Saturday, 7 December 2019

Evening of Music & 'Meditation for World Peace' on Sunday, December 8, 2019


Dear Editor,


The Art of Living founder Gurudev Sri Sri Ravi Shankar is in Chennai and will be leading a Maha Satsang, an evening of  Music & 'Meditation for World Peace' on Sunday, December 8, 2019.

The program in Chennai will have 8,000+ people meditate together, led by Gurudev Sri Sri Ravi Shankar along with devotional music and interactions with the audience in his signature style that has caught the imagination of the people across continents.

Gurudev Sri Sri Ravi Shankar is an Ambassador of Peace and has led several key negotiations across the World. This Event on 8th December is to meditate for World Peace and will be webcast Live to an estimated 50,000 in Tamil Nadu and 1 lakh Tamils worldwide. 

Date and Venue:

Meditation for World Peace: 7:00 pm to 9:00 pm on Sunday, Dec 8, 2019 at the YMCA Grounds, Royapettah, Chennai.

You can send your colleagues to cover this event and they can call Shanthi Chandrasekaran at 9840724959 at the venue.


With best regards,


Rajalakshmi

9884017767

 


 

Friday, 6 December 2019

SPI Press invite | Model Local body manifesto | உள்ளாட்சி தேர்தல் - மக்களின் தேர்தல் அறிக்கை வெளியீடு

பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு


உள்ளாட்சிக்கான

மக்கள் தேர்தல் அறிக்கை வெளியீடு

 

இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்

நாள் & நேரம்: 07.12.2019 / நன்பகல் 12:00

தொடர்புக்கு: நந்தகுமார் 90032 32058 / 7200297276

 

பொதுவாக சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களின் போது அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கம். தேர்தல் வாக்குறுதிகள் பல முன்வைக்கப்படும்.

 

உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், உள்ளாட்சி தொடர்பான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கும் , கட்சிகளின் பார்வைக்கும் கொண்டுவரும் முயற்சியே, இந்த உள்ளாட்சிக்கான மக்கள் தேர்தல் அறிக்கைதொடர்ந்து பல ஆண்டுகளாக உள்ளாட்சி சார்ந்து களப்பணியாற்றிவரும் அமைப்புகள், மக்களின் கருத்துக்களைத் தொகுத்து உள்ளாட்சிக்கான இந்த தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ள.

 

கிராமசபைகளை எவ்வாறெல்லாம் வலுப்படுத்தவேண்டும், உள்ளாட்சிகளுக்குக் கூடுதலாக வழங்க வேண்டிய பொறுப்புகள் என்னென்ன, நகர உள்ளாட்சிகளின் தற்போதைய நெருக்கடி நிலையை மாற்றத் தேவைப்படும் சட்டத்திருத்தங்கள், மகளிர் மற்றும் பட்டியல் இனத்தவர்  உள்ளாட்சி நிர்வாகத்தில் எதிர்கொள்ளும் திட்டமிட்ட இடையூறுகளைக் களைய அரசு என்ன செய்யவேண்டும், ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் நியாமான கோரிக்கைகள் என அரசும், பிரதான கட்சிகளும் கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள

 

ஊடகங்கள் வாயிலாக அனைவரின் கவனத்திற்கும் வற்றைக் கொண்டுசெல்வதற்காகவே இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு. இதனை தன்னாட்சி, சட்ட பஞ்சாயத்து இயக்கம், தோழன், அறப்போர், இளையதலைமுறை, Voice of People உள்ளிட்ட பல சமூக அமைப்புகள் இணைந்து வெளியிடுகின்றன.

 

இது தேர்தலோடு நின்றுவிடாமல் தொடர்ந்து உள்ளாட்சி கோரிக்கைகளை வலியுறுத்தும் ஒரு துவக்கமே. மேலும், இது பற்றிய விரிவான தகவல்கள் சந்திப்பில் வெளியிடுகிறோம். இந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு உங்கள் செய்தியாளரை அனுப்பி, உள்ளாட்சியை வலுப்படுத்த உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி!



Tuesday, 3 December 2019

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியிடுவதை ஒத்திவைக்க...சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை மனு..!!

Hello,

SPI has petitioned the Tamilnadu state election commission to defer the Rural local body election results till the conduct of Urban local body elections. Please see the attachment.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை உடனே அறிவிக்கவேண்டும்...இல்லையேல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை நகர்ப்புறத் தேர்தல்களை நடத்திய பிறகே அறிவிக்கவேண்டும்.

மாநில தேர்தல் ஆணையத்திற்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் அனுப்பியுள்ள மனு...(3/12/2019)

73வது மற்றும் 74வது அரசியல் சாசன திருத்தம் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டபிறகு(1992) அதன் தொடர்ச்சியாக தமிழக பஞ்சாயத்துராஜ் சட்டம் 1994ல் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் 1996ம் ஆண்டில் தமிழகத்தில் முதன்முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர் 2001,2006,2011 என ஒவ்வொரு ஐந்து ஆண்டு கால இடைவெளியிலும் தேர்தல் நடத்தப்பட்டது. 2016ம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்த உள்ளாட்சித் தேர்தல் 04-10-2016 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ரத்துசெய்யப்பட்டது. இந்த சூழலில், கடந்த 02-12-2019 அன்று தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை தங்களால் வெளியிடப்பட்டது. இந்த அட்டவணையில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் அட்டவணையை வெளியிட்டபோது தாங்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் "….நிர்வாக காரணங்களால் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு இப்போது தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்றும் விரைவில் தேர்தல் நடத்தப்படும்" என்று தெரிவித்தீர்கள். இதுவரை நடந்த நான்கு உள்ளாட்சித் தேர்தல்களிலும்(1996,2001,2006,2011) ஊரகம்,நகர்ப்புறம் என அனைத்து இடங்களுக்கும் தேர்தல் அறிவிக்கப்படுவதுதான் வழக்கமாக இருந்தது. இந்த வழக்கத்தை மாற்றி ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தலை அறிவிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத நிலையில் இதுபோன்ற அறிவிப்புகள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அட்டவணையையும் அறிவிக்க வேண்டுகிறோம்(வாய்ப்பிருந்தால் இப்போதைய தேர்தல் அட்டவணையையே திருத்தி, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகள் இரண்டிற்கும் சேர்த்துத் தேர்தல் நடத்த வேண்டும்). ஒருவேளை, சேர்த்துத் தேர்தல் நடத்தமுடியாதபட்சத்தில், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்திமுடித்த பிறகு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை சேர்த்துவெளியிடவேண்டும். அதுவரை, ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டாலும், இறுதிக் கட்டத் தேர்தல் முடிவடைந்த பின்னரே அனைத்துக் கட்ட முடிவுகளும் வெளியிடப்பட்டது என்பதை நினைவுகூர்கிறோம். ஒரு கட்டத்தின் தேர்தல் முடிவுகள் அடுத்த கட்டத்தில் தேர்தல் நடைபெறும் மாநிலத்தின் வாக்காளர்கள் மத்தியில் குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டுப்போடுவதற்கான எண்ணத்தை தூண்டிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த அணுகுமுறை என்பது தங்களுக்கு நன்கு தெரியும். தேர்தல் முடிவுகள் என்பது மாநிலத்தைக் கடந்து தாக்கத்தை ஏற்படுத்தும் என்றுள்ள சூழலில், ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை முன்னரே வெளியிட்டால் அது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் மத்தியில், ஊரக உள்ளாட்சியில் அதிகம் வெற்றிபெற்ற கட்சிக்கே வாக்களிக்கும் எண்ணப்போக்கை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இது தேர்தல் முறையின் அடிப்படையான "சமதள வாய்ப்பு"(Level Playing Field) என்ற கோட்பாட்டிற்கு முரணாக உள்ளது. மேலும், இதுபோன்று பிரித்துத் தேர்தல் நடத்தும் முறையானது எதிர்காலத்தில்வரும் மாநிலத் தேர்தல் ஆணையர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். மேலும், 10வது,12வது வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்வு நெருங்கிவருகிறது என்பதையும் கருத்தில் கொண்டு உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை அறிவிக்கக்கோருகிறோம். அதுவரை ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியிடுவதை நிறுத்திவைக்கக் கோருகிறோம்





Tuesday, 13 August 2019

Over a lakh people to learn ways to Happiness with Sri Sri Ravi Shankar – Pan India Event

Dear Editor,


"Stress is when you have too much to do, very little time to do it and no energy to do the task," says Gurudev Sri Sri Ravi Shankar ji, "But what you can do is increase your energy. Pranayama (breathing exercises), meditation and Sudarshan Kriya gives you more energy for the day and makes you more productive."

Using the gift of technology, the Anandotsav Program will be a virtual gathering with participants joining in from over 3000+ web locations connecting cities and towns from Shillong to Mumbai and Jammu to Chennai, among many others, to learn the secrets to happiness. The entire country will join the wave of happiness. Over the last 36 years, this technique has brought together people from various walks of life, backgrounds and religion-farmers, doctors, homemakers, militants, IT professionals, war veterans, youth, businessmen, lawyers, Hindus, Muslims, Christians, Jews, Jains and many others, connecting humanity through the power of breath.

Apart from the powerful breathing techniques, Yoga, Pranayama and meditation, the program will also have interactive wisdom sessions that provide practical life tools to handle any difficult or stressful situation in life. The result is at the end of the program, people are known to experience a peaceful, stable, joyful state of mind and a sense of connection with everyone around.


We are delighted to share that Gurudev Sri Sri Ravi Shankar will teach secrets to a happy, dynamic and stress-free life through this Anandotsav, the Happiness Program to over 1 lakh people between August 16th to 18th, 2019 via webcast

 

In Chennai, over 50+ locations will participate in this program, for more details, call 8144265265

   

More information can be found about the Program at https://bit.ly/auwithgurudev

 

Please do share this with your readers. For Media related queries, contact Rajalakshmi at 9884017767

 

Friday, 26 July 2019

SPI PR - லஞ்சம் கேட்ட VAO கைது - 26 July 2019

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

 

பத்திரிகை செய்தி (26-07-2019)

தொடர்பு எண்கள் :  88704 72177 / 87545 88222

லஞ்சம் கேட்ட VAO கைது

வீடியோ ஆதாரத்துடன் லஞ்சஒழிப்புத்துறையிடம் பிடித்து கொடுத்தது சட்ட பஞ்சாயத்து இயக்கம்.

 

லஞ்சம் ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட  சட்ட பஞ்சாயத்து இயக்கம், தமிழ்நாட்டில் நடக்கும் பல லஞ்ச-ஊழல் முறைகேடுகளை தொடர்ந்து அம்பலப்படுத்திவருகிறது. அதன் தொடர்ச்சியாக, திண்டுக்கல் மாவட்டம் கரிக்காலி கிராமத்தில், பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை பற்றி, லஞ்ச ஒழிப்புதுறையிடம் இயக்கத்தின் சார்பாக புகார் அளிக்கப்பட்டது. இயக்கத்தின் புகாரின் அடிப்படையில், இன்று (26-07-2019) லஞ்ச ஒழிப்புத்துறை கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

 

திண்டுக்கல் மாவட்ட சட்ட பஞ்சாயத்து இயக்க உறுப்பினர் சுப்பிரமணி  குடும்பத்தினர்ஜூன்  மாதத்தில், திண்டுக்கல் மாவட்டம் கரிக்காலி கிராமத்தில் நிலம் வாங்கியுள்ளனர். 26 ஜூன்  2019 அன்று குஜிலியம்பாறை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்த பிறகு, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக (2 இடங்கள்) 27 ஜூன் 2019 அன்று கரிக்காலி கிராம நிர்வாக அலுவலர் துரைராஜை அணுகியுள்ளனர். ஒரு பட்டா பெயர் மாற்றத்திற்கு 6000 ரூபாய் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர், மொத்தம் 12000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெயர் மாற்றம் செய்துதரமுடியும் என்று வெளிப்படையாக லஞ்சம் கேட்டுள்ளார்.

 

இதை தொடர்ந்து லஞ்சஒழிப்புத்துறையிடம் இயக்கத்தின் அமைப்பு செயலாளர் ஜெய் கணேஷ் மற்றும் சுப்பிரமணி சென்று முறையிட்டபொழுது (10-7-2019), வீடியோ ஆதாரம் வேண்டும் என்று லஞ்சஒழிப்புத்துறை கேட்டது. ஜூலை 12,2019அன்று மீண்டும் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று பட்டா மாறுதல் செய்ய கேட்டபொழுது, லஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்காது என்று தெளிவாக கூறியதை வீடியோ எடுக்கப்பட்டது. மேலும், உங்களால் முடிந்ததை கொடுங்கள் என்றும், பேரம் பேசி கடைசியாக 8000 ரூபாய் பெற்றுக்கொண்டு பட்டா பெயர்மாற்றம் செய்ய ஒப்புக்கொண்டார். இதை வீடியோ ஆதாராமாக லஞ்சஒழிப்புத்துறையிடம் கொடுத்த பிறகு நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தனர்.

 

லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் (Inspector Geetha – 8300005091 & DSP Nagarajan – 9498145647) இன்று மதியம் 2 மணி (26-07-2019) அளவில் கிராம நிர்வாக அலுவலரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலருக்கு கடுமையான தண்டனையை பெற்றுத்தரவேண்டும் என்று இயக்கத்தின் சார்பாக லஞ்சஒழிப்புத்துறையை கேட்டுக்கொள்கிறோம். மேலும், இயக்க உறுப்பினர் சுப்பிரமணிக்கு உடனடியாக பட்டா பெயர் மாற்றும் செய்துதரவேண்டும் என்றும் இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

 

அ.ஜெய் கணேஷ்

மாநில அமைப்பு செயலாளர்

தொடர்பு எண் : 88704 72177


Friday, 5 July 2019

சிகாகோவில் நடைபெறும் பெட்னா மாநாட்டில் தமிழியக்கம் பதிப்பித்த தமிழ்ப் பெயர்களின்  நூலை  தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் வெளியிட்டார்.  

ஊடக அன்பர்களுக்கு வணக்கம்,

பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு , அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32-வது  தமிழ் விழா மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா  ஆகியவை  அமெரிக்காவின் சிகாகோ நகரில்  மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. நான்கு நாள் நிகழ்ச்சியில் இரண்டாம் நாளான இன்று  வி.ஐ.டி  வேந்தர் மற்றும் தமிழியக்கத்தின் தலைவர் திரு.கோ.விசுவநாதன் அவர்களின் சீரிய முயற்சியில் உருவாகியுள்ள "சூட்டி மகிழ்வோம் தமிழ்ப்பெயர்கள்"  என்ற நூல்  வெளியிடப்பட்டது. 

46000 தனித்தமிழ் பெயர்களைக்  கொண்ட இந்த நூலை  வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி மற்றும் எழுத்தாளர் திருமதி.பவள சங்கரி ஆகியோர் தொகுப்பாசிரியர்களாகவும் , தமிழியக்கத்தின் பொருளாளர் புலவர் வே.பதுமனார் அவர்கள் பதிப்பாசிரியராகவும் பங்காற்றி மிகச்செம்மையாக வெளிவந்துள்ள  இந்த நூலை   "தமிழ் வளர்ச்சித்துறை மற்றும்  தொல்லியல்துறை"  அமைச்சர் திரு.  மாஃபா  பாண்டியராஜன் அவர்கள் வெளியிட முதல் பிரதியை வட  அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவை (பெட்னா) தலைவர் திரு.சுந்தர் குப்புசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் , தொழிலதிபர் திரு.பால் பாண்டியன், ஹார்வார்ட் தமிழ் இருக்கை  மருத்துவர்  சு. சம்பந்தம் , செய்தி வாசிப்பாளர் திருமதி. நிர்மலா பெரியசாமி, எழுத்தாளர் திரு.லேனா தமிழ்வாணன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.விடியல் சேகர் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். 

விழாவில் பேசிய தமிழியக்கத்தின் தலைவர் டாக்டர்  கோ.விசுவநாதன் அவர்கள், இன்றைய இளம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவதைவிடப் பிறமொழிப் பெயர்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பது மிகவும் கவலையளிக்கும் செயலாகும்.  ஒருவரது  பெயர் என்பது அந்த மனிதனின் பொருள் பொதிந்த அவனது தனித்துவமான அடையாளமாகும். பிறமொழியில் பொருளற்ற பெயர்களை வைப்பது அடையாளத்தைத் தொலைத்து நிற்கும் நிலையை ஏற்படுத்துகிறது. எனவே இந்த அவலத்தைப் போக்க இந்நூல் பெரிதும் உதவும்  என்று குறிப்பிட்டார். 

விழாவைத் தொகுப்பாசிரியர்  ச.பார்த்தசாரதி நெறிப்படுத்தினார். விழா ஆயத்துப்பணிகளைத்  தமிழியக்கத்தின் மாநிலச்  செயலாளர் மு. சுகுமார்  மேற்கொண்டார்.

 

Thursday, 4 July 2019

Press note withdetails about Naganadhi River Restoration Project, Vellore

Dear Editor,

As much as water crisis is a reality it is equally important that we look for a solution to this largely man -made crisis. Recently the PM himself has extolled the public to come together to work towards water conservation. In his Mann ki Baat on June 30th among other projects he also mentioned about 20000 women in Vellore who have worked to bring the dying Naganadhi River back to life and we are happy to share that the project has been planned and executed by the Art of Living River Rejuvenation Project.
 
As a leading NGO The Art of Living has been working since 2013 in water conservation in Karnataka, Tamil Nadu and Maharashtra. The Naganadhi River Rejuvenation Project was initiated in 2014. The impact of four years of work is now visible in the form of augmented ground water supply and the region is sufficient in both drinking water and water for irrigation. This has been possible by the technical input and training provided by the Art of Living hydrological experts and volunteers.
The action plan for the work is drawn by expert hydrologist and geologist of the River Rejuvenation team after the initial survey of the topography using geospatial and satellite technology. Once the action plan gets the approval of the local governing bodied the ground work begins. The people participation is initiated largely by Art of Living teachers and volunteers who go door to door explaining the project and its benefits and enlisting the support of villagers.  They are trained in the technical know how of the construction of boulder checks dams and recharge wells apart from yoga, pranayam and meditation which is the corner stone of all Art of Living programs. In Vellore district the women showed interest in the water conservation work and many came forward in getting the job card under MNREGA. A fine example of public and private partnership the work done under MGNREGA has benefited the job card holders as well the district authorities in showcasing work done under the scheme. The women together have constructed 3500 recharge well which are a 20ft deep and 15 ft long and 6ft wide. No work is hard for them as one of them said that by doing this we leave a legacy for our future generation so we do not find it hard to do labor. Chitra a young villager says, "When I stand back and observe what we have done - all we women - I feel proud of all the hard work done. Working for the river rejuvenation project has transformed the underprivileged wives, mothers and sisters of the region into self-dependent women. The involvement in the projects has given the women in the region a sense of accomplishment, worth and motivation to be further involved in community initiatives. Having found their own footing, they can now move forward confidently to ignite the flame of inspiration in the hearts of other rural women, both in the region and throughout India.

The story of the Vellore women resonated all over the country especially when many parts are reeling under drought and water shortage.

A link to the original story that appeared in TOI


We would be happy to take you to the site and explain our methodology and you can interact with our experts. Do call me at 9884017767 to take this forward.

With best regards,

Rajalakshmi
9884017767
Media Co-ordinator

--
Regards,
Lakshmi
9880043327
Art of Living Bureau of Communication
Art of Living International Centre, Bengaluru

Sunday, 30 June 2019

Ural Federal University, One Of Russia’s Largest Educational Institutions, Confers Sri Sri Ravi Shankar With Honorary Doctorate

Dear Editor, 
Ural Federal University, One Of Russia's Largest Educational Institutions, Confers Sri Sri Ravi Shankar With Honorary Doctorate and a MOU was signed between with the Ural Federal University represented by Victor Koksharov, Rector of the university and Sri Sri University in Orissa, India. 

Do carry in your publication.

30 June 2019, Bengaluru: The Ural Federal University, one of Russia's largest institutions of higher learning named after the first President of Russia, B N Yeltsin, conferred Gurudev Sri Sri Ravi Shankar with Honorary Doctorate.  

Furthering the cause of a positive exchange of knowledge and skills training between the two institutions, Gurudev signed an MOU between with the Ural Federal University represented by Victor Koksharov, Rector of the university and Sri Sri University in Orissa, India.

"Universities are there to create a vibrant mind, a mind that is open to research, questioning and new learning," says global humanitarian and spiritual master, Gurudev Sri Sri Ravi Shankar, the founder of The Art of Living.

About Sri Sri University

SSU is India's first smoke, alcohol and drug free campus envisioned by Gurudev Sri Sri Ravi Shankar the university was established in 2009 as a center for world-class education in India. The education provided here brings together the best of Western innovation with the ancient values, knowledge systems and wisdom of the East. The university offers a range of pivotal as well as unique courses that seek to preserve the ancient wisdom of the East thorough programs in yoga and naturopathy, classical performing arts and offer the best of Western innovation through cutting-edge programs in Osteopathy and Craniosacral therapy, good governance and management.


--------------------------

Sri Sri Conferred With Hon. Doctorate By Ural Federal University, One of Russia's Largest Educational Institutions

27 June 2019, Bengaluru: Global humanitarian and spiritual leader, Gurudev Sri Sri Ravi Shankar was conferred with Hon. Doctorate for 'his contribution to development of inter-cultural friendship between the republic of India and Russian Federation' by the Ural Federal University, one of Russia's largest institutions of higher learning named after the first President of Russia, B N Yeltsin.  

Gurudev in his address emphasized on the need for an education that is inclusive and humane. "It is education that is needed in every corner of this world for a happy peaceful society," Gurudev said, "Whether it is technology, arts or sciences or humanities, it is the universities that give us a universal vision, a vision of what life is, how one should conduct one's life. We have technology to connect lives, but we need education that also connects the hearts, where human values are given importance to."

Victor Koksharov, Rector of the Ural Federal University appreciated that a volunteer run organization like The Art of Living (founded by Gurudev) could run 618 schools catering to 80,000 children in providing free education.

Gurudev also encouraged students to incorporate yoga, deep breathing techniques and meditation in their daily routines to lead stress free lives.

Furthering the cause of a positive exchange of knowledge and skills training between the two institutions, Gurudev signed an MOU between with the Ural Federal University represented by Victor Koksharov, Rector of the university and Sri Sri University in Orissa, envisioned by Gurudev, India's first alcohol, drugs and smoke free campus

Regards,

Rajalakshmi
Media Co-ordinator

Wednesday, 19 June 2019

YOGA ENTHUSIASTS LIKELY TO 'WARRIOR' INTO WORLD RECORDS THIS INTERNATIONAL YOGA DAY

Dear Editor,

The Art of Living along with partner organizations will attempt a Guinness World Record and Limca Book of Records on International Day of Yoga on 21st June 2019. The attempt will be to hold Veerabhadrasana (Warrior Pose 1) for 3 minutes at 22 locations in India with maximum number of participants. Trained Sri Sri Yoga teachers of Art of Living will guide the participants to hold the posture and attempt a record at multiple locations for the first time, including at Bargarh, Bengaluru, Bhubaneshwar, Chandigarh, Chennai, Damanjodi, Guntur, Hyderabad, Kolkata, Kozhencherry, Mumbai, Navi Mumbai, New Delhi, Pune, Phaltan, Raipur, Rewari, Thiruvananthapuram, Udgir, Vijayawada, and Visakhapatnam.

In Chennai, the world records attempt will be at Avichi School, Virugambakkam on June 21, 2019, International Yoga Day. The program will begin at 5.45 am and will end at 7.30 am. 


Over 200 people including school children, and adults of all ages will participate in the event in Chennai.

 

Location: Avichi School, Virugambakkam, Chennai

Date: Friday, 21 June 2019

Timings: Early morning, 5.45 am to 7.30 am

 

Inviting you to join us by way of spreading the Spirit of Yoga, in your Publications. Request you to send your reporters to cover the program. For further information, please contact Nethra at 8144841447 


with warm regards,


Rajalakshmi


Media Co-ordinator

9884017767




Tuesday, 4 June 2019

World Environment Day - Keynote Address at Nobel Peace Centre, Oslo


Dear Editor,

Close on the heels of the World Environment Day, global humanitarian and spiritual leader, Gurudev Sri Sri Ravi Shankar was invited to deliver the keynote address at Clean Air Games-a unique international forum that discusses the social and environmental impact side of sports among its stakeholders- at Nobel Peace Center, Oslo.  


He also interacted with Liv Tørres, CEO of the Nobel Peace Center on the theme of courageous leadership for sustainable long term investments. 
To know more, please find the detailed press release below (along with translations).

Pictures can be found here-

Your readers will definitely like reading this story. Do carry in your publication.

Sri Sri Invokes Tagore In His Keynote For Clean Air Games Conference At Nobel Peace Center

In the conference titled "a sustainable future requires courageous investment", Sri Sri emphasized that for any major social transformation, dynamism driven by inner peace was necessary which alone could create sustainable change in mindset.

Bengaluru, 4 June 2019: Close on the heels of the World Environment Day, global humanitarian and spiritual leader, Gurudev Sri Sri Ravi Shankar was invited to deliver the keynote address at Clean Air Games-a unique 2 day international event that brings together the cause of  environmental impact and sustainability with sports, hosted at Nobel Peace Center, Oslo. 

"The mindset of people is key in bringing any transformation to help us move forward," Gurudev said in his address, "We need to change the mindset from a consumerist one to one that looks out for the future too. And for change of mindset, one must listen. Listening is impossible if someone is stressed. Outer peace can come only if there's inner peace. Someone who is stressed in the mind will be too tired and exhausted to care about anyone or any cause. So, care for the planet comes from a peaceful individual, where one begins to see the planet as part of oneself. This education has to brought (to more people)."

The others present at the conference included Liv Tørres, CEO of the Nobel Peace Center, and international sports commentator, Knut Skeie Solberg.

 Addressing a mix of sportspeople, change makers, statesmen, policy makers and other stakeholders, on the topic 'Sustainability as a mindset: The Art of Living's approach', 

Gurudev shared The Art of Living's inside out approach of making social change, that is, people driven by inner spiritual peace and call to serve the society, have volunteered to make significant impact. The Art of Living volunteers present in 156 countries have successfully planted 80 million trees and have worked on reviving 41 rivers (that existed merely on papers) across India, benefiting over 50 million people. 

Gurudev cited the example of how The Art of Living volunteers reached out to more than 280000 farmers to discourage them from stubble burning which was one of the main causes of hazardous air quality and toxic pollutants being released in the air in and around Delhi region. The farmers were instead trained in mulching practices to recycle the waste, also benefiting the farmers as it provided sufficient nitrogen fix that the soil needed, while keeping the air clean and breathable. 

He also shared the transformational story of Latur, one of the first towns to be hit by the fierce droughts in Maharashtra to an extent that it had to get portable water transported from other cities. (Ground water)Tables turned, quite literally as the civil society, led by The Art of Living, joined the river rejuvenation movement to revive the dead rivers and streams, harvest rainwater, build ground water recharge structures and raise the water table.

"Environment doesn't have any geographic or political boundaries," Gurudev said, "You cannot say we want clean air only in Norway. If there's no clean air elsewhere we're not going to have it here. We have one planet earth and we have one atmosphere. To care for that we need to create huge awareness throughout the world, for which spiritual tools need to be adopted."

Apart from the need for spirituality to create more environmentally conscious individuals and change mindsets, Gurudev also shared practical inputs that can reduce the burden of environmental pollution on the planet. While referring to the global fireworks that go off during New Years Eve, creating massive air toxicity that makes air unbreathable, Gurudev instead suggested, the world community to adopt a possible environmental middle path of electronic (laser) fireworks. 

He also challenged the misnomer that organic farming was uneconomical and that chemicals and GMO seeds were needed in the soil for quicker output, without which the entire population will starve. "We've proved this is wrong. This is just a lobby trying to take money and power from poor people. So the poor farmers cannot maintain their seed banks. It pushes the poor farmer into dependence. We've demonstrated again and again in India that doing agriculture organically is sustainable."

During his interaction with Liv Tørres about courageous leadership needed for sustainable investments, invoking the Nobel Laureate-Rabindranath Tagore, he shared, "You need the courage to face opposition from unknown corners when you are convinced that something needs to be done. Tagore gave a beautiful slogan-Ekla Chalo Re. You move alone even if there's nobody with you. But then everyone will come together, when they see what you are doing, is much needed."

With best regards,

Rajalakshmi

Media co-ordinator
Mobile: 9884017767

Sunday, 2 June 2019

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" - உலகத் தமிழாராய்ச்சி மற்றும் பெட்னா - சிகாகோ மாநாட்டுப் பாடல் அமெரிக்காவில் சிறப்பாக வெளியிடப்பட்டது..

ஊடக அன்பர்களுக்கு வணக்கம்,

வட அமெரிக்கத் தமிழரின் இந்த பெருமுயற்சியை,  பெருமை கொள்ளும் பாடலை மக்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல செய்தியை பகிர்ந்து உதவுங்கள்..
-----------------------------------------------------

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" - உலகத் தமிழாராய்ச்சி மற்றும் பெட்னா - சிகாகோ மாநாட்டுப் பாடல் அமெரிக்காவில் சிறப்பாக வெளியிடப்பட்டது..

URL: https://www.youtube.com/watch?v=NtHYz6FuiAc

வரும் ஜூலை மாதம் அமெரிக்காவில் முதல் முறையாக நடக்கவிருக்கும் 10வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் மையநோக்குப் பாடல் ( Theme song) அமெரிக்காவின் சார்சியா மாகாணத்தில் மிகச்சிறப்பாக வெளியிடப்பட்டது. 

தமிழ் இலக்கியத்தின் உச்ச சாதனைகளில் ஒன்றான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற புறநானூற்றுப் பாடலுக்கு, டர்ஹாம் சிம்பொனியுடன் இணைந்து, இசையில் உச்சம் தொட்டிருக்கிறார் இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம். யாதும் ஊரே பாடலின் முதல் வரிக்கேற்ப, பல நாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்களை ஒன்றிணைத்து, பல இசை வடிவங்களையும் ஒன்றாய்க் கோர்த்து தமிழ்த்தாய் பெருமைகொள்ளும் அற்புதமான இசைமாலையாய் உருவாகி இருக்கிறது இப்பாடல்.

ஆப்பிரிக்க குரலிசையில் தொடங்கும் பாடல், ராக் இசைக்கு தாவி, பின் ராப், பாப் என்று பயணித்து, பாடகர் கார்த்திக்கின் இனிமையான குரலில் யாதும் ஊரே என்று தொடங்கும்போது ஒரே நிமிடத்தில் உலகைச்சுற்றி நம் ஊருக்கு வந்து சேர்ந்த உணர்வு ஏற்படுகிறது! நடுவில் சீனர்களின் இசை, அரேபிய இசை, மேற்கிந்திய தீவுகளின் காலிப்ஸோ, ஜாஸ், கர்நாடக சங்கீதம் இவற்றுடன் நம் நாட்டுப்புற இசை உற்சாகமாக இணையும் போது, எப்படி இத்தனை இசைவகைகளும் வேறுபாடின்றி இவ்வளவு எளிதாக ஒன்றுடன் ஒன்று கலக்க முடியும் என்ற வியப்பை அளிக்கிறது! கணியன் பூங்குன்றனாரின் சாகா வரம்பெற்ற வரிகளில் 'மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' என்னுமிடத்தில் இசை முழுமை அடைந்து நம் இதயத்தையும், கண்களையும் நிறைக்கிறது.

பிரபல இசை நடத்துனரும், அமெரிக்காவின் 40 பெரிய சிம்பொனி குழுக்களை வழி நடத்தியவருமான மேஸ்ட்ரோ வில்லியம் ஹென்றி கர்ரி வழிகாட்டலில், டர்ஹாம் சிம்பொனி வழங்கியிருக்கும் மேற்கத்திய இசை, தடையற்ற அருவியாய் நம்மேல் பொழிந்து, இப்பாடலை வேறொரு தளத்திற்கு உயர்த்திச் செல்கிறது.

கம்பீரமும், பெருமையும் கலந்து அபாரமாகப் பாடியிருக்கிறார் கார்த்திக். பாடகி பாம்பே ஜெயஸ்ரீ புது உற்சாகம் பாய்ச்சி இருக்கிறார். தமிழ் தெரியாத இத்தாலிய பாப் பாடகி சார்லட் கார்டினாலே, லண்டனைச் சேர்ந்த ராப் இசை பாடகர் தர்ட்டின் பீட்ஸ் இருவரும் தமிழ் வார்த்தைகளைக் கற்று பாடியிருக்கிறார்கள். உக்ரேனைக் சேர்ந்த கிதார் கலைஞர் ஆர்ட்டம் எபிமோவின் ராக் கிதாருடன், ராஜேஷ் வைத்யாவின் கர்நாடக வீணையிசை, ராப் மற்றும் பறையிசை கலக்குமிடம் சிலிர்ப்பூட்டுகிறது.

இசையில் பல வடிவங்களை இணைத்ததைப் போல, பல வகை நடனங்களையும் கலந்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள் வீடியோவில். இசை வடிவங்களுக்கேற்ப பாலே, ஜாஸ், டேப், ஹிப்ஹாப், ஜிப்ஸி, பரதநாட்டியம், அமெரிக்கர்கள் ஆடும் நம் நாட்டுப்புற நடனம் என்று அலையலையாய் வந்து கொண்டே இருக்கின்றன. மேலும், தமிழர்கள் அதிகமாய் வசிக்கும் பல நாடுகள் பின்னணியில் வந்து செல்வது, பல இனத்தை சேர்ந்த மக்களும் ஒன்றாக நம் உணவை சாப்பிடுவது, ஒன்றாக நடனம் ஆடுவது என்று பாடலின் வரிகளுக்கேற்ப யோசித்து செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ராஜன், டர்ஹாம் சிம்பொனியுடன் இணைந்து ஏழு சங்கத்தமிழ் பாடல்களை முழு இசைத்தொகுப்பாக கொண்டுவரும் பெரும் முயற்சியில் இருக்கிறார். அதைப்பற்றி கூடுதல் தகவல்களைப் பெறவோ, உதவிக்கரம் அளிக்கவோ அவரை பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். ComposerRajan@gmail.com
 
In English:
-------------
International Association of Tamil Research (IATR) and FeTNA (Federation of Tamil Sangams in North America) proudly present the theme song of the 10th World Tamil Conference scheduled in the United States of America for the first time!

URL:  https://www.youtube.com/watch?v=NtHYz6FuiAc

For one of the greatest and most visionary Tamil Sangam era poetry written 2000 years, “Yathum Oore, Yavarum Kelir”, Composer Rajan has created a grand and matching musical form with Durham Symphony and some of the leading singers of our times.

True to the meaning of the first line, ‘Yathum Oore’, Rajan has collaborated with artists from multiple countries, ethnicities and languages.

The song has an astonishing number of genres fused together- African voices, Rock, Rap, Calypso, Jazz, Pop, Chinese and Mediterranean along with melodic layers woven in Carnatic and western classical.

As the music review website TheBandCampDiaries put it:
Listening “Yathum Oore Anthem” is not just like listening to any other composition. What’s really amazing about this song is that it offers a true, authentic peek at some of the earliest musical traditions in the world. The composition, in fact, features lush soundscapes and tasteful arrangements, inspired by South Indian Classical Music, and pretty much anything in between - including influences from the western world.

America’s acclaimed conductor, Maestro William Henry Curry who has directed 40 large Symphony orchestras in the United States, has lead Durham Symphony that provides a silky backdrop for the lead melody to glide through.

Singer Karthik and Bombay Jayashri have provided a majestic rendition of the song. Italian Pop singer Charlotte Cardinale and London based rapper Thir13een Beatz have learnt Tamil words and provided totally different flavors to the song.

One of the highlights of the song is when the Rock guitars by Ukranian Artem Efimov seamlessly fuse with the Carnatic Veena of Rajhesh Vaidya along with Rap and South Indian folk beats.

The choreographer has tried a similar challenge of fusing 8 different genres of dances to suit the music and has succeeded in the attempt. The team has carefully chosen many ingredients to suit the video like people of different races eating South Indian food, dancing together, showing backgrounds of countries and cities where predominant Tamil populations exist.

Ultimately, “Yathum Oore Anthem” is a hauntingly beautiful track, which doesn’t just showcase the passion behind the work of these musicians, but also their deep respect for timeless musical traditions. From the unique mix of great melodic layers and engaging structures, down to the immediacy of the sound, this release channels a various range of influences to perfection, resulting in a balanced, diverse and exciting tone that will certainly please a very broad audience.

Composer Rajan is leading an effort to create a music album with Durham Symphony for 7 Sangam era poems. He’s reachable at the following email id for any additional information or support. ComposerRajan@gmail.com

Please spread this as a news to support IATR and FETNA conference.

 

Tuesday, 28 May 2019

SPI PR on Kaveri issue- 29May 2019

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

 

பத்திரிகை செய்தி (29-05-2019)

தொடர்பு எண்கள் :  87545 80274 / 99441 88941

கர்நாடக அணைகள் நிறைந்தால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா?

தமிழகத்திற்கு கடந்தாண்டு 400 டிஎம்சி தண்ணீர் தந்த கர்நாடகா - மேகதாது அணை கட்ட கர்நாடகாவிற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை திரும்பபெறவேண்டும் - தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனை தீர்ந்துவிட்டதா? மீண்டும் முதலில் இருந்து தொடங்குமா?

 

நேற்று (28-05-2019) நடைபெற்ற காவேரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு ஜூன் மாதம் திறக்கப்படவேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிடவேண்டும் என்று கர்நாடக அரசிற்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் தமிழகம் வந்த முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் மகனும் கர்நாடகாவின் பொதுப்பணித்துறை அமைச்சருமான ரேவண்ணா, "காவிரியில் தற்போது தண்ணீர் திறந்துவிட இயலாது என்றும், அதிக மழை பெய்தால் மட்டுமே திறந்து விட முடியும்" என்ற பழைய துதியை மீண்டும் பாடியுள்ளார். கடந்தாண்டு கர்நாடகாவில் மிக அதிகப்படியான மழை பொழிந்ததால், தண்ணீர் திறந்துவிடுவதில் கர்நாடகாவிற்கு பிரச்சனை ஏதும் ஏற்படவில்லை.

 

400 டிஎம்சி திறந்துவிட்ட கர்நாடகா:

காவேரி ஆற்றில் கடந்தாண்டு கர்நாடக அரசால் திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலமாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் பெற்றுள்ளது.

மாதம்

திறந்துவிடவேண்டிய தண்ணீரின் அளவு (டிஎம்சி)

திறந்துவிட்டுள்ள தண்ணீரின் அளவு (டிஎம்சி)

June 2018

9.19

13.2942

July 2018

31.24

124.6820

August 2018

45.95

176.5020

September 2018

36.76

31.5104

October 2018

20.22

27.0188

November 2018

13.78

14.5799

December 2018

7.35

7.12

January 2019

2.76

2.92

February 2019

2.5

1.85

March 2019

2.5

1.57

April 2019

2.5

1.83

 

177 டிஎம்சி மட்டுமே தமிழகத்திற்கு திறந்துவிடவேண்டிய கர்நாடகம், 400 டிஎம்சிக்கு அதிகமாக கடந்தாண்டு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது. இது போக மாதவாரியாக திறந்துவிடவேண்டிய தண்ணீரையும், கிட்டத்தட்ட அனைத்து மாதங்களிலும் சரியாக திறந்துவிட்டுள்ளது. சம்பா,குறுவை சாகுபடியை இடர்பாடுகள் இன்றி மேற்கொள்ள, மாதவாரியாக சரியான தண்ணீர் அளவை திறந்துவிடவேண்டியது முக்கியம். கடந்த காலங்களில், வெள்ள சமயத்தில் மட்டும் தண்ணீரை திறந்துவிட்டு, சாதாரண மற்றும் வறட்சி காலங்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்துவிடாமல் கர்நாடகா முரண்டு பிடித்தது. ஆனால், மேலாண்மை வாரியம் அமைந்தது முதல் தற்பொழுது வரை சீராக கர்நாடகவிடமிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வந்துருப்பதை பார்க்க முடிகிறது. இதே நிலை நீடிக்கவேண்டும் என்பது தான் தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் பிரார்த்தனையாக இருக்கிறது.

 

ஜூன் 12 மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை:

60 டிஎம்சி தண்ணீர் இருந்தால் மட்டுமே மேட்டூர் அணை திறப்பது மரபாக இருக்கிறது. தற்பொழுது மேட்டூர் அணையில் 18 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருக்கிறது. கர்நாடகா ஜூன் மாதம் திறக்கவேண்டிய 9 டிஎம்சியை திறந்தால் கூட, மேட்டூர் அணையில் 30 டிஎம்சிக்கும் குறைவாக மட்டுமே தண்ணீர் இருக்கும். தற்பொழுது கர்நாடக அணைகளில் 15 டிஎம்சிக்கும் குறைவாக மட்டுமே தண்ணீர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

 

(கர்நாடக அணைகளின் உள்ள நீர் நிலவரங்களை கர்நாடக அரசு தெளிவாக 2-3 நாட்களுக்கு ஒருமுறை வெளியிடுகிறது (https://www.ksndmc.org/Uploads/RL.pdf). இதே போல் தமிழகத்தின் அணை நிலவரங்களையும் தெளிவாக சீரான இடைவெளியில் வெளியிடவேண்டும் என்று தமிழக அரசிற்கு இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.)

 

மேகதாது அணை கட்டுவதற்காக ஆய்வு மேற்கொள்ள தமிழக்தின் அனுமதியை பெறவேண்டும்:

காவேரி அணை மேல் எந்தவொரு அணை கட்ட வேண்டுமானால் தமிழகத்தின் அனுமதியை பெறவேண்டியது அவசியம். காவேரி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும்  உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இதை உறுதிப்படுத்தியிருக்கிறது.  மேகதாது அணை கட்ட முன்தயாரிப்பு பணிகள் மற்றும் ஆய்வறிக்கை தயார் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மிகப்பெரிய சட்டமீறல். ஆய்வு மேற்கொள்ள கொடுக்கப்பட்டுருக்கும் அனுமதியை மத்திய அரசு உடனடியாக திரும்பபெறவேண்டும். இது போல் தமிழகத்திற்கு விரோதமாகவும் கர்நாடகாவிற்கு சாதகமாக நடக்காமல், மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரையை மத்திய அரசு கேட்டு நடந்துருக்கவேண்டும்

 

கட்கரியின் முதல் கடமை:

17வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பாஜக, 28இல் 23 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில், பாஜக கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியுற்றதுடன், பாஜக அங்கம் வகித்த அதிமுக கூட்டணி ஒரு இடத்தில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் தமிழகத்தை பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்சி அமைக்கும் முன்னரே, தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க, 60000 கோடி செலவில் கோதாவரி-கிருஷ்ணா-காவிரி இணைப்பு திட்டத்தை அமல்படுத்துவோம் என்று பாஜகவின் முக்கிய தலைவரும் முந்தைய ஆட்சியின் மத்திய நீர்வளத்துறை அமைச்சருமான நிதின் கட்கரி கூறியிருக்கிறார். 2018ல் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்ற குறுகிய நோக்கத்திற்காக உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல், காவேரி மேலாண்மை ஆணையத்தை அமைக்காமல் இழுத்தடித்த பாஜக, தற்பொழுது தமிழகத்தின் மேல் திடீர் பாசம் காட்டுவது ஆச்சரியமளிக்கிறது. மேலாண்மை வாரியத்தின் உத்தரவுகளை மதிக்காமல், தமிழகத்தின் உரிமையை கர்நாடகா மறுத்தால், மத்திய அரசு தலையிட்டு தமிழகத்தின் உரிமையை பாகுபாடு பார்க்காமல் பெற்றுத்தரவேண்டும்.  கோதாவரி -காவேரி நதிகளை இணைக்கும் முன்னர் கர்நாடகா தமிழகத்திற்கு  திறந்துவிடவேண்டிய நியாயமான தண்ணீரை பெற்றுத்தருவதே கட்கரியின் முதல் கடமையாக இருக்கவேண்டும்.

 

கர்நாடக அணைகள் நிரம்பினால் மட்டுமே கர்நாடகா தண்ணீர் திறந்துவிடுமா அல்லது மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை மதித்து மாதவாரியாக தமிழகத்தின் நியாயமான உரிமையை கர்நாடகா அரசு தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டியிருக்கிறது. மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகா அவமதிக்கும் பட்சத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு தயாராக இருக்கவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

 

செந்தில் ஆறுமுகம்

பொது செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்

தொடர்பு எண் : 87545 80274 / 99441 88941