ஊடக வெளியீடு (23-நவ-17)
அம்மனிடம் முறையிடும் போராட்டம்
வணக்கம்,
கூவம் ஓரம் பாடிக்குப்பம் பகுதியில் வாழும் 300 குடும்பங்களுக்கு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான 'அத்திப்பட்டில்' மாற்று வீடுகள் வேண்டி நாம் மனு வழங்கியிருந்ததையும், அந்த மனு மீது எந்த துறையும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளாதது குறித்தும் ஏற்கனவே தெரிவித்து இருந்தோம்.
மீண்டும் அரசு அதிகாரிகளோ, அரசாங்கமோ எங்கள் கோரிக்கையை செவியில் வாங்கிக்கொள்ள தயாராக இல்லை. அரசங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில் இன்று பாடிகுப்பம் பகுதியில் அமைந்திருக்கும் 'அங்காள பரமேஸ்வரி அம்மனிடம்' இது குறித்து முறையிட முடிவு செய்துள்ளோம்.
அம்மனிடம் முறையிடும்
இடம் - அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம், பாடிகுப்பம்
நாள் - இன்று நவ 23
நேரம் - மாலை 6.30 மணி
தொடர்பு - ஜெகதீஸ்வரன், 9791050512
அது குறித்து செய்தி சேகரிக்கவும், மக்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற உதவுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
- ஜெகதீஸ்வரன்,
சமூக செயற்பாட்டாளர்
9791050512
2017-11-21 10:04 GMT+05:30 Jagadheeswaran D <djagadhees@gmail.com>:
ஊடக வெளியீடு (21-நவ-17)
கூவம் ஓரம் வாழும் பாடிக்குப்பம் மக்களுக்கு மாற்று வீடுகளுக்கான இன்று முதல் கோரிக்கை போராட்டங்கள்
கூவம் ஓரம் வாழும் மக்கள் தொடர்ந்து அப்புறப்படுத்தப்பட்டு, அவர்கள் வேறு இடங்களில் குடியமர்த்தபடுவது குறித்து தாங்கள் அறிந்திருப்பீர்கள். பாடிக்குப்பம் பகுதி கோயம்பேடு சந்தைக்கு அருகில் இருக்கும் பகுதி (வார்டு - 93). இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலனவர்கள் கோயம்பேடு சந்தையில் அதிகாலை 3 மணி முதல் வேலை செய்பவர்கள். இன்னும் சிலர் அருகில் இருக்கும் வீடுகளில் பணியாளாக வேலை செய்பவர்கள். எடுக்கப்படும் வீடுகளில் வசிக்கும் பலர் இதே இடத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களுடைய வாழ்வாதாரம் இந்த பகுதியை நம்பியே இருந்து வருகிறது. இந்த இடத்தை விட்டுப்போவது அவர்களுக்கு உயிர் வலி. என்னுடைய அப்துல் கலாம் அறிவகம் - அங்கு வசிப்பவர்களுக்கான நூலகமாகவும், மாணவ மாணவிகளுக்கான டியூசன் மையமாகவும் செயல்பட்டு வருகிறது.கூவம் சீரமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் எங்கள் வாழ்வாதாரத்தை அழித்து அது நடத்தப்பட வேண்டுமா என்பதே எங்கள் கேள்வி. எங்களுக்கான மாற்று வீடுகள் பெரும்பாக்கம் பகுதியில் வழங்கப்படும் என தெரிந்துகொண்ட பின்னர் எங்கள் தேடலின் மூலம் பாடிகுப்பம் பகுதிக்கு ஓரளவு அருகில் இருக்கும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான 'அத்திப்பட்டில்' 1400 வீடுகள் கட்டப்பட்டிருப்பது தெரிந்துகொண்டோம். உடனடியாக 31.07.2017 அன்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு மனு அளித்தோம். அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால், மீண்டும் 05.10.2017 அன்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கும், 10.10.2017 அன்று துணை முதல்வர், தலைமை செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர், பொதுப்பணி துறை செயலாளர் மற்றும் சென்னை பெருநகராட்சி ஆணையரை சந்தித்து பாதிக்கப்பட்ட பொதுமக்களின் கையொப்பங்களுடன் இணைத்து மனு வழங்கினோம். அனைவரும் எங்களுக்கு உதவி செய்வதாக தெரிவித்தனர்.இந்த நிலையில் நாளை முதல் வீடுகளை இடிப்பது துவங்கும் என்று எங்களுக்கு நேற்று (20.11.2017) தெரிவிக்கப்பட்டது. எங்கள் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் சந்தித்த அதிகாரிகள் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான அத்திப்பட்டை எங்களுக்கு ஒதுக்குவதில் சிக்கல்கள் இல்லை என்றே தெரிவித்தனர். ஆனால் நாளை முதல் வீடுகள் இடிக்கப்படும் என்பது பேரதிர்ச்சியாக உள்ளது.எங்களுடைய மனுவிற்கான பதில் வராத காரணத்தால் எங்களால் மாற்று இடங்களுக்கு செல்ல முடியாது. இதற்கான போராட்டங்கள் இன்று முதல் துவங்கும். அது குறித்து செய்தி சேகரிக்கவும், மக்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற உதவுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.இணைப்பு : கோரிக்கை மனுக்கள்- ஜெகதீஸ்வரன்,சமூக செயற்பாட்டாளர்9791050512
No comments:
Post a Comment