21-05-2020
சென்னை
அனுப்புனர்:
செந்தில் ஆறுமுகம்.
பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
H42/3, மேற்கு அவென்யூ,
காமராஜ் நகர், திருவான்மியூர்,
சென்னை-600041
Cell: 87545-80274, 87545-80270
பெறுநர்:
1. மக்கள் நல்வாழ்வு (ம) குடும்பநலத்துறை
2. செயலாளர், மக்கள் நல்வாழ்வு (ம) குடும்பநலத்துறை
தலைமைச் செயலகம்,
சென்னை-600009
வணக்கம்,
பொருள்:
மாவட்டவாரியாக கொரானா சோதனை எண்ணிக்கை விவரங்களை வெளியிடக் கோரி..
கொரோனா தொற்று சோதனை செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்ற நிலையை அடைவதற்கு பாடுபட்ட உங்களுக்கும் ஒட்டுமொத்த சுகாதார துறைக்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். கொரோனா சோதனை குறித்தான பல விவரங்கள். தினந்தோறும் தரப்படும் செய்திக்குறிப்பில் வெளியாகின்றன. ஆனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் தினந்தோறும் எவ்வளவு சோதனைகள் செய்யப்பட்டன என்பது குறித்தான விவரம் இச்செய்திக் குறிப்பில் இடம் பெறுவதில்லை என்பதை தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.
அதிக சோதனைகள் செய்யப்படுகிறது என்று சொல்லப்படும் சென்னையில் கூட தினந்தோறும் எவ்வளவு சோதனைகள் செய்யப்பட்டது என்ற விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதில்லை.
கடந்த 3 வாரங்களாக இது குறித்தான கருத்தை ஊடக விவாதங்களில் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்பதை விவாதங்களில் கலந்துகொள்ளும் ஆளுங்கட்சி பிரதிநிதிகள் மூலம் தங்களுக்கு தெரியப் படுத்தப் பட்டிருக்கும் என்று நம்புகிறோம்.
பல ஊடகங்களும் இது குறித்து தங்களிடம் ஏற்கனவே கேள்வி எழுப்பியுள்ளார்கள். இருந்தபோதும் நேற்றுவரை(20/5/20) மாவட்ட வாரியாக சோதனை விவரங்கள் செய்திக்குறிப்பில் இடம்பெறவில்லை. (ஒட்டுமொத்தமாக இதுவரை எத்தனை சோதனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் மட்டும்தான் உள்ளது).
தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 4ன்படி(Voluntary disclosure of information) ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பொதுமக்களுக்கும் தங்கள் மாவட்டத்தில் எத்தனை கரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள உரிமை உள்ளது. தங்கள் துறையால் இவ்விவரங்கள் வெளியிடப்படாததால் மக்களுக்கு அந்த உரிமை மறுக்கப்படுகிறது. தமிழகஅரசானது தானே முன்வந்து தகவல் தர வேண்டும் என்ற கடமையை(section 4) செய்யத் தவறியது ஆகிறது. மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசானது முழுமையான வெளிப்படைத் தன்மையோடு இயங்கவேண்டும் என்ற கருத்தில் தங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்காது என்று நம்புகிறோம்.
இதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் தினந்தோறும் செய்யப்படும் கரோனா சோதனை எண்ணிக்கை விவரங்களை, ஒவ்வொரு நாளும் வெளியாகும் பத்திரிக்கை குறிப்பில் வெளியிட உடனடியாக வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுநலன் கருதி
செந்தில் ஆறுமுகம்
பொதுச்செயலாளர்
சட்ட பஞ்சாயத்து இயக்கம், 8754580274
21-05.2020
நகல் :
1. தமிழக முதலமைச்சர்
2. தலைமைச் செயலாளர்
No comments:
Post a Comment