Tuesday, 15 May 2018

காவிரி மேலாண்மை வாரியமா..? பா.ஜ.க. நாட்டாண்மை வாரியமா…? - சட்ட பஞ்சாயத்து இயக்கம் - பத்திரிகை செய்தி 15-05-2018

காவிரி மேலாண்மை  வாரியமா..?  
பா.ஜ.க. நாட்டாண்மை வாரியமா…?

 சட்ட பஞ்சாயத்து இயக்கம் பத்திரிகை செய்தி ( 15-05-2018 )

                                      87545-80274, 87545-80270

 

-          வரைவு ஆவணம் மேலாண்மை வாரியத்தின் தன்னாட்சியைப் பறிக்கிறது.

-          மேலாண்மை வாரியத்தில் மத்திய அரசின் கை ஒங்குவதற்கு வழிவகுக்கும் பிரிவுகள் 3.14, 3.18(பக்கம்9)  நீக்கப்படவேண்டும்


 

காவிரி மேலாண்மை வாரியத்தை "மேலாண்மை" செய்யும் "சூப்பர் மேலாண்மை வாரியமாக" மத்திய பா.ஜ.க அரசு இருக்க விரும்புவது நேற்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு ஆவணத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. ( வரைவு ஆவணத்தின் பிரிவு 3,  பக்கம் 9:  பத்தி: 14.  If the authority finds that any Government of the party states namely Tamilnadu, Kerala, Karnataka and Union Territory of Pondicherry do not co-operate in implementing the decision/direction of the Tribunal, it can seek the help of the Central Government, ******whose decision in the matter will be final and binding on all parties concerned. *****)

 

2007 இறுதித் தீர்ப்பில் இருந்த வரிகள் இதுதான். "…..If the Board finds that either Government of the party States namely Tamil Nadu, Kerala, Karnataka and Union Territory of Pondicherry do not co-operate in implementing the decision/direction of the Tribunal, it can seek the help of the Central Government." (  பக்கம் 235, காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு(2007) )

2007 தீர்ப்பு, 2018 வரைவு ஆவணம் இரண்டிலும் உள்ள  கடைசி வரிகளைக் கவனியுங்கள்.  மத்திய அரசின் "நாட்டண்மை" போக்கு நன்கு தெரியும்.

2007 தீர்ப்பில் சொல்லப்பட்டது என்னவென்றால், வாரியத்தின் தீர்ப்பை மாநிலங்கள் ஏற்காவிட்டால் வாரியமானது மத்திய அரசின் உதவியைக் கோரலாம் என்பதுதான்.

ஆனால், நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில், "… வாரியத்தின் தீர்ப்பை மாநிலங்கள் ஏற்காவிட்டால் வாரியமானது மத்திய அரசின் உதவியைக் கோரலாம் என்றும் அப்படிக் கோரும் பட்சத்தில் அப்பிரச்னையில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிற்கு உண்டு என்றும் அந்த முடிவிற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கட்டுப்படவேண்டும்" என்றும் உள்ளது.

எளிமையாகப் புரிவதற்காக ஒரு எடுத்துக்காட்டு :

மேலாண்மை வாரியம் ஜீன்12 அன்று குறிப்பிட்ட டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்குத் தரவேண்டும் என்று உத்தரவிடுகிறது. தண்ணீரைத் திறக்க கர்நாடகம் மறுக்கிறது.

இப்படி ஒரு சூழ்நிலையில், பிரச்சனையைத் தீர்க்க மேலாண்மை வாரியம் மத்திய அரசின் உதவியை நாடினால், நேற்று மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு ஆவணப்படி பார்த்தால்  "… ஜீன்12 தானே தண்ணீர் திறக்கணும், 2019 அல்லது 2020 ஜீன்12க்கு தண்ணீர் திறந்துகொள்ளலாம்" என்று மேலாண்மை வாரிய அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிடுவதற்கு அதிகாரம் உள்ளது.

இதுபோதாது என்று, "… மேலாண்மை வாரியமானது மத்திய அரசு  அவ்வப்போது இடும் கட்டளைகளை ஏற்றுநடக்கவேண்டும்" என்று பொத்தாம் பொதுவாக பொடிவைத்துச் சொல்கிறது வரைவு ஆவணத்தின் பிரிவு 3,  பக்கம் 9:  பத்தி: 18. ( …18. The authority shall comply with any other directions that the central Government may provide time to time ). இதெல்லாம் 2007 இறுதித்தீர்ப்பில் சொல்லப்படாத வரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

காவிரி மேலாண்மை வாரியத்தை, பா.ஜ.க. நாட்டாண்மை வாரியமாக மாற்றுவதற்கு வழிவகுக்கும் பிரிவுகள் 3.14, 3.18(வரைவு ஆவணத்தில்)  நீக்கப்பட்டு 2007ல் காவிரி தீர்ப்பாயம் கொடுத்த இறுதித் தீர்ப்பில் உள்ள வரிகள் சேர்க்கப்படவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோருகிறது.


"..தான் இட்டதே கட்டளை, தான் சொல்வதே சாசனம்" என்று இருக்கவேண்டும் என்ற மத்திய அரசின் நாட்டாண்மை நிலைப்பாட்டைப் புரிந்துகொண்டு தமிழக அரசு செயல்படவேண்டும்.

என்ன செய்யவேண்டும் தமிழக அரசு ?  மேலாண்மை வாரியத்தின் செயல்பாடுகளில் மத்திய அரசின் கை ஓங்குவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் 2007 இறுதித் தீர்ப்பில் உள்ளது போன்று மேலாண்மை வாரியம் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் அழுத்தமாக வாதத்தை முன்வைக்க வேண்டும்.

செந்தில் ஆறுமுகம், 
பொதுச்செயலாளர்,  சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
87545-80274, 87545-80270

No comments:

Post a Comment