Monday, 7 May 2018

SPI PR | விவசாயிகள் மற்றும் சாமானிய மக்கள் நலன் கருதி, உடனடியாக அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கவேண்டும்! | 07 May 2018

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

 

பத்திரிகை செய்தி (07-05-2018)

தொடர்புக்கு : 87545 80270 / 87545 80274

 

விவசாயிகள் மற்றும் சாமானிய மக்கள் நலன் கருதி, உடனடியாக அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கவேண்டும்!

19 லட்ச அரசு ஊழியர்களின் 80000 கோடி செலவிடுவதால், மக்கள் நல திட்டங்களுக்காக 6000 கோடி மட்டுமே அரசு செலவிடுகிறது.


Tamilnadu government has openly publicized and accepted the truth that only 6% of SOTR(States own tax revenue) is being spent for peoples welfare and 70% of SOTR goes to TN government employees salary and pension. Satta Panchyat Iyakkam has been pointing out this macro economic point for more than 1 year and strongly demanded the government (In October 2017) not to accept the 7th pay commission recommendations. As government is spending 6% of SOTR for 7 Crore people, Tamilnadu government needs to do staff rationalization immediately. To increase the capital expenditure and spend more for common people's welfare schemes, SPI urges the government to reduce the salary of Government employees till the desired performance output is achieved.



தமிழக அரசு ஊழியர்களின் சம்பளத்தை அக்டோபர் 2017இல், 20% வரை உயர்த்தியபொழுதே சட்ட பஞ்சாயத்து இயக்கம் கடுமையாக எதிர்த்தது என்பது அனைவரும் அறிந்ததே. 7வது ஊதிய குழுவின் பரிந்துரைகளை ஏற்று அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தினால், அரசுக்கு கூடுதலாக 14179 கோடி செலவாகும் என்றும் விவசாயிகள் & மக்கள் நல பணிகளுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும் என்று அரசை கடுமையாக எச்சரித்தோம். செவிடன் காதில் சங்கு ஊதியது போல், பொருளாதாரத்தை பற்றி கவலைப்படாமல் கண்மூடித்தனமாக ஊழியர்களின் சம்பளத்தை அரசு உயர்த்தியது. இதனால் ஏற்பட்டு இருக்கும் நிதிச்சுமையை சமாளிக்க முடியாததனால், மாநில அரசின் பட்ஜெட்டில் இருந்து வெறும் 6% நிதி மட்டுமே மக்கள் நல பணிகளுக்காக அரசு செலவிடுகிறது என்று அரசே இன்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இருக்கிறது. (விளம்பரம் கீழே படமாக இணைக்கப்பட்டுள்ளது)

 

19 லட்ச அரசு ஊழியர்களுக்கு - 85%, 7 கோடி சாமானிய மக்களுக்கு - 15%.

மீன்வள மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள பத்திரிகை விளம்பரத்தில் 19 லட்ச ஊழியர்களின் சம்பளத்திற்காக  (12 லட்சம் அரசு ஊழியர்கள் + 7 லட்சம் ஓய்வூதியதாரர்கள்) 70% செலவிடப்படுகிறது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அக்டோபர் 2017 சம்பள உயர்வுக்கு பிறகு இத்தொகை 80% தாண்டிவிட்டது. 

 

தமிழக அரசின் சொந்த நிதி வருவாய் (A) (2017-18)

93975 Crore

அரசு ஊழியர்களின் சம்பளம்(B)

45006 Crore

ஓய்வூதியம் (C)

20397 Crore

சம்பள உயர்வு (D)

14179 Crores

மொத்தம் (E) (E=B+C+D)

79582 Crores

Percentage (E/A)

85%

 

கடும் கடன் சுமையில் சிக்கி தவிக்கும் தமிழக அரசு விவசாய காப்பீடு தொகையை செலுத்தாததால், 2015இல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் காப்பீடை தர மறுத்தன. 2015இல் பயிர் காப்பீடு செய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு தொகை ஜூலை 2017இல் தான் கிடைத்தது.  விவசாயிகள் தங்கள் அடுத்த வேலை உணவிற்காக போராடி கொண்டு இருந்த வேளையில் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான காப்பீடை 2 வருடம் இழுத்தடித்து தந்தது குறிப்பிடத்தக்கது. 1200 கோடி வறட்சி நிவாரணம் விவசாயிகள் வழங்க முடியாது என்று தமிழக அரசு தமிழக விவசாயிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு (2017இல்) செய்தபொழுது, அரசு ஊழியர்களுக்கு மட்டும் எப்படி 14179 கோடி சம்பள உயர்வு கொடுக்கமுடிந்தது?

 

சொந்த வருவாயில் 94% மேல் சம்பளத்திற்கும் வட்டிக்கும் போய்விட்டால், மக்கள் நல திட்டங்களுக்கும் மற்ற பணிகளுக்கும் வருவாய் பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிந்தும் மூர்க்கத்தனமான முடிவை எடுத்த அரசை என்ன சொல்வது? அரசு ஊழியர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாததாலும், அவர்களின் வாக்கு வங்கியை தக்கவைத்து கொள்வதற்காக சாமானிய தமிழக மக்களை ஏமாற்றுவது சரியா?

 

அரசு ஊழியர்கள் சம்பள குறைப்பு சீர்திருத்த கமிட்டி:

தேவை இல்லாத அரசு பணியிடங்களை நீக்கவும், அரசு ஊழியர்களின் சம்பளத்தால் ஏற்படும் நிதிச்சுமையை கட்டுப்படுத்த ஆதி சேஷய்யா தலைமையிலான கமிட்டி அமைக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன் அரசு அறிவித்து இருந்தது. அறிவிப்பு வெளிவந்து 3 மாத காலமாகியும் அக்கமிட்டி இதுவரை அமைக்கப்படவில்லை. இக்கமிட்டியை உடனடியாக அமைத்து, அடுத்த நிதியாண்டிற்குள் தேவையில்லாத அரசு பணிகளை நீக்கி, அரசு ஊழியர்களின் சம்பளம் சொந்த வருவாயில் 50%க்குள் இருக்கும்படி அரசு பார்த்துக்கொள்ளவேண்டும். 2022ற்கு பிறகு நிர்வாக செலவிற்காக மாநில அரசின் சொந்த வரி வருவாயில் 25% மிகாமல் இருக்கவேண்டும் என்று புது சட்டம் கொண்டுவரவேண்டும். 

 

செயற்திறனுக்கேற்ப சம்பளம்: 

இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து அரசு அதிகாரிகளின் லஞ்ச-லாவண்யங்களை தொடர்ந்து வெளிக்கொணர்ந்து வருகிறோம். அதிகாரவர்க்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் அரசியல்வாதிகளில் ஒரு பைசா கூட ஊழல் செய்யமுடியாது என்பதே யதார்த்த நிலை. பணி நிரந்தரத்துடன் நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டு, சாமானிய மக்களிடம் லஞ்சம் வாங்குவதால் அரசு ஊழியர்கள் மேல் மக்கள் கடும்கோபத்தில் உள்ளனர். வெறும் 5 அரசு பள்ளி மாணவர்கள் (சராசரியாக வருடத்திற்கு 10 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரியில் சேர்கிறார்கள்) மட்டுமே மருத்துவ கல்லூரியில் சேர்ந்து இருக்கிற இந்த அவலநிலையில் ஆசிரியர்கள் வானளாவிய சம்பளம் பெறுவது ஏற்றுக்கொள்ளமுடியாது.

 

மத்திய அரசின் ஊதிய குழுவின் பரிந்துரைகளையும்  நிராகரித்திவிட்டு செயற்திறனுக்கேற்ப சம்பளம் (performance based appraisal system and people satisfaction index) என்ற கொள்கையை தமிழக அரசு அமல்படுத்தி இந்தியாவுக்கே முன்னுதாரணமாக திகழவேண்டும். சிறப்பாக செயற்படும் ஊழியர்களுக்கு மத்திய அரசின் ஊழியர்களை விட 10% அதிகமாக ஊதியம் தரலாம்.

 

வறட்சியினால் கடும் நெருக்கடியை சந்தித்துவரும் விவசாயிகள் மற்றும் சாமானிய மக்களின் நிலையை கருத்தில்கொண்டு, வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த அரசு ஊழியர்களின் சம்பளத்தை உடனடியாக குறைக்கவேண்டும். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அரசு ஊழியர்கள் போராட்டம் மேற்கொண்டால், அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு ஊழியர்கள் தங்களை திருத்திக்கொள்ளாவிட்டால், அரசு பணிகளை அவுட்சோர்ஸ்

செய்ய தமிழக அரசு தயங்கக்கூடாது.



 

                   

                                                                               சிவ.இளங்கோ

தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்

                                          Contact Number : 87545 80270 / 87545 80274







No comments:

Post a Comment