Sunday, 18 December 2016

Don't SHIFT but CLOSE Liquor Shops.. Satta Panchayat Press Release - 19-12-2016

To the Editor,

Tamilnadu Government should permanently close the 2000 liquor shops situated nearby National,State Highways(As per supreme court order) Civil society should ensure that these shops are not SHIFTED but CLOSED.. 
Satta Panchayat Iyakkam

8754580274

          

                    உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மூடப்படவுள்ள 2000 மதுக்கடைகளை
              இடமாற்றம் செய்யக்கூடாது… நிரந்தரமாக மூடவேண்டும்

-        சட்ட பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்தல்                      பத்திரிகை செய்தி ( 19-12-2016 )

தேசிய, மாநில நெடுஞ்சாலை அருகில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது(15.12.2016) மிகுந்த வரவேற்புக்குரியது. இவ்வுத்தரவால் தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலை அருகில் உள்ள 2000 மதுக்கடைகள் மூடப்பட வாய்ப்புள்ளது. இக்கடைகள் மூடப்படுவதில் பின்பற்றப்படவுள்ள வழிமுறையை ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகள் உற்று நோக்கவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

பொதுவாக மதுக்கடை ஒன்றை மூடுவதற்கு இரண்டு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பிட்ட இடத்தில் உள்ள மதுக்கடையானது மூடப்பட்டு, அதே கடையானது வேறு இடத்தில் திறக்கப்படும். இதற்கு "இடமாற்றம்"(Shifting) என்று பெயர். அந்த மதுக்கடையானது நிரந்தரமாக மூடப்பட்டால் அதற்கு "மூடுதல்"(Closure) என்று பெயர். சட்ட பஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பொதுமக்களுக்கு தொந்தரவாக உள்ள மதுக்கடைகளை எதிர்த்துப் போராடியபோது மக்களின் போராட்டத்தைத் தணிக்க டாஸ்மாக் நிர்வாகம் பெரும்பாலான நேரங்களில் "இடமாற்றத்தையே" செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


டாஸ்மாக் கடைகள் தொடர்பாக
2013ல் நடைபெற்ற நிகழ்வு ஒன்றை இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.  2013ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலையின் அருகில் இருந்த 504 மதுக்கடைகள் மூடப்பட்டன. ஆனால், இரண்டு ஆண்டுகள் கழித்து(2015ல்) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்திலுள்ள  மதுக்கடைகளின் எண்ணிக்கை குறித்தான பட்டியலை நாங்கள் வாங்கிப் பார்த்தபோது மொத்த எண்ணிக்கை குறையவில்லை என்ற விவரம் தெரியவந்தது. இதுகுறித்து மேலும் ஆராய்ந்தபோது, மூடப்பட்ட கடைகளில் மிகப்பெரும்பாலான கடைகள்  அருகிலோ வேறு இடத்திலோ திறக்கப்பட்டது தெரியவந்தது.


இப்போது, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மூடப்படவுள்ள 2000 டாஸ்மாக் கடைகளும் இதேபோன்ற நடைமுறைகளால் வேறுஇடத்தில் திறக்கப்பட வாய்ப்புள்ளது. ஊடகங்களும், பல்வேறு சமூக அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் மூடப்படும் இக்கடைகள் வேறு இடத்தில் திறக்கப்படக்கூடாது என்று குரல்கொடுக்கும் போது அரசிற்கு கூடுதல் அழுத்தம் உருவாகும். அத்தகையதொரு அழுத்தத்தை உருவாக்க வேண்டும் என்பதே இவ்வறிக்கையின் நோக்கம்.


தற்போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் மூடப்படவுள்ள
2000 மதுக்கடைகளை "இடமாற்றம்" செய்யாமல் நிரந்தரமாக மூடவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது.


அதிமுக, தனது தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என்று அறிவித்திருந்தது. அந்த அடிப்படையில் ஆட்சிப்பொறுப்பேற்றதும் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. விற்பனை நேரம் 2 மணிநேரம் குறைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை, மதுவிலக்கை அமல்படுத்தும் தனது கொள்கை முடிவின் அடுத்தகட்டமாக எடுத்துக்கொண்டு மூடப்படவுள்ள
2000 மதுக்கடைகளை வேறு இடத்தில் திறக்கமாட்டோம் என்று தமிழக அரசு / டாஸ்மாக் நிர்வாகம் அறிவிக்கவேண்டும். இது மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு
ஆளுங்கட்சியும், தமிழக அரசும் செலுத்தும் சிறப்பு அஞ்சலியாகக் கூட அமையும்.


இதேபோல், அதிமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியபடி பார்களை மூடுதல், மறுவாழ்வு மையங்களைத் துவங்குதல் போன்ற நடவடிக்கைகளில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கேரளா அரசானது ஆண்டுக்கு 10
% மதுக்கடைகளை மூடி 10 ஆண்டுகளுக்குள் அனைத்து மதுக்கடைகளையும் மூடிவிடுவோம் என்று தெளிவான காலவரையறை கொண்ட திட்டத்தை அறிவித்துள்ளது. அதுபோல், தமிழக அரசும் மதுவிலக்கை நோக்கிய தனது திட்டம் என்பதை காலவரையறையோடு அறிவிக்கவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது.


                                                                                         அண்ணாத்துரை,
                                                                    மாநில மதுஒழிப்பு அணி ஒருங்கிணைப்பாளர்
                                                                                      
87545-88222, 87545-80274

Friday, 16 December 2016

அஇஅதிமுக பொதுச் செயலாளராக திருமதி வி.கே.சசிகலா பொறுப்பேற்க கூடாது. சட்ட பஞ்சாயத்து இயக்கம் எச்சரிக்கை

அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளராக


திருமதி வி.கே.சசிகலா பொறுப்பேற்க கூடாது.


சட்ட பஞ்சாயத்து இயக்கம் எச்சரிக்கை


கால் நூற்றாண்டு காலம் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக கோலோச்சியவர். ஒரு அரசியல் இயக்கத்தை கட்டுகோப்புடன்  வழி நடத்தி காட்டியவர். துணிச்சல், திறமை, அசாத்திய நம்பிக்கையுடன் பல அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வெற்றி கண்டவர். கொள்கை ரீதியிலும், அவரது ஜனநாயகதன்மை மீதும் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், ஆணாதிக்க சமூகத்தில் அதுவும் அரசியலில் ஒரு பெண்ணாக இருந்து சாதித்து காட்டியவர் முதல்வராக இருந்து மறைந்த செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள். ஜெயலலிதாவின் மரணம் தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக  அஇஅதிமுகவில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகி உள்ளது.

அஇஅதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற பல விவாதங்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த விவாதங்கள் எல்லாம் அடுத்த பொதுச்செயலாளராக திருமதி.சசிகலா.வி.கே தான் வரவேண்டும், அவரை விட்டால் அந்த கட்சியை யார் வழிநடத்த முடியும் என திட்டமிட்டு செயற்கைதனமாக அதிமுக கட்சியிலும், தமிழக மக்கள் மத்தியிலும் கருத்து உருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. சசிகலாவுக்கு கட்சிக்குள் எதிர்ப்பே இல்லாதது போல ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். யார் வந்தால் என்ன? அது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை என்று ஒதுங்கி வேடிக்கை பார்க்க முடியாது. ஏனெனில் யார் இந்த கட்சியை வழிநடத்த முன்வருகிறார்களோ அவரின் கட்டுப்பாட்டில் தான் தமிழக அரசும் இயங்கும். அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தமிழக மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றால் நாளை அவர் முதல்வராகவும் வாய்ப்புள்ளது. இது நடந்தால் தமிழக அரசு மிகவும் மோசமான நிலைக்கு வந்துவிடும். அது அனைத்து தமிழக மக்களையும் பாதிக்கும் என்பதால் தான் திருமதி.வி.கே.சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்க கூடாது என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் எச்சரிக்கிறது.

 

ஏன் இந்த எச்சரிக்கை என்பதற்கு சில காரணங்களை உங்கள் முன் வைக்கிறோம்.


1. சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றால் தமிழக அரசு சசிகலாவின் கட்டுப்பாட்டில் இயங்கும். அதனால் சசிகலாவின் உறவினர்களின் சொல்படி தான் தமிழக அரசு இயங்கும். அரசு நிர்வாகத்தில் பல அதிகார மையங்கள் உருவாகி ஊழலில் தமிழக அரசு சிக்குண்டு தவிக்கும். ஏனெனில் ஜெயலலிதாவால் துரோகிகளாக கண்டறியப்பட்டு கட்சியை விட்டு விரட்டப்பட்டவர்களை கொண்டு கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்கள். இது கட்சிக்கும் நல்லதல்ல. குறிப்பாக ஆட்சிக்கு நல்லதல்ல.


2. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். இன்று அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஊழலில் சொத்து சேர்த்து தண்டனை பெற்றவர் ஊழல் இல்லா ஆட்சியை எப்படி கொடுக்க முடியும்?


3. இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றாலே தேர்தலில் போட்டியிட தகுதி இல்லை என்ற நிலையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஒருவர் 135 MLAக்கள் மற்றும் 54 MPக்களுக்கும் தலைமை ஏற்பது எப்படி சரியாக இருக்கும்?


4. ஜெயலலிதாவுக்கு எதிராக துரோக சதிவலை பின்னியதில் சசிகலாவுக்கும் பங்குண்டு என்பதால் சசிகலா உட்பட 14  பேரை கட்சியை விட்டு 19/12/2011 அன்று ஜெயலலிதா நீக்கினார். பிறகு சசிகலா 28/03/2012 அன்று ஜெயலலிதாவுக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்தார்.

அந்த கடிதத்தில் சசிகலா கூறியது, "அக்கா எடுத்த ஒழுங்கு நடவடிக்கைக்கு பின்பு தான் அதற்கான காரணம், பின்னணி, வெளியில் என்ன நடந்தது என்ற உண்மைகள் எனக்கு தெரிய வந்தன. அக்காவுக்கு எதிராக சதி திட்டங்கள் தீட்டப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். வேதனை அடைந்தேன். இவை எல்லாம் எனக்கு தெரியாமலேயே நடந்துள்ளன. அக்காவுக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம். இனிமேல் அவர்களுடன் எனக்கு எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை. அரசியலில் ஈடுபட வேண்டும்,கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும், அமைச்சர் பதவியை அடைய வேண்டும், ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்ற எந்த ஆசையும் எனக்கு கிடையாது. அக்காவுக்கு உண்மையான தங்கையாக இருக்கவே விரும்புகிறேன்". இந்த மன்னிப்பு கடிதம் கொடுத்த பிறகு தான் 31/03/2012 அன்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் சசிகலாவை மட்டும் கட்சியில் சேர்த்துகொள்வதாகவும் மற்ற துரோகிகளான எம்.நடராஜன், திவாகர், டி.டி.வி.தினகரன், வி.பாஸ்கரன், வி.என்.சுதாகரன், டாக்டர்.என்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன், ராவணன், அடையாறு மோகன், குலோத்துங்கன், பி.வி.மகாதேவன், தங்கமணி உள்ளிட்டோரும் மேலும் அடுத்த அறிக்கையில் கலியபெருமாள்,  எம்.பழனிவேல், வி.கிருஷ்ணமூர்த்தி, சந்தானலட்சுமி சுந்தரவனம், சுந்தரவனம், வைஜெயந்திமாலா, ஆகியோர் கட்சில் இருந்து நீக்கப்பட்டது தொடரும் என்று தெரிவித்திருந்தார். இன்று வரை மேற்கண்ட 19 பேரும் ஜெயலலிதாவின் துரோகிகள் பட்டியலில் தொடர்கிறார்கள். இந்த துரோகிகளை வைத்துக்கொண்டு சசிகலா, ஜெயலலிதாவின் இறுதி சடங்கில் சகுனி ஆட்டம் ஆடியதை நாடே அறியும். ஜெயலலிதாவால் துரோகிகளாக விரட்டப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டு இன்று சசிகலா கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற துடிக்கிறார். நீக்கப்பட்ட தன் உறவுகளுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சொன்ன சசிகலா, அரசியல் ஆசை இல்லை என்று சொன்ன சசிகலா தான் இன்று மீண்டும் ஜெயலலிதாவின் ஆத்மாவுக்கு துரோகம் செய்துவிட்டு கட்சியை தன் வசப்படுத்த காய்களை நகர்த்துகிறார். இதை தடுக்க தான் சட்ட பஞ்சாயத்து இயக்கம் களம் இறங்குகிறது.


5. யார் யாருக்கோ கட்சி பதவி கொடுத்து அழகு பார்த்த ஜெயலலிதா, MLA, MPயாக்கி அழகு பார்த்த ஜெயலலிதா, தனது உடன் பிறவா சகோதரியாக அறிவிக்கப்பட்ட சசிகலாவுக்கு ஏன் கட்சியில், ஆட்சியில் பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கவில்லை என்று எண்ணிப்பார்க்க வேண்டும். 30 ஆண்டு காலம் உடனிருந்து உதவிய சசிகலாவுக்கு அவ்வாறான தகுதிகள் இல்லை என்பதை உணர்ந்ததால் தான் அவருக்கு எந்த பொறுப்பையும் ஜெயலலிதா கொடுக்கவில்லை. அவரை பொறுத்த வரை சசிகலா நல்ல உதவியாளர், உடன்பிறவா சகோதரி அவ்வளவு தான். வேலைக்காரரை குறுக்கு வழியில் எஜமானியாக்க துரோகிகள் கூட்டம் முயற்சி செய்வதை தடுக்க வேண்டும். தகுதியானவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.


6. யாரெல்லாம் சசிகலா பொதுச் செயலாளராக ஆதரவு அளிக்கிறார்கள்?

# ஜெயலலிதாவால் துரோகிகளாக கண்டறியப்பட்டு கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்கள்.

# ஜெயலலிதாவால் தண்டிக்கப்பட்ட கட்சியின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் உயர் அரசு அலுவலர்கள்.

# கொள்ளையடிக்க நினைக்கும், உள்ளாட்சி பொறுப்பாளர்கள், MLA, MP, அமைச்சர்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள்.

இந்த மூன்று பிரிவினர் தான் சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என அரசியல் சடுகுடு வேலையில் இறங்கி உள்ளார்கள். 


உண்மையான கட்சி தொண்டர்களும், அதிமுக விசுவாசிகளும் ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட மன்னார்குடி துரோகிகளை விரட்ட வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். இது தான் ஜெயலலிதாவுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். எனவே தான் சட்ட பஞ்சாயத்து இயக்கம் திருமதி. சசிகலா.வி.கே அவர்களை அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்க கூடாது என எச்சரிக்கை செய்கிறது.

ஜெயலலிதாவின் ஆத்மாவுக்கு துரோகம் செய்துவிட்டு கட்சி பொறுப்பையும், ஆட்சி பொறுப்பையும் ஏற்றுக்கொண்டால், இந்த துரோக செயலை மக்களிடத்தில் எடுத்து சென்று மக்களை திரட்டி ஊழல் ஆட்சியை துரோக அரசியலை அகற்றி ஊழலில்லா மக்கள் வளர்ச்சிக்கான நல்லாட்சி அமைய சட்ட பஞ்சாயத்து இயக்கம் களமிறங்கும் என துரோகிகளை இதன் மூலம் எச்சரிக்கிறோம்.


சிவ .இளங்கோ, 

தலைவர்

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

87545 80270

87545 80274


 


​Satta Panchayat Iyakkam, 

|  31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Member : member.sattapanchayat.org |  Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

" Aiyarathil Oruvan " : 1001.sattapanchayat.org

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team : spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

Tuesday, 13 December 2016

மழைநீர் வடிகாலின் அவசரத் தேவை... Need of Storm water drain.. PRESS RELEASE..

    மிரட்டிய வர்தா… மீண்டெழுந்த சென்னை
           மழைநீர் வடிகாலின் அவசரத் தேவை
              சட்ட பஞ்சாயத்து இயக்கம் - பத்திரிகை செய்தி
                            14/12/2016

சென்னையை மிரட்டிய வர்தா புயல் ஆயிரக்கணக்கான மரங்களை வேரோடு சாய்த்துவிட்டு, நம்பிக்கை விதை ஒன்றை விதைத்தும் சென்றுள்ளது. ஆம், சென்ற ஆண்டு டிசம்பரில் பெய்த பெருமழையின் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மீட்புப்பணியில் தாமதம் என்று தூங்கிவழிந்த தமிழக அரசு வர்தா புயல் நேரத்தில் விழித்துக்கொண்டது என்றே கூறலாம்.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பின் அடிப்படையில் உடனுக்குடன் செயல்பட்டு நிவாரண முகாம்களை முன்கூட்டியே அமைத்து பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள பகுதியிலுள்ள மக்களை அம்முகாம்களில் தங்கவைத்தது, சாலையில் விழுந்த மரங்களை முடிந்த அளவு விரைவாக அகற்றியது போன்ற பணிகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாகக் கையாண்டது. சென்ற ஆண்டு பெய்த பெருவெள்ளம் கற்பித்துவிட்டுப்போன பாடங்களில் சிலவற்றை மாநில நிர்வாகம் நினைவில்கொண்டு செயல்பட்டதால் கிடைத்த பலன்கள் எனலாம். இதே வேகத்தில் மின்சாரத்துறையும் செயல்பட்டு துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு மீண்டும் சரிசெய்யப்படவேண்டும் என்பது மக்களின் உடனடி எதிர்பார்ப்பு. இதுபோன்ற பேரிடர் காலங்களில் மின்சார துறையாது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மின் இணைப்பு துண்டிக்கப்படும் காலத்தை முடிந்த அளவு குறைக்க முயற்சி எடுக்கவேண்டும். 


இதேபோல், அரசு அறிவித்த தெலைபேசி உதவி மைய எண்கள் முறையாகச் செயல்படவில்லை என்ற புகார் அடுத்த பேரிடரின்போது வராமல் இருப்பதை அரசு உறுதி செய்யவேண்டும்.


இவை எல்லாம் தற்காலிகப் பணிகள். புயல் அடித்த அளவிற்கு பெருமழை பெய்யவில்லை என்பதால் அரசு நிர்வாகம் இதனை ஓரளவு சமாளித்துவிட்டது. சென்னை மாநகராட்சிப் பகுதிக்குள்ளேயே மழைநீர் வடிகால் அமைக்கப்படாத பகுதிகள் இன்னும் ஏராளம் உள்ளன. குறிப்பாக, கடந்த ஆட்சிக்காலத்தில்(2011ல்) சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டபோது இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகள் பலவற்றில் இவ்வசதி இல்லை. வடிகால் இல்லாத பகுதிகளில் பெருமழை பெய்திருந்தால் மழைநீர் வடிய வாய்ப்பில்லாமல் வீடுகளுக்குள் வெள்ளம் பாய்ந்திருக்கும். மீண்டும் ஒரு பேரழிவை சென்னை சந்தித்திருக்கும்.


இதனைக் கருத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் அனைத்து பகுதியிலும் மழைநீர் வடிகால் அமைப்பதற்கு தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

                                           செந்தில் ஆறுமுகம்
                              பொதுச்செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்
                                            87545-80274, 87545-80270

Friday, 9 December 2016

Mexico looks to Sri Sri for peace



Dear Editor,



Spiritual Guru Sri Sri Ravi Shankar is on a 20-day peace mission to South and Central America from 29th November to 19th December. "Peace is relevant only in times of strife," said Sri Sri on his tour. "Everyone can be peaceful during times of peace." 

 

Keeping up with this bold and determined approach, his tour includes countries with a history of violence where Sri Sri's volunteers have been working for many years to bring about a change and are succeeding pretty well.

 

While interacting with the Senators at the Mexican Senate, Gurudev urged the government, media, NGOs and businesses to work together and free the society from violence. "Violence arises out of lack of belongingness and stress. It's important to attend to stress so that human values of peace, sense of belongingness and commitment can flourish in society," he said.


Please find the detailed Press Release along with pictures from the tour attached. Do carry in your publication


With warm regards,


Rajalakshmi - Media Co-ordinator - TN

9884017767



Sri Sri frees Mexico's dreaded prisons of violence

 

BENGALURU, DEC 8, 2016: Spiritual Guru Sri Sri Ravi Shankar is on a 20-day peace mission to South and Central America from 29th November to 19th December. "Peace is relevant only in times of strife," said Sri Sri on his tour. "Everyone can be peaceful during times of peace." 

 

Keeping up with this bold and determined approach, his tour includes countries with a history of violence where Sri Sri's volunteers have been working for many years to bring about a change and are succeeding pretty well.

 

While interacting with the Senators at the Mexican Senate, Gurudev urged the government, media, NGOs and businesses to work together and free the society from violence. "Violence arises out of lack of belongingness and stress. It's important to attend to stress so that human values of peace, sense of belongingness and commitment can flourish in society," he said.

 

During the three-day Mexico tour, Sri Sri visited two of country's largest prisons, where incidences of violence have reduced drastically after the introduction of Art of Living's prisoner rehabilitation program. He visited a drug rehabilitation home, where he addressed 200 Mexican youth undergoing the Art of Living deaddiction program to become free from the destructive dependency on drugs.

 

At the Santa Marta Acatitla prison, one of the largest prisons in Mexico, the officials expressed their gratitude to Gurudev Sri Sri for introducing the Prison Smart Program which has led to zero prison crimes in the last one year. During their meeting, many prisoners shared how the Art of Living program changed their life completely.

 

One of the inmates said,  "My life after meditation has been a whole new world for me. I have experienced true joy. Earlier I used to be so stressed but now even though I am behind bars my mind is so free."

 

At the Reclusorio Varonil Norte, the second largest prison in Mexico, Secretary of the Penitentiary System Hazael Ruiz Ortega said that the transformation in this prison had been very impressive since the Art of Living teachers started visiting and taking sessions for the inmates. He asked for similar program to be introduced in the Reclusorio Varonil Oriente, the largest jail of Mexico.

 

Over 16,000 prison inmates, many of whom have been involved in drug trade and gang wars, have been introduced to the Art of Living workshops in Mexico. The programs have given them extraordinary relief from the violent and traumatic past and a new perspective on life.

 

During his three-day visit to Mexico, Sri Sri interacted with people from all strata including political leaders, faith leaders, businessmen, prisoners, youth, government officials, social workers and the general public and pushed for holistic ways for tackling the widespread violence in the country, arising from drug wars and gang fights.

 

Taking his mission of violence-free society forward, Sri Sri presided over a large peace conference at the World Trade Centre. The conference saw enthusiastic participation by over 4,000 people including academicians, youth and political leaders. Karen Berg, the well-known spiritual director of the US-based Kabbalah Centre, also joined the peace conference.

 

Gurudev also addressed leaders from Sikh, Buddhist, Lutheran, Anglican, Mormon and Catholic communities at an interfaith meet. The meet concluded with all the religious leaders committing to work together with the common vision of unity and peace and respecting the diversity of all faiths.

 

At Guerrera, one of the Mexico's most violent states, Gurudev was welcomed with a massive public reception by Governor Hector Antonio Astudillo Flores. The Governor of Guerrera also conferred the Ambassador of Peace recognition on Gurudev, an honour given to only three people so far. 

 

Gurudev's visit to Mexico culminated with an address at the World Forum for Ethics in Business where he emphasized on the need for businesses to give back to society in which they are growing and flourishing.

 

He is now slated to visit Guatemala, Nicaragua, El Salvador, Ecuador, Brazil, Panama, Costa Rica and Venezuela

 

Here are a few pictures of Gurudev's three-day visit to Mexico .


Warm Regards


Rajalakshmi

Media Co ordinator

Mobile: 9884017767




ADDRESS : VYAKTI VIKAS KENDRA TAMILNADU, No:55/58, 
5TH CROSS STREET, TRUSTPURAM, KODAMBAKKAM, CHENNAI-24. 

PHONE : 044 4213 3203 / 89399 02444


போயஸ் தோட்டத்தை குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக்க வேண்டும்...பத்திரிகை செய்தி

போயஸ் தோட்டத்தை குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக்க வேண்டும்...

சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை
பத்திரிகை செய்தி ( 09.12.2016)

               மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சொத்துக்கள் யாருக்கு சொந்தமாகப் போகிறது என்பது குறித்து பல்வேறு விதமான செய்திகள் வெளியாகி வருகின்றன. "மக்களால் நான் ; மக்களுக்காக நான்" என்று முழங்கிய ஜெயலலிதா அவர்களின் சொத்துக்கள் தமிழக மக்களின் பொதுப்பயன்பாட்டிற்கு வருவதுதான் பொருத்தமாக இருக்கும். 

குறிப்பாக அவர் வாழ்ந்த "போயஸ் கார்டன்" இல்லத்தை எம்.ஜி.ஆரின் வழியொற்றி பொதுப்பயன்பாடிற்கு கொண்டுவரவேண்டும். எம்.ஜி.ஆர்.அவர்கள் வாழ்ந்த ராமாவரம் தோட்டமானது "காது கேளாதோர், வாய் பேச இயலாதோர் தங்கி படிக்கும் பள்ளியாக" மாற்றப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். அவர்களின் விருப்பப்படி 1990முதல் இது இயங்கிவருகிறது.

2011ல் ஆட்சிப்பொறுப்பேற்ற ஜெயலலிதா அவர்கள், அந்த ஆண்டிலேயே அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அகற்றிவிட்டு அவ்விடத்தை "குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக்க" நடவடிக்கைகள் எடுத்தார். (அரசியல் காரணங்களுக்காக அந்நூலகத்தை மாற்றமுயன்றார் என்பது வேறுவிஷயம்...நீதிமன்றமும் அதற்குத் தடை விதித்துவிட்டது) இதனையும் கருத்தில் கொண்டு பார்த்தால், போயஸ் கார்டன் தோட்டத்தை குழந்தைகள் நல மருத்துவமனை ஆக்குவதே சரியாக இருக்கும் என்பதே சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கருத்தாகும்.


நேரடி வாரிசு யாரும் இல்லாத மறைந்த முதல்வரின் இல்லத்தில் ஏற்படுத்தப்படும் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையின் மூலம் தமிழக மக்கள் பலரின் வாரிசுகள் உயர்தர சிகிச்சை பெறும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர அதிமுக நிர்வாகிகள், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது.



                                                             சிவ.இளங்கோ, |
                                                       
தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்
                                                                           
   
87545-80270,87545-80274                                                                              

Tuesday, 6 December 2016

Sri Sri Ravi Shankar's tweet on the untimely demise of Dr. J. Jayalalithaa


Dear Editor,

Gurudev Sri Sri Ravi Shankar has tweeted about the untimely demise of Dr. J. Jayalalithaa. I am attaching the same for your attention.

You may like to carry this in your publication.


​
With warm regards,

Rajalakshmi

9884017767

Monday, 5 December 2016

முதல்வர் ஜெயலலிதா விட்டுச்செல்லும் செய்தி...

06.12.2016

"அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதுக்கு" என்று பெண்ணடிமைத்தனம் ஊறிப்போன சமுதாயத்தில், ஆணாதிக்கம் மிகுந்த அரசியல் களத்தில் ஒரு பெண்ணாக ஜெயலலிதா அவர்கள் அரசியல் ரீதியில் பெற்றிருக்கும் வெற்றியானது அளப்பரியது. 

துணிச்சலும், திறமையும் ஜெயலலிதா என்ற நாணயத்தின் இருபக்கங்கள் என்றால் மிகையில்லை. குறிப்பாக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஏதுமில்லாமல் 234 தொகுதியிலும் தனித்துப்போட்டியிட எடுத்த முடிவானது அவரின் துணிச்சல் மிகுந்த முடிவுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு. 

உள்ளாட்சித் தேர்தலில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு, மகளிர் காவல் நிலையங்கள், காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச்செய்தது, லாட்டரிச் சீட்டு ஒழிப்பு போன்றவை ஜெயலலிதா அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் சில. 

விமர்சனங்கள் இல்லாத அரசியல் தலைவரே இல்லை என்பது போல கொள்கை ரீதியிலும், அவரின் ஜனநாயகத்தன்மை மீதும் விமர்சனங்கள் இருந்தாலும், அதுகுறித்து பேசுவதற்கான தருணம் இதுவல்ல. 

தோல்விகளின் போது துவண்டுவிடாமல் மன உறுதியோடு எதிர்த்து நின்று போராடினால் வெற்றி சாத்தியமாகும் என்பதே தமிழக மக்களுக்கு, குறிப்பாக தமிழக பெண்களுக்கு அவர் விட்டுச்செல்லும் செய்தியாகும்.

தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களின் மறைவால் வாடும் பொதுமக்களுக்கும், அஇஅதிமுகவின் தொண்டர்களுக்கும் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

சிவ இளங்கோ
தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்

87545-80270