Awaken 'Krishna' in your Consciousness
- Sri Sri Ravi Shankar
Janmashtami celebrates the birth of Lord Krishna. Krishna is not a vyakti (person) but shakti(energy). Krishna was poornakalaavataran (a complete incarnation). The purpose of celebration is to realize that Krishna is in me and not different. In the Bhagwad Geeta, Lord Krishna says, "One who sees everyone in Me and sees Me in everyone, for such a person, I shall never remain hidden and he shall never be far from me."
Lord Krishna's life has all the nine rasas (flavors). For instance, he was naughty like a child, a warrior, joy personified and a source of knowledge. He was a perfect friend and guru. His birth on Ashtami signifies his mastery of both the spiritual and material worlds. He is a great teacher and a spiritual inspiration as well as a consummate politician. On one hand, he is Yogeshwara (the Lord of Yogis — the state to which every yogi aspires) while on the other, he is a mischievous thief. His behaviour is a perfect balance of the extremes — perhaps this is why the personality of Krishna is so difficult to fathom. The avdhoot is oblivious to the world outside and a materialistic person, a politician or a king is oblivious to the spiritual world. But Krishna is both Dwarkadheesh and Yogeshwar.
To understand Krishna, become Radha or Arjuna or Uddhava. Three kinds of people seek refuge in God. The lover, the miserable and the wise. Uddhava was wise, Arjuna was miserable and Radha was love. Nobody's better than anyone, all are good. Krishna's teachings are most relevant to our times in the sense that they neither let you get lost in material pursuits nor make you completely withdrawn. They rekindle your life, from being a burnt-out and stressed personality to a more centred and dynamic one. Krishna teaches us devotion with skill. To celebrate Gokulashtami is to imbibe extremely opposite yet compatible qualities and manifest them in your own life.
Krishna tells Arjuna, "You are very dear to me." Then Krishna tells Arjuna he must surrender. Surrender begins with an assumption. First you must assume. You assume you are the most beloved of the Divine, and then surrender happens. Surrender is not an action; it is an assumption. Non-surrender is ignorance. Non-surrender is an illusion. Surrender has to begin as an assumption and then it reveals itself as a reality. Finally, it reveals itself as an illusion. An illusion because there is no two, no duality. There is no independent existence of anyone. An individual has no independent existence.
So, in the Gita, Krishna says, "He is dear to Me who neither goes on thanking people nor hates anyone." Thanking and feeling obliged indicates that you believe in someone else's existence rather than in the Divine who is ruling everything. When you feel obliged, then you are not honoring the principles of karma or the divine plan. Appreciate people for what they are, do not thank them for what they do. Otherwise your thankfulness is centered around ego. You are grateful, but not for an act. You are grateful for what is. As every individual is nothing but a puppet of the ONE, thanking and being obliged is simply an exhibition of ignorance. Everything is ruled, controlled and managed by one Divinity, that consciousness has to shine forth in every act of yours; you do not have to make a mood of it.
Hence the most authentic way of celebrating Janamashtami is knowing that you have to play a dual role — of being a responsible human being on the planet and at the same time to realize that you are above all events, the untouched Brahman. Imbibing a bit of avadhoot and a bit of activism in your life is the real significance of celebrating Janmashtami. Awaken the Krishna in your consciousness – " Krishna is not far from me, not separate from me, he is within me'- this feeling will fill your life with Krishna. www.artofliving.org
-----உங்கள் மெய்யுணர்வில் ;கிருஷ்ணரை ; எழுப்ப வேண்டும்
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுவது ஜன்மாஷ்டமி. கிருஷ்ணர் ஒரு வியக்தி (நபர்)
அல்ல; சக்தி (ஆற்றல்). கிருஷ்ணர் பூர்ணகலாவதனர் (ஒரு முழுமையான அவதாரம்).
கொண்டாட்டத்தின் நோக்கம் என்னவெனில் கிருஷ்ணர் என்னுள்ளேயே இருக்கிறார்
வேறெங்கும் அல்ல என்பதை அறிந்துணர்வதுதான். பகவத் கீதையில், ஸ்ரீகிருஷ்ணர்
கூறுகிறார், "என்னிடத்தில் எல்லோரையும் காண்பவன்; எல்லோரிடமும் என்னைக்
காண்பவன் என்னும் அத்தகைய ஒரு நபரிடம் நான் ஒருபோதும் மறைந்திருக்க மாட்டேன்,
அத்தகைய ஒரு நபர் ஒருபோதும் என்னிடமிருந்து தொலைவிலிருக்க மாட்டார்."
கிருஷ்ணரின் வாழ்க்கை எப்போதும் ஒன்பது ரஸங்களை (சுவைகள்) கொண்டிருக்கிறது.
உதாரணமாக, அவர் ஒரு குழந்தையைப் போல் ஒரு குறும்புக்காரனாகவும், ஒரு போர் வீரனாக
வும், ஆனந்தமானவராகவும், அறிவின் ஆதாரமாகவும் இருந்தார். அவர் ஒரு சிறந்த நண்பர்
மற்றும் குரு. அஷ்டமியன்று அவரது பிறப்பு ஆன்மீக மற்றும் பொருள் நிறைந்த உலகம்
ஆகிய இரண்டின் தேர்ச்சியைக் காட்டுகிறது. அவர் ஒரு தலை சிறந்த ஆசிரியர் மற்றும்
ஆன்மீக உத்வேகம் ஏற்படுத்தும் ஒரு முழுமையான அரசியல் நிபுணர். ஒரு புறத்தில், அவர்
யோகேஸ்வரர் (யோகிகளின் இறைவன் - ஒவ்வொரு யோகியும் விரும்பும் நிலை) மற்றொரு
புறம் அவர் ஒரு குறும்புக்காரத் திருடன். கிருஷ்ணரின் ஆளுமையை புரிந்துணர்ந்து
கொள்வது மிகவும் கடினமான விஷயம். அவரது இறைமை பொருளுலக மனிதனுக்குப்
புரியாமலும், அவரது அரசியல் அல்லது அரசன் என்னும் நிலை ஆன்மீக உலகிற்குப்
புரியாமலும் உள்ளது. அதனால் ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகேஸ்வரர் மற்றும் யோகேஸ்வரர்.
கிருஷ்ணரைப் புரிந்து கொள்ள, ராதா அல்லது அர்ஜுனன் அல்லது உத்தவராக ஆக
வேண்டும். மூன்று வகையான மக்கள் கடவுளிடத்தில் அடைக்கலம் தேடுகிறார்கள். அன்பு
நிறைந்தவர், துன்புற்றிருப்பவர் மற்றும் ஞானி. உத்தவர் ஞானி, அர்ஜுனன் துன்புற்றிருந்
தவன், ராதா அன்பு நிறைந்தவள். ஒருவரைக் காட்டிலும் மற்றவர் எதிலும் குறைந்தவர் அல்ல.
அனைவரும் நல்லவர்கள். கிருஷ்ணரின் போதனைகள் நமது காலத்துக்கு மிகவும் பொருத்த
மாக இருக்கின்றன. அதாவது, பொருளுலகில் முற்றிலும் தன்னை இழந்து விடவும் கூடாது;
அதே சமயம் முற்றிலும் துறந்து விடவும் கூடாது. அவை உங்கள் வாழ்க்கையை அழுத்தமுற்று
களைத்து விடாமல் நடுநிலையுடன் மற்றும் இயக்கத்துடன் இருக்க மீண்டும் தூண்டி விடு
கின்றன. கிருஷ்ணர் நமக்குத் திறமையுடன் பக்தியைக் கற்பிக்கிறார். கோகுலாஷ்டமியைக்
கொண்டாட முற்றிலும் எதிரெதிராக ஆயினும் இணக்கமான குணங்களை உள்ளீர்த்துக்
கொண்டு , உங்கள் சொந்த வாழ்க்கையில் அவற்றை வெளிப்படுத்த வேண்டும்.
கிருஷ்ணர் அர்ஜுனனிடம், "நீ எனக்கு மிகவும் நெருங்கியவன் " என்று கூறுகிறார்.பிறகு
கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சரணடையுமாறு கூறுகிறார். சரணடைதல் ஒரு அனுமானத்துடன்
தொடங்குகிறது. முதலில் நீங்கள் தெய்வீகத்தின் மிகுந்த அன்புக்குரியவர் என்று
அனுமானித்துக் கொள்ள வேண்டும். பின்னர் சரணடைதல் நிகழ்கிறது. சரணடைதல் ஒரு
நடவடிக்கை அல்ல. அது ஒரு ஊகம். சரணடைதல் அற்ற நிலை அறியாமை; ஒரு மாயை.
சரணடைதல் என்பது ஒரு ஊகமாக ஆரம்பிக்க வேண்டும், பின்னர் அது ஒரு உண்மை என்று
தன்னை வெளிப்படுத்துகிறது. இறுதியாக, அது தன்னை ஒரு மாயையாக வெளிப்
படுத்துகிறது. ஏன் ஓர் மாயை என்றால், இருமை இல்லை. யாருக்குமே சுதந்திரமான இருப்பு
கிடையாது. ஒரு தனிநபருக்கு சுதந்திரமான இருப்பு கிடையாது.
எனவே, கீதையில், கிருஷ்ணர், "மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே இல்லாமலும்
அல்லது யாரையும் வெறுக்காமலும் இருப்பவனே எனக்குப் பிரியமானவன்" என்கிறார். நன்றி
தெரிவித்துக் கொண்டே இருந்தால், நீங்கள் அனைத்தையும் ஆளும் தெய்வத்தின் இருப்பை
விட, ஒரு தனிமனிதனின் இருப்பை நம்புகிறீர்கள் என்றாகிறது. நன்றிக்கடனுடன் இருத்தல்
கர்ம விதிகளை அல்லது தெய்வத்தின் திட்டங்களை மதிக்காமல் இருப்பதாக ஆகிறது.
மனிதர்கள் எவ்வாறிருக்கிறார்களோ அதற்கு மதிப்பளியுங்கள்; அவர்கள் என்ன செய்கிறார்கள்
என்பதற்கல்ல. இல்லையெனில் உங்களுடைய நன்றி ஈகோ வை சுற்றியே இருக்கும். நன்றி
யுடன் இருக்கிறீர்கள் ஆனால் ஓர் செயலுக்கு அல்ல. என்ன இருக்கிறதோ அதற்கு நன்றியுடன்
இருக்கிறீர்கள். அனைத்து தனி நபர்களும் இறைவன் ஒருவரது கைப்பொம்மைகளே ஆவர்.
நன்றி கூறி கடன் பட்ட உணர்வுடன் இருப்பது அறியாமையின் வெளிப்பாடு ஆகும்.
அனைத்தும் தெய்வீகத்தினால் ஆளப்பட்டு, கட்டுப்படுத்தப் பட்டு மேலாண்மை செய்யப்
படுகிறது. அந்த மெய்யுணர்தல் உங்களது ஒவ்வொரு செயலிலும் பிரகாசிக்க வேண்டும்.
நீங்கள் அப்படிப்பட்ட ஒரு மனநிலையை தனியாக உருவாக்க வேண்டிய அவசியமில்லை.
ஆகையால் ஜன்மாஷ்டமியைக் கொண்டாடுவதற்கு மிகவும் உண்மையான வழி என்ன
வெனில் நீங்கள் - பூமியில் பொறுப்புள்ள மனிதராக இருப்பது, அதே நேரத்தில் நீங்கள் எல்லா
நிகழ்வுகளுக்கும் மேலான, தொடப் படாத பிரம்மன் என்பதை தெரிந்துகொள்வது- ஆகிய
இரட்டை ப் பங்கினை வகிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் ஒரு தெய்வானுபவம், மற்றும்
சிறிது செயல்பாடு கொண்ட நிலை ஜன்மாஷ்டமி கொண்டாட்டத்தின் உண்மையான
முக்கியத்துவம்.
உங்கள் மெய்யுணர்வில் கிருஷ்ணரை எழுப்புங்கள்;கிருஷ்ணர் என்னை விட்டு தொலை
தூரத்தில் இருக்கவில்லை, என்னை விட்டுப் பிரிந்தும் இருப்பதில்லை , கிருஷ்ணர் எனக்குள்
இருக்கிறார் - என்னும் இந்த உணர்வு உங்கள் வாழ்க்கையில் ''கிருஷ்ணரை'' நிரப்பும்.
No comments:
Post a Comment