Friday, 29 July 2016

உலக சித்தர் மரபு திருவிழா 2016 - World Siddha Trust

அன்புடையீர் வணக்கம்,

உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் சார்பாக பணிவான வணக்கத்தைத்  தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய அறக்கட்டளை 16/08/2016 அன்று தமிழக  அரசின் நலத்துறை செயலர் மரு. J.இராதாகிருஷ்ணன், இஆ.ப. அவர்களால் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஓர் ஆண்டில் பொது மக்களுக்கான நலம் தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள், இலவச சித்த மருத்துவ சிகிச்சை முகாம்கள், சித்த மருத்துவ மாணவர்களுக்கானப் பயிற்சிப் பட்டறைகள் மற்றும் பல அறம் சார்ந்த நிகழ்வுகளை நடத்தி வருகின்றோம்.

அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவினை உலக சித்தர் மரபு திருவிழாவாக இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 13,14 (சனி,ஞாயிறு) ஆகிய இருநாட்களில் கண்காட்சி , கருத்தரங்கம் , கலைநிகழ்ச்சிகள் , ஆய்வரங்கம், சித்த மருத்துவ முகாம்  உள்ளிட்ட பல்வேறு செய்லபாடுகளை உள்ளடக்கி அடையாரில் உள்ள  டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.  இந்த இருநாள் நிகழ்வில் மூலிகைக்கண்காட்சி, எளிய வீட்டு மருத்துவம், மரபு உணவு
கண்காட்சி, மரபு விதைகள் கண்காட்சி, மரபு வேளாண்மைக் கண்காட்சி, மரபு விளையாட்டு மற்றும் பயிற்சிப்பட்டறைகள், சித்த மருத்துவ முகாம், அறிஞர்களின் சொற்பொழிவுகள், மரபு கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை உள்ளடக்கி மரபு திருவிழாவாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இதில் சிறப்பு விருந்தனர்களாக:

·         Dr. J.Radhakrishnan IAS( Health Secretary, Govt. of Tamilnadu)
·         Mr. Mohan Pyare, IAS (Indian Medicine & Homoeopathy, Govt. of Tamilnadu)
·         Mr. Udayachandran IAS(Managing Director, Tamil Nadu Salt Corporation)
·         Mr. M.Ravi, IPS (CVO, Aavin)
·         Mr. Balachandran IAS (Former Addl. Chief Secretary WB.)
·         Dr. R.S. Ramaswamy (Director General, CCRS)
·         Dr. G.Arivoli (Director School Education)
·         Mr. V.Kumar (Joint Director School Education)
·         Dr. Latha Rajendran (Correspondent, Dr. MGR Janaki College)
·         Mr. Nassar (President, South Indian Artistes' Association)
·         Mr. Cheran (Director)
·         Pavalar Arivumathi
·         Mr. Livingston (Actor)
·         Dr. V.G.Santhosam (Chairman, VGP Group of Companies)
·         Thavathiru Maruthachala Adigal (Perur Mutt)
·         Parivilagam Sa. Parthasarathy (President, Washington Tamil Sangam)
·         Dr. C. Subramaniam (Former VC, Tamil University)
·         Mr. Athmanathan (Tamizhisai)
·         Orissa Balu (Tamil Researcher)
·         Mr. P.Rajendran (Editor, Gnayiru Osai, Malaysia)           
·         Mrs. Sabitha (Evangelist Traditional Games & Education)
·         Mr. Arupathy Kalyanam (General Secretary, Federation of Farmers Associations-Cauvery Delta)
·         Dr. B.Michel Jeyaraj (President, Ulaga Tamil Maruthuva Kazhagam)

இந்த இனிய விழாவில் தாங்களும் தங்கள் பத்திரிக்கை குழுமமும் கலந்து கொண்டு இவ்விழாவினை பற்றிய நிகழ்வுத் தொகுப்பினை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

தங்கள் உண்மையுள்ள,
மரு. ப.செல்வசண்முகம்
தலைவர் உலக சித்த மருத்துவ அறக்கட்டளை, சென்னை,
செயலர் இந்திய நலவாழ்வு நல்லறம், சென்னை,
ஆய்வுப் பேராசிரியர் WORLD INSTITUTE OF SCIENTIFIC EXPLORATION, USA.

தொடர்பிற்கு98948 28968 | 98844 11637 | 99400 28160

www.WorldSiddha.org | www.facebook.com/WorldSiddha


No comments:

Post a Comment