திமுகவின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு அறிவிக்கப்படும் என்று கூறிவிட்டு அதை தயாரிக்கும் குழுவின் தலைவராக டி.ஆர்.பாலுவை நியமிப்பது மிகவும் ஒரு வேடிக்கையான வேதனையான நிகழ்ச்சி. அவரது குடும்பம் நடத்தும் #கோல்டன்_வாட்ஸ் சாராய தொழிற்சாலை கடந்த 3 வருடங்களில் சுமார் 1664 கோடி பெறுமான சாராயத்தை டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்துள்ளது. இந்த சாராய தொழிற்சாலை வருமானம் பாதிக்கப்படாமல் எப்படி மதுவிலக்கு கொள்கை தீட்டலாம் என்று தானே இவர் யோசிப்பார்.
நீங்கள் என்ன சொன்னாலும் மக்கள் நம்பிவிடுவார்கள் என்பது அந்தக்காலம். தமிழக அரசு உடனடியாக மதுவிலக்கு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் திமுக தங்கள் கட்சிக்கு நெருக்கமானவர்கள் நடத்தும் தொழிற்சாலைகளில் இருந்து இனி ஒரு சொட்டு சாராயம் கூட டாஸ்மாக் கடைகளுக்கு விற்க மாட்டோம் என்று அறிவிப்பார்களா?
டி.ஆர்.பாலுவின் குடும்ப தொழிற்சாலை தவிர
திமுகவின் ஜெகத்த்ரட்சகனுக்கு சொந்தமான #எலைட் (2444 கோடி),
கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான படத்தின் தயாரிப்பாளர் ஜெயமுருகனின் #எஸ்_என்_ஜே (3892),
திமுகவுக்கு நெருக்கமான காரைக்காலை சேர்ந்த வாசுதேவனுக்கு சொந்தமான #கால்ஸ் (3777 கோடி),
திமுக ஆட்சியில் தென்னை விவசாயிகள் நல வாரியத் துணைத் தலைவராக இருந்த கிருஷ்ணசாமி என்பவரின் மகன் தரணிபதியின்#இம்பெரியல் (1591 கோடி) ஆகிய 4 தொழிற்சாலைகள் கடந்த மூன்று வருடங்களில் சுமார் 11704 கோடி சாராயம் விற்பனை செய்துள்ளனர்.
தமிழக மக்கள் சாராயத்தால் எண்ணற்ற துன்பம் அடைகிறார்கள் என்று கவலைப்படும் திமுக தலைமை இன்றே அவர்கள் கட்சிக்கு நெருக்கமான சாராய தொழிற்சாலைகளில் இருந்து விற்கப்படும் சாராயத்தை நிறுத்தினால் கடைகளில் பற்றாக்குறை ஏற்ப்பட்டு அனேக கடைகளை மூட வேண்டிய நிலை வருமே !
மேலும் பல்வேறு கட்சிகள் இன்று மக்கள் மனநிலை அறிந்து டாஸ்மாக் முற்றுகை போராட்டங்கள் நடத்தும் போது திமுக மட்டும் ஏன் வெறும் அறிக்கை போர் நடத்திக்கொண்டு இருக்கிறது? கடைகளை முற்றுகையிட்டால் தங்கள் தொழிற்சாலை வருமானம் பாதிக்கப்படும் என்பதாலா?
பதில் சொல்லுமா திமுக தலைமை?
தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு என்ற வெற்று கோஷத்தை நம்ப தமிழக மக்கள் தயாராக இல்லை என்பது மட்டும் 100 சதவிகிதம் நிச்சயம்.
No comments:
Post a Comment