பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு
உள்ளாட்சிக்கான
மக்கள் தேர்தல் அறிக்கை வெளியீடு
இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்
நாள் & நேரம்: 07.12.2019 / நன்பகல் 12:00
தொடர்புக்கு: நந்தகுமார் 90032 32058 / 7200297276
பொதுவாக சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களின் போது அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கம். தேர்தல் வாக்குறுதிகள் பல முன்வைக்கப்படும்.
உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், உள்ளாட்சி தொடர்பான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கும் , கட்சிகளின் பார்வைக்கும் கொண்டுவரும் முயற்சியே, இந்த உள்ளாட்சிக்கான மக்கள் தேர்தல் அறிக்கை. தொடர்ந்து பல ஆண்டுகளாக உள்ளாட்சி சார்ந்து களப்பணியாற்றிவரும் அமைப்புகள், மக்களின் கருத்துக்களைத் தொகுத்து உள்ளாட்சிக்கான இந்த தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளன.
கிராமசபைகளை எவ்வாறெல்லாம் வலுப்படுத்தவேண்டும், உள்ளாட்சிகளுக்குக் கூடுதலாக வழங்க வேண்டிய பொறுப்புகள் என்னென்ன, நகர உள்ளாட்சிகளின் தற்போதைய நெருக்கடி நிலையை மாற்றத் தேவைப்படும் சட்டத்திருத்தங்கள், மகளிர் மற்றும் பட்டியல் இனத்தவர் உள்ளாட்சி நிர்வாகத்தில் எதிர்கொள்ளும் திட்டமிட்ட இடையூறுகளைக் களைய அரசு என்ன செய்யவேண்டும், ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் நியாமான கோரிக்கைகள் என அரசும், பிரதான கட்சிகளும் கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
ஊடகங்கள் வாயிலாக அனைவரின் கவனத்திற்கும் இவற்றைக் கொண்டுசெல்வதற்காகவே இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு. இதனை தன்னாட்சி, சட்ட பஞ்சாயத்து இயக்கம், தோழன், அறப்போர், இளையதலைமுறை, Voice of People உள்ளிட்ட பல சமூக அமைப்புகள் இணைந்து வெளியிடுகின்றன.
இது தேர்தலோடு நின்றுவிடாமல் தொடர்ந்து உள்ளாட்சி கோரிக்கைகளை வலியுறுத்தும் ஒரு துவக்கமே. மேலும், இது பற்றிய விரிவான தகவல்கள் சந்திப்பில் வெளியிடுகிறோம். இந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு உங்கள் செய்தியாளரை அனுப்பி, உள்ளாட்சியை வலுப்படுத்த உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி!
No comments:
Post a Comment