Friday, 29 July 2016

உலக சித்தர் மரபு திருவிழா 2016 - World Siddha Trust

அன்புடையீர் வணக்கம்,

உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் சார்பாக பணிவான வணக்கத்தைத்  தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய அறக்கட்டளை 16/08/2016 அன்று தமிழக  அரசின் நலத்துறை செயலர் மரு. J.இராதாகிருஷ்ணன், இஆ.ப. அவர்களால் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஓர் ஆண்டில் பொது மக்களுக்கான நலம் தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள், இலவச சித்த மருத்துவ சிகிச்சை முகாம்கள், சித்த மருத்துவ மாணவர்களுக்கானப் பயிற்சிப் பட்டறைகள் மற்றும் பல அறம் சார்ந்த நிகழ்வுகளை நடத்தி வருகின்றோம்.

அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவினை உலக சித்தர் மரபு திருவிழாவாக இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 13,14 (சனி,ஞாயிறு) ஆகிய இருநாட்களில் கண்காட்சி , கருத்தரங்கம் , கலைநிகழ்ச்சிகள் , ஆய்வரங்கம், சித்த மருத்துவ முகாம்  உள்ளிட்ட பல்வேறு செய்லபாடுகளை உள்ளடக்கி அடையாரில் உள்ள  டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.  இந்த இருநாள் நிகழ்வில் மூலிகைக்கண்காட்சி, எளிய வீட்டு மருத்துவம், மரபு உணவு
கண்காட்சி, மரபு விதைகள் கண்காட்சி, மரபு வேளாண்மைக் கண்காட்சி, மரபு விளையாட்டு மற்றும் பயிற்சிப்பட்டறைகள், சித்த மருத்துவ முகாம், அறிஞர்களின் சொற்பொழிவுகள், மரபு கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை உள்ளடக்கி மரபு திருவிழாவாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இதில் சிறப்பு விருந்தனர்களாக:

·         Dr. J.Radhakrishnan IAS( Health Secretary, Govt. of Tamilnadu)
·         Mr. Mohan Pyare, IAS (Indian Medicine & Homoeopathy, Govt. of Tamilnadu)
·         Mr. Udayachandran IAS(Managing Director, Tamil Nadu Salt Corporation)
·         Mr. M.Ravi, IPS (CVO, Aavin)
·         Mr. Balachandran IAS (Former Addl. Chief Secretary WB.)
·         Dr. R.S. Ramaswamy (Director General, CCRS)
·         Dr. G.Arivoli (Director School Education)
·         Mr. V.Kumar (Joint Director School Education)
·         Dr. Latha Rajendran (Correspondent, Dr. MGR Janaki College)
·         Mr. Nassar (President, South Indian Artistes' Association)
·         Mr. Cheran (Director)
·         Pavalar Arivumathi
·         Mr. Livingston (Actor)
·         Dr. V.G.Santhosam (Chairman, VGP Group of Companies)
·         Thavathiru Maruthachala Adigal (Perur Mutt)
·         Dr. C. Subramaniam (Former VC, Tamil University)
·         Mr. Athmanathan (Tamizhisai)
·         Orissa Balu (Tamil Researcher)
·         Mr. P.Rajendran (Editor, Gnayiru Osai, Malaysia)           
·         Mrs. Sabitha (Evangelist Traditional Games & Education)
·         Mr. Arupathy Kalyanam (General Secretary, Federation of Farmers Associations-Cauvery Delta)
·         Dr. B.Michel Jeyaraj (President, Ulaga Tamil Maruthuva Kazhagam)

இந்த இனிய விழாவில் தாங்களும் தங்கள் பத்திரிக்கை குழுமமும் கலந்து கொண்டு இவ்விழாவினை பற்றிய நிகழ்வுத் தொகுப்பினை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

தங்கள் உண்மையுள்ள,
மரு. ப.செல்வசண்முகம்
தலைவர் உலக சித்த மருத்துவ அறக்கட்டளை, சென்னை,
செயலர் இந்திய நலவாழ்வு நல்லறம், சென்னை,
ஆய்வுப் பேராசிரியர் WORLD INSTITUTE OF SCIENTIFIC EXPLORATION, USA.

தொடர்பிற்கு: 98948 28968

www.WorldSiddha.org | www.facebook.com/WorldSiddha

Tuesday, 19 July 2016

The Guru and the FARC- a film about peace in the times of conflict



Dear Editor,

Bangalore, 19 July 2016: In June, The Colo
mbian Government and the Revolutionary Armed Forces of Colombia (FARC) signed a historic peace pact that ended a 52-year-old armed conflict that has cost over 220,000 lives and displaced more than 5 million people. 

Today, in a world torn by strife, inter-racial or communal violence and total breakdown of communication, be it in Kashmir or the US or France, what happened in Colombia in June 2016, is a historic anomaly. Does India's spiritual prowess have an answer to the ongoing conflicts in the world?

As India celebrates the ancient tradition of Guru Purnima today,honoring the lineage of masters and seers, who have gifted the knowledge of peace and spirituality to the world,  here is a powerful documentary film (Length-12 minutes) made by Argentinian filmmaker, Paula Schargorodsky, that talks about Colombia's Indian connection. 

It discusses the crucial role played by Indian Spiritual Guru and humanitarian leader, Founder of The Art of Living, Sri Sri Ravi Shankar in the peace process that ended one of the bloodiest conflicts in the region.

On this Guru Poorinma day, do run this on your TV channel.

if you need further information, kindly get in touch with us.. 



Warm Regards

Rajalakshmi
Media Co-ordinator - Tamil Nadu
9884017767



The Art of Living Tamilnadu

VYAKTI VIKAS KENDRA TAMILNADU, 
No:55/58, 5TH CROSS ST., TRUSTPURAM, 
KODAMBAKKAM, CHENNAI-24. 
Ph:044 4213 3203 / 89399 02444


Tuesday, 12 July 2016

Railway Station Amenities SOCIAL AUDIT : Press Meet : 13/07/2016, 2pm, PARK Station.. 2pm... சட்ட பஞ்சாயத்து இயக்கம் ரயில் நிலையங்களில் நாளை கள ஆய்வு...

தமிழ் அறிக்கை கீழே...

To the Editor:

Followup of the PIL filed up Satta Panchayat Iyakkam is coming up for hearing in highcourt(1st bench) on Friday(July15th). On this day, railway officials suppose to submit the status report of toilet, drinking water amenities provided in all stations(Chennai,suburban). As a petitioner, we are going to conduct social audit(Inspection) in selective stations to cross the amenities and the collective report will be submitted during the case hearing. In this regard, 3 teams of Satta panchayat executives( 1. velachery-Park 2. Avadi - Central 3. Tambaram-park) conducting inspection tomorrow(July13th) at 10am to 1pm and the results of the survey will be shared with press at 2pm in PARK Station.

Thanks,
Senthil Arumugam,
General Secreatary, Satta Panchayat Iyakkam,
87545-80274, 87545-80270


சட்ட பஞ்சாயத்து இயக்கம் ரயில் நிலையங்களில் கள ஆய்வு..
காலை 10மணி- மதியம் 1 மணி (புதன்,13/7/2016)...
பத்திரிகையாளர் சந்திப்பு: புதன், 13/7/2016, மதியம் 2 மணி, பார்க் ரயில் நிலையத்தில்.
8754580274,8754580270

வணக்கம்,
இரயில் நிலையங்களில் கழிப்பறை,குடிநீர் வசதி ஏற்படுத்தித்தரவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் பிப்ரவரி 2016ல் தொடர்ந்த  பொதுநலவழக்கு வருகிற வெள்ளியன்று(ஜீலை 15) 3வது முறையாக மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. அதுசமயம், ரயில்வே நிர்வாகம் சென்னை மற்றும் புறநகர் பகுதி ரயில் நிலையங்களில் தாங்கள் ஏற்படுத்தியுள்ள  அடிப்படை வசதிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர். மனுதாரர் என்ற அடிப்படையில், தேர்ந்தெடுத்த சில ரயில்நிலையங்களில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் நாளை(ஜீலை 13) காலை 10மணி முதல் மதியம் 1மணிவரை அடிப்படை வசதிகள் உள்ளனவா என்று ஆய்வு செய்ய உள்ளனர். தாம்பரம்-பார்க், வேளச்சேரி -பார்க், ஆவடி-செண்ட்ரல் போன்ற 3 வழித்தடங்களில் 3 குழுவாகப் பிரிந்து ஆய்வுசெய்ய உள்ளோம். ஆய்வு முடிவுகளை 2 மணிக்கு "பார்க் ரயில் நிலையத்தில்" நடைபெறவுள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட உள்ளோம்.
இந்த 3 குழுவினரின் அறிக்கை, புகைப்பட ஆதரங்களைத் தொகுத்து வெள்ளியன்று நடைபெறவுள்ள வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதியிடம் கொடுக்க உள்ளோம்.


செந்தில் ஆறுமுகம்,
பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
8754580274, 8754580270

Tuesday, 5 July 2016

கவிஞர் அறிவுமதி எழுதிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் அமெரிக்க தமிழ்விழாவில் வெளியிடப்பட்டது

அன்புடையீர் வணக்கம்,
 
கீழ்கண்ட செய்தியை தங்கள் ஊடகத்தில் வெளியிட்டு மக்களுக்கு தமிழ் பிறந்தநாள் பாடலை கொண்டுசெல்ல  உதவுமாறு தாழ்மையுடன்  கேட்டுக்கொள்கிறோம் ..
 
 
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை(FetNA) 2016 தமிழ் விழாவில், கவிஞர் அறிவுமதி எழுதிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் வெளியிடப்பட்டது.
 
பேராசிரியர் டாக்டர் கோ அன்பு கணபதி, திரு. பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் பாடலை வெளியிட கனடாவிலிருந்து வந்திருந்த ப்ரெண்டா பெக், டாக்டர் சுபாஷிணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
 
பிசாசு பட இசையமைப்பாளர் அரோல் கரோலி இசையமைப்பில் பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் மற்றும் அவரது மகள் உத்ரா உன்னி கிருஷ்ணன் இந்த பாடலை பாடியுள்ளார்கள். நீண்ட காலம் நீடு வாழ வேண்டும்... என்று தொடங்கும் இந்த பாடல் பிறந்த நாள் வாழ்த்துடன் நிறைவு பெறுகிறது.
 
உலகத் தமிழ்க் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல் பரிசாக, இதை வெளியிடுவதாக கவிஞர் அறிவுமதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். மேலும், உலகத் தமிழர்கள் இந்தப் பாடலை, தங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் விழாவில் பாடி, தமிழில் வாழ்த்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
வலைத் தமிழ் இணையத்தளம் சார்பில்  இந்த பாடல் தயாரிப்பு மற்றும் வெளியீட்டிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
 
 பாடல் வரிகளை மனனம் செய்ய நீங்கள் சிரமப்பட வேண்டாம் என்பதற்காக கீழே வரிகள்:
 
நீண்ட நீண்ட காலம்
 
நீ நீடு வாழ வேண்டும்
 
நீண்ட நீண்ட காலம்
 
நீ நீடு வாழ வேண்டும்
 
வானம் தீண்டும் தூரம்
 
வளர்ந்து வாழ வேண்டும்
 
அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
 
பண்பு வேண்டும் பணிவு வேண்டும்
 
எட்டுத்திக்கும் புகழ வேண்டும்
 
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்
 
உலகம் பார்க்க உனது பெயரை
 
நிலவுத் தாளில் எழத வேண்டும்
 
சர்க்கரை தமிழள்ளி தாலாட்டு நாள்சொல்லி வாழ்த்துகிறோம் ...
 
பிறந்தநாள் வாழ்த்துகள் ... பிறந்தநாள் வாழ்த்துகள் ...
 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
 
-கவிஞர் அறிவுமதி
 
 
 
நன்றி.
அ.சுரேஷ்
Info@ValaiTamil.Com
 




Friday, 24 June 2016

PRESS RELEASE: "No More New TASMAC Shops" Satta Panchayat demands Policy Announcement : ”புதிதாக மதுக்கடைகள் திறக்கப்படாது” என்று தமிழக அரசு அறிவிக்கவேண்டும்...

புதிதாக மதுக்கடைகள் திறக்கப்படாது" என்று தமிழக அரசு அறிவிக்கவேண்டும்...

                - சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை

தமிழக அரசு மதுவிலக்கை அமல்படுத்தும் முயற்சிகளின் முதற்கட்டமாக டாஸ்மாக் விற்பனை 2 மணிநேரம் குறைப்பு, 500 மதுக்கடைகள் மூடல் போன்ற நடவடிக்கைகள் எடுத்தது வரவேற்புக்குரியது. பொதுமக்கள் போராட்டங்கள் நடத்திய மதுக்கடைகள், பள்ளி-கல்லூரி-வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள், சந்தை போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள மதுக்கடைகள், அதிகம் பேர் குடிக்கும் மதுக்கடைகள்(அதிக வருமானம் உள்ள கடைகள்) போன்ற கடைகளைப் பட்டியலிட்டு மூடியிருந்தால் இம்முயற்சி மிகுந்த பலனைத் தந்திருக்கும்.

2013ல் நடைபெற்ற நிகழ்வோடு பொருத்திப்பார்க்கும்போது ஒரு சந்தேகம் எழுகிறது. 2013ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலையின் அருகில் இருந்த 504 மதுக்கடைகள் மூடப்பட்டன. ஆனால், 2015ல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்திலுள்ள  மதுக்கடைகளின் எண்ணிக்கை குறித்தான பட்டியலை வாங்கிப் பார்த்தபோது மொத்த எண்ணிக்கை குறையவில்லை என்ற விவரம் தெரியவந்தது. இதுகுறித்து மேலும் ஆராய்ந்தபோது, மூடப்பட்ட கடைகளில் மிகப்பெரும்பாலான கடைகள்  அருகிலோ வேறு இடத்திலோ திறக்கப்பட்டது தெரியவந்தது. 
இதுபோன்ற நடைமுறையில் மூடப்பட்ட 500 மதுக்கடைகள் வேறு இடத்தில் திறக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. ஆகவே, தமிழக அரசு "..இனிமேல் புதிதாகவோ, மூடப்பட்ட மதுக்கடைகளை இடமாற்றம் செய்தோ டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு/டாஸ்மாக் நிர்வாகம் அறிவிக்கவேண்டும்" 

அதேபோல், அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு பார்களை மூடுதல், மறுவாழ்வு மையங்கள் துவங்குதல் போன்றவற்றில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

கேரளா அரசானது ஆண்டுக்கு 10% மதுக்கடைகளை மூடி 10 ஆண்டுகள் அனைத்து மதுக்கடைகளையும் மூடிவிடுவோம் என்று தெளிவான காலவரையறை கொண்ட திட்டத்தை அறிவித்துள்ளது. அதுபோல், தமிழக அரசும் பூரண மதுவிலக்கை நோக்கிய தனது திட்டம் என்ன என்பதை(காலவரையறையோடு) அறிவிக்கவேண்டும்.

செந்தில் ஆறுமுகம்,
மாநில பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
8754580274

Wednesday, 22 June 2016

ஊடக வெளியீடு - சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். Media Release - Tamilnadu Assembly Proceedings should be telecasted Live

<Please scroll down for the English version>

 

ஊடக வெளியீடு  (22-ஜூன்-16)

 

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்

 

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான திரு.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளதை காட்சி மற்றும் ஊடகங்களின் இணையதளம் மூலம் அறிகிறேன்.

 

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்று 2012 முதல் பல்வேறு கையெழுத்து இயக்கங்கள், போராட்டங்கள், அரசிடம் மனு ஆகியவை லோக்சத்தா கட்சி சார்பாக செய்துவந்துள்ளேன். கடைசியாக 2012 ஆம் ஆண்டு இதற்காக லோக்சத்தா சர்பாக நான் ஒரு பொது நல வழக்கும் தொடர்ந்தேன். வழக்கை தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வந்த அரசு கடைசியாக, சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய  60 கோடி வரை செலவாகும் என்றும் அவ்வளவு நிதி அரசிடம் இல்லை என்றும் பொய்யுரைத்தது.

 

அதன் பிறகும் லோக்சத்தா சார்பாக திமுக உள்ளிட்ட எல்லா அரசியல் கட்சிகளையும் சந்தித்து இது தொடர்பாக மனு கொடுத்து எங்கள் கோரிக்கையை வலியுறுத்தினோம். தமிழகத்தில் அதிமுக தவிர்த்து எல்லா கட்சிகளும் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதையே விரும்புகிறார்கள்.

 

இன்றும் ஆளுநர் உரை பொதிகை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதும், சட்டமன்றத்தின் எல்லா நிகழ்வுகளும் தினம் பதியப்பட்டு வருவதும் எல்லோரும் அறிந்ததே. ஆக இதற்காக அரசுக்கு 60 கோடி செலவு ஏற்படும் என்பது முதல் பொய். அதே சமயம் 60 கோடி கூட இல்லாத நிதிப் பற்றாக்குறையில் ஒரு அரசு இயங்குகிறது என்பது எந்த காலத்திலும் நகைப்புக்குரியதே,

 

கடந்த அரசை விட இந்த முறை அதிகமான எதிர்க்கட்சி உறுப்பினர்களாக  தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் கேட்கும் கேள்விகள், செய்யும் விவாதங்கள் இந்தமுறையும் இருட்டடிப்பு செய்யப்படுவதை மக்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். ஆளுங்கட்சி பேசுவதை மட்டும் காட்சி ஊடகங்களுக்கு வழங்கும் போக்கும் இனி செல்லாது. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிக்கும் முக்கியமான பங்கிருப்பதால்தான் பெருவாரியான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு மக்களால் அனுப்பப்பட்டுள்ளார்கள் என்பதை ஆளும் அரசும் உணர்ந்து சட்டமன்ற நேரடி ஒளிபரப்பை உடனடியாக ஆவணம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

ஒரு வேளை மீண்டும் ஏதாவது காரணம் சொல்லி அரசு இழுத்தடிக்கும் பணியில் ஈடுபட்டால், எதிர்க்கட்சிகள் இணைந்து சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

 

 

- தெ.ஜெகதீஸ்வரன்

அரசியல் செயற்பாட்டாளர்

9791050512

 

----------------------------------------------------

 

Media Release (22-06-2016) 

 

Tamilnadu Assembly Proceedings should be telecasted Live

 

 

I understand from Visual Media & Internet that TN Opposition Leader & DMK Treasurer Thiru.M.K.Stalin demands to Live Telecast TN Assembly proceedings. This is a welcome move.

 

Right from 2012, Loksatta is demanding for Live Telecast of Assembly proceedings through various demonstrations, petitions and signature campaigns and I was part of it.And it 2012, I have filed a petition on behalf of Loksatta in Madras High Court which is pending with the court since the Govt is dragging it for many years. During the last tenure, this Govt lied that around 60 crores will be needed to telecast the Assembly proceedings Live for infrastructure and other expenses.

 

Loksatta delegates met various political parties including DMK treasurer M.K.Stalin and demanded that they talk about this in the Assembly. All parties except ADMK is of the opinion that the Assembly should be telecasted Live.


Even today the Governor speech at the first day of the Assembly is Live in Podhigai channel and all the proceedings are recorded. So the Govt saying that it needs 60 crores for infrastructure is a blatant lie. At the same time it is laughable at any time to know that the Govt does not have 60 crores to spend on this.


Compared to the last tenure, this demand gets more importance now, since the number of opposition members is huge and the people have elected them in more number to save & uplift Democracy through meaningful debates. One cannot be continuously cheated by giving the visual media the edited portions where only the ruling party members speak. We urge the Govt to understand the people's mandate and start telecasting the Assembly proceedings Live immediately.


If the ruling Govt is still hesitant to do this, we request the Opposition parties to bring a resolution in the Assembly for the same.



- Jagadheeswaran.D

Political Activist

Mob: 9791050512

fb.com/jagadheeswaran.dhakshinamoorthy

 

Sunday, 29 May 2016

சட்ட பஞ்சாயத்து இயக்க தலைவர் சிவ இளங்கோ மற்றும் மாநில செயலாளர் ஜெய் கணேஷ் ஆகியோர் மீது வழக்கறிஞர்கள் கொலைவெறி தாக்குதல். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது அமர்ந்து இருந்ததற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் அமரலாம் என்ற நீதிமன்ற உத்தரவை போன வருடம் சட்ட பஞ்சாயத்து இயக்கம் போராடி வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 25 வக்கீல்கள் இப்பொழுது இவர்கள் இருவரும் வெளியே வந்தால் கொலை செய்வோம் என்று கோஷமிட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகம்.
தற்பொழுது இருவரும் நீதிமன்ற வளாகத்தில் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் செய்து வருகின்றனர்.
Siva Ilango - 8754580270
Jai Ganesh - 8870472177



நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


​Satta Panchayat Iyakkam, 

|  31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Member : member.sattapanchayat.org |  Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

" Aiyarathil Oruvan " : 1001.sattapanchayat.org

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team : spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269