சட்டசபையில் மதுவிலக்கை அறிவிக்கக்கோரி தொடர் உண்ணாவிரதம்: நாள்:1
Satta Panchayat Iyakkam (SPI) started its 'indefinite fast' today Aug 24 demanding Govt to announce Liquor Prohibition in the current assembly session. The fast was kick started by December 3 Movement President Mr.Deepak Nathan. It is to be noted that December 3 Movement were undergoing indefinite fast for the same demand.
SPI's General Secretary Senthil Arumugam, Secretary Jaiganesh, Kallidaikurichi varaki sithar & Kumbakonam Ayub Khan are undertaking indefinite fast and many supporting this cause. It is to be noted that Kallidaikurichi varaki sithar has also taken 'vow of silence'.
Arappor Iyakkam, Loksatta Party, Students Youth Social Movement, Gandhiya Makkal Iyakkam and Welfare Party of India lent their support today to the fast.
We invite other Social Activists and Anti Liquor Activists to take part and support this noble cause.
டாஸ்மாக் சில்லறை விற்பனை தொடங்கிய 2003ல் ரூ.3639 கோடியாக இருந்த சாராய வருவாய் 2016ல் 30 ஆயிரம் கோடி ரூபாயைத் தொடவுள்ளது. அரசிற்கு வருமானம் பெருகப்பெருக, ஏழைக்குடும்பங்களில் வறுமை பெருகியது; பெண்கள் மீதான வன்முறை பெருகியது; குழந்தைகளின் படிப்பு பாழாகியது; இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்தது. "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன்தோன்றிய மூத்தகுடி" என்ற பெயர் பெற்ற தமிழ்ச்சமுதாயம் இன்று "சாராய சமுதாயமாகிப்" போகியுள்ளது.
காந்தியவாதி சசிபெருமாள் மரணம், அதைத் தொடர்ந்து தமிழகமெங்கும் நடந்த உணர்ச்சிமிகு மதுஒழிப்புப் போராட்டங்கள், குறிப்பாக உடல் அவதிகளையும் பொறுத்துக்கொண்டு மாற்றுத்திறனாளிகள் நடத்திய 16 நாள் தொடர் போராட்டம் எதையும் தமிழக அரசு கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.
இந்த சூழ்நிலையில் நாளை சட்டமன்றம் கூட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மதுவிலக்கை அறிவிக்க வேண்டும் என்று கோரி சட்ட பஞ்சாயத்து இயக்க ஒருங்கிணைப்பில் இன்று(24.08.2015) காலை 6 மணிக்கு "தொடர் உண்ணாவிரதம்" துவங்கியுள்ளோம்.
மதுவிலக்கு கோரி போராடிய டிசம்பர் 3 இயக்க(மாற்றுத்திறனாளிக்கான இயக்கம்) தலைவர் தீபக் அவர்கள் இந்த உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தார்.
மாணவர் இளைஞர் சமுதாய இயக்கம்(SYSM), இளைய தலைமுறை இயக்கம் ஆகிய இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகளோடு இணைந்து உண்ணாவிரதம் துவங்கியுள்ளது.
சட்ட பஞ்சாயத்து இயக்க பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், மாநில செயலாளர் ஜெய்கணேஷ், கல்லிடைக்குறிச்சி வராகி சித்தர், கும்பகோணம் அயூப்கான் ஆகியோர் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
இதில் கல்லிடைக்குறிச்சி வராகி சித்தர் அவர்கள் உண்ணாவிரதத்துடன் மௌன விரதமும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மாநில மதுஒழிப்பு அணி ஒருங்கிணைப்பாளரும், தென்மண்டல ஒருங்கிணைப்பாளருமான அண்ணாத்துரை அவர்கள் இந்த உண்ணாவிரதத்திற்கு தலைமையேற்று வழிநடத்துகிறார். ( உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளவர்கள் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
இன்றைய உண்ணாவிரத்திற்கு மாணவர் இளைஞர் சமுதாய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவச்சந்திரன், லோக்சத்தா கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் ஜெகதீஸ்வரன், காந்திய மக்கள் கட்சியின் தங்கவேல், அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் மற்றும் வெல்ஃபர் பார்ட்டி இந்தியாவின் தேசிய செயலாளர் சுப்ரமணி, மூத்த பத்திரிகையாளர்கள் T.N.கோபாலன், சாவித்திரி கண்ணன் ஆகியோர் நேரில் வந்து ஆதரவளித்தனர்.
மதுஒழிப்பு ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்களை இந்த தொடர் உண்ணாவிரதத்தில் பங்கேற்க அழைக்கிறோம்.
கோடிக்கணக்கான மக்களின் ஓட்டுக்களைப் பெற்று ஆட்சியைப் பிடித்த ஆளுங்கட்சி, ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கை "மதுவிலக்கு" என்பதை உணர்ந்து மதுவிலக்கை நடைபெறவுள்ள சட்டமன்றத் தொடரிலேயே அறிவிக்க வலியுறுத்துகிறோம்.
குறிப்பு: நாளை(ஆக 25 அன்று) மாலை 5 மணிக்கு மதுவால் இருண்டுகிடக்கும் தமிழகத்தில் மதுவிலக்கு என்னும் ஒளி ஏற்றப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்கு அருகில் விளக்கு ஏற்ற இருக்கிறோம்.
தொடர்புக்கு: 87545-80270, 87545-88222
சிவ.இளங்கோ,
தலைவர்
No comments:
Post a Comment