கேள்விகள் 5
மக்கள் தலையில் வரியை, டிக்கெட் கட்டண உயர்வை சுமத்திவிட்டு
வரி உயர்வு, இரட்டை வரி என்று குமுறும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு... திரைத்துறைக்கு... 1. வாகன பார்க்கிங்கிற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூலிக்க மாட்டோம் என்று அறிவிக்கத் தயாரா.. ?
2. தியேட்டருக்குள் விற்கப்படும் உணவுப்பொருட்களை எம்.ஆர்.பி.(அதிகபட்ச விற்பனை விலை) விலையில் விற்கத் தயாரா..?
3. "வெளியிலிருந்து கொண்டுவரும் உணவுப்பொருட்களை தியேட்டருக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை" என்ற சட்டத்திற்குப் புறம்பான போக்கை மாற்றத் தயாரா..?
4. தியேட்டர் கவுண்டரில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் வசூலிப்போம் என்று அறிவிக்கத் தயாரா..?
5. "சம்பாதிக்கும் கோடிக்கணக்கான பணத்திற்கு சட்டப்படி நாங்கள் வரி கட்டுவோம், கருப்புப் பண பரிமாற்றம் செய்யமாட்டோம்" என்று திரை நட்சத்திரங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிக்கத் தயாரா..?
செந்தில் ஆறுமுகம்,
பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
8754580274, 8754580270
No comments:
Post a Comment