Tuesday, 11 August 2015

”வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க”(V.S.O.P) திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கக்கூடாது...

11-08-2015

அனுப்புனர்:

செந்தில் ஆறுமுகம், பொதுச்செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
31,தென்மேற்கு போக் சாலை, சென்னை-600017
87545-80274, 87545-80270

பெறுநர்:
செயலாளர், வணிகவரித்துறை & பதிவுத்துறை, தலைமைச் செயலகம்,
சென்னை-600009

வணக்கம்,
பொருள்: ”வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க”(V.S.O.P) திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கக்கூடாது என்று கோரி…

பார்வை: வணிக வரித்துறை, பதிவுத்துறை அரசாணை(நிலை) எண்:002 (03.01.2012 தேதியிட்டது)

எங்கள் இயக்கம் இலஞ்ச-ஊழல் ஒழிப்பு, மதுஒழிப்பிற்காகச் செயல்பட்டு வருகிறது. நாங்கள்,

மதுவிலக்கு கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். தற்போது தமிழகமெங்கும்

மதுவிலக்கு கோரி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில்

வருகிற 14.08.2015 அன்று வெளியாகவுள்ள “வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க”

திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மதுப்பழக்கத்தை மேலும் தூண்டுவதாக உள்ளது

என்பதை அறிந்து இம்மனுவை அனுப்புகிறோம்.



V.S.O.P. என்பது ஒரு மதுபான வகையின் பெயர் என்று தெரிந்திருந்தும் இப்படத்தின் சுருக்கப்பெயர்

V.S.O.P என்று வருவதற்கு ஏதுவாக ”வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க”(VSOP) என்று

பெயர் வைத்துள்ளார்கள். இந்த அடிப்படையில் பார்க்கும்போது இப்படம் மதுபான

உற்பத்தியாளர்களின் நிதியுதவியாலும், தூண்டுதலாலும் எடுக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம்

எழுகிறது.


படத்திலுள்ள பாடல் வரிகளில்: “வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க.. ஊரிலுள்ள பாரில்
எல்லாம்
சேர்ந்தே குடிச்சவங்க”  என்று வருகிறது. நட்பு – மகிழ்ச்சி – படிப்பு  இவை அனைத்தையும்

“குடிப்பழக்கத்தோடு” தொடர்புபடுத்தும்விதமான கட்சிகள் நிறைய உள்ளன.

பீர் குடித்துவிட்டு இளம் கதாநாயகர்கள் இருவரும் “மகிழ்ந்திரு” என்று சொல்லும் காட்சி,

தமிழக இளைஞர்களை மகிழ்ச்சியை நோக்கியல்ல, மரணத்தை நோக்கியே

அழைத்துச்செல்லும்.


இதுபோன்ற படங்களுக்கு “U” சான்றிதழ் அளித்ததே தவறானது என்பது எங்கள் வாதம்.
(

இயக்குனர் விஜயகுமார் அவர்கள் இயக்கிய “பரபரப்பான விற்பனையில் சரக்கு” என்ற மதுஒழிப்பை

வலியுறுத்தும் படத்தில் மதுக்காட்சிகள் கூடுதலாக இருக்கிறது என்பதால் “A” சான்றிதழ்

கொடுத்துள்ளார்கள் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்.)



இளைஞர்கள், மாணவர்களைச் சீரழிக்கும் இதுபோன்ற படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து

விலக்கு (Entertainment Tax Exemption) அளிக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
வணிக

வரித்துறை, பதிவுத்துறை அரசாணை(நிலை) எண்:002
(03.01.2012) எந்தெந்தப் படங்களுக்கு

கேளிக்கை வரிவிலக்கு அளிக்கலாம் என்று விதிமுறைகளைப் பட்டியலிடுகிறது. இதில்

விதி எண்
2.2 “……திரைப்படத்தின் கதையின் கருவானது தமிழ்மொழி மற்றும்

பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும்
.” என்கிறது.  இப்படத்தின்

தலைப்பு, காட்சிகள், வசனங்கள் தமிழ் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதைவிட

சீரழிக்கும் பணியையே செய்கிறது. ஆகவே, நீங்கள் வகுத்துவைத்துள்ள

சட்டவிதிமுறைகளின் அடிப்படையில் பார்த்தாலும் இப்படத்திற்கு வரிவிலக்கு
அளிக்கமுடியாது.



விழிப்புணர்வளிக்கும் படங்களைத் தவிர வேறு எந்தப்படங்களுக்கும் கேளிக்கை

வரிவிலக்கு அளிக்கக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. இருந்தபோதும், தற்போது

தாங்கள் சிலவிதிமுறைகளைப் பின்பற்றி திரைப்படங்களுக்கு வரிவிலக்கு

அளித்துவருகிறீர்கள். அந்த விதிமுறைகளை மீறும் எந்தப்படங்களுக்கும் வரிவிலக்கு

அளிக்கக்கூடாது என்பதே எங்கள் வேண்டுகோள்.



”வாசுவும்
 சரவணனும் ஒண்ணா படிச்சவங்க “ (V.S.O.P) படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு 

அளிக்கக்கூடாது என்றும், ஏற்கனவே வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தால் அதை ரத்து

செய்யவேண்டும் என்றும் கோருகிறோம்.
உங்கள் முடிவு, வருங்காலத்தில் திரைப்படம்

எடுப்பவர்கள் மதுப்பழக்கத்தை ஊக்குவிக்குமாறு காட்சிகள் வைப்பதற்கு
தயக்கத்தை

ஏற்படுத்த வேண்டும். மதுக்காட்சிகள் வைத்தால் வரிவிலக்கு கிடைக்காது என்ற அச்சத்தை

ஏற்படுத்த வேண்டும். பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றால், கண்டிப்பாக மதுக்காட்சிகளை

தவிர்த்துவிடுவார்கள்.



எங்கள் கோரிக்கை என்பது இந்தக் குறிப்பிட்ட படத்திற்கு எதிரானது மட்டுமல்ல, இனிவரும்
அனைத்துப் படங்களுக்கும் சேர்த்துத்தான். V.S.O.P. படம் ஆகஸ்ட் 14 அன்று வெளியாக

இருப்பதால் இதுகுறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டுகிறோம்.


தமிழகத்தில் தற்போது பெரும்பாலான அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், பெண்கள்

அமைப்புகள், மாணவர்-இளைஞர் அமைப்புகள் மதுவிற்கு எதிராகப் போராடி வருகின்றன.

அவர்களின் கவனத்திற்கு இப்பிரச்னையைக் கொண்டுசென்று, அனைத்துக் கட்சிகள்,

அமைப்புகளையும் இக்கருத்திற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்ள இருக்கிறோம்.

தார்மீக அடிப்படையிலும், சட்ட ரீதியிலும் நியாயமான எங்கள் கோரிக்கையை பரிசீலித்து

மதுப்பழக்கத்தைத் தூண்டும்
VSOP போன்ற படங்களுக்கு வரிவிலக்கு தரப்படக்கூடாது. எங்கள்

கோரிக்கை ஏற்கப்படாவிடில் மதுஒழிப்பு இயக்கங்கள் மற்றும் பிற அமைப்புகளோடு கலந்துபேசி

போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.


மேலும், மதுப்பழக்கத்தை தூண்டும் படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது
வணிக வரித்துறை,

பதிவுத்துறை அரசாணையில்(எண்:002 (03.01.2012)
) வகுத்துள்ள விதிமுறைகளுக்கு முரணானது

என்பதால் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.


மதுவிலக்குப் போராட்டம், பற்றி எரியும் பிரச்னையாக உள்ள சூழ்நிலையில் நீங்கள் நல்ல முடிவு

எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். நன்றி.


                                                                           செந்தில் ஆறுமுகம்,
                                                                               
பொதுச்செயலாளர்
நகல்:

1. வணிகவரித்துறை அமைச்சர்  2. நிதித்துறை செயலாளர்
3. தலைமைச் செயலாளர்  4. முதலமைச்சர்  5. அனைத்து ஊடகங்கள்












No comments:

Post a Comment