினால் பாதிக்கப்படுவது மக்கள் தான் என்பதை அறியாமல் செயற்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

 

2005இல் குஜராத் மாநில பஞ்சாயத்து அமைப்புகள் vs குஜராத் மாநில தேர்தல் ஆணையத்திற்கு நடந்த வழக்கில், தேர்தலை எக்காரணத்திற்காகவும் (delimitation பிரச்னை உட்பட) தள்ளிவைக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 73வது அரசியல் சாசன திருத்தத்தின் படி கட்டாயமாக 5 வருடத்திற்கு ஒரு முறை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். சட்டத்திற்கும் கட்டுப்படாமல், மக்கள் பிரச்னைகளில் அக்கறை இல்லாமல், உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு அஞ்சாமல் இருக்கும் மாநில அரசை சட்ட பஞ்சாயத்து இயக்கம் கண்டிக்கிறது 

  

வருடத்திற்கு 4 முறை கட்டாயமாக கிராம சபை கூட வேண்டும். தமிழகத்தில் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கட்டாய கிராம சபைகள் நடைபெற்று வருகிறது. இந்திய ஜனநாயகத்தை அர்த்தமுள்ளதாகவும், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் (Representative democracy) இருந்து பங்கேற்பு ஜனநாயகமாக (Participative democracy) மாற்ற கிராம சபைகள் அவசியம். கடைக்கோடி மக்களை அதிகாரப்படுத்துதல் கிராம சபையின் முக்கியமான சிறப்பு.

 

ஆனால் பெரும்பான்மையான கிராம சபைகள் பெயரளவிற்கே நடைபெறுகிறது. தேர்தல் நடத்தப்படாமல் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதால் கிராம சபைகள் முறையாக நடைபெறுவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தீர்மானம் எழுதப்படாமல் கையெழுத்து வாங்குவது, முன்னதாகவே (Template தீர்மானங்கள்) தீர்மானங்களை எழுதி கையெழுத்து மட்டும் வாங்குவது, கோரம் (Quorum) இல்லை என்றாலும் அதாவது போதுமான மக்கள் கலந்து கொள்ள விட்டாலும்   பொய் கையெழுத்து போட்டு கிராம சபைகளை முடிப்பது, தீர்மான நகல்களை வழங்காமல் இழுத்தடிப்பது என்று ஏகப்பட்ட புகார்களை பல கிராம சபைகளில் இருந்து சட்ட பஞ்சாயத்து இயக்கத்திற்கு வருகிறது. இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளாட்சி அமைப்புகள் சம்மந்தப்பட்ட வரவு-செலவு கணக்குகள் மற்றும் தகவல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்.

 

சட்ட பஞ்சாயத்து இயக்கம் கிராம சபைகளை வலிமைப்படுத்துவதற்காக பயிற்சி பட்டறைகள், கருத்தரங்கம், மாதிரி கிராம சபை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. முறையாக கிராம சபைகளை நடத்த இயக்கம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 2 கிராம சபை நடத்தப்பட வேண்டும் என்று இயக்கத்தின் சார்பாக ஈரோடு,நெல்லை,சேலம் ஆட்சியர்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கிராம சபைகளை சரியாக நடத்த அனைத்து ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடவும், கிராம சபைகளை விதிகளுக்குட்பட்டு நடத்தாத அரசு அதிகாரிகள் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கவும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தவும் தமிழக அரசிற்கு  சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை வைக்கிறது.

 

இரட்டை இலை சின்ன விவகாரத்தால் தமிழக மக்களுக்கு 3ஆம் அரசாங்கம் (3rd tier government) இல்லாமல் இருக்கிறது. இரட்டை இலை சின்ன விவகாரத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு, இரட்டை இலை வழக்கின் மேல் மத்திய தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

தமிழக நிதி நிலைமை மிக மோசமாக இருக்கும் வேளையில் (4 லட்சம் கோடி கடனில் தமிழகம் இருக்கிறது), இந்த 4000 கோடி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மிக அவசியம். தகுந்த அழுத்தம் கொடுத்து மத்திய அரசிடம் இருந்து இந்த தொகையை பெற வேண்டும். செய்யுமா தமிழக அரசு?

 

 

சிவ இளங்கோ, தலைவர்

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

தொடர்பு  : 87545 80270

நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


​Satta Panchayat Iyakkam

 31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Member : member.sattapanchayat.org |  Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

" Aiyarathil Oruvan " : 1001.sattapanchayat.org

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

Friday, 22 September 2017

Conference on JACTO-GEO protest, Sunday 24th Sep,4pm, T.Nagar..

Conference on JACTO-GEO protest, Sunday 24th Sep,4pm, T.Nagar..

JACTO GEO executives and Satta panchayat Iyakkam executives participates..  Sep24, Sunday, 4pm, Ramakrishna Mission School, Burkit Road, Near T.nagar Bus stand, contact: 87545-80270 


சட்ட பஞ்சாயத்து இயக்கத்திற்கு அரசு ஊழியர்கள் மீது அப்படி என்ன கோபம்? ஏன் #JactoGeo போராட்டங்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்க வேண்டும்? இப்படி பல கேள்விகளுடனும் தங்கள் தரப்பு நியாயங்களுடனும் சங்க உறுப்பினர்கள் நம்முடன் ஒரு ஆரோக்கியமான விவாதம் செய்ய வருகிறார்கள்.

வருகிற ஞாயிறு 24 அன்று சென்னை திநகரில் ராமகிருஷ்ணா பள்ளியில் இந்த நிகழ்வு மாலை 4 முதல் 7 மணி வரை நடைபெற இருக்கிறது. கலந்துகொள்ள அனைவரையும் அழைக்கிறோம்



நிகழ்ச்சி நடைபெறும் இடம்: https://goo.gl/maps/eXipgtPMfby
ராமகிருஷ்ண மிஷன் பள்ளி, பர்கிட் சாலை, தி நகர்.
செப் 24, மாலை 4 -7.
8754580270



அரசு அலுவலங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் அனைத்து பணிகளையும் செய்திருந்தால் சட்ட பஞ்சாயத்து இயக்கம் துவங்கியே இருக்காது. அரசு அலுவலங்களில் பாமர மக்கள் படும் அவஸ்த்தை தான் 7667100100 என்ற அரசு அலுவலங்களில் லஞ்சம் கொடுக்காமல் எவ்வாறு சேவைகளை பெறலாம் என்ற ஆலோசனை எண் துவங்க காரணம்.

இப்பொழுதும் கூட ஊழல் அரசியல்வாதிகளின் தவறுகளுக்கு நாங்கள் துணை போகமாட்டோம் என்றும், ஊழல் செய்யும் அரசு ஊழியர்களுக்கு தண்டனை வாங்கித்தருவோம் என்றும் #JactoGeo தீர்மானம் நிறைவேற்றினால் அவர்களுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் முழு பக்கபலமாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இது போன்ற பல கேள்விகள் நம்மிடம் உள்ளது. பதில்களுடனும் தங்கள் தரப்பு பிரச்சனைகள் குறித்தும் நமக்கு புரிய வைக்க சங்க நிர்வாகிகள் வருகிறார்கள். ஆரோக்கியமான முறையில் நடைபெற இருக்கும் இந்த விவாத நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

நிகழ்ச்சி நடைபெறும் இடம்: https://goo.gl/maps/eXipgtPMfby
ராமகிருஷ்ண மிஷன் பள்ளி, பர்கிட் சாலை, தி நகர்.
செப் 24, மாலை 4 -7.


Sunday, 17 September 2017

Women Empowerment in 5 Slums of Chennai by the Art of Living


Dear Editor,

The Art of Living celebrated one year of Skill development programs in Chennai! Started in July 2016 as an initiative to reach out to those displaced by the Floods of 2015, it has reached out to more than 600 families from 5 slums of Chennai. 

All details in the English/Tamil press release. Do carry in your publication. I have attached a few pictures taken during the workshops.


Warm regards,

Rajalakshmi

9884017767




Saturday, 16 September 2017

Press Release- Can seed innovation save the marginal farmer?


Dear Editor,


The Art of Living, Max Planck Institute and Leeds University along with 23 farmers from 7 states, policy makers, government officials, researchers came together to discuss frameworks to promote sustainable seed innovation using traditional technologies, in the presence of The Art of Living founder, Gurudev Sri Sri Ravi Shankar.


The Round Table marked the conclusion of a research project of the participating organisations. Mr. Sanjay Khattal, Director of National Seeds Corporation who participated in the Round Table said that the Government will explore possibilities ​to support the promotion of indigenous seed innovation.


It was inaugurated by Gurudev Sri Sri Ravi Shankar. Delivering the keynote address he said, "Preservation of diversity in seeds is as essential as preservation of diversity in flora and fauna. Indigenous seeds are world heritage. The extinction of even one variety can have great repercussions in this inter-connected world."


Dr. Mrinalini Kochupillai, Senior Research Fellow at the Max Planck Institute for Innovation and Competition, Dr. Natalie Kopytko and Dr. Gregory Radick from Leeds University, Pitambar Shrestha, Regional Coordinator of LI-BIRD, Nepal, Kishore Kumar Sharma from Assam Agricultural University and Padmashri Dr. Suman Sahai, chairperson of the Gene Campaign participated in the Round Table.


For pictures, please see: https://drive.google.com/open?id=0B5ALBm1bThijRFJQOFZQalVRZjg


For a more detailed press release, please see below:

-------------------------------------------------------------------------------------------------------------------


Can seed innovation save the marginal Indian farmer?

Farmers, civil society, researchers and government officials draft directive principles for sustainable seed innovation at Round Table


Bengaluru, 15 September 2017: The Art of Living collaborated with Max Planck Institute of Innovation and Competition and Leeds University for a research project on ways to promote sustainable innovation on indigenous seeds among Indian farmers. This was mission critical and path breaking for one very important reason. 90% of the farmers in India are marginal who own less than 2 hectares of land. They end up in a vicious cycle of debt, having to purchase expensive seeds and fertilizers from an external source.

 

Delivering the keynote address at The Sustainable Seed Innovation Round Table facilitated by The Art of Living at its headquarters on Friday, its founder Gurudev Sri Sri Ravi Shankar said, "Preservation of diversity in seeds is essential. The extinction of even one variety can have great repercussions in this inter-connected world."

 

Padmashri Dr. Suman Sahai, Chairperson of The Gene Campaign said that innovation does not just happen in a laboratory, but also in the farm, as the farmer has an understanding of the crop that goes beyond its physical properties.

 

Framework developed to promote seed innovation in order to fight climate change, water crisis 


It was contended that research on agricultural techniques has primarily been conducted on large landholdings in water rich regions. This has failed to produce the same results on marginal landholdings in rain-fed regions.  Natural farming techniques that use less water, enrich the soil with nutrients, cost less than chemical farming and are based on preservation of the indigenous seed benefit marginal farmers. This was further corroborated by a 11-month research project by The Art of Living, Max Planck and Leeds University.

 

"Given the huge agri-biodiversity of India, if the marginal farmer can be promoted to the status of an innovator, then India can export seeds as a technology to the whole world," remarked Mrinalini Kochupillai, Senior Research Fellow from the Max Planck Institute of Innovation and Competition, at the Round Table.

 

​​

​​
Mr. Sanjay
​Khattal
, Director of National Seeds Corporation who participated in the Round Table said that the Government will
​ explore possibilities ​to support the promotion of indigenous seed innovation. 

 

Dr. Natalie Kopytko and Dr. Gregory Radick from Leeds University, Dr. Prabhakar Rao, Trustee of Sri Sri Institute of Agricultural Sciences and Technology, Sanjay Maruti Patil, from BAIF Institute for Sustainable Livelihood and Development and Kishore Kumar Sharma, Professor at Assam Agricultural University amongst others participated in the Round Table.

 

Yash Mishra, a farmer from Chattisgarh speaking about the importance of seed conservation said that native seeds have more nutrition, taste and variety and can withstand erratic climate and this will help poor and marginal farmers as was his experience. Other farmers echoed his sentiment.

 

The Art of Living has been working to create an ecosystem of healthy and sustainable farming for the last 37 years and has trained 22,00,000 farmers across the country in natural farming techniques.  Seed banks have been set up to preserve indigenous varieties of seeds and the organization is now taking the next step of promoting sustainable innovation on these seeds. 






--
Warm Regards,
Sujeet Kumar Singh
Art of Living Bureau of Communication
The Art of Living International Center
Udayapura, Kanakapura Road, Bangalore
Ph - 8147616875



Friday, 15 September 2017

Women Empowerment and Skill Development in Slums of Chennai

Dear Editor,

The Art of Living celebrates 1 year of Skill development programs in Chennai!


Started in July 2016 as an initiative to reach out to those displaced by the Floods of 2015, it has reached out to more than 600 families from 5 slums of Chennai. Women have been given training in tailoring and a machine is given at the end of the 3 month training period, for them start earning and supplementing the household income. In one of the slums, a small manufacturing facility has been set up and the women are taking orders for school uniforms and manage the sustainability if the Unit, by themselves.

Date: Sept 16th (Saturday) @ 2.00 pm 

Join us as we celebrate their journey towards self-reliance where we hand over another batch of trainees with certificates and tailoring machines. 

Venue:
Golden Paradise Thirumana Koodam
Sathya Gardens, 10, 80 Feet Road, Saligram, Sathya Garden, KK Nagar, Chennai, Tamil Nadu 600093
044 2364 1806

Google location link: https://goo.gl/maps/B83JgVFLyKQ2

Do send your team to cover the program and interview the trainees.
For more information, contact Mr. Harish at 90080 32764

Warm regards,

Rajalakshmi
9884017767

Friday, 8 September 2017

Post-event Press Release - We Will Not Stop till the Last Gun is Laid Down: Gurudev Sri Sri Ravi Shankar


Dear Editor,

World renowned humanitarian and the founder of The Art of Living Gurudev Sri Sri Ravi Shankar was the keynote speaker at 'Strength in Diversity - North East Indigenous People's Conference' - a unique program that was held on 7th September, 2017 in Guwahati by the opinion-makers and thought-leaders of the region. 

Speaking at the conference, he said, "This is a new beginning for the North East. For the very first time, there is a reconnect of the people of this region, which is so diverse."  He expressed happiness that diverse groups have come together on a common platform to discuss the issues facing the region.

The conference saw the participation of leaders from all walks of life, including leaders who have formerly taken up arms. Several former underground leaders led by General Secretary of United Liberation Front of Assam (ULFA) Anup Chetia are among the conveners of the event. 

Anup Chetia, along with the other prominent leaders at the conference acknowledged and appreciated Gurudev's interest and commitment to the region and resolved to continue to work together to bring peace and prosperity in the region. R S Mooshahary, former Governor of Meghalaya was present too and hailed Gurudev as a peace ambassador.

See attached file for tamil translation

--
Warm Regards,
Rajalakshmi
Art of Living Bureau of Communication
Chennai
Mobile; 9884017767




Thursday, 7 September 2017

Post-event Press Release - We Will Not Stop till the Last Gun is Laid Down: Gurudev Sri Sri Ravi Shankar


Dear Editor,

World renowned humanitarian and the founder of The Art of Living Gurudev Sri Sri Ravi Shankar was the keynote speaker at 'Strength in Diversity - North East Indigenous People's Conference' - a unique program that was held on 7th September, 2017 in Guwahati by the opinion-makers and thought-leaders of the region. 

Speaking at the conference, he said, "This is a new beginning for the North East. For the very first time, there is a reconnect of the people of this region, which is so diverse."  He expressed happiness that diverse groups have come together on a common platform to discuss the issues facing the region.

The conference saw the participation of leaders from all walks of life, including leaders who have formerly taken up arms. Several former underground leaders led by General Secretary of United Liberation Front of Assam (ULFA) Anup Chetia are among the conveners of the event. 

Anup Chetia, along with the other prominent leaders at the conference acknowledged and appreciated Gurudev's interest and commitment to the region and resolved to continue to work together to bring peace and prosperity in the region. R S Mooshahary, former Governor of Meghalaya was present too and hailed Gurudev as a peace ambassador.

For more details and translations (all of which will come latest by 5.30 pm), please check the link -  https://drive.google.com/open?id=0B5ALBm1bThijb2JfYzBPY2UwVEk


--
Warm Regards,
Rajalakshmi
Art of Living Bureau of Communication
Chennai
Mobile; 9884017767



அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும்.


                                               பத்திரிகை செய்தி (06-09-5017)

 

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும்

                            

சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை

 

அனைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை உள்ளடக்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், 3 அம்ச கோரிக்கையை முன்னிறுத்தி பல கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 7வது ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துதல் (சம்பள உயர்வு கேட்டு), புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல் போன்ற கோரிக்கைகளுக்காக 07-09-2017 ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள்.

 

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் முதல் கோரிக்கையாகும். தமிழ்நாடு  தற்போது 4 லட்சம் கோடி கடனில் தத்தளித்து கொண்டு இருக்கும் வேளையில் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கை நியாயமற்றது. அரசு ஊழியர்கள் தமிழ்நாட்டில் 12 லட்சம் பேர். 8 கோடி மக்கள் இருக்கிற தமிழ்நாட்டில் 1 சதவிகிதத்துக்கும் கீழ் இருக்கிற அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் 41% (ஊதியம் - 47000 கோடி, பென்ஷன் - 21000 கோடி)  செலவிடப்படுகிறது. . 2020ல் பெற வேண்டிய ஊதிய உயர்வை 2010லேயே  தமிழக அரசு ஊழியர்கள் பெற்று விட்டனர். எனவே அரசு ஊழியர்களின்  சம்பளத்தை குறைக்க வேண்டுமென சட்ட பஞ்சாயத்து இயக்கம் அரசை வேண்டுகிறது.

 

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது அரசு உழியர்களின் இரண்டாவது முக்கிய கோரிக்கையாகும். புதிய பென்ஷன் திட்டத்தில் பல குளறுபடிகள் செய்து ஊழியர்களுக்கு சரியாக பென்ஷன் தராமல் இருப்பதால் புதிய பென்ஷன் திட்டம் மேல் ஒரு பயம் ஏற்பட்டு இருக்கிறது. இதை தமிழக அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும். தெரிந்தே புதிய பென்சன் திட்டப்படி வேலையில் சேர்ந்துவிட்டு தற்போது பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோருவது நியாயமா? புதிய பென்சன் திட்டத்தின் குளறுபடிகளை  போர்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டுமென அரசை சட்ட பஞ்சாயத்து இயக்கம் வேண்டுகிறது.

 

அதிக சம்பளம் கேட்கும் அரசு ஊழியர்களுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறது

 

1.       லஞ்ச- ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை யூனியன்களில் இருந்து நீக்குவோம்,  அரசு அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற ஒரு அம்ச கோரிக்கையுடன் போராட தயாரா?

 

  1. சம்பளம் சரி.. 'கிம்பளம்' என்ற ஒரு வார்த்தையை உருவாக்கிய அரசு ஊழியர்களே.. என்றாவது ஊதிய உயர்வு அற்ற போராட்டத்தில் மக்கள் நலனுக்காக மட்டும் இறங்கி போராடி உள்ளீர்களா?

 

  1. ஊழலில் வளரும் நாடான இந்தியாவிற்கு உற்ற தோழனாக நிற்கும் அரசு ஊழியர்களே - ஆசிரியர்களே உங்கள் அலுவலகத்தில் உள்ள ஊழல் பெருச்சாளிகளை வெளி கொண்டுவர நீங்கள் தயாரா?

 

  1. வருடந்தோரும் உங்கள் சொத்து விவரங்களை வெளியிட நீங்கள் தயாரா?

 

  1. ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கியிருந்தால் கூட என்னைத்தூக்கிலிடுங்கள் என கூறிய அரசு அதிகாரி சகாயம் அவர்கள் உள்ள அதே தமிழகத்தில் தான் பாக்கெட்டில் இருக்கும் பத்து ரூபாயையும் லஞ்சமாக பிடுங்கி தன்மானத்தை இழந்து பிச்சை எடுப்போரை யூனியன் என்ற பெயரில் அவர்களை காப்பாற்றுவதை நிறுத்துவீர்களா?

 

  1. அரசு செய்வது தொழிலல்ல, சேவை! என்றாவது சேவை மனப்பான்மையுடன் அலுவலகம் சென்று வந்திருக்கிறீர்களா? மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் நீங்கள் அலுவலகம் வரும் மக்களை, மக்களாக நினைத்து உரிய மரியாதையுடன் சேவை கொடுத்திருக்கிறீர்களா?

 

  1. பல நிகழ்வுகளில் நல்லவன் போல அரசியல்வாதிகள் மீது ஊழல் முத்திரை குத்தும் நல்லவர்களே.. உங்கள் உறுதுணை இல்லாமல் ₹1 பைசா ஊழல் கூட நடக்க முடியாது.  தமிழக சீரழிவிற்கு நீங்கள் ஆற்றிய இந்த பெருந்தொண்டை ஒப்புக் கொள்வீர்களா??

 

  1. தமிழ்நாடு +2 அரசு பாடத்திட்டம் 14 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருக்கிறது. பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என்று சமூக அக்கறையோடு சுயநலமில்லாமல் மக்களுக்காக என்றைக்காவது போராடி இருக்கீறிர்களா?
  2. மக்களுக்கு தடையின்றி வழங்கப்பட கூடிய அரசு சேவைகளின் மக்கள் சாசனம்  (Citizen Charter) தத்தம் அலுவலகத்தில் மக்களின் பார்வைக்காக வைப்பீர்களா?

 

 

மூன்று மாதங்கள் முன்பே ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்து அடையாள வேலைநிறுத்தம், போராட்டங்கள் மட்டுமே தங்களுடைய ஒரே வேலை என்பது போல் செயல்பட்டு அரசுக்கு கெடு  விடுத்து கொண்டு இருக்கும் அரசு ஊழியர்களை  இந்த அரசு வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பது வியப்பளிக்கிறது. இந்த அரசிற்கு வேடிக்கை பார்ப்பது மற்றும் குண்டர் சட்டத்தை உபயோகிப்பதை தவிர எதுவும் தெரியாதா?

 

சாமானிய மக்களால் அரசு அலுவலுங்களில் சாதாரண சேவையை கூட இடைத் தரகர்கள்,லஞ்சம் இல்லாமல் பெற முடியவில்லை. கரை வேட்டிகளுக்கு ஒரு மரியாதை சாமானிய மக்களுக்கு ஒரு மரியாதை, யாரும் ஏதும் செய்து விட முடியாது என்ற அகந்தையுடன் செயல்படும் அதிகாரிகளுக்கு எதற்கு சம்பள உயர்வு என்று மக்கள் கேட்பதில் எந்த  தவறும் இல்லை. மக்கள் ஊழியர்கள் என்பதை மறந்து மமதையுடன் செயல்படும் அரசு ஊழியர்களின் இந்த போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்

 

கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் அதிக போராட்டம் நடந்த மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை அதிமுக அரசு நமக்கு பெற்றுத்தந்துள்ளது.போராட்டங்களை எப்படி அணுக வேண்டும் என்று தெரியாமல் ஊழல்-பினாமி-அதிமுகஅரசு தத்தளித்து திக்குமுக்காடி வருகிறது. ஜல்லிக்கட்டு, அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் என்று இந்த வருடத்தில் தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்த பல போராட்டங்கள் நடந்த போதும் இந்த அரசு "அணிகள் பேச்சுவார்த்தையில்" மட்டுமே கவனமாக இருந்தது. இந்த நிலையில், செப்டம்பர் மாதமும் நீட்-அனிதா போராட்டங்கள், வழக்கறிஞர்கள் ஸ்ட்ரைக், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் என்று "அமோகமாக" துவங்கி உள்ளது.

 

அரசாங்கம் வேலை கொடுக்கும் அட்சய பாத்திரமும் அல்ல, மக்கள் வரிப்பணம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் சம்பளத்திற்காக  மட்டும் அல்ல.

 

முதலில் விரைவான வெளிப்படையான இலஞ்ச ஊழலற்ற அரசு நிர்வாகத்தை மக்களுக்கு கொடுக்க அரசு ஊழியர்கள் ஆசிரியர்களே முன் வாருங்கள். உங்கள் கோரிக்கைக்கு மக்கள் தானகவே ஆதரவளிக்க முன் வருவார்கள்.

                                                                                                                               சிவ இளங்கோ,                                                                                                   தலைவர்

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

87545-80270

 

 

நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


​Satta Panchayat Iyakkam

 31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Member : member.sattapanchayat.org |  Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

" Aiyarathil Oruvan " : 1001.sattapanchayat.org

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269