Saturday, 29 August 2015

Press Meet Invite : Date,Time: Aug 30, Sunday, 12:30pm Venue: Satta Panchayat Office, T,Nagar


PRESS MEET INVITE:

Date,Time: Aug 30, Sunday, 12:30pm
Venue: Satta Panchayat Office, T,Nagar
           ( 31, south west boag road, T.Nagar)
Contact: 8754580270 ( siva elango )

Subject:


 - Releasing statistical data of public referendum conducted by SPI.
   The Question asked to public is:  "In 2016 Election Whether you will vote for the Party which will bring Prohibition or you will vote for the party to whom you regularly vote" 

 - Announcing next course of action plan on 7th Day of fasting demanding liquor prohibition announcement in Assembly

Siva Elango,
President, Satta Panchayat Iyakkam,
8754580270

பத்திரிகையாளர் சந்திப்பு:
நாள், நேரம்: ஆகஸ்ட் 30, மதியம் 12:30 மணி
இடம்:சட்ட பஞ்சாயத்து இயக்க அலுவலகம், தி.நகர்
           31, தென்மேற்கு போக் சாலை, தி.நகர்

பொருள்:
- "2016-சட்ட மன்றத் தேர்தலில் மதுவிலக்கை அறிவிக்கும் கட்சிக்கு வாக்களிப்பீர்களா..? அல்லது எப்போதும் ஓட்டுப்போடும் கட்சிக்கே வாக்களிப்பீர்களா என்று பொதுமக்களிடம் நடத்திய கருத்துகணிப்பின் முடிவுகள் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியீடு( வாக்குச்சீட்டை இணைத்துள்ளோம்)

- சட்டசபையில் மதுவிலக்கு அறிவிப்பு கோரி 7வது நாளாகத் தொடரும்  உண்ணாவிரதத்தின் அடுத்தகட்ட போரட்டம் குறித்த அறிவிப்பு

சிவ.இளங்கோ,
தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்
8754580270



நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269

​Satta Panchayat Iyakkam, 

|  31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Join Us : join.sattam.org |  Donate Online : donate.sattam.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath

To Register for Monthly Contribution and become a SPI Pillar : 1001.sattam.org

Other Contact:

SPI Accounts Team : spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com
Speak about SPI / Billing Issues : 8754580269
Google Groups : spimembers@googlegroups.com

Friday, 28 August 2015

Fwd: Today DAY 5 - Fasting Continues.. Demanding Liquor Prohibition

Press Release: Day 5 ( Aug 28,2015)


- Today, 5th day of fasting continued demanding liquor prohibition announcement in Assembly

- Satta Panchayat General secretary Senthil Arumugam and Varaagi Sithar both are going on fast for last 5 days.
  Today medical checkup was done for them.

- On behalf of Congress Party Thiru.Americai Narayayan came to extend his party support.

- When we were doing public referendum, Thanthi TV covered it and asked public opinion

- Fast will be continued tomorrow

Siva Elango,
President,
Satta Panchayat Iyakkam, 8754580270





​


Thursday, 27 August 2015

Day 4 Fasting - by Satta Panchayat.. Press Release

Satta Panchayat Press Release:


Today(Aug 27), Day 4 of fasting demanding Liquor prohibition announcement in Assembly continued by Satta Panchayat Iyakkam. Satta Panchayat general secretary Senthil Arumugam and Varaagi Sithar both going on fast for last 4 days..

Siva Elango, President
Satta Panchayat Iyakkam, 8754580270

இன்று(ஆக 27) சட்ட சபையில் மதுவிலக்கு அறிவிப்பு கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் 4வது நாளாக உண்ணாவிரதம் போராட்டத்தை தொடர்ந்தது. சட்ட பஞ்சாயத்து இயக்க செயலாளர் செந்தில் ஆறுமுகம், வராஹி சித்தர் ஆகிய இருவர் கடந்த 4 நாள்களாக உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர்.

சிவ.இளங்கோ,
தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்
8754580270 




​


Wednesday, 26 August 2015

ஓட்டெடுப்பு விவரங்கள்..3rd Day Fasting for Prohibition: - 3வது நாள் உண்ணாவிரதம் -

To the Editor:


3rd Day fasting continued by Satta Panchayat Iyakkam(SPI) demanding Liquor Prohibition. SPI General Secretary Senthil Arumugam, State Secretary Jaiganesh, Varaahi Sithar continue fast. Today evening we conducted a public referendum asking people whether they will "Vote for party which close TASMAC shops" OR "they will continue to vote asusual irrespective of TASMAC issue" .Totally 64 voted polled. Except 4 votes all other 60 votes favored for party which will close TASMAC shops.. Photos attached.. Tomorrow, Fast will continue for the 4th day.

Siva Elango,
President, Satta Panchayat, 8754580270

   
ஆசிரியர் அவர்களுக்கு,
சட்ட சபையில் மதுவிலக்கு அறிவிப்பு கோரி 3ம் நாள் உண்ணாவிரதத்தை சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்தது. இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், மாநில செயலாளர் ஜெய்கணேஷ், வராஹி சித்தர் ஆகியோர் 3வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர். இன்றைய மாலை நிகழ்வில் பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினோம். 64 பேர் வாக்களித்தனர். 60 பேர் "டாஸ்மாக்கை மூடும் கட்சிக்கே வாக்களிப்போம்" என்று வாக்களித்தனர். 4 பேர் "எப்போதும் ஓட்டுப்போடும் கட்சிக்கே வாக்களிப்போன்" என்று ஓட்டுப்போட்டனர்.

4 வது நாளாக நாளையும் உண்ணாவிரதம் தொடர்கிறது..

சிவ இளங்கோ,
தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம், 8754580270


​



​
​

Day 3 உண்ணாவிரதம் - சட்டசபையில் மதுவிலக்கு அறிவிக்க கோரி


பத்திரிக்கை அழைப்பு செய்தி

நடைபெற்றுவரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பை வெளியிடவேண்டும் என வலியுறுத்தி சட்ட பஞ்சாயத்து இயக்க ஒருங்கிணைப்பில் 3ம்நாள் உண்ணாவிரதம் தொடர்ந்து நடைபெற்றது. சட்ட பஞ்சாயத்து இயக்க பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், மாநிலச் செயலாளர் ஜெய்கணேஷ், வராஹி சித்தர் ஆகியோர் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். 

3வது நாளான இன்று மாலை 5.30 மணிக்கு, வருகின்ற சட்டமன்ற தேர்தலில்  மதுவிலக்கு பிரச்சனையின் முக்கிய பங்கை கணக்கிடும் வகையில் பொதுமக்களின் இடையே வாக்கெடுப்பு  நடைபெற உள்ளது. இதில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் டாஸ்மாக் கடையை மூடும் கட்சிக்கு வாக்களிப்பார்களா அல்லது எப்பொழுதும் ஓட்டு போடும் கட்சிக்கு வாக்களிப்பார்களா என்ற வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. பத்திரிக்கையாளர்கள் இதை பொது மக்களிடம் எடுத்து செல்ல வேண்டுகிறோம்.

To the Editor,

Day 3 of fasting demanding Liquor Prohibition Policy announcement in current Assembly Session continued today. Satta Panchayat Iyakkam(SPI) General Secretary Senthil Arumugam, SPI State Secretary Jaiganesh, Varaahi Sithar continued 3rd day fast. Members of various social organisation came in person and gave support.

Today evening, Satta Panchyat will hold a opinion poll to guage the importance of liquor prohibition issue in the upcoming assembly election.Common people will be requested to vote on whether they are going to vote for the party that promises liquor prohibition or the same party that they usually vote for. We request the med cover the event

(Photos attached).

Time: 5.30 Pm

Location: In front of Satta Panchayat Office, No 31, South West Boag Road, T.Nagar, Chennai - 17

நன்றி,
சிவ.இளங்கோ,
தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம், 8754580270

Tuesday, 25 August 2015

Day 2 Fasting Photos..2ம்நாள் உண்ணாவிரதம்.. தீப ஒளி ஏற்றிப் போராட்டம்..

தமிழ் அறிக்கை கீழே:


To the Editor,

Day 2 of fasting demanding Liquor Prohibition Policy announcement in current Assembly Session continued today. Satta Panchayat Iyakkam(SPI) General Secretary Senthil Arumugam, SPI State Secretary Jaiganesh, Varaahi Sithar, Kumbakonam Ayubkhan continued 2nd day fast. Members of various social organisation came in person and gave support. In the evening we lit lamps in the fasting venue depicting the darkness created in families due to liquor.
(Photos attached).

Siva Elango, President, SPI, 8754580270

மதுவால் இருண்டுபோன தமிழகத்திற்கு மதுவிலக்கு என்னும் வெளிச்சம் வரவேண்டி...  தீப ஒளி ஏற்றிப் போராட்டம்.. 2ம் நாள் உண்ணாவிரதப் போராட்ட நிகழ்வுகள்...

நடைபெற்றுவரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பை வெளியிடவேண்டும் என வலியுறுத்தி சட்ட பஞ்சாயத்து இயக்க ஒருங்கிணைப்பில் 2ம்நாள் உண்ணாவிரதம் தொடர்ந்து நடைபெற்றது. சட்ட பஞ்சாயத்து இயக்க பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், மாநிலச் செயலாளர் ஜெய்கணேஷ், வராஹி சித்தர், அயூப்கான் ஆகியோர் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். அறப்போர் இயக்கம், தோழன் அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

மதுவால் இருண்ட தமிழகத்திற்கு மதுவிலக்கு ஒளி கிடைக்க வேண்டி என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றுவரும் இடத்திற்கு முன்பு உள்ள சாலையின் முன்பாக தீப ஒளி விளக்குகள் ஏற்றி இன்று போராட்டம் நடத்தினோம்.

படங்கள் இணைக்கப்பட்டுள்ளன...

நன்றி,
சிவ.இளங்கோ,
தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம், 8754580270







Monday, 24 August 2015

சட்டசபையில் மதுவிலக்கை அறிவிக்கக்கோரி - தொடர் உண்ணாவிரதம்

சட்டசபையில் மதுவிலக்கை அறிவிக்கக்கோரி தொடர் உண்ணாவிரதம்: நாள்:1 
                     

Satta Panchayat Iyakkam (SPI) started its 'indefinite fast' today Aug 24 demanding Govt to announce Liquor Prohibition in the current assembly session. The fast was kick started by December 3 Movement President Mr.Deepak Nathan. It is to be noted that December 3 Movement were undergoing indefinite fast for the same demand.


SPI's General Secretary Senthil Arumugam, Secretary Jaiganesh, Kallidaikurichi varaki sithar & Kumbakonam Ayub Khan are undertaking indefinite fast and many supporting this cause. It is to be noted that Kallidaikurichi varaki sithar has also taken 'vow of silence'.


Arappor Iyakkam, Loksatta Party, Students Youth Social Movement, Gandhiya Makkal Iyakkam and Welfare Party of India lent their support today to the fast.


We invite other Social Activists and Anti Liquor Activists to take part and support this noble cause.


டாஸ்மாக் சில்லறை விற்பனை தொடங்கிய 2003ல் ரூ.3639 கோடியாக இருந்த சாராய வருவாய் 2016ல் 30 ஆயிரம் கோடி ரூபாயைத் தொடவுள்ளது. அரசிற்கு வருமானம் பெருகப்பெருக, ஏழைக்குடும்பங்களில் வறுமை பெருகியது; பெண்கள் மீதான வன்முறை பெருகியது; குழந்தைகளின் படிப்பு பாழாகியது; இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்தது. "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன்தோன்றிய மூத்தகுடி" என்ற பெயர் பெற்ற தமிழ்ச்சமுதாயம் இன்று "சாராய சமுதாயமாகிப்" போகியுள்ளது.

காந்தியவாதி
சசிபெருமாள் மரணம், அதைத் தொடர்ந்து தமிழகமெங்கும் நடந்த உணர்ச்சிமிகு மதுஒழிப்புப் போராட்டங்கள், குறிப்பாக உடல் அவதிகளையும் பொறுத்துக்கொண்டு மாற்றுத்திறனாளிகள் நடத்திய 16 நாள் தொடர் போராட்டம்  எதையும் தமிழக அரசு கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

இந்த சூழ்நிலையில் நாளை சட்டமன்றம் கூட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மதுவிலக்கை அறிவிக்க வேண்டும் என்று கோரி சட்ட பஞ்சாயத்து இயக்க ஒருங்கிணைப்பில் இன்று(24.08.2015) காலை 6 மணிக்கு "தொடர் உண்ணாவிரதம்"  துவங்கியுள்ளோம்.

 

 

மதுவிலக்கு கோரி போராடிய  டிசம்பர் 3 இயக்க(மாற்றுத்திறனாளிக்கான இயக்கம்) தலைவர் தீபக் அவர்கள் இந்த உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தார்.

மாணவர் இளைஞர் சமுதாய இயக்கம்
(SYSM), இளைய தலைமுறை இயக்கம் ஆகிய இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகளோடு இணைந்து உண்ணாவிரதம் துவங்கியுள்ளது.

சட்ட பஞ்சாயத்து இயக்க பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், மாநில செயலாளர் ஜெய்கணேஷ், கல்லிடைக்குறிச்சி வராகி சித்தர், கும்பகோணம் அயூப்கான் ஆகியோர் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

 

இதில் கல்லிடைக்குறிச்சி வராகி சித்தர் அவர்கள் உண்ணாவிரதத்துடன் மௌன விரதமும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மாநில மதுஒழிப்பு அணி ஒருங்கிணைப்பாளரும், தென்மண்டல ஒருங்கிணைப்பாளருமான அண்ணாத்துரை அவர்கள் இந்த உண்ணாவிரதத்திற்கு தலைமையேற்று வழிநடத்துகிறார். ( உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளவர்கள் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

 

இன்றைய உண்ணாவிரத்திற்கு மாணவர் இளைஞர் சமுதாய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவச்சந்திரன், லோக்சத்தா கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் ஜெகதீஸ்வரன், காந்திய மக்கள் கட்சியின் தங்கவேல், அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் மற்றும் வெல்ஃபர் பார்ட்டி இந்தியாவின் தேசிய செயலாளர் சுப்ரமணி, மூத்த பத்திரிகையாளர்கள் T.N.கோபாலன், சாவித்திரி கண்ணன் ஆகியோர் நேரில் வந்து ஆதரவளித்தனர்.


மதுஒழிப்பு ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்களை இந்த தொடர் உண்ணாவிரதத்தில் பங்கேற்க அழைக்கிறோம்.

கோடிக்கணக்கான மக்களின் ஓட்டுக்களைப் பெற்று ஆட்சியைப் பிடித்த ஆளுங்கட்சி, ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கை "மதுவிலக்கு" என்பதை உணர்ந்து மதுவிலக்கை நடைபெறவுள்ள சட்டமன்றத் தொடரிலேயே அறிவிக்க வலியுறுத்துகிறோம்.

குறிப்பு: நாளை(ஆக 25 அன்று) மாலை 5 மணிக்கு மதுவால் இருண்டுகிடக்கும் தமிழகத்தில் மதுவிலக்கு என்னும் ஒளி ஏற்றப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்கு அருகில் விளக்கு ஏற்ற இருக்கிறோம்.

தொடர்புக்கு
: 87545-80270, 87545-88222

                                                 சிவ.இளங்கோ,
                                                                                 தலைவர்