பத்திரிகை செய்தி -29 - July - 2016
தமிழில் ஒரு பிறந்தநாள் பாடல் (Birthday Song in TAMIL)
வணக்கம்,
தமிழில் சமீபத்தில் பாவலர் அறிவுமதி எழுதி, பசங்க 2, பிசாசு போன்ற படங்களின் இசையமைப்பாளர் அரோல் கரோலி இசையமைப்பில், பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் மற்றும் அவரது மகள் உத்ரா உன்னி கிருஷ்ணன் பாடி வலைத்தமிழ்.காம் (www.ValaiTamil.Com) தயாரித்து, வெளியிட்ட பிறந்தநாள் பாடல் இரண்டு வாரங்களில் உலகெங்கும் வாழும் நான்கு கோடி தமிழர்களிடம் சென்றடைந்து மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது .
இது இன்று குழந்தைகளும், பெற்றோர்களும் முனுமுனுக்கும் பாடலாக தமிழ் மக்களிடம் சென்றடைந்து அவர்களின் பிறந்தநாள் விழாக்களில் பயன்படுத்தும் ஒன்றாக மாறியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அதிக மக்களிடம் பகிரப்பட்ட ஒரு தமிழ்ப்பாடலாக இது விளங்குகிறது. இதுவரை ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா , சிங்கப்பூர் என்று உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகள் இந்தப்பாடலை வெளியிட்டு அங்குள்ள தமிழ்மக்களின் பிறந்தநாளில் இதைப் பயன்படுத்துகிறார்கள் என்ற செய்திகள் தொடர்ந்து பகிரப்படுகிறது. வெளிநாட்டில் ஒருசில தமிழ்ப்பள்ளி பாடத்திட்டங்களில் இந்தப்பாடலை சேர்க்க முடிவெடுத்துள்ளார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தி வந்துகொண்டுள்ளது.
மக்களின் நீண்டநாள் எதிர்ப்பார்ப்பாக இருந்ததை உணர்ந்த வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருக்கும் பரிவிளாகம் ச. பார்த்தசாரதி,பாவலர் அறிவுமதி அவர்களை சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் சந்தித்தபோது அவர் பாடிய வரிகள் பிடித்துபோக உடனே இதை மக்களுக்கு பிடித்த இசையும் , வாழ்த்து வரிகளும் கொண்டு எந்த வயதினரும் பயன்படுத்தும் பாடலாக கொண்டுவர முடியுமா என்று கேட்க, அது இன்று சாத்தியமாகியுள்ளது. ஆங்கிலத்தில் பாடுவதற்கு மாற்றாக தமிழிலேயே வாழ்த்த வயது வேறுபாடு இல்லாமல், எல்லா வயதினரும் பயன்படுத்த ஒரு தமிழ்ப்பாடல் கிடைத்துவிட்டது. பாடலின் ஆழமான வாழ்த்து வரிகளும் , இசையும் , குரலும் பல ஊடங்கங்களைக் கவர்ந்ததன் விளைவாக இதுவரை தமிழகத்தின் பெரும்பாலான ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டும், தொலைக்காட்சிகள் இந்தப்பாடலை தொடர்ந்து ஒளிபரப்பியும் மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளன. சமூக வலைத்தளங்களில் இன்றும் ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் கேட்டு , பகிரும் பாடலாக வெற்றியடைந்துள்ளது. இந்த நேரத்தில் ஊடக -தொலைக்காட்சிகள் அனைவருக்கும் எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். நம் கவனத்திற்கு வந்த பெரும்பாலான ஊடகத்தில் வந்த செய்திகள் இங்கே www.valaitamil.com/tamilbirthday தொகுக்கப்பட்டுள்ளன . மேலும் 55 நொடிகளில் பாடக்கூடிய வகையில் சுருக்கி பயன்படுத்த ஏற்ற வகையில் இந்தப்பாடலை MP3 யாக டவுன்லோட் செய்யவும், பாடலின் வரிகளும் இந்தப்பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. "நீண்ட நீண்ட காலம், நீடு வாழ வேண்டும்... " என்று தொடங்கும் இந்த பாடல் பிறந்த நாள் வாழ்த்துடன் நிறைவு பெறுகிறது. உலகத் தமிழ்க் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல் பரிசாக, இதை வழங்குவதாக கவிஞர் அறிவுமதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். மேலும், உலகத் தமிழர்கள் இந்தப் பாடலை, தங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் விழாவில் பாடி, தமிழில் வாழ்த்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களின் கோரிக்கையை ஏற்று கைபேசிகளில் ஒலிக்க காலர் டியூனாக வரவுள்ளது.
ஒரு சில ஊடகங்களில் ஒளிபரப்ப தணிக்கைச் சான்றிதழ் கேட்டதால் தணிகை சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. தணிக்கை சான்றிதழ் தேவையான ஊடகங்கள் info@ValaiTamil.com-க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
இந்தப்பாடல் ஜுலை 3, நியூஜெர்சி மாநிலத்தில் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை( FetNA) விழாவில், சித்த மருத்துவர் கோ. அன்பு கணபதி, திரு. பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் பாடலை வெளியிட கனடாவிலிருந்து கலந்துகொண்ட ப்ரெண்டா பெக், ஜெர்மனியிலிருந்து கலந்துகொண்ட தமிழ் மரபு அறக்கட்டளையின் டாக்டர் சுபாஷிணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து வாசிங்க்டன் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் , தமிழ்ப்பள்ளிகளில் இந்தப்பாடல் வெளியிடப்பட்டு வருகிறது .
பாடல் வரிகள்
நீண்ட நீண்ட காலம்
நீ
நீடு வாழ வேண்டும்!
வானம் தீண்டும் தூரம்
நீ
வளர்ந்து வாழ வேண்டும் !
அன்பு வேண்டும்!
அறிவு வேண்டும்!
பண்பு வேண்டும்!
பரிவு வேண்டும்!
எட்டுத்திக்கும் புகழ வேண்டும்!
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்!
உலகம் பார்க்க
உனது
பெயரை
நிலவுத் தாளில்
எழுத
வேண்டும்!
சருக்கரைத் தமிழள்ளித்
தாலாட்டு
நாள்
சொல்லி
வாழ்த்துகிறோம்
பிறந்த நாள் வாழ்த்துகள்!
பிறந்த நாள் வாழ்த்துகள்!
இனிய
பிறந்த நாள்
வாழ்த்துகள்!
்்
பாடல்: பாவலர் அறிவுமதி
இசை : அரோல் கொரேலி
குரல் : உத்ரா உன்னிகிருஷ்ணன்
YouTube Links: Song: https://youtu.be/6n3tXhytP8I
Pavalar Arivumathi Introudction & Song: https://www.youtube.com/watch?v=eFoahZY1SmA
Thanthi TV | 212,531 Views | 7,028 shares | |
NEWS7 | 51,414 Views | 1,749 shares | https://www.facebook.com/news7tamil/videos/1375323222529882/ |
தமிழ் பகுத்தறிவாளர்கள்/ Tamil Rationalists முகநூல் | 309,109 Views | 16,565 shares | https://www.facebook.com/itamilrationalists/videos/1122191624508850/ |
வலைத்தமிழ் .காம் youtube | 101,215 views | ||
ஆம் நாங்கள் தமிழர்கள் | 109,397 Views | 6,641 shares | https://www.facebook.com/WeAreTamils/videos/1741064136183270/ |
நல்ல பதிவுகளை பகிர்வோம் | 334,847 Views | 22,085 shares | https://www.facebook.com/797696800352394/videos/912303532225053/ |
பல நூறு தளங்களில் தொகுக்க முடியாத அளவிற்கு பகிரப்பட்டுள்ளதால் ஒரு சில முகநூல், சமூக ஊடகங்களில் மக்களின் பார்வை விவரம் :
மேலும் இந்தப்பாடல் குறித்த விவரங்களுக்கு: www.valaitamil.com/tamilbirthday
இதுவரை இந்த செய்தியை மக்களுக்கு கொண்டுசென்று உங்கள் வாசகர்களுக்கு இசை விருந்து வழங்கிய ஊடகங்களுக்கு நன்றி! சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவரும் இந்தத் தமிழ்ப்பாடலை இதுவரை செய்தியாக கொண்டு செல்லாத ஊடங்கள் உங்கள் வாசகர்களுக்கு கொண்டு சேர்க்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
நன்றி !
வலைத்தமிழ்.காம்
No comments:
Post a Comment