Friday, 30 October 2015

சமூக ஆர்வலர் கோவன் கைது..... தமிழக அரசிற்கு,காவல் துறைக்கு நன்றி...இன்னும் பலரைக் கைது செய்ய வேண்டுகிறோம்.

சட்ட பஞ்சாயத்து இயக்க செய்தி வெளியீடு(30-10-2015)

"டாஸ்மாக் மூடு பாடல்" சமூக ஆர்வலர் கோவன் கைது..... 

 தமிழக அரசிற்கு, காவல் துறைக்கு நன்றி... இன்னும் பலரைக் கைது செய்ய வேண்டுகிறோம்.

"மூடு டாஸ்மாக்கை மூடு" என்ற பிரபல டாஸ்மாக் எதிர்ப்பு பாடலைப் பாடிய சமூக ஆர்வலர் கோவன் இன்று அதிகாலை திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான கருத்துரிமையின் கழுத்துநெறிக்கும் செயலாகத்தான் இதனைப் பார்க்கிறோம். மேலும், டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர்கள், அமைப்புகளுக்கு தமிழக அரசு விடுக்கும் மறைமுக எச்சரிக்கை இது. இனிவரும் காலங்களில், போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு இதுபோன்ற திடீர் கைது, சிறைவாசம் பரிசாக அளிக்கப்படும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்தக் கைது.

கோவன் அவர்களின் கைதுக்குக் காரணமான பாடல் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது, பகிரப்பட்டுள்ளது என்பதே, மக்கள் கருத்தின் பிரதிபலிப்பாக இப்பாடல் உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. டாஸ்மாக் மூடப்படவேண்டும் என்பதே பெரும்பான்மையான மக்களின் விருப்பம், கருத்து. 

இந்த சூழலில் பாடியரைக் கைது செய்துள்ளார்கள். பாடியவரைக் கைது செய்யலாம்; சிறையில் அடைக்கலாம். ஆனால், அவர் மக்களிடம் பரப்பிய கருத்தை..?   பாடலைக் கேட்டவர்களை, பார்த்தவர்களையும் கைது செய்யுமா அரசு..?

தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகள் திறந்து மக்களைச் சீரழிக்கும் "மக்கள் துரோக" செயலுக்கு எதிராக குரல் கொடுப்பது "தேசத் துரோக" குற்றமா..? 

டாஸ்மாக் எதிர்ப்புப் போரளிகளின் வாயை மூடும் செயலை விடுத்து, டாஸ்மாக்கை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்ட பஞ்சாயத்து இயக்க முகநூலில் , இப்பாடலைப் பாருங்கள்.. பகிருங்கள் என்று பகிரங்கமாக நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். ஏராளமான அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் "மூடு டாஸ்மாக்கை" பாடலை தொடர்ந்து பகிர்ந்து வண்ணம் உள்ளனர். இதுவரை, இப்பாடலைப் பார்க்காத பல ஆயிரம்பேர், இப்போது தேடித்தேடி பார்க்கின்றனர். 

இறுதியாக, தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
 "டாஸ்மாக்" குறித்த விவாதத்தை மீண்டும் பரந்துபட்ட மக்களிடம் விவாதப் பொருளாக்கியதற்காக...

இன்னும் பல டாஸ்மாக் எதிர்ப்புப் போராளிகளைக் கைது செய்யுங்கள்.

போராளிகள் படும் தற்காலிகத் துன்பங்கள்... டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடட்டும்.

செந்தில் ஆறுமுகம்,
மாநில பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம், 8754580274

Friday, 9 October 2015

Sep-2015 Accounts of Satta Panchayat ... சட்ட பஞ்சாயத்தின் செப்2015 வரவு-செலவு விவரங்கள்...

Sir,

We, Satta Panchayat Iyakkam(SPI) fights against Corruption and Demands Transparency in Governance. 
To "Walk the Talk", we publish our accounts on 5th of every month in facebook and website(since launch of SPI). You can see the accounts of last 24 months @  http://www.tamil.sattam.org/expenses .
We will continue to fight against Corruption & Liquor. Expecting your continued support.

Note: Accounts of September 2015 is attached.

Thanks,
Senthil Arumugam,
General Secretary, Satta Panchayat Iyakkam,
8754580274

ஊடக ஆசிரியர்கள், நிருபர்களுக்கு வணக்கம்,

வெளிப்படையான அரசு நிர்வாகத்தை வலியுறுத்தும் சட்ட பஞ்சாயத்து  இயக்கம், தனது வரவு செலவுகளை வெளிப்படையாக வெளியிடுவதைத் தார்மீகக் கடமையாகக் கருதுகிறது.
மேலும், எங்களுக்கு நன்கொடை அளிக்கும் ஒவ்வொரு ஆர்வலர்களுக்கும் தங்களது நன்கொடை எப்படி செலவிடப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமையும் இருக்கிறது.

இந்த அடிப்படையில், கடந்த 24 மாதங்களாக(இயக்கம் துவங்கியதிலிருந்து இதுநாள் வரை) ஒவ்வொரு மாதமும் இயக்கத்தின் வரவு-செலவுகளை முகநூலில்,இணையத்தில் வெளியிட்டுள்ளோம்( http://www.tamil.sattam.org/expenses )

இலஞ்ச-ஊழலற்ற வெளிப்படையான அரசு நிர்வாகத்தை கொண்டுவரவும், மதுவிலக்கை வலியுறுத்தியும் எங்கள் போராட்டங்கள் தொடரும்.  ஊடகங்கள், தங்கள் ஆதரவை தொடர்ந்து தர வேண்டுகிறோம்.

செந்தில் ஆறுமுகம்,
மாநில பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம், 8754580274
​



Thursday, 1 October 2015

2016 தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடிப்போம்..நாளை பிரச்சாரம் துவக்கம்.. People should defeat ADMK in 2016 Election...

To the editor:

On 33rd day of relay fast, Satta Panchayat Iyakkam resolved to campaign against ADMK, the only main stream party in TN which has not yet accepted Liquor Prohibition Policy. Hence, we are kicking off election campaign tomorrow(02-10-2015, 8am, In MADURAI WEST Assembly Constituency) requesting people NOT to VOTE for ADMK. But vote for any party which already assured prohibition.

Senthil Arumugam, State General Secretary,
Satta Panchayat Iyakkam


​


​


மதுவிலக்கு கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்திய தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தின் 33வது நாளன்று(25.09.15) நாம் அறிவித்தபடி, பிரச்சாரத்தை நாளை துவங்குகிறோம். மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை வீடு வீடாய்ப் பிரச்சாரம் துவங்குகிறது ( காளவாசல், ஜெர்மன் ஹோட்டல் அருகே) . தொடர்புக்கு: அண்ணாத்துரை( 8754588222 )


காந்தியவாதி சசிபெருமாளின் உயிர் தியாகம், மக்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து மதுக்கடைகளை மூடாத அ.தி.மு.க.வை. வரும் சட்டமன்றத் தேர்தலில் புறக்கணிப்போம்; தோற்கடிப்போம்.

குறிப்பு: இப்பிரச்சாரத்தின்போது "மதுக்கடைக்குப் பூட்டு ; அதற்கு உங்கள் ஓட்டு" என்ற ஸ்டிக்கர் ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒட்டப்படும். 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, மதுக்கடைகளை மூட வாக்குறுதி அளித்திருக்கும் கட்சிகளில் தங்களுக்குப் பிடித்தமான ஏதேனும் ஒரு கட்சிக்கு வாக்களிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.

தொடர்புக்கு: அண்ணாத்துரை( 8754588222 )

செந்தில் ஆறுமுகம்,
மாநில பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
87545-80274

Friday, 25 September 2015

மதுவிலக்குப் போராட்டத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள்..

சட்டசபையில் மதுவிலக்கை அறிவிக்கக் கோரி
                 33 வது நாள் உண்ணாவிரதம்
                          
25.09.2015


      மதுவிலக்குப் போராட்டத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள்


இலவசங்களை அள்ளித்தெளிக்க, தேர்தலில் ஓட்டுக்குப் பணத்தை வாரியிறைக்க ஆட்சிக்கு,கட்சிக்கு பல ஆயிரம் கோடி பணம் வேண்டும். அதற்கு, மதுவிற்பனை தங்கு தடையின்றி நடைபெற வேண்டும் என்பதே இன்றைய ஆளுங்கட்சியின் அணுகுமுறையாக இருந்து வருகிறது. மக்கள் நலனைவிட, முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், தான் நடத்தும் "மிடாஸ் சாராய உற்பத்தி ஆலை" மூலம் கிடைக்கும் 11000 கோடி வருமானமே முக்கியம் என்ற அடிப்படையிலேயே மதுவிலக்கு குறித்து வாய்திறக்க மறுக்கிறார் முதல்வர்.டாஸ்மாக் முற்றுகை, பொதுநலவழக்கு, ஆர்ப்பாட்டங்கள் என மதுவிலக்கு கோரி பலகட்டப் போராட்டங்கள் நடத்தியுள்ள சட்ட பஞ்சாயத்து இயக்கம், சட்டசபையில் மதுவிலக்கை அறிவிக்கக்கோரி கடந்த 33 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவருகிறது.

அடுத்த கட்ட செயல்திட்டங்கள்:

1.
மதுவிலக்கை அறிவிக்காத அ.தி.மு.கவை வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் புறக்கணிப்போம்,தோற்கடிப்போம்:


தமிழகத்தில் மிகப்பெரும்பாலான அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் மதுவிலக்கை அறிவிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளபோது சட்டசபையில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும், மதுவிலக்கு என்பது தேர்தல் பிரச்னையாக, ஓட்டுக்களைப் பாதிக்கும் பிரச்னையாக மாறாது என்ற நம்பிக்கையிலேயே முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மதுவிலக்கை அறிவிக்க மறுக்கிறார். இது உண்மை நிலையில்லை என்பதை நிரூபிக்கும்விதமாக நடைபெற உள்ள சட்டமன்றத்தேர்தலில் மதுவிலக்கை அறிவிக்காத அ.தி.மு.க.வைப் புறக்கணிக்க வேண்டும் ; தோற்கடிக்க வேண்டும் என்று பொதுமக்களை சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது. அதேசமயம், எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் ஆதரவு தரவில்லை, வாக்களிக்கக் கோரவில்லை என்பதைத்  தெரிவித்துக்கொள்கிறது.

2. மாவட்டங்களில் "மதுவிலக்கு பேரணி":

மதுவிலக்கு கோரிக்கை என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கை என்பதை வலுவாக வெளிக்காட்டும்விதமாகவும், வரும் தேர்தலில் மதுவிலக்கை அறிவிக்கும் கட்சிக்கே வாக்களிப்போம் என்பதைப் பொதுமக்கள் தெரிவிக்கும்விதமாகவும் மாவட்டங்களில் "மதுவிலக்குப் பேரணி" நடத்தப்படும்.


3. "மதுக்கடைக்குப் பூட்டு; அதற்கு எனது ஓட்டு" –
                                 வீடு வீடாய்ப் பிரச்சாரம்:

பொதுமக்களை வீடு, வீடாய் சந்தித்து மதுவிலக்கை அறிவிக்கும் கட்சிகளில் உங்களுக்குப் பிடித்தமானோருக்கு வாக்களியுங்கள், மதுவிலக்கை அறிவிக்காத அ.தி.மு.கவைப் புறக்கணியுங்கள் என்று தொடர் பிரச்சாரம் செய்ய உள்ளோம்.


4. நீதிமன்றத்தை அணுகி சட்ட ரீதியிலான போராட்டம்:

டாஸ்மாக் மேல்மட்ட நிர்வாகம், டாஸ்மாக் கடைகள்,  பார்களில் ஏராளமான முறைகேடுகள், ஊழல்கள் நடக்கின்றன. இதுதொடர்பாக நாங்கள் தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூலமாக பெற்றுள்ள ஆவணங்கள், ரகசிய கேமராக்கள் மூலம் எடுக்கப்படும் ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்  நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்துப் போராட உள்ளோம்.

விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள ஏராளமான டாஸ்மாக் கடைகளை மூடுவதற்காக நீதிமன்றத்தில் வழக்குதொடுக்க உள்ளோம்.


5. "அம்மா – சாராயக் கடை":

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் பல திட்டங்களுக்கு "அம்மா" திட்டம் என்று பெயர் வைக்கப்படுகிறது. அந்த அடிப்படையில், மக்களைக் கொன்று 30 ஆயிரம்கோடி ரூபாய் சம்பாதித்துத் தரும் டாஸ்மாக் கடைகளுக்கு "அம்மா-சாராயக் கடை" என்று பெயர் வைப்பதே பொருத்தமானது என்பதை வலியுறுத்தி 23-09-2015 அன்று மதுரையில் போராட்டம் நடத்திக் கைதானோம். இப்போராட்டங்கள் தமிழகமெங்கும் தொடரும்
                     

                              செந்தில் ஆறுமுகம்,
                                       மாநிலப் பொதுச்செயலாளர்,
8754580274

Wednesday, 23 September 2015

Devaamirtham's invitation


பாரம்பரிய அரிசிகளின் உணவுத் திருவிழா


நமது முன்னோர்கள் பயன்படுத்திய ஆரோக்கியமான பாரம்பரிய நெல்விதைகளை, அரிசிரகங்களை மீண்டும் கண்டெடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியாக சென்னையில் பாரம்பரிய அரிசிகளின் உணவுத்திருவிழா கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை நடத்த உள்ளோம். 

சென்னை ரிப்போர்டர்கில்டிலும், பிரஸ்கிளப்பிலும் செப்டம்பர் 26, சனிக்கிழமை, ஒருநாள் நிகழ்வாக காலை முதல் மாலை வரை இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.  

திருத்துறைப்பூண்டியில் செயல்படும் 'கிரியேட்' தொண்டு நிறுவனத்தினரின் நெலவிதைகளும், உளுந்தூர்பேட்டை சாராதா ஆஸ்ரமத்தின் நெல்விதைகளும் மக்களுக்கு காட்சிப்படுத்தப் பட உள்ளன. மேலும் 40க்கு மேற்பட்ட மருத்துவ குணமிக்க பாரம்பரிய அரிசிகளின் காட்சிபடுத்த உள்ளோம். இந்த கண்காட்சியை நடிகர் சிவக்குமார் திறந்து வைக்கிறார். கருத்தரங்கு நிகழ்வில் தமிழகத்தில் பாரம்பரிய விவசாயத்தில் முன்னோடிகளான நெல். ஜெயராமன், கோ.சித்தர், போன்றோரும் வேளாண் ஆராய்ச்சியாளர் டாக்டர், ராமன், இயற்கை மருத்துவர்கள் ரத்தினசக்திவேல், மாறன்ஜி, சித்த மருத்துவ முன்னோடி டாக்டர். வேலாயுதம், இயற்கையின் திருமகள். நா.நாச்சாள்,  போன்றோர் பேசவுள்ளனர். மாடித்தோட்டம் குறித்து இலவச பயிற்சி தரப்படும். தமிழருவிமணியன், திரைப்பட இயக்குநர் ஜனநாதன், கலந்துக்கொண்டு பேசுள்ளனர். உணவுத்திருவிழாவில் 12விதமான பாரம்பரிய அரிசிகளின் சாப்பாடு வகைகளும், பலகார (டிபன்)வகைகளும் பரிமாறப்படவுள்ளன. 

பாரம்பரிய உணவுக் கலாசாரத்தை மீட்டெடுக்கும் ஒரு சிறிய முயற்சியாக தேவாமிர்தம் அமைப்பு இந்த ஒரு நாள் நிகழ்வை வடிவமைத்து உள்ளது.   

இந்நிகழ்வில் பெருவாரியான மக்கள் கலந்துகொண்டு பயன் பெற ஏதுவாக தங்கள் ஊடகத்தில் செய்தி வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

கிடைத்தற்கு அரிய பாரம்பரிய அரிசிகள் இங்கே மக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கும்.

அன்புடன்,
தேவாமிர்தம்,
சாவித்திரிகண்ணன்
9 / 5, 3வது கிழக்குத்தெரு, காமராஜ்நகர்,
திருவான்மியூர், சென்னை 41. 
9444427351. 



 Our ancestors were used the healthy rice. After the green revolution the traditional rice were destroyed and forgotable to the people .

 

Now adays welfare society and Agriculture scientist are re-invent  some traditional  rice. It will show to public.

 

Devaamirham traditional food organization  will contact one day food festival   and conference in Chennai reporters gild and Press club  on Saturday 26th September.  The festival will be started 9.00 am till 7pm.

 

Thiruthuraipoondi 'creat' welfare  organization will disply more than 150 seed rice  and ulundurpet 'Sarada Asharam' also display some seed rice. And then as kinds of Medicinal rice will be displayed.

Actor Sivakumar will inaugurate the exhibition. As a pioneer in the state in the event of the seminar on traditional rice farming. Jayaraman, k. sidhar, such as agro researcher Dr. Raman, Naturopathic doctors Rathina sakthivel, Maran G, Doctor of Medicine predecessor. Velayudan, Scripture nature. Nanachal, will also be like. The free training will be given Green House. Tamilaruvi maniyan, Film director Jananathan, also  participated. 12 kinds of traditional rice varieties are in food festival meals, snacks (breakfast) will be provided.   

 

Devaamirtam traditional dietary culture and to try to restore a little of this one-day event is to design the system.

 

Countless people participated in this event in order to get the benefit of their urge to publish in the media.

 

 

Regards,

Devaamirtham,

Savithrikannan,

Co- Sponcer

LIONS CLUB

 


சட்டசபையில் மதுவிலக்கு அறிவிக்க கோரி மனு கொடுக்க சென்ற சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் கைது

சட்டசபையில் மதுவிலக்கு அறிவிக்க கோரி மனு கொடுக்க சென்ற சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் கைது :

https://youtu.be/HgW4nsNEjLo - காவல்துறை அனுமதி மறுத்து கைது செய்யப்பட்ட பொழுது எடுக்கப்பட்ட வீடியோ.
வருகிற செப்டம்பர் 25 அன்று மதுவிலக்கு மானிய கோரிக்கை விவாதத்தில் மதுவிலக்கு அறிவிக்க வலியுறுத்தி முதல்வருக்கு மனு கொடுக்க சட்டசபை மனு கொடுக்கும் பகுதிக்கு சென்ற 26 சட்ட பஞ்சாயத்து இயக்க உறுப்பினர்கள் மற்றும் மதுஒழிப்பு ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி மனு கொடுப்பது கூட தற்பொழுது தமிழகத்தில் குற்ற செயல் ஆகிவிட்டது.

நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269

​Satta Panchayat Iyakkam, 

|  31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Join Us : join.sattam.org |  Donate Online : donate.sattam.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath

To Register for Monthly Contribution and become a SPI Pillar : 1001.sattam.org

Other Contact:

SPI Accounts Team : spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com
Speak about SPI / Billing Issues : 8754580269
Google Groups : spimembers@googlegroups.com