Tuesday, 7 November 2023

PR : Japan Tamil Professionals --> Meetup with Tamil Govt School Students Nov 7 Event

Dear Sir/Madam, 

We are from Japan Tamil Professionals & Expats Network, inaugurated the Tamil Govt School students who came as part of Education Tourism organized by the Tamil School Education department.

The event is held on 7th November in Tokyo. Honourable TN School Education Minister Thiru. Anbil Mahesh Poyyamozhi has joined the event. 

Attached are the Press Release and photos. Requesting to publish in your media. 

***************************************************************************************************************
பத்திரிகை செய்தி
07/11/2023
தோக்கியோ, சப்பான்

தமிழக பள்ளிக்கல்விதுறையின் முன்னெடுப்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இருந்து பல்வேறு போட்டிகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் 50 பேர் கல்விச் சுற்றுலாவுக்காக சப்பான் வந்தடைந்தனர். நிகழ்விற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வருகை தந்தார். நிகழ்விற்கு முன்னதாக சப்பானில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அமைச்சர் அவர்கள் சென்று பார்வையிட்டார். 

நவம்பர் 7 அன்று அரசுப்பள்ளி மாணவர்கள் சப்பானில் வாழும் தமிழர்களை சந்தித்து உரையாடல் நிகழ்த்தும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு.பிரசன்னா பார்த்தசாரதி அவர்கள் அரசு பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் வரவேற்றார்.

"திரைகடல் ஓடியும்" என்ற தலைப்பில் சப்பானில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி வரும் முன்னாள் அரசு பள்ளி மாணவர்களின் அறிமுக காணொளி ஒளிபரப்பப்பட்டது. அரசு பள்ளியில் படித்து முதல் தலைமுறை பட்டதாரியாக உருவாகி  உலகளவில் திறம்பட பணிபுரியும் தமிழர்கள் தற்போது கல்விச்சுற்றுலாவிற்காக வந்திருக்கும் மாணவர்களிடம் தங்களது பணி அனுபவம், மற்றும் சப்பானிற்கு படிக்க அல்லது வேலைக்காக வருவோர்க்கு தேவையான அடிப்படை விசயங்களை பகிர்ந்து கொண்டனர். சப்பானில் உள்ள கல்வி, வேலை வாய்ப்புகளை பற்றி திரு.பிரசன்னா பார்த்தசாரதி, திரு. கணேஷ் பாண்டியன் நமசிவாயம், திரு. குமரவேல் திருமணஞ்சேரி, ஆசிரியை திருமதி.கண்மணி கோவிந்தசாமி, திரு.ராஜேஷ்குமார், திரு.கலைச்செல்வம், திரு.பொன்னி வளவன் உள்ளிட்டோர் பகிர்ந்து கொண்டனர். பின்னர், சப்பான் தமிழர்கள் மூலம் சிறப்பான பறையாட்டம், கும்மியாட்டம் உட்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. 

தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் தோக்கியோவில் உள்ள மிராய்க்கன் தேசிய அறிவியல் அருங்காட்சியத்திற்கும், சப்பானில் உள்ள பள்ளிகளுக்கும் சென்று வந்தனர். அதனைத் தொடர்ந்து நானோ தொழில்நுட்பத்தில் உலகளவில் சிறந்து விளங்கும் தோயோ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மூன்று மணி நேரம் செலவிட்டு அறிவியலின் நேரடி பயன்பாட்டை கற்றறிந்தனர். இதற்கான ஏற்பாட்டை JTPEN அமைப்பினர் செய்து கொடுத்தனர். 

 

மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் அவர்கள் இத்திட்டத்தின் சாராம்சம், மற்றும் மாணவர்கள் இதன் மூலம் பெரும் பயன்கள் குறித்தும் தமிழ்நாடு பள்ளிக்கல்விதுறையின் முன்னெடுப்புகளை பற்றியும் விவரித்தார். Japan Tamil Professionals & Expats Network (JTPEN) அமைப்பு, ஜப்பானில் கல்லூரி மற்றும் மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்புகளை குறித்து விவரித்தது. மேலும் தமிழக அரசின் "நான் முதல்வன்" திட்டத்துடன் இணைந்து பணிபுரிய மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. நிகழ்வை திரு.கலைச்செல்வன் பழனி அவர்கள் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் சுமார் 250க்கும் மேற்பட்ட சப்பான் வாழ் தமிழர்கள் கலந்து கொண்டனர்.  இறுதியாக நன்றியுரை மற்றும் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.



Thank you,
Sathiya seelan 
JTPEN - Japan Tamil Professionals & Expats Network 
Contact: +91 8754552970 (WhatsApp)

Sunday, 5 November 2023

கிராமசபையை ஆளும் மாநில அரசின் பிரச்சார சபையாக மாற்றுவதை நிறுத்துக!

கிராமசபையை ஆளும் மாநில அரசின் பிரச்சார சபையாக மாற்றுவதை நிறுத்துக!

தன்னாட்சியின் கண்டன அறிக்கை!

கடந்த அக்டோபர் 2, 2023 கிராமசபையில் ஆளும் மாநில அரசின் சில திட்டங்கள் பற்றிய முதல்வர் உரையைக் காணொளிகளாகத் திரையில் வெளியிட வேண்டும் என்ற ஒரு சுற்றறிக்கை வந்தது. அதன்படி அக்டோபர் 2, 2023 அன்று தமிழ்நாட்டின் அனைத்து கிராமசபைகளிலும் இந்தக் காணொளிகள் கிராமசபை தொடங்குவதற்கு முன் திரையிடப்பட்டன. நவம்பர் 1, 2023 உள்ளாட்சி தின கிராமசபையிலும் இனி வருடந்தோறும் உள்ளாட்சி தினத்தன்று கிராமசபை நடைபெறும் என்று அறிவித்ததற்காகத் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு விவாதப்பொருளும் சேர்க்கப்பட்டிருந்தது. அதன்படி நவம்பர் 1, 2023 அன்று தமிழ்நாட்டின் அனைத்து கிராமசபைகளிலும் முதல் தீர்மானமாக நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியுள்ளது. இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் தமிழ்நாட்டின் கிராமசபைகளை ஆளும் மாநில அரசின் பிரச்சார சபைகளாக மாற்றும் முயற்சிகளே என்பது கண்கூடாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சிகளிலும் வருடந்தோறும் 6 முறை கிராமசபைகள் நடந்து வருகின்றன. முன்பு 4 முறை நடந்து வந்த கிராமசபைகள் தற்போது 6 முறையாக ஆளும் அரசால் அரசாணை மூலம் உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கிராமசபைகளில் தங்கள் ஊராட்சிக்கான வளர்ச்சியைத் திட்டமிடுதல், அந்த ஊராட்சி எல்லைக்குட்பட்ட பிரச்சனைகள்/ தீர்வுகள் பற்றி விவாதித்தல் மற்றும் ஒன்றிய/ மாநில அரசு சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்துதல் போன்ற தங்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கான அனைத்து பொருட்களும் விவாதிக்கப்பட்டு அதன் முடிவுகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதையே சட்டம் கூறுகிறது. ஆனால் அப்படிப்பட்ட அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொதுமக்கள் பங்கேற்கும் ஒரு நிர்வாகக் கட்டமைப்பான கிராமசபையை, மாநில அரசின் பிரச்சார சபையாக மாற்ற முயற்சிப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. ஆபத்தானது.

சட்டப்படி கிராமசபையின் விவாதப் பொருட்களை (அஜெண்டாவை) முடிவெடுக்க வேண்டியது அந்தந்த ஊராட்சி மன்றமே. ஆனால் மாநில அரசே, அதாவது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையே கிராமசபையின் விவாதப் பொருட்களை தற்போது வரை சென்னை பனகல் மாளிகை அலுவலகத்தில் இருந்து அனுப்பி வருகிறது. இதனால் பல கிராமசபைகளில் இந்த விவாதப் பொருட்களை மட்டும் தான் விவாதிக்க வேண்டும் என்று அலுவலர்கள் கூறுவது தொடர்கதையாக உள்ளது. சட்டசபை தொடங்கும் முன் ஒன்றிய அரசின் திட்டங்களை விளக்கும் பிரதமர் உரையைக் காணொளிகளாகக் காண்பித்து விட்டு பின்பு சட்டசபையைத் தொடங்க வேண்டும் அல்லது ஒன்றிய அரசின் திட்டங்களுக்காகப் பிரதமருக்கு நன்றி தெரிவித்துத் தொடங்க வேண்டும் போன்றவற்றை சட்டசபையின் விவாதப் பொருட்களாகச் சேர்க்க வேண்டும் என்று ஒன்றிய அரசு டெல்லியில் இருந்து கூறினால் அதை எப்படி மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடும் செயல்களாக, அதிகாரப்பரவலுக்கு எதிரான செயல்களாக நாம் தீவிரமாக எதிர்ப்போமோ அதேபோல் ஊராட்சிகளின் அதிகாரத்தில் தலையிடும் செயல்களாகவே இதை எடுத்துக்கொண்டு நாம் எதிர்க்க வேண்டியுள்ளது.

ஒன்றிய அரசு ஆளுநர் வாயிலாக மாநில அரசு விவாகரத்தில் தொடர்ந்து தலையிடுவதை எதிர்க்கின்ற, அதிகாரப்பரவல் பற்றிய விரிவான வரலாறு கொண்ட நம் தமிழ்நாடு அரசே இதுபோன்ற ஊராட்சிகளின் அதிகாரத்தில் தலையிடும் செயல்களைத் தொடர்ந்து செய்து வருவது கண்டனத்திற்குரியது. தன்னாட்சி இச்செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன் பின்வரும் கோரிக்கைகளை அரசிற்கு வைக்கிறது.

1. கிராமசபையைத் தமிழ்நாடு அரசின் பிரச்சார சபையாக மாற்றும் முயற்சியை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

2. மாநில அரசின் தலையீடின்றி, கிராமசபையின் விவாதப் பொருட்கள் சட்டப்படி அந்தந்த ஊராட்சி மன்றங்களால் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இப்படிக்கு
தன்னாட்சி
9445700758

Tuesday, 31 October 2023

பத்திரிகையாளர்கள் செய்தி - தகவல் ஆணையத்தை கண்டித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் கண்ணாடி ஏந்தி போராட்டம்

பத்திரிகை செய்தி

 

தகவல் ஆணையத்தை கண்டித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் கண்ணாடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

 

31-10-2023, செவ்வாய், காலை 11.00 மணி, வள்ளுவர் கோட்டம், சென்னை.

 

 

            தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ஐ, சட்டப்படி முழுமையாக செயல்படுத்திடாத மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படாத தமிழ்நாடு தகவல் ஆணையத்தை கண்டித்து, சட்ட பஞ்சாயத்து இயக்கம் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து, 16 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து  "ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்" துவங்கும் நாளான அக்டோபர் 31 இன்று 'கண்ணாடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்'  நடைபெற்றது.


இணைப்பு:

தமிழ்நாடு தகவல் ஆணையம் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ஐ முழுமையாக செயல்படுத்திட மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட, சட்ட பஞ்சாயத்து இயக்கம் முன்வைக்கும் கோரிக்கைகள்.



நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


Satta Panchayat Iyakkam

Member : http://bit.ly/2021spimember |  

Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

Monday, 30 October 2023

பத்திரிகையாளர்கள் அழைப்பு - தகவல் ஆணையத்தை கண்டித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் கண்ணாடி ஏந்தி போராட்டம்


பத்திரிகையாளர்கள் அழைப்பு
தகவல் ஆணையத்தை கண்டித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் கண்ணாடி ஏந்தி போராட்டம்

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ஐ, சட்டப்படி முழுமையாக செயல்படுத்திடாத மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படாத தமிழ்நாடு தகவல் ஆணையத்தை கண்டித்து, சட்ட பஞ்சாயத்து இயக்கம் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து 16 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து  "ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்" துவங்கும் நாளான அக்டோபர் 31 அன்று (நாளை) 'கண்ணாடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்' நடைபெறுகிறது.

இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை
நாள்: 31-10-2023
நேரம்: காலை 11 மணி

இந்நிகழ்ச்சிக்கு பத்திரிகை அன்பர்கள் அனைவரையும் அழைக்கின்றோம்.



அ. ஜெயந்தி
செய்தி தொடர்பாளர்
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
தொடர்புக்கு:  9952182452 / 87545 80269



நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


Satta Panchayat Iyakkam

Member : http://bit.ly/2021spimember |  

Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

Thursday, 12 October 2023

பத்திரிகை செய்தி - பல போராட்டங்களின் மூலம் கொண்டுவரப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005இன் தற்போதைய நிலை?

                                     சட்ட பஞ்சாயத்து இயக்கம்

                                         பத்திரிகை செய்தி
                                         தேதி: 13/10/2023
                                         தொடர்புக்கு  :  8668196093  /  9952182452

இலஞ்ச ஊழலை ஒழிப்பதற்கும், வெளிப்படைத் தன்மையோடு அரசு செயல்படவும் பல போராட்டங்களின் மூலம் கொண்டுவரப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005இன் தற்போதைய நிலை?


இந்திய மக்களுக்கு பகலில் கிடைத்த முதல் சுதந்திரம் தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005. பல்வேறு பொதுநல அமைப்புகள், சமூக ஆர்வலர்களின் போராட்டங்களால் 12-10-2005 அன்று இந்தியா முழுவதும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இச்சட்டம் அமலுக்கு வந்து (12.10.2005) நேற்றுடன் 18 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது; ஆனால் இச்சட்டம் கொண்டு வரப்பட்டதற்கான
உயரிய நோக்கங்கள் இன்றும் நிறைவு பெறாமல் பொதுமக்கள் அல்லல்படுகின்றனர்.

எம்எல்ஏ, எம்பி- க்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் கேள்வி கேட்கும் உரிமையை ரூபாய் 10/- கட்டணத்தில், சாமானிய மக்கள் அனைவருக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொடுக்கிறது. ஆனால், சிறப்பு வாய்ந்த இச்சட்டத்தை அரசு அலுவலர்களும், மாநில தகவல் ஆணையர்களும் முடமாக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

இலஞ்ச ஊழலை ஒழிப்பதற்கும், வெளிப்படைத் தன்மையான அரசு நிர்வாகத்தை ஏற்படுத்தவும் கொண்டுவரப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை, செயல்படுத்த வேண்டிய தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், தனது கடமையை செய்யாமல் ஊழல் அலுவலர்களை காப்பாற்றும் விதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆணையத்திற்கு வரும் மேல்முறையீட்டு மனுவை உரிய முறையில் விசாரணை செய்வது இல்லை; தகவல் தரமறுக்கும் 99% பொதுத்தகவல் அலுவலருக்கு அபராதம் விதிப்பதே இல்லை; பொதுத்தகவல் அலுவலர்கள், தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் என எந்த அரசு அலுவலரும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தையும் மதிப்பதில்லை; தகவல்கோரும் மற்றும் மேல்முறையீட்டு விசாரணைக்கு வரும் மனுதாரர்களாகிய பொதுமக்களையும் மரியாதையுடன் நடத்துவதில்லை.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் இத்தகைய போக்கை கண்டித்து, சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்து பல ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் உண்ணாவிரதங்கள் செய்தும், மாநில ஆணையர்கள் சட்டப்படி செயல்பட முன் வரவில்லை. இது சம்பந்தமாக முதல் அமைச்சருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் புகார் மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கைகள் இதுவரை எடுக்கவில்லை.  

இந்நிலையில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு, மது ஒழிப்புக்காக இயங்கிவரும் சட்ட பஞ்சாயத்து இயக்கம், தமிழ்நாடு தகவல் ஆணையம் தகவல் பெறும் உரிமை சட்டத்தை முறையாக முழுமையாக செயல்படுத்திட மற்றும் சட்டப்படி செயல்பட, பதினாறு கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை மீண்டும் இன்று தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், முதன்மை கூடுதல் செயலாளர் - பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, மாநிலத் தலைமை தகவல் ஆணையர் மற்றும் மாநில தகவல் ஆணையர்கள் என அனைவரிடமும் வழங்கியுள்ளோம்.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் அமலுக்கு வந்து (12.10.2005) பதினெட்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. எனவே, மக்கள் நலன் சார்ந்து முன்வைக்கும்  சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பதினாறு கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமென மீண்டும் வலியுறுத்துகிறோம்; கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுக்கும்பட்சத்தில், சட்ட பஞ்சாயத்து இயக்கம் மாபெரும் களப்போராட்டத்தையும் மேற்கொள்ளும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.  

இணைப்பு:
தமிழ்நாடு தகவல் ஆணையம் தகவல் பெறும் உரிமை சட்டத்தை முறையாக முழுமையாக செயல்படுத்திட மற்றும் சட்டப்படி செயல்பட, சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைகளை உள்ளடக்கிய மனு


சம்சுகனி
தலைவர்
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
தொடர்பு:  8668196093  /  9952182452


நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269
நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


Satta Panchayat Iyakkam

Member : http://bit.ly/2021spimember |  

Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

Wednesday, 4 October 2023

அக்டோபர் 2 கிராமசபையில் கேள்வி கேட்ட விவசாயி தாக்கப்பட்டது குறித்த தன்னாட்சியின் கண்டன அறிக்கை!

அக்டோபர் 2 கிராமசபையில் கேள்வி கேட்ட விவசாயி தாக்கப்பட்டது குறித்த தன்னாட்சியின் கண்டன அறிக்கை!

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஒன்றியம், பிள்ளையார்குளம் கிராம ஊராட்சியில், அக்டோபர் 2, காந்தி பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், கேள்வி கேட்க முயன்ற திரு. அம்மையப்பன் என்ற விவசாயியை, அந்த ஊராட்சியின் செயலர் திரு. தங்கபாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், திருவில்லிபுத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள் மற்றும் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையிலேயே கடுமையாகத் தாக்கிய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதத் தன்மையற்ற இந்தச் செயலுக்கு தன்னாட்சி கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய ஊராட்சி செயலர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயியின் புகாரின் அடிப்படையில், ஊராட்சி செயலாளர் மீது குற்றவியல் வழக்கு (FIR No: 176/2023, PS: Vanniyampatti Vilakku), இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 294 (b) (பொது இடத்தில் ஆபாசச் சொற்களைப் பயன்படுத்தல், 323 (வேண்டுமென்றே காயப்படுத்தலுக்கான தண்டனை), 506 (1) (குற்றவியல் மிரட்டல்) இன் கீழ் பதியப்பட்டுள்ளது. அரசின் இந்தச் செயல்களை வரவேற்கலாம். எனினும், நிர்வாக ரீதியில் பெரும்பாலும், இவ்வாறான செயல்களில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக பணியிடை நீக்கம் அல்லது பணியிட மாற்றம் மட்டுமே தரப்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக தன்னாட்சி உள்ளிட்ட சமூக இயக்கங்களின் தொடர் முயற்சியால், கிராமசபையில் மக்கள் அதிக அளவில் பங்கேற்பதும் பொறுப்பிலுள்ளவர்களின் செயல்பாடுகளை கேள்விக்குட்படுத்துவதும் நிகழத் தொடங்கியுள்ளன. இதை அடித்தள ஜனநாயகத்தை வலுப்படுத்தும் செயலாகக் கருதாமல், தங்களின் அதிகாரத்திற்கான அச்சுறுத்தலாகப் பார்க்கும் மனநிலை பல அலுவலர்களிடமும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடமும் இருக்கிறது. இதன் ஒரு வெளிப்பாடே, பிள்ளையார்குளத்தில் அரங்கேறியுள்ள தாக்குதல் சம்பவம். 

கிராமசபை, உள்ளூராட்சியின் ஒரு முக்கிய அங்கம். மாநில அரசின் சட்டமன்றத்துடன் ஒப்பிடத்தக்க ஒரு சபை. கிராம ஊராட்சி நிர்வாகத்தை கண்காணிக்கக் கூடிய, கேள்விக்குட்படுத்தக் கூடிய அதிகாரம் ஊராட்சியின் வாக்காளர்களான கிராமசபையின் உறுப்பினர்களுக்கு உண்டு. ஆனால், யாருக்குப் பதில் சொல்ல வேண்டுமோ, யாருக்காகப் பணி செய்ய வேண்டுமோ அவர்களையே கிள்ளுக் கீரையாக நினைக்கும் போக்கே பெரும்பாலும் துறை அலுவலர்களிடம் உள்ளது.

சமீபத்தில் மாநில அளவில் நடைபெற்ற ஊராட்சி செயலாளர்களின் போராட்டத்திற்குப் பிறகு வெளியான தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலர்கள் குறித்த பணி விதிகள் - 2023 (அரசாணை 113, ஊ.வ.ஊ.துறை, நாள் 13.09.2023), ஊராட்சி செலயலரைத் தண்டிக்கும் அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கியுள்ளது. ஊராட்சி மன்றத்தையோ கிராமசபையையோ அதிகாரப்படுத்தாமல், இப்படித் துறை அலுவலர்களை அதிகாரப்படுத்தும் தமிழ்நாடு அரசின் செயல்களால்தான் அவர்களுக்குத் தாங்கள் பொதுமக்களுக்கு கட்டுப்பட்டவர்களல்ல என்ற எண்ணம் ஏற்படுகிறது..

மேலும், ஊராட்சியின் கடைநிலை அலுவலரான ஊராட்சி செயலாளர், ஒரு கிராமசபை உறுப்பினரை, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துறை அலுவலர்கள் இருக்கும்போதே தாக்கும் அளவிற்கு அவருக்கு அதிகாரத் திமிரும் தைரியமும் காலனிய ஆதிக்க மனநிலையை இன்னமும் கைவிடாத பொது நிர்வாகத்திலிருந்தே கிடைக்கின்றன. இந்தியப் பொது நிர்வாகத்தை (Public Administration) முழுமையான சீர்திருத்தத்திற்கு உட்படுத்த வேண்டும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று.

இந்தப் பின்னணியில் தன்னாட்சி, தமிழ்நாடு அரசுக்கு கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது.

1. பாதிக்கப்பட்ட விவசாயி திரு.அம்மையப்பன் அவர்களுக்கு உரிய சிகிச்சையும் பாதுகாப்பும் வழங்குவதோடு, அவருக்கு இழப்பீடாகக் கணிசமான ஒரு தொகையை, தொடர்புடைய ஊராட்சி செயலரின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து வழங்க வேண்டும்.

2. தன்னுடைய புகார் மனுவில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் திரு. அம்மையப்பன் தெரிவித்துள்ளதாலும் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்துள்ள அவரை ஊராட்சி செயலர் மார்பில் கடுமையாக எட்டி உதைத்தாலும், இந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506 (2) (இறப்பை அல்லது கடுங்காயத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்) சேர்க்கப்பட வேண்டும்.

3. பாதிக்கப்பட்ட விவசாயி, ஊராட்சி செயலர் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களாலும் தாக்கப்பட்டதாக வெளியான காணொளிகள் மூலம் அறிய முடிகிறது. எனவே உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீதும் குற்ற வழக்குகள் பதியப்பட வேண்டும்.

4. அனைவர் முன்னிலையிலும் ஒரு மனிதரை இழிவுபடுத்தும் விதமாக காலால் எட்டி உதைத்தது அப்பட்டமான மனித உரிமை மீறல். எனவே, உரிய விசாரணக்குப் பிறகு, அந்த செயலாளரை நிரந்தரப் பணி நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும். இது பொது மக்களின் கண்ணியத்துக்கு இழுக்கு விளைவிக்கின்ற மற்ற அலுவலர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.

5. மேலும், இச்சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஊராட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

6. கிராம சபை எவ்வாறு நடத்தப்பட வேண்டும், அதில் தலைவர், ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம சபை உறுப்பினர்கள் போன்றோரின் பங்கு என்ன என்பது போன்ற சட்ட ரீதியான விழிப்புணர்வு விளம்பரங்கள் அரசால் வெளியிடப்பட வேண்டும்.

7. தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து கிராமசபைகளும் காணொளி பதிவு செய்யப்பட்டு, அரசின் இணையத் தளத்தில் மக்கள் பார்வைக்கு பதிவேற்றப்பட வேண்டும்.

8. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவுகள் 104 மற்றும் 106 இல் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் (Tamil Nadu Panchayats (Amendment) Act 2022-No.27 of 2022) மற்றும் கிராம ஊராட்சி செயலர்கள் குறித்த பணி விதிகள் (Tamil Nadu Village Panchayat Secretaries (Conditions of Service) Rules, 2023 (G.O (Ms.) No. 113, dated 13.09.2023) ஆகியவற்றில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, ஊராட்சி செயலர்களைக் கட்டுப்படுத்தும் மற்றும் தண்டிக்கும் அதிகாரத்தை ஊராட்சி மன்றத்திற்கோ அல்லது கிராமசபைக்கோ வழங்க வேண்டும்.

#கிராமசபை
#GramSabha

Sunday, 13 August 2023

ஜனவரி 26, 2023 கிராமசபை பற்றிய ஆய்வறிக்கை

தமிழ்நாட்டில் கிராமசபைகள் பெயரளவிற்குத் தான் நடைபெறுகிறதா?


தன்னாட்சி மற்றும் IGG அமைப்புகள் இணைந்து ஜனவரி 26, 2023 அன்று இணையவழியில்  நடத்தப்பட்ட ஆய்வறிக்கை குறித்த


பத்திரிக்கை செய்தி


அரசமைப்புச் சட்டத்தில் நம் நாட்டின் வளர்ச்சியில் மக்கள் பங்களிப்பை நேரடியாக உறுதி செய்யும் ஒரு முக்கியமான தளம் 'கிராமசபை' ஆகும். தேர்தல் காலத்தில் வாக்கு செலுத்துவது மட்டும் ஜனநாயகக் கடமையின்றி மக்கள் பங்கேற்புத் தளமான கிராமசபையிலும் பங்கேற்பது ஒவ்வொரு குடிமாக்களின் ஜனநாயகக் கடமையாகும். கிராமசபை என்பது தமிழ்நாட்டில் 1996 முதல் சட்டப்படி இருக்கிறது எனினும் கடந்த சில வருடங்களாகப் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டப் பரவலான விழிப்புணர்வு காரணமாக பல இடங்களில் அது முறையாக நடைபெற்று வருகிறது எனலாம். கடந்த ஆட்சியில் ஊரடங்கு முடிவுற்ற பிறகும் கரோனாவை காரணம் காட்டி கிராமசபை நடத்தப்படாமல் இருந்தது. தற்போதைய ஆட்சியில் வருடத்திற்கு 4 முறை நடந்து வந்த கிராமசபை 6 முறையாக மாற்றப்பட்டு நடைபெற்று வருகிறது.

ஆனால் உண்மையில் அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட கிராமசபை முறையாக நடைபெறுகிறதா? கிராமசபை விவாதப் பொருள்கள் அனைத்தும் முறையாக மக்களால் விவாதிக்கப்படுகிறதா? விவாதப் பொருட்கள் தாண்டி மக்கள் முன்மொழியும் இதர பொருள்கள் விவாதிக்கப்படுகிறதா இல்லையா? கிராமசபையின் விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா? அதில் மக்கள் எவ்வாறு ஜனநாயகக் கடமை ஆற்றுகின்றனர்? என்பதெல்லாம் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இதற்கு பதில் காணும் விதமாக கடந்த ஜனவரி 26, 2023 அன்று நடந்த கிராமசபையை Institute of Grassroots Governance மற்றும் தன்னாட்சி கூட்டாக சேர்ந்து இணையவழி மூலமாக ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வில் மொத்தம் 16 கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த ஆய்வில் தமிழ்நாட்டிலுள்ள 33 மாவட்டங்களிலிருந்து அதாவது 142 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 210 கிராம ஊராட்சிகளிலிருந்து சுமார் 258 கிராமசபை உறுப்பினர்கள் (மக்கள்) கலந்து கொண்டு பதில் அளித்துள்ளனர். இதில் சாதாரண மக்கள் முதற்கொண்டு ஊராட்சித் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், கிராம தன்னார்வலர்கள் என அனைவரும் அடக்கம். இந்த இணையவழி ஆய்வின் முடிவுகளிலிருந்து கிராமசபை ஜனவரி 26, 2023 அன்று எவ்வாறு நடைபெற்றது என்பதுடன் பொதுவாக கிராமசபை தமிழ்நாட்டில் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை அறிய முடியும்.

ஆய்வின் முக்கிய கண்டறிதல்கள் மற்றும் பரிந்துரைகள் கீழ்வருமாறு.. 

முக்கிய கண்டறிதல்கள்:

  1. இந்தியாவில் பங்கேற்பு ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் கிராமசபை தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊராட்சிகளில் பெயரளவிற்கு மட்டுமே நடத்தப்படுகிறது.

  2. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 இன் படி தமிழ்நாட்டில் எந்த ஊராட்சிகளிலும் கிராமசபை விவாதப் பொருட்கள் (அஜெண்டா) அந்த ஊராட்சி மன்றத்தால் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்து ஊராட்சிகளுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தான் விவாதப் பொருட்களை முடிவு செய்து அனுப்பி வைக்கிறது.

  3. அவ்வாறு அனுப்பப்பட்ட விவாதப் பொருள்கள் அனைத்துமே பெரும்பாலான ஊராட்சிகளில் விரிவாக விவாதிக்கப்பட்டு தீர்மானங்களாக நிறைவேற்றப்படவில்லை.

  4. சுமார் 18 விவாதப் பொருட்கள் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டிய ஜனவரி 26, 2023 கிராமசபை, பெரும்பாலான ஊராட்சிகளில் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திலிருந்து அதிகபட்சம் இரண்டு மணி நேரம் மட்டுமே நடைபெற்றுள்ளது.

  5. வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து அனுப்பப்படும் பற்றாளர்களில் பெரும்பாலானோர் கிராமசபையின் விதிமுறைகளான சுழற்சி முறையில் கிராமசபை நடப்பதை உறுதி செய்வது, வருகைப்பதிவேட்டை சரிபார்த்து குறைவெண்வரம்பை உறுதி செய்வது, தீர்மானங்கள் எழுதப்பட்டு அதில் கையொப்பம் வாங்குவது போன்றவைகள் முறையாகக் கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதில்லை.

  6. பெரும்பாலான ஊராட்சிகளில் கிராமசபையின் முக்கிய கடமைகளான வரவு செலவு அறிக்கை மற்றும் தணிக்கை அறிக்கைகள் போன்றவை முறையாக விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படவில்லை. 

  7. MGNREGS எனப்படும் 100 நாள் வேலைத் திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், கிராம வறுமை குறைப்புத் திட்டம் போன்ற சில முக்கிய திட்டங்கள் பற்றி பெரும்பாலான ஊராட்சிகளில் விவாதிக்கப்படவில்லை.

  8. 15வது மத்திய நிதி மானிய குழுவின் பரிந்துரைகளின் படி கிராம ஊராட்சிகளால் மக்கள் பங்கேற்புடன் தயாரிக்கப்பட வேண்டிய கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் (VPDP) பெரும்பாலான ஊராட்சிகளில் தயாரிக்கப்படவில்லை.

  9. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயனாளிகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட கடன்/நிதி உதவிகள் போன்றவையோடு, மக்கள் நிலை ஆய்வு (PIP) அறிக்கை மூலம் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பயனாளிகள் பட்டியல் போன்றவை பெரும்பாலான ஊராட்சிகளில் முறையாக விவாதிக்கப்பட்டு அவற்றிற்கு ஒப்புதல் பெறப்படவில்லை.

  10. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறை கடிதத்தின் படி பள்ளி மேலாண்மைக் குழு தீர்மானங்கள் பெரும்பாலான ஊராட்சிகளின் கிராமசபையில் விவாதிக்கப்படவில்லை.

  11. மக்கள் முன்மொழியும் அடிப்படை தேவைகள் பிரச்சனைகள் குறித்து பெரும்பாலான ஊராட்சிகளில் விவாதிக்கப்படவில்லை.

பரிந்துரைகள்:

  1. தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளோடு கிராம ஊராட்சி செயலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பற்றாளர்கள் போன்ற அனைத்து அலுவலர்களுக்கும் மற்றும் கிராமசபை உறுப்பினர்களான வாக்காளர்களுக்கும் கிராமசபை பற்றிய முழுமையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

  2. பல காலமாக விவாதப் பொருட்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையால் அனுப்பப்பட்டு வரும் நிலை மாறி சட்டப்படி அந்தந்த கிராம ஊராட்சிகளே தங்கள் விவாதப் பொருட்களை தயாரிக்குமாறு அவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு தாங்களே விவாதப் பொருட்களை தயாரிக்க முன் வரும் கிராம ஊராட்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். 

  3. கிராமசபை ஒப்புதல் தேவைப்படும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விவாதப் பொருட்களில் சேர்க்குமாறு தொடர்புடைய கிராம ஊராட்சிகளுக்கு அலுவல் ரீதியான கடிதங்கள் அனுப்புவது என்பது நடைமுறையாக்கப்பட வேண்டும். 

  4. MGNREGS எனப்படும் 100 நாள் வேலைத் திட்டம் மற்றும் அதில் கிராமசபையின் பங்கு ஆகியவை பற்றி பொதுமக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

  5. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் (VPDP) முறையாக மக்கள் பங்கேற்புடன் தயாரிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

  6. 15வது மத்திய நிதி மானிய குழுவின் பரிந்துரைகளின் படி இந்நிதி (CFC) செலவு செய்யப்படுகின்றதா என்பது மீளாய்வு செய்யப்பட்டு அவை முறையான சமூகத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

  7. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிதிகளும் முறையான சமூகத்தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதற்கென ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள சமூக தணிக்கை குழு முறையாக செயல்படுகிறதா என்பதும் அக்குழுவின் அறிக்கை கிராமசபையில் ஒப்புதலுக்கு வைக்கப்படுகின்றதா என்பதும் முறையாகக் கண்காணிக்கப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும்.

  8. மக்கள் நிலை ஆய்வறிக்கை மீளாய்வு செய்யப்பட்டு மீண்டும் கிராமசபையில் வைக்கப்பட்டு முறையான விவாதத்துடன் ஒப்புதல் வாங்கப்பட வேண்டும்.

  9. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநில திட்ட இயக்குனரின் செயல்முறை கடிதத்தின் படி அனைத்து கிராமசபைகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு தீர்மானங்கள் விவாதிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

  10. விவாதப் பொருட்கள் தவிர மக்கள் முன்மொழியும் இதர பொருட்கள் பற்றி கண்டிப்பாக கிராமசபையில் விவாதிக்கபடுவது என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.


தோழமையுடன்,
வினோத் குமார்
பொது செயலாளர்
தன்னாட்சி
9445700758

Thursday, 20 July 2023

நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் போல் கிராமப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் உரிய மதிப்பூதியம் வழங்கிடுக!

நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் போல் கிராமப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் உரிய மதிப்பூதியம் வழங்கிடுக!

தமிழ்நாடு அரசுக்குத் தன்னாட்சியின் கோரிக்கை!

தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஜூலை 14, 2023 அன்று நகர்ப்புற உள்ளாட்சிகளின் பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் நிர்ணயித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாநகராட்சி மேயர் துவங்கி, துணை மேயர் மற்றும் உறுப்பினர்களுக்கும், அதே போன்று நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பிரதிநிதிகளுக்கும் மதிப்பூதியம் வழங்கும் இந்த அறிவிப்பின் மூலம் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை அரசு நிறைவேற்றியுள்ளதைத் தன்னாட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது.

தமிழ்நாடு அரசின் உள்ளாட்சிக்கான முன்னெடுப்பு

தமிழ்நாட்டில் 2021-இல் புதிய அரசு பதவியேற்றதிலிருந்து உள்ளாட்சிகளுக்கான சில முக்கிய முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. குறிப்பாகப் பல சமூக அமைப்புகளுடன் சேர்ந்து நாம் 2021-இல் வெளியிட்ட உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பரவல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த கோரிக்கைகளான ஊராட்சிப் பணிகளுக்காக ஊராட்சித் தலைவரே நிர்வாக அனுமதி வழங்கும் வரம்பை 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்த்தியது (நாம் 10 லட்சம் வரை உயர்த்தக் கேட்டிருந்தோம்), நகர்ப்புற உள்ளாட்சிகளில் பகுதி சபை மற்றும் வார்டு குழு உருவாக்கம் மற்றும் ஊராட்சிகளில் 100 நாள் வேலை உள்ளது போல் நகராட்சிகளிலும் 'தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம்' அறிவிப்பு (G.O Ms. No. 69 Dt: September 13, 2021) போன்ற பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தமிழ்நாடு அரசு கிராமப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் உரிய மதிப்பூதியத்தை நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தன்னாட்சி கோரிக்கை வைக்கின்றது.

மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும்

கேரளா போன்ற பிற மாநிலங்களில் உள்ளது போல் மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் உரிய மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் 1996 ஆம் ஆண்டு முதலே இங்கு தொடர்ந்து வைக்கப்படும் முக்கியக் கோரிக்கையாகும். தற்போது ஊராட்சித் தலைவர்களுக்கு மதிப்பூதியமாக வழங்கப்படும் ₹2000 என்பது மிகவும் குறைவான ஒன்று. இது எந்த விதத்திலும் அவர்கள் பணியை அங்கீகரிக்கும் விதமாகவோ ஊக்கப்படுத்தும் விதமாகவோ இல்லை. கிராமப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளில் 50 சதவீதத்திற்கும் மேல் பெண்கள் பொறுப்பில் இருக்கிறார்கள். மேலும் பல கிராமங்களில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எளிய மக்களும், இளைஞர்களும் மக்கள் பிரதிநிதிகளாகத் (ஊராட்சித் தலைவராகவோ அல்லது வார்டு உறுப்பினராகவோ) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் ஊராட்சித் தலைவர்கள் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி செயல் அலுவலராகவும் உள்ளதால் அவர்கள் ஊராட்சித் தலைவர் பணியோடு சேர்த்து செயல் அலுவலர் பணியையும் செய்து வருகின்றனர். எனவே, கிராமப்புறத்தில் எளிய பின்புலத்திலிருந்து வரும் மக்கள் பிரதிநிதிகளுக்குக் கூடுதலான மதிப்பூதியம் வழங்குவதன் மூலம் ஊராட்சிக்காக மக்கள் பணி செய்ய எண்ணும் ஆர்வமுள்ள இளைஞர்களும் விளிம்பு நிலை மக்களும் நம்பிக்கையோடு ஊராட்சி நிர்வாகத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பினை வழங்க முடியும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மூன்றடுக்கு ஊராட்சிப் பிரதிநிதிகளுக்கும் குறிப்பாகத் தன்னாட்சி உள்ளிட்ட தோழமை அமைப்புகள் (மக்களின் குரல் (Voice of People), Institute of Grassroots Governance (IGG), தோழன் மற்றும் அறப்போர்) இணைந்து வெளியிட்ட உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பரவல் தேர்தல் அறிக்கை 2021-யில் கேட்டிருந்தது போல் கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு ₹15,000, துணைத் தலைவர்களுக்கு ₹7,000 மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு ₹5,000 என ஊராட்சிப் பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியத்தை வழங்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் தன்னாட்சி கேட்டுக்கொள்கிறது.

மிக்க நம்பிக்கையுடன்
#தன்னாட்சி

உள்ளாட்சிகளுக்கான #அதிகாரப்பரவல் தேர்தல் அறிக்கை 2021 - https://thannatchi.in/manifesto-2021/

Thursday, 8 June 2023

தமிழ்நாடு உயிர்பல்வகைமை வாரியம் மக்கள் உயிர்பல்வகைமை பதிவேடு (PBR) தயாரிப்பைக் கண்காணிக்கத் தவறியதை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு வெளிப்படுத்திய பிறகு, PBRஐ தயாரிப்பதற்கும் சரிபார்ப்பதற்கும் ஒரு வலுவான முறைமையை உருவாக்க இளைஞர் குழுக்கள் கோருகின்றன

பெறுநர்:
தமிழ்நாடு உயிர்பல்வகைமை வாரியம்,

W59G+RWW, TBGP வளாகம்,

இரண்டாம் தளம் வேளச்சேரி-தாம்பரம் பிரதான சாலை,

நன்மங்கலம்,
மேடவாக்கம்,
சென்னை – 600100.


பெறுநர்:
தேசிய உயிர்பல்வகைமை ஆணையம்,

5வது தளம், TICEL பயோ பார்க்,

சிஎஸ்ஐஆர் சாலை,

தரமணி,
சென்னை – 600113.


தேதி: 06 ஜூன் 2023

 

பொருள்: தமிழ்நாடு உயிர்பல்வகைமை வாரியம் மக்கள் உயிர்பல்வகைமை பதிவேடு (PBR) தயாரிப்பைக் கண்காணிக்கத் தவறியதை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு வெளிப்படுத்திய பிறகு, PBRஐ தயாரிப்பதற்கும் சரிபார்ப்பதற்கும் ஒரு வலுவான முறைமையை உருவாக்க இளைஞர் குழுக்கள் கோருகின்றன.


மதிப்பிற்குரிய ஐயா/அம்மா,


தமிழ்நாடு உயிர்பல்வகைமை வாரியம் (TNBB) 03 மே 2023 அன்றுகல்லூரி மாணவர்களை மக்கள் உயிர்பல்வகைமை பதிவேட்டை (People Biodiversity Register) 20 நாட்களில் புதுப்பிக்க குறுகிய கால பயிற்சியாளர்களாக பணிபுரிய அழைப்பு விடுத்து விளம்பரம் செய்தது. கல்லூரி மாணவர்களின் ஈடுபாட்டை கோருவது வரவேற்கத்தக்க முயற்சியாக இருந்தாலும், TNBB இன் இந்த விளம்பரம் இன்னும் தயாரிக்கப்படாத இந்த பதிவேடுகளை (PBR) தயாரித்துவிட்டதாகவும் அதை புதுப்பிக்க மட்டுமே செய்ய வேண்டியுள்ளது என்ற வகையிலும் புரிந்து கொள்ளப்படும் விதமாக உள்ளது கவலை அளிக்கிறது.


ஆனால் 07 ஜனவரி 2023 "தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் தமிழ்நாட்டில் உயிர்பல்வகைமை மேலாண்மைக் குழுக்களின் நிலை" என்ற தலைப்பில் பொருளாதார மற்றும் அரசியல் வார இதழில் (EPW) வெளியான கட்டுரை (இணைக்கப்பட்டுள்ளது)உயிர்பல்வகைமை மேலாண்மை குழுக்களை (Biodiversity Management Committee) உருவாக்குவது மற்றும் PBR தயாரிப்பது தொடர்பான சட்ட நடைமுறைகளுக்கு பரவலான இணக்கமின்மை இருப்பதைக் கண்டறிந்துள்ளது. கட்டுரையில் வழங்கப்பட்ட RTI பதில்களின்படி, PBR எந்த BMCயிலும் தயாரிக்கப்படவில்லைஅதைத் தயாரிப்பதற்கான செயல்முறை கூட தொடங்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத் துறைகளின் கடிதங்களின் அடிப்படையில் - அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் BMC கள் உருவாக்கப்பட்டுள்ளன என்ற TNBB இன் கூற்றையும் கட்டுரையின் ஆசிரியர்கள் நிராகரிக்கின்றனர்.

 


சட்டத்தை நடைமுறைப்படுத்த TNBB எடுக்கும் முன் முயற்சிகள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், PBRகளைத் தயாரிப்பதற்கு உள்ளூர் அளவில் உள்ள BMCகளுக்குஅவை பருவ காலங்களிலும் தொடர்ச்சியாக செயல்படுவதற்கான திறன் மேம்பாட்டை உருவாக்குவது என்பது முக்கியமான தேவையாக உள்ளது.


மக்கள் உயிர்பல்வகைமை பதிவேடு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது கிராமத்தின் உள்ளூர் புவியியலோடு தொடர்புடைய உயிர் வளங்கள் மற்றும் மக்கள்தொகை பற்றிய விரிவான தகவல்களைக் கொண்ட ஆவணமாகும். தாவரங்கள்விலங்குகள்பறவைகள் மற்றும் நுண்ணுயிரிகள் ஆகிய உயிர் வளங்களும்உள்ளூர் சமூகங்கள் மற்றும் அவர்களின் பாரம்பரிய நடைமுறைகளும் இதில் பதியப்பட்டு அவற்றின் பலன்களை அந்த மக்கள் பெறுவதற்கும் அப்பலன்கள் மற்றவர்களால் திருடப்படாமல் இருப்பதற்குமான அடிப்படை ஆவணமாக இந்த PBR செயல்படுகிறது. இது போன்ற பல திருட்டுகள் ஏற்கனவே நடந்துள்ள நிலையில் PBR தயாரிப்பு என்பது மிகவும் முக்கியமானதாகிறது.


எனவே, PBR ஐ அவசரமாககுறுகிய காலத்தில் தயாரிப்பது என்பது நமது உழைப்பையும் நேரத்தையும் வீணடிக்கும் செயலாகும். மிகவும் குறுகிய காலத்தில் தன்னிச்சையாக அனுபவமற்ற மாணவர்களால் சேகரிக்கப்பட்டு செயலாக்கப்படும் இந்தத் தரவுகள் உயிர்பல்வகைமை சட்டத்தின் நோக்கத்தை கண்டிப்பாக நிறைவேற்றாது.


எனவே, PBR தயாரிப்பதற்கு ஒரு வலுவான நம்பகமான முறைமையை உருவாக்குமாறும் அது உள்ளூர் சமூகங்களுக்கு பயனளிக்கும் விதமாகவும் மாநில அளவில் ஒரு பரந்த பன்முகத்தன்மை பற்றிய புரிதலை உருவாக்கும் விதமாகவும் இருப்பதை உறுதி செய்யுமாறும், TNBB மற்றும் தேசிய உயிர்பல்வகைமை ஆணையத்திடம் (NBA) நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.


இது தொடர்பான எங்களின் கோரிக்கைகள் பின்வருமாறு


1. EPW 
இல் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையின்படிஉள்ளூர் அரசாங்கங்களால் BMCகள் உருவாக்கப்படவில்லை மற்றும் முறையான PBR தயாரிக்கப்படவில்லை என்பதால், PBR புதுப்பிப்பு தொடர்பான அறிவிப்பை TNBB மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


2. RD & PR (
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்) துறை மற்றும் MAWS (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்) துறைக்கு BMC களை சரியான முறையில் அமைப்பதற்கான அறிவிப்பை அனுப்புமாறும்அடுத்து நடக்கவிருக்கும் கிராமசபை/பகுதிசபையில் இதை ஒரு விவாதப்பொருளாக இணைத்து பிரச்சாரம் செய்து அங்கீகரிக்குமாறும் தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும். (இதன் மூலம் கிராமசபை/பகுதிசபைகளில் கலந்துகொள்ளும் ஆர்வமுள்ளவர்கள்/இளைஞர்கள் இந்த உயிர்பல்வகைமை மேலாண்மை குழுவில் இணைய முன்வர வாய்ப்புள்ளது).


3. 
மேலும்உயிர்பல்வகைமைக்காக பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் TNBB மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள்மக்கள் பங்கேற்புடன் PBR ஐத் தயாரிக்கஉள்ளூர் அரசாங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் BMC உறுப்பினர்களுக்கு முறையான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வழங்க வேண்டும். (PBR ஐத் தயாரிக்க உள்ளூர் அரசாங்கங்கள் 15வது மத்திய நிதி குழு மானிய நிதியை பயன்படுத்தலாம் என்ற வழிகாட்டுதல் உள்ளது.)


இப்படிக்கு உண்மையுள்ள,

 

1. Prasanth J, Chennai Climate Action Group

2. Mukesh gauthaman, Eegaikulu

3. Yuvan Aves, Palluyir

4. Saravanan, Visai

5. Ali Basha, Zenith Learning Center

6. Akalya, Young People for Politics

7. Pritika M, Ficus

8. Anuviya, Pitchandikulam Forest

9. Prabhakaran, Poovulagin Nanbargal

10. Inbarasan, Institute of Grassroots Governance,Tiruppur.

11. Kameshwaran, Advocate

12. Joel Shelton, IRCDUC

13. S. Gopalakrishnan, Secretary, Evergreen Nature Conservation

14. Paul Pradeep CN, Trash Troopers

15. Vignesh Rajendran, XR Chennai

16. Vishnupriyan - Thannatchi - Tiruppur

17. Joy Andrew, BR Leopards

18. Roy Anto, MinMini Collective

19. Rohit, Project Living Cities

20. Vandana Viswanath, Vettiver Collective

21. Durga, Coastal Resource Center

22. Sundar, Tamilnadu seed savers network

23. Kavin castro, Advocate

24. Baskar, Jeevaka center for peace and happiness

25. Ramasubramanian, Director, Samanvaya Social Ventures

26. Vishanth, Singaravelar Padipagam

27. R.Selvam, Tamilnadu organic farmer's federation

28. Naresh, journalist and Documentary film maker

29. Raghul, secretary AIYF Udumalpet.

30. A. Azad kamil, Ongil Nature Trust, coonoor.

31. Ajay Ludra, Nilgiri Natural History Society.                     

32. Johnny John, NilgiriScapes

33. Satheesh Perumal, Makkal Padhai

34. Ananthoo, Safe Food Alliance

35. Gopi Deva, OFM

36. Seethalakshmi, TNIVK

37. Mohan kumar M, Wildlife Biologist

38. Nityanand Jayaraman, Save Chennai Beaches Campaign