Tuesday, 5 July 2016

கவிஞர் அறிவுமதி எழுதிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் அமெரிக்க தமிழ்விழாவில் வெளியிடப்பட்டது

அன்புடையீர் வணக்கம்,
 
கீழ்கண்ட செய்தியை தங்கள் ஊடகத்தில் வெளியிட்டு மக்களுக்கு தமிழ் பிறந்தநாள் பாடலை கொண்டுசெல்ல  உதவுமாறு தாழ்மையுடன்  கேட்டுக்கொள்கிறோம் ..
 
 
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை(FetNA) 2016 தமிழ் விழாவில், கவிஞர் அறிவுமதி எழுதிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் வெளியிடப்பட்டது.
 
பேராசிரியர் டாக்டர் கோ அன்பு கணபதி, திரு. பாலச்சந்திரன் ..எஸ், பேராசிரியர் .ராமசாமி ஆகியோர் பாடலை வெளியிட கனடாவிலிருந்து வந்திருந்த ப்ரெண்டா பெக், டாக்டர் சுபாஷிணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
 
பிசாசு பட இசையமைப்பாளர் அரோல் கரோலி இசையமைப்பில் பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் மற்றும் அவரது மகள் உத்ரா உன்னி கிருஷ்ணன் இந்த பாடலை பாடியுள்ளார்கள். நீண்ட காலம் நீடு வாழ வேண்டும்... என்று தொடங்கும் இந்த பாடல் பிறந்த நாள் வாழ்த்துடன் நிறைவு பெறுகிறது.
 
உலகத் தமிழ்க் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல் பரிசாக, இதை வெளியிடுவதாக கவிஞர் அறிவுமதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். மேலும், உலகத் தமிழர்கள் இந்தப் பாடலை, தங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் விழாவில் பாடி, தமிழில் வாழ்த்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
வலைத் தமிழ் இணையத்தளம் சார்பில்  இந்த பாடல் தயாரிப்பு மற்றும் வெளியீட்டிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
 
 பாடல் வரிகளை மனனம் செய்ய நீங்கள் சிரமப்பட வேண்டாம் என்பதற்காக கீழே வரிகள்:
 
நீண்ட நீண்ட காலம்
 
நீ நீடு வாழ வேண்டும்
 
நீண்ட நீண்ட காலம்
 
நீ நீடு வாழ வேண்டும்
 
வானம் தீண்டும் தூரம்
 
வளர்ந்து வாழ வேண்டும்
 
அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
 
பண்பு வேண்டும் பணிவு வேண்டும்
 
எட்டுத்திக்கும் புகழ வேண்டும்
 
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்
 
உலகம் பார்க்க உனது பெயரை
 
நிலவுத் தாளில் எழத வேண்டும்
 
சர்க்கரை தமிழள்ளி தாலாட்டு நாள்சொல்லி வாழ்த்துகிறோம் ...
 
பிறந்தநாள் வாழ்த்துகள் ... பிறந்தநாள் வாழ்த்துகள் ...
 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
 
-கவிஞர் அறிவுமதி
 
 
 
நன்றி.
அ.சுரேஷ்
Info@ValaiTamil.Com
 




No comments:

Post a Comment