Friday, 28 July 2017

PRESS RELEASE on : Prison reforms : 28-07-2017

சிறைத்துறையில் சிறப்பானதொரு சீர்திருத்தம்                

-    வரவேற்கிறோம் !

மற்ற துறைகளிலும் இதேபோல் நடைமுறைப்படுத்த வேண்டுகிறோம் !
   
              சட்ட பஞ்சாயத்து இயக்கம் பத்திரிகை செய்தி ( 28/07/2017)

                  87545-80270, 87545-80274


அரசு ஊழியர்கள்ஆசிரியர்கள்காவலர்கள் உள்ளிட்டஅனைத்து பொது ஊழியர்களும் சிறப்பாகச் செயல்படஅவர்களின் குடும்பச்சூழல் மிக முக்கிய அம்சமாகும்ணிமுடிந்து கணவன்மனைவிகுழந்தைகளுடன் நேரத்தைசெலவழிப்பதன் மூலம் பணிச்சூழலின் அழுத்தம் குறையும்.அந்த வகையில் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை போதிக்கஆசிரியர்களின் மனச்சூழல் – வீட்டுச்சூழல் மிக முக்கியம் என்றஅடிப்படையில் கல்வித்துறையில் உள்ள லட்சக்கணக்கானஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு மூலம்நடத்தப்படுகிறதுபெரும்பாலான ஆசிரியர்களுக்கு விரும்பியஇடம் , சொந்த ஊர்சொந்த மாவட்டங்களில் பணிபுரியஇலஞ்சம் கொடுக்காமல் இடமாறுதல் கிடைக்கிறது.அவர்களுக்கு அமைதியான – மகிழ்ச்சியான வீட்டுச்சூழலைஉருவாக்குவதன் மூலம் மாணவர்களுக்கு கல்வி போதிக்கும்திறனை அதிகரிக்க முடிகிறது.

         அந்த வகையில் அதிக மன அழுத்தம், நெருக்கடிக்குஉள்ளாகும் துறையினர் காவல்துறைசிறைத்துறைதீயணைப்புதுறையினர்அதில் சிறைத்துறையினருக்கு தற்போது புதியமுயற்சியாக காவலர்களுக்கான இடமாறுதல் ஆசிரியர்களுக்கானகலந்தாய்வு இடமாறுதல் போல் நடத்தப்பட்டுள்ளதுஇதனால் ஒருபைசா லஞ்சம் கொடுக்காமலே சொந்த மாவட்டத்தில் அல்லதுஅருகில் உள்ள மாவட்டங்களில் விரும்பிய இடம் பெரும்பாலானகாவலர்களுக்கு கிடைத்துள்ளது.

 

இதன்மூலம் அவர்களின் வீட்டுச் சூழல் மகிழ்ச்சியாக்கப்பட்டுபணிச் சூழலால் ஏற்படும் மன நெருக்கடி குறைக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.இடமாறுதல் கலந்தாய்வில் லஞ்சம் – ஊழல்ஒழிக்கப்பட்டுள்ளது.


வெளிப்படையான  கலந்தாய்வு இடமாறுதல் மூலம்சிறைத்துறையில் சீர்திருத்தத்தை கொண்டு வர முயற்சி செய்யும் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி திரு.சைலேந்திர பாபு I.P.S அவர்களை சட்டபஞ்சாயத்து இயக்கம் மனதார பாராட்டுகிறது.


மேலும் சிறைத்துறையில் நடக்கும் பல்வேறு லஞ்சம் – ஊழல் –முறைகேடுகளை களைந்து சிறைத்துறை முழுவதையும் சீர்திருத்தம்செய்ய சட்ட பஞ்சாயத்து இயக்கம் வேண்டுகிறது .


இதேபோல் அனைத்து அரசு துறையிலும் வெளிப்படையானகலந்தாய்வு முலம் இலஞ்ச – ஊழல் இல்லாமல் இடமாறுதல்வழங்கிட முதல் அமைச்சர்அமைச்சர்கள்தலைமைச் செயலாளர்,அரசு செயலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டபஞ்சாயத்து இயக்கம் கோருகிறது.

இலஞ்சம், ஊழல், அதிகார முறைகேடுகளைத் தோலுரித்து மக்களுக்குத் தெரியப்படுத்தும் ஊடகத்தினர், சிறைத்துறையில் ஏற்பட்டிருக்கும் இச்சீர்திருத்தம் குறித்து விரிவாக விசாரித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஊழலை அம்பலப்படுத்த வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அரசு நிர்வாகத்தில் கொண்டுவரப்படும் மாற்றங்களை/சீர்திருத்தங்களை பாராட்டி, வரவேற்க வேண்டியது அவசியம் என்பதன் அடிப்படையிலேயே இப் பத்திரிக்கைச் செய்தியினை வெளியிடுகிறோம்.

 ஊழலுக்கு எதிர் நிற்போம்; உண்மைக்குத் துணை நிற்போம்..

                         
                        
சிவ.இளங்கோ, தலைவர்,

                        சட்ட பஞ்சாயத்து இயக்கம்,

                      87545-80270, 87545-80274இப் பத்திரிக்கைச் செய்தியினை வெளியிடுகிறோம்.

 ஊழலுக்கு எதிர் நிற்போம்; உண்மைக்குத் துணை நிற்போம்..

                         
                        
சிவ.இளங்கோ, தலைவர்,

                        சட்ட பஞ்சாயத்து இயக்கம்,

                      87545-80270, 87545-80274


Virus-free. www.avast.com

No comments:

Post a Comment