Thursday, 4 February 2016

Government Order Protecting Corruptive Officials.. Making DVAC as POST OFFICE... PRESS RELEASE

Press Release:
Government Order Protecting Corruptive Officials.. Making  DVAC as POST OFFICE

Hereafter Let's call "DVAC"(Directorate of Vigilance & Anti Corruption") as "POAC"(Post Office for Anti Corruption) since,they r only going to forward the complaints. Thanks to G.O(Ms)No:10 Dt 02.02.16. LOKAYKTHA is not enacted but GO to Protect Corruptive Official is passed. We condemn&this GO should be withdrawn.Uniformity can be applied by NOT seeking prior approval for any category of Officers. -SATTA PANCHAYAT IYAKKAM,


Siva Elango, President, Satta Panchayat Iyakkam, 
8754580274,8754580270

                    அரசானை எண்:G.O(Ms): No:10
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தை "தபால் நிலையமாக்கும்" – ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பளிக்கும் அரசாணை…
                    பத்திரிகைச் செய்தி, 04-02-2016


பிப்ரவரி 2ம் தேதியன்று(2016) தலைமைச் செயலாளரால் வெளியிடப்பட்ட அரசாணையின்படி(G.O(Ms): No:10) இனிமேல் எந்த அரசு ஊழியர் மீதும் இலஞ்ச-ஊழல் குற்றச்சாட்டு வந்தால், அதனை உடனடியாக விசாரிக்க வேண்டிய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம்(DVAC), கண்காணிப்பு ஆணையத்தின்(Vigilance Commission) ஒப்புதலைப் பெறவேண்டும். கண்கானிப்பு ஆணையம், அரசின் கருத்தைக் கேட்டுப்பெற்ற பிறகு அனுமதியளிக்க வேண்டும் என்கிறது.


இலஞ்ச-ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை என்று எங்களைப் போன்ற சமூக அமைப்புகள் போராடிவருகின்ற சூழலில் இந்த அரசாணையானது ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பளிக்கும் விதத்தில் உள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


இதற்கு முன்னர், உயர்நிலை அலுவலர்களின் மீது ஊழல் வழக்குகள் தொடர அரசின் முன் அனுமதிபெறவேண்டும் என்ற நிலை இருந்தது; இது அரசு ஊழியர்களிடையே பாரபட்சம் காட்டுகிறது மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று வழக்கு தொடுக்கப்பட்டது.. உண்மையிலேயே, இந்த அரசாங்கம் இலஞ்ச-ஊழலை ஒழிக்கும் எண்ணத்தில் இருந்திருந்தால், இனிமேல் எந்த  நிலை அரசு ஊழியர் மீதும் ஊழல் புகார் வந்தால் அரசின் முன் அனுமதி இன்றி DVAC வழக்குதொடுக்கலாம் என்று அரசாணை வெளியிட்டிருக்கலாம். அதற்குபதிலாக, அனைத்துநிலை ஊழியர்கள் மீதும் வழக்குத்தொடர அரசின் முன் அனுமதி பெறவேண்டும் என்று அரசாணை வெளியிட்டிருப்பது, இலஞ்சத்தில் திளைக்கும் அரசு ஊழியர்களுக்குத்தான் சாதகமாக முடியும். இந்த அரசாணையை உடனே திரும்பப்பெறவேண்டும் என சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோருகிறது.


ஆதாரத்துடன் இலஞ்ச-ஊழல் புகார் வந்தால், முதல் அமைச்சர், மந்திரிகள், உயர் அதிகாரிகள் உட்பட அனைவரது அலுவலகம், வீடுகளில்கூட எந்த முன் அனுமதியும் இன்றி சோதனையிடும் உரிமை பெற்ற தன்னிச்சையாக செயல்படும்(Independent) இலஞ்ச-ஊழல் ஒழிப்பிற்கான  "லோக் ஆயுக்தா" சட்டத்தை 2015ம் ஆண்டு ஜனவரி மாதமே தமிழக அரசு நிறைவேற்றியிருக்கவேண்டும். ஆனால், ஒரு ஆண்டு தாமதமாகியும் பல்வேறு சிறு காரணங்களைச் சுட்டிக்காட்டி "லோக் அயுக்தா" சட்டத்தைக் கொண்டுவர தமிழக அரசு மறுக்கிறது.

ஆளுங்கட்சியினர், வாக்குச்சாவடி முறைகேடுகளில் ஈடுபடும்போது அதனை அரசு ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு இந்த அரசாணை உதவும் என்று ஆளுங்கட்சி எண்ணுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.


மேலும் இந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ள "….ஊழல் கண்கானிப்பகம்(Vigilance Commission)" , அரசு தரும் குறிப்பின்(Remarks) அடிப்படையில் முடிவெடுக்கவேண்டும்" என்ற வரிகள் தெளிவில்லாததாக இருக்கிறது. "அரசு" என்றால் யார்..?  முதலமைச்சரா..? அமைச்சரா..?
தலைமைச் செயலாளரா..? . யாராக இருந்தாலும் அது தவறான வழிமுறையாகத்தான் இருக்கும். ஏனெனில், அமைச்சர் மீதோ, தலைமைச் செயலர் மீதோ புகார் வந்தால் எப்படி அவர்களே அவர்கள் மீது வழக்குத்தொடர அனுமதியளிக்கமுடியும் ?


DVAC, VIGILANCE COMMISSION ஆகிய அமைப்புகளைக் கலைத்துவிட்டு தன்னிச்சையாக இயங்கும் லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்தினால்தான் இலஞ்ச-ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்.

                                                                 சிவ.இளங்கோ, தலைவர்

                                                           Satta Panchayat Iyakkam,                                                                8754580270,8754580274


Tuesday, 26 January 2016

உலக சித்த மருத்துவ அறக்கட்டளை இலவச சித்த மருத்துவமுகாம் - Press Release

அன்புடையீர் வணக்கம்,

அண்மையில்  சென்னையைத் தாக்கிய பேரிடரினைத்  தொடர்ந்து பல பகுதிகளில் உடல் நலக்குறைவு  ஏற்பட்டது, இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது. இவற்றை நீக்கும் நடவடிக்கையை உலக சித்த மருத்துவ உறுப்பினர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக சென்னை தியாகராய நகரில் உள்ள செ.தெ.நாயகம் தியாகராய நகர் மேல்நிலை பள்ளியில்  இலவச சித்த மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. செ.தெ.நாயகம் தியாகராய நகர் மேல்நிலை பள்ளி, குண்டூர் சுப்பையா பிள்ளை பெண்கள் மேல்நிலை பள்ளி, நெல்லை நாயகம் தியாகராயநகர் தொடக்கப்பள்ளியில் பயிலும் சுமார் 1600 மாணவ மாணவிகளும், அவர்கள் பெற்றோர்களும் , உறவினர்களும் பயனடையும் வகையில் இந்த மருத்துவ முகாம் நடைப்பெற்றது. 12 சித்த மருத்துவர்கள் இதில் கலந்து கொண்டனர் மற்றும் சித்த மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.

நிகழ் நாள் : 26.1.2016, செவ்வாய்க்கிழமை
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 3.30 வரை
நிகழிடம் : சென்னை செ.தெ.நாயகம் தியாகராய நகர் மேல்நிலை பள்ளி, 31,வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர் , சென்னை-600017.

புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி.
இப்படிக்கு,
தலைவர், உலக சித்த மருத்துவ அறக்கட்டளை, 
சென்னை,
மருத்துவர். ப. செல்வ சண்முகம்.

தொடர்பிற்கு: 98948 28968

Sunday, 24 January 2016

உலக சித்த மருத்துவ அறக்கட்டளை நடத்தும் இலவச சித்த மருத்துவமுகாம் - 26-01-2016

அன்புடையீர் வணக்கம்,

அண்மையில் சென்னையைத் தாக்கிய பேரிடரினைத் தொடர்ந்து ஏற்பட்ட நலக்குறைவினையும் நோய்களையும் நீக்கும் பொருட்டு உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் சார்பாக இலவச சித்த மருத்துவ முகாம் சென்னையில் நடைபெற உள்ளது
.

நிகழ் நாள் : 26.1.2016, செவ்வாய்க்கிழமை
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 3.30 வரை
நிகழிடம் : சென்னை செ.தெ.நாயகம் தியாகராய நகர் மேல்நிலை பள்ளி, 31,வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர் , சென்னை-600017.

இந்த நிகழ்ச்சியில் தாங்கள் தங்கள் ஊடகத்தின் சார்பாக கலந்துகொண்டு இந்நிகழ்வினை மக்களுக்கு எடுத்துச் செல்லவும்.

அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது,  இணைப்பினைக் காண்க.

நன்றி.
இப்படிக்கு,
தலைவர், உலக சித்த மருத்துவ அறக்கட்டளை, 
சென்னை,
மருத்துவர். ப. செல்வ சண்முகம்.

தொடர்பிற்கு: 98948 28968


Friday, 22 January 2016

Representation to Prime Minister, Chief Minister - Reg National Liquor Policy- Revenue Loss Compensation..

Satta Panchayat: Press Release: 22-01-2016


Representation to Prime Minister, Chief Minister - Reg National Liquor Policy- Revenue Loss Compensation..


http://spipressrelease.blogspot.in


Senthil Arumugam, General Secreatary,
Satta Panchayat Iyakkam
8754580274


Thursday, 7 January 2016

PRESS RELEASE: Reg PIL on VAO...கிராமத்தில் தங்காத VAOக்கள் குறித்த விவரங்களை புகாராக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க பொதுமக்களுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் வேண்டுகோள்…

PRESS RELEASE: 07-01-2016

Within 3 months take action against VAOs who were not residing in their duty villages.. Today,Madras highcourt gives order in Satta Panchayat Iyakkam's Public Interest Litigation..


We requests public, voluntary organisation to report to Collector, if the local VAO is not residing in village. Also send a copy to Satta Panchayat, which will be compiled and submitted in court after 3 months. 


DETAILED PRESS RELEASE, COURT AFFIDAVIT is attached.


Siva Elango, President, Satta Panchayat Iyakkam
8754580274, 8754580270

பணிசெய்யும் கிராமத்தில் தங்காத கிராமநிர்வாக அலுவலர்கள்(VAO) மீது 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு… 


                  
- சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடுத்த பொதுநல வழக்கில் தீர்ப்பு.

கிராமத்தில் தங்காத VAOக்கள் குறித்த விவரங்களை புகாராக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க பொதுமக்களுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் வேண்டுகோள்… 

விரிவான பத்திரிகை செய்தி.. இணைப்பில்.

சிவ.இளங்கோ, தலைவர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
8754580274, 8754580270

Tuesday, 5 January 2016

illegal banner case.. Information Mismatch in Govt.affidavit.. ??

To the Editor:


​

Today PIL submitted by Satta Panchayat Iyakkam(WP:41107) came for hearing. Govt. submitted details about the permissions given for banners with regards to ADMK general council meeting(which happened on 31st dec). In the affidavit, you can see that all the permissions were applied on 30th dec and they got permission on the same day.. 

Please refer to the attached affidavit page: In this, out of 350 banners, permission application for 60 banners were applied on 30th Dec, but the payment for the banner was done on 28th and 29th Dec.. This looks odd.
There are chances for malpractices. We are bringing the issue to the media's attention. Please inquire & highlight the issue, if there is a malpractice..

Senthil Arumugam,
General Secretary,
Satta Panchayat Iyakkam,
8754580274

சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடுத்த பொதுநல வழக்கில், இன்று அரசு தாக்கல் செய்த ஆவணத்தில் 60 பேனர்களுக்கு 30 டிசம்பர் அன்றுதான் விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது; ஆனால் 28டிசம்பர், 29 டிசம்பர் அன்று பேனர்கள் வைக்க பணம் கட்டிவிட்டார்கள் என்று தகவல் உள்ளது(இணைப்பில் பார்க்கவும்). இதில் உள்ள முரண்பாடுகளை ஊடகங்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம். விசாரித்து இதுகுறித்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அரசின் அறிக்கையில், 350 பேனர்களுக்கும் சட்ட பஞ்சாயத்து இயக்கம், டிராபிக் இராமசாமி ஆகியோர் வழக்கு தொடுத்த டிசம்பர்30ம் தேதியன்றுதான் பேனர்வைக்க அனுமதி கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. அனுமதியும் டிசம்பர் 30ம்தேதியே கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செந்தில் ஆறுமுகம்,
பொதுச்செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
87545-80274

Saturday, 26 December 2015

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை - தமிழிசை விழா, டிசம்பர் 29, 2015, சென்னை.

அன்புடையீர் வணக்கம்,

 

அமெரிக்காவில் இயங்கும் 45-க்கும் மேற்பட்ட தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America - FeTNA, www.Fetna.org) அமெரிக்காவில் தமிழ் மரபைப் பேணிப் பாதுகாக்கவும்,அடுத்த தலைமுறையினர் தமிழை பயன்பாட்டில் கொள்ளவும் பல்வேறு தமிழ்க் காப்புப் பணிகளை  செய்து வருகிறது. இதன் அமைப்பு,  தமிழர்களின் தாயகமான தமிழகத்தில் தமிழிசைப் பணியை முன்னெடுக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழிசை விழாவை நடத்திக் கொண்டுள்ளது. சென்னையில் உள்ள இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 11-ஆம் ஆண்டு விழாவில், 3-ஆவது ஆண்டாக தொடர்ந்து தமிழிசை விழாவை மிகச்சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகச்சியில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.நாஞ்சில் இ.பீற்றர், முன்னாள் தலைவர்கள் திரு.கருப்பையா சிவராமன் மற்றும் முனைவர் V.G.தேவ் , வி.ஐ.டி வேந்தர் முனைவர் ஜி.விஸ்வநாதன் , தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் க.பாஸ்கரன், வேளான்மைத்துறை செயலர் செ.இராஜேந்திரன் IAS, தமிழக நிதித்துறை செயலாளர் திரு.உதயசந்திரன்  IAS, விஜிபி குழுமம் தலைவர் முனைவர் வி.ஜி.சந்தோசம்  மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மக்கள் தொடர்புக்குழு  ஒருங்கிணைப்பாளர் திரு.கொழந்தவேல் இராமசாமி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். (இணைப்பினைக் காண்க)

 

தமிழிசை ஆர்வலர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள்  கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் தாங்கள் தங்கள் ஊடகத்தின் சார்பாக கலந்துகொண்டு தமிழிசை விழாவினை மக்களுக்கு எடுத்துச் செல்லவும், தமிழிசை வளர்ச்சிக்கு கைகொடுக்கவும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் இசைக்கடல் பண்பாட்டு நடுவம் ஆகியவற்றின் சார்பில் அன்போடு அழைக்கிறோம்.

 

நாள்: 29.12.2015, செவ்வாய்க் கிழமை, பிற்பகல் 2 மணி முதல்.8:30 மணி வரை
இடம்: ஆனந்த் சந்திரசேகர் அரங்கம் , 56, தம்பையா சாலை, மேற்கு மாம்பலம்

 

 

 

நன்றி.
தமிழிசை விழாக் குழுவினர்

 

தொடர்பிற்கு:
கொழந்தவேல் இராமசாமி, மக்கள் தொடர்புக்குழு  ஒருங்கிணைப்பாளர்-வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை,8056704095
திருபுவனம் G. ஆத்மநாதன், நிறுவனர், இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை, 9380125989