Friday, 29 July 2016

தமிழில் ஒரு பிறந்தநாள் பாடல் (Birthday Song in TAMIL)

பத்திரிகை செய்தி -29 - July - 2016

தமிழில் ஒரு பிறந்தநாள் பாடல் (Birthday Song in TAMIL)

 

வணக்கம்,

தமிழில் சமீபத்தில் பாவலர் அறிவுமதி எழுதி,  பசங்க 2, பிசாசு போன்ற படங்களின் இசையமைப்பாளர் அரோல் கரோலி இசையமைப்பில்,    பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் மற்றும் அவரது மகள் உத்ரா உன்னி கிருஷ்ணன் பாடி வலைத்தமிழ்.காம் (www.ValaiTamil.Com) தயாரித்து, வெளியிட்ட பிறந்தநாள் பாடல் இரண்டு வாரங்களில் உலகெங்கும் வாழும் நான்கு கோடி  தமிழர்களிடம் சென்றடைந்து  மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது .

 

இது இன்று குழந்தைகளும், பெற்றோர்களும் முனுமுனுக்கும் பாடலாக தமிழ் மக்களிடம்  சென்றடைந்து அவர்களின் பிறந்தநாள் விழாக்களில் பயன்படுத்தும் ஒன்றாக  மாறியுள்ளது.  சமூக வலைத்தளங்களில்  அதிக மக்களிடம் பகிரப்பட்ட ஒரு  தமிழ்ப்பாடலாக இது  விளங்குகிறது. இதுவரை ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா , சிங்கப்பூர்  என்று உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகள் இந்தப்பாடலை வெளியிட்டு அங்குள்ள தமிழ்மக்களின் பிறந்தநாளில் இதைப் பயன்படுத்துகிறார்கள் என்ற செய்திகள் தொடர்ந்து பகிரப்படுகிறது.  வெளிநாட்டில் ஒருசில தமிழ்ப்பள்ளி பாடத்திட்டங்களில் இந்தப்பாடலை சேர்க்க முடிவெடுத்துள்ளார்கள் என்ற  மகிழ்ச்சியான செய்தி வந்துகொண்டுள்ளது.

 

மக்களின் நீண்டநாள் எதிர்ப்பார்ப்பாக இருந்ததை உணர்ந்த வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருக்கும் பரிவிளாகம் ச. பார்த்தசாரதி,பாவலர் அறிவுமதி அவர்களை சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் சந்தித்தபோது அவர் பாடிய வரிகள் பிடித்துபோக உடனே இதை மக்களுக்கு பிடித்த இசையும் , வாழ்த்து வரிகளும் கொண்டு  எந்த வயதினரும் பயன்படுத்தும் பாடலாக கொண்டுவர முடியுமா  என்று கேட்க, அது இன்று சாத்தியமாகியுள்ளது. ஆங்கிலத்தில் பாடுவதற்கு மாற்றாக  தமிழிலேயே வாழ்த்த வயது வேறுபாடு இல்லாமல், எல்லா வயதினரும் பயன்படுத்த ஒரு தமிழ்ப்பாடல் கிடைத்துவிட்டது.  பாடலின் ஆழமான வாழ்த்து வரிகளும் , இசையும் , குரலும் பல ஊடங்கங்களைக் கவர்ந்ததன் விளைவாக இதுவரை தமிழகத்தின் பெரும்பாலான ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டும், தொலைக்காட்சிகள் இந்தப்பாடலை தொடர்ந்து ஒளிபரப்பியும் மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளன. சமூக வலைத்தளங்களில் இன்றும் ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் கேட்டு , பகிரும்  பாடலாக  வெற்றியடைந்துள்ளது. இந்த நேரத்தில் ஊடக -தொலைக்காட்சிகள் அனைவருக்கும் எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.  நம் கவனத்திற்கு வந்த பெரும்பாலான  ஊடகத்தில் வந்த செய்திகள் இங்கே   www.valaitamil.com/tamilbirthday தொகுக்கப்பட்டுள்ளன . மேலும் 55 நொடிகளில் பாடக்கூடிய  வகையில் சுருக்கி பயன்படுத்த ஏற்ற வகையில் இந்தப்பாடலை MP3 யாக டவுன்லோட் செய்யவும், பாடலின் வரிகளும் இந்தப்பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. "நீண்ட நீண்ட காலம், நீடு வாழ வேண்டும்... " என்று தொடங்கும் இந்த பாடல் பிறந்த நாள் வாழ்த்துடன் நிறைவு பெறுகிறது.  உலகத் தமிழ்க் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல் பரிசாக, இதை வழங்குவதாக கவிஞர் அறிவுமதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். மேலும், உலகத் தமிழர்கள் இந்தப் பாடலை, தங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் விழாவில் பாடி, தமிழில் வாழ்த்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மக்களின் கோரிக்கையை ஏற்று கைபேசிகளில் ஒலிக்க  காலர் டியூனாக வரவுள்ளது.

 

ஒரு சில ஊடகங்களில் ஒளிபரப்ப தணிக்கைச் சான்றிதழ் கேட்டதால் தணிகை சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.  தணிக்கை சான்றிதழ் தேவையான ஊடகங்கள் info@ValaiTamil.com-க்கு மின்னஞ்சல் அனுப்பவும். 

 

இந்தப்பாடல்  ஜுலை 3, நியூஜெர்சி மாநிலத்தில் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை( FetNA) விழாவில்,   சித்த மருத்துவர் கோ. அன்பு கணபதி, திரு. பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் பாடலை வெளியிட கனடாவிலிருந்து கலந்துகொண்ட  ப்ரெண்டா பெக், ஜெர்மனியிலிருந்து கலந்துகொண்ட தமிழ் மரபு அறக்கட்டளையின் டாக்டர் சுபாஷிணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.  அதைத் தொடர்ந்து வாசிங்க்டன் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் , தமிழ்ப்பள்ளிகளில் இந்தப்பாடல் வெளியிடப்பட்டு வருகிறது .

 

பாடல் வரிகள்

 

நீண்ட நீண்ட காலம்

நீ

நீடு வாழ வேண்டும்!

 

வானம் தீண்டும் தூரம்

நீ

வளர்ந்து வாழ வேண்டும் !

 

அன்பு வேண்டும்!

அறிவு வேண்டும்!

பண்பு வேண்டும்!

பரிவு வேண்டும்!

 

எட்டுத்திக்கும் புகழ வேண்டும்!

எடுத்துக்காட்டு ஆக வேண்டும்!

 

உலகம் பார்க்க

உனது

பெயரை

நிலவுத் தாளில்

எழுத

வேண்டும்!

 

சருக்கரைத் தமிழள்ளித்

தாலாட்டு

நாள்

சொல்லி

வாழ்த்துகிறோம்

 

பிறந்த நாள் வாழ்த்துகள்!

பிறந்த நாள் வாழ்த்துகள்!

இனிய

பிறந்த நாள்

வாழ்த்துகள்!

்்

பாடல்: பாவலர் அறிவுமதி

இசை : அரோல் கொரேலி

குரல் : உத்ரா உன்னிகிருஷ்ணன்

 

 

YouTube Links: Song: https://youtu.be/6n3tXhytP8I

Pavalar Arivumathi Introudction & Song: https://www.youtube.com/watch?v=eFoahZY1SmA

 

 

Thanthi TV

212,531 Views

7,028 shares

https://www.facebook.com/ThanthiTV/videos/918348628293482/

NEWS7

51,414 Views

1,749 shares

https://www.facebook.com/news7tamil/videos/1375323222529882/

தமிழ் பகுத்தறிவாளர்கள்/ Tamil Rationalists முகநூல்

309,109 Views

16,565 shares

https://www.facebook.com/itamilrationalists/videos/1122191624508850/

வலைத்தமிழ் .காம் youtube

101,215 views

 

www.youtube.com/watch?v=6n3tXhytP8I

ஆம் நாங்கள் தமிழர்கள்

109,397 Views

6,641 shares

https://www.facebook.com/WeAreTamils/videos/1741064136183270/

நல்ல பதிவுகளை பகிர்வோம்

334,847 Views

22,085 shares

https://www.facebook.com/797696800352394/videos/912303532225053/

 

 

 

பல நூறு தளங்களில் தொகுக்க முடியாத அளவிற்கு பகிரப்பட்டுள்ளதால் ஒரு சில முகநூல், சமூக ஊடகங்களில் மக்களின் பார்வை விவரம் :

 

 

மேலும் இந்தப்பாடல் குறித்த விவரங்களுக்கு: www.valaitamil.com/tamilbirthday

 

இதுவரை இந்த செய்தியை மக்களுக்கு கொண்டுசென்று உங்கள் வாசகர்களுக்கு இசை விருந்து வழங்கிய ஊடகங்களுக்கு நன்றி! சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவரும் இந்தத் தமிழ்ப்பாடலை   இதுவரை செய்தியாக கொண்டு செல்லாத ஊடங்கள் உங்கள் வாசகர்களுக்கு கொண்டு சேர்க்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

 

நன்றி !

வலைத்தமிழ்.காம்

newsletter@valaitamil.com

உலக சித்தர் மரபு திருவிழா 2016 - World Siddha Trust

அன்புடையீர் வணக்கம்,

உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் சார்பாக பணிவான வணக்கத்தைத்  தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய அறக்கட்டளை 16/08/2016 அன்று தமிழக  அரசின் நலத்துறை செயலர் மரு. J.இராதாகிருஷ்ணன், இஆ.ப. அவர்களால் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஓர் ஆண்டில் பொது மக்களுக்கான நலம் தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள், இலவச சித்த மருத்துவ சிகிச்சை முகாம்கள், சித்த மருத்துவ மாணவர்களுக்கானப் பயிற்சிப் பட்டறைகள் மற்றும் பல அறம் சார்ந்த நிகழ்வுகளை நடத்தி வருகின்றோம்.

அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவினை உலக சித்தர் மரபு திருவிழாவாக இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 13,14 (சனி,ஞாயிறு) ஆகிய இருநாட்களில் கண்காட்சி , கருத்தரங்கம் , கலைநிகழ்ச்சிகள் , ஆய்வரங்கம், சித்த மருத்துவ முகாம்  உள்ளிட்ட பல்வேறு செய்லபாடுகளை உள்ளடக்கி அடையாரில் உள்ள  டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.  இந்த இருநாள் நிகழ்வில் மூலிகைக்கண்காட்சி, எளிய வீட்டு மருத்துவம், மரபு உணவு
கண்காட்சி, மரபு விதைகள் கண்காட்சி, மரபு வேளாண்மைக் கண்காட்சி, மரபு விளையாட்டு மற்றும் பயிற்சிப்பட்டறைகள், சித்த மருத்துவ முகாம், அறிஞர்களின் சொற்பொழிவுகள், மரபு கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை உள்ளடக்கி மரபு திருவிழாவாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இதில் சிறப்பு விருந்தனர்களாக:

·         Dr. J.Radhakrishnan IAS( Health Secretary, Govt. of Tamilnadu)
·         Mr. Mohan Pyare, IAS (Indian Medicine & Homoeopathy, Govt. of Tamilnadu)
·         Mr. Udayachandran IAS(Managing Director, Tamil Nadu Salt Corporation)
·         Mr. M.Ravi, IPS (CVO, Aavin)
·         Mr. Balachandran IAS (Former Addl. Chief Secretary WB.)
·         Dr. R.S. Ramaswamy (Director General, CCRS)
·         Dr. G.Arivoli (Director School Education)
·         Mr. V.Kumar (Joint Director School Education)
·         Dr. Latha Rajendran (Correspondent, Dr. MGR Janaki College)
·         Mr. Nassar (President, South Indian Artistes' Association)
·         Mr. Cheran (Director)
·         Pavalar Arivumathi
·         Mr. Livingston (Actor)
·         Dr. V.G.Santhosam (Chairman, VGP Group of Companies)
·         Thavathiru Maruthachala Adigal (Perur Mutt)
·         Parivilagam Sa. Parthasarathy (President, Washington Tamil Sangam)
·         Dr. C. Subramaniam (Former VC, Tamil University)
·         Mr. Athmanathan (Tamizhisai)
·         Orissa Balu (Tamil Researcher)
·         Mr. P.Rajendran (Editor, Gnayiru Osai, Malaysia)           
·         Mrs. Sabitha (Evangelist Traditional Games & Education)
·         Mr. Arupathy Kalyanam (General Secretary, Federation of Farmers Associations-Cauvery Delta)
·         Dr. B.Michel Jeyaraj (President, Ulaga Tamil Maruthuva Kazhagam)

இந்த இனிய விழாவில் தாங்களும் தங்கள் பத்திரிக்கை குழுமமும் கலந்து கொண்டு இவ்விழாவினை பற்றிய நிகழ்வுத் தொகுப்பினை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

தங்கள் உண்மையுள்ள,
மரு. ப.செல்வசண்முகம்
தலைவர் உலக சித்த மருத்துவ அறக்கட்டளை, சென்னை,
செயலர் இந்திய நலவாழ்வு நல்லறம், சென்னை,
ஆய்வுப் பேராசிரியர் WORLD INSTITUTE OF SCIENTIFIC EXPLORATION, USA.

தொடர்பிற்கு: 98948 28968 | 98844 11637 | 99400 28160

www.WorldSiddha.org | www.facebook.com/WorldSiddha


உலக சித்தர் மரபு திருவிழா 2016 - World Siddha Trust

அன்புடையீர் வணக்கம்,

உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் சார்பாக பணிவான வணக்கத்தைத்  தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய அறக்கட்டளை 16/08/2016 அன்று தமிழக  அரசின் நலத்துறை செயலர் மரு. J.இராதாகிருஷ்ணன், இஆ.ப. அவர்களால் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஓர் ஆண்டில் பொது மக்களுக்கான நலம் தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள், இலவச சித்த மருத்துவ சிகிச்சை முகாம்கள், சித்த மருத்துவ மாணவர்களுக்கானப் பயிற்சிப் பட்டறைகள் மற்றும் பல அறம் சார்ந்த நிகழ்வுகளை நடத்தி வருகின்றோம்.

அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவினை உலக சித்தர் மரபு திருவிழாவாக இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 13,14 (சனி,ஞாயிறு) ஆகிய இருநாட்களில் கண்காட்சி , கருத்தரங்கம் , கலைநிகழ்ச்சிகள் , ஆய்வரங்கம், சித்த மருத்துவ முகாம்  உள்ளிட்ட பல்வேறு செய்லபாடுகளை உள்ளடக்கி அடையாரில் உள்ள  டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.  இந்த இருநாள் நிகழ்வில் மூலிகைக்கண்காட்சி, எளிய வீட்டு மருத்துவம், மரபு உணவு
கண்காட்சி, மரபு விதைகள் கண்காட்சி, மரபு வேளாண்மைக் கண்காட்சி, மரபு விளையாட்டு மற்றும் பயிற்சிப்பட்டறைகள், சித்த மருத்துவ முகாம், அறிஞர்களின் சொற்பொழிவுகள், மரபு கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை உள்ளடக்கி மரபு திருவிழாவாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இதில் சிறப்பு விருந்தனர்களாக:

·         Dr. J.Radhakrishnan IAS( Health Secretary, Govt. of Tamilnadu)
·         Mr. Mohan Pyare, IAS (Indian Medicine & Homoeopathy, Govt. of Tamilnadu)
·         Mr. Udayachandran IAS(Managing Director, Tamil Nadu Salt Corporation)
·         Mr. M.Ravi, IPS (CVO, Aavin)
·         Mr. Balachandran IAS (Former Addl. Chief Secretary WB.)
·         Dr. R.S. Ramaswamy (Director General, CCRS)
·         Dr. G.Arivoli (Director School Education)
·         Mr. V.Kumar (Joint Director School Education)
·         Dr. Latha Rajendran (Correspondent, Dr. MGR Janaki College)
·         Mr. Nassar (President, South Indian Artistes' Association)
·         Mr. Cheran (Director)
·         Pavalar Arivumathi
·         Mr. Livingston (Actor)
·         Dr. V.G.Santhosam (Chairman, VGP Group of Companies)
·         Thavathiru Maruthachala Adigal (Perur Mutt)
·         Dr. C. Subramaniam (Former VC, Tamil University)
·         Mr. Athmanathan (Tamizhisai)
·         Orissa Balu (Tamil Researcher)
·         Mr. P.Rajendran (Editor, Gnayiru Osai, Malaysia)           
·         Mrs. Sabitha (Evangelist Traditional Games & Education)
·         Mr. Arupathy Kalyanam (General Secretary, Federation of Farmers Associations-Cauvery Delta)
·         Dr. B.Michel Jeyaraj (President, Ulaga Tamil Maruthuva Kazhagam)

இந்த இனிய விழாவில் தாங்களும் தங்கள் பத்திரிக்கை குழுமமும் கலந்து கொண்டு இவ்விழாவினை பற்றிய நிகழ்வுத் தொகுப்பினை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

தங்கள் உண்மையுள்ள,
மரு. ப.செல்வசண்முகம்
தலைவர் உலக சித்த மருத்துவ அறக்கட்டளை, சென்னை,
செயலர் இந்திய நலவாழ்வு நல்லறம், சென்னை,
ஆய்வுப் பேராசிரியர் WORLD INSTITUTE OF SCIENTIFIC EXPLORATION, USA.

தொடர்பிற்கு: 98948 28968

www.WorldSiddha.org | www.facebook.com/WorldSiddha

Tuesday, 19 July 2016

The Guru and the FARC- a film about peace in the times of conflict



Dear Editor,

Bangalore, 19 July 2016: In June, The Colo
mbian Government and the Revolutionary Armed Forces of Colombia (FARC) signed a historic peace pact that ended a 52-year-old armed conflict that has cost over 220,000 lives and displaced more than 5 million people. 

Today, in a world torn by strife, inter-racial or communal violence and total breakdown of communication, be it in Kashmir or the US or France, what happened in Colombia in June 2016, is a historic anomaly. Does India's spiritual prowess have an answer to the ongoing conflicts in the world?

As India celebrates the ancient tradition of Guru Purnima today,honoring the lineage of masters and seers, who have gifted the knowledge of peace and spirituality to the world,  here is a powerful documentary film (Length-12 minutes) made by Argentinian filmmaker, Paula Schargorodsky, that talks about Colombia's Indian connection. 

It discusses the crucial role played by Indian Spiritual Guru and humanitarian leader, Founder of The Art of Living, Sri Sri Ravi Shankar in the peace process that ended one of the bloodiest conflicts in the region.

On this Guru Poorinma day, do run this on your TV channel.

if you need further information, kindly get in touch with us.. 



Warm Regards

Rajalakshmi
Media Co-ordinator - Tamil Nadu
9884017767



The Art of Living Tamilnadu

VYAKTI VIKAS KENDRA TAMILNADU, 
No:55/58, 5TH CROSS ST., TRUSTPURAM, 
KODAMBAKKAM, CHENNAI-24. 
Ph:044 4213 3203 / 89399 02444


Tuesday, 12 July 2016

Railway Station Amenities SOCIAL AUDIT : Press Meet : 13/07/2016, 2pm, PARK Station.. 2pm... சட்ட பஞ்சாயத்து இயக்கம் ரயில் நிலையங்களில் நாளை கள ஆய்வு...

தமிழ் அறிக்கை கீழே...

To the Editor:

Followup of the PIL filed up Satta Panchayat Iyakkam is coming up for hearing in highcourt(1st bench) on Friday(July15th). On this day, railway officials suppose to submit the status report of toilet, drinking water amenities provided in all stations(Chennai,suburban). As a petitioner, we are going to conduct social audit(Inspection) in selective stations to cross the amenities and the collective report will be submitted during the case hearing. In this regard, 3 teams of Satta panchayat executives( 1. velachery-Park 2. Avadi - Central 3. Tambaram-park) conducting inspection tomorrow(July13th) at 10am to 1pm and the results of the survey will be shared with press at 2pm in PARK Station.

Thanks,
Senthil Arumugam,
General Secreatary, Satta Panchayat Iyakkam,
87545-80274, 87545-80270


சட்ட பஞ்சாயத்து இயக்கம் ரயில் நிலையங்களில் கள ஆய்வு..
காலை 10மணி- மதியம் 1 மணி (புதன்,13/7/2016)...
பத்திரிகையாளர் சந்திப்பு: புதன், 13/7/2016, மதியம் 2 மணி, பார்க் ரயில் நிலையத்தில்.
8754580274,8754580270

வணக்கம்,
இரயில் நிலையங்களில் கழிப்பறை,குடிநீர் வசதி ஏற்படுத்தித்தரவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் பிப்ரவரி 2016ல் தொடர்ந்த  பொதுநலவழக்கு வருகிற வெள்ளியன்று(ஜீலை 15) 3வது முறையாக மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. அதுசமயம், ரயில்வே நிர்வாகம் சென்னை மற்றும் புறநகர் பகுதி ரயில் நிலையங்களில் தாங்கள் ஏற்படுத்தியுள்ள  அடிப்படை வசதிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர். மனுதாரர் என்ற அடிப்படையில், தேர்ந்தெடுத்த சில ரயில்நிலையங்களில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் நாளை(ஜீலை 13) காலை 10மணி முதல் மதியம் 1மணிவரை அடிப்படை வசதிகள் உள்ளனவா என்று ஆய்வு செய்ய உள்ளனர். தாம்பரம்-பார்க், வேளச்சேரி -பார்க், ஆவடி-செண்ட்ரல் போன்ற 3 வழித்தடங்களில் 3 குழுவாகப் பிரிந்து ஆய்வுசெய்ய உள்ளோம். ஆய்வு முடிவுகளை 2 மணிக்கு "பார்க் ரயில் நிலையத்தில்" நடைபெறவுள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட உள்ளோம்.
இந்த 3 குழுவினரின் அறிக்கை, புகைப்பட ஆதரங்களைத் தொகுத்து வெள்ளியன்று நடைபெறவுள்ள வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதியிடம் கொடுக்க உள்ளோம்.


செந்தில் ஆறுமுகம்,
பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
8754580274, 8754580270

Tuesday, 5 July 2016

கவிஞர் அறிவுமதி எழுதிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் அமெரிக்க தமிழ்விழாவில் வெளியிடப்பட்டது

அன்புடையீர் வணக்கம்,
 
கீழ்கண்ட செய்தியை தங்கள் ஊடகத்தில் வெளியிட்டு மக்களுக்கு தமிழ் பிறந்தநாள் பாடலை கொண்டுசெல்ல  உதவுமாறு தாழ்மையுடன்  கேட்டுக்கொள்கிறோம் ..
 
 
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை(FetNA) 2016 தமிழ் விழாவில், கவிஞர் அறிவுமதி எழுதிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் வெளியிடப்பட்டது.
 
பேராசிரியர் டாக்டர் கோ அன்பு கணபதி, திரு. பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் பாடலை வெளியிட கனடாவிலிருந்து வந்திருந்த ப்ரெண்டா பெக், டாக்டர் சுபாஷிணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
 
பிசாசு பட இசையமைப்பாளர் அரோல் கரோலி இசையமைப்பில் பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் மற்றும் அவரது மகள் உத்ரா உன்னி கிருஷ்ணன் இந்த பாடலை பாடியுள்ளார்கள். நீண்ட காலம் நீடு வாழ வேண்டும்... என்று தொடங்கும் இந்த பாடல் பிறந்த நாள் வாழ்த்துடன் நிறைவு பெறுகிறது.
 
உலகத் தமிழ்க் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல் பரிசாக, இதை வெளியிடுவதாக கவிஞர் அறிவுமதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். மேலும், உலகத் தமிழர்கள் இந்தப் பாடலை, தங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் விழாவில் பாடி, தமிழில் வாழ்த்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
வலைத் தமிழ் இணையத்தளம் சார்பில்  இந்த பாடல் தயாரிப்பு மற்றும் வெளியீட்டிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
 
 பாடல் வரிகளை மனனம் செய்ய நீங்கள் சிரமப்பட வேண்டாம் என்பதற்காக கீழே வரிகள்:
 
நீண்ட நீண்ட காலம்
 
நீ நீடு வாழ வேண்டும்
 
நீண்ட நீண்ட காலம்
 
நீ நீடு வாழ வேண்டும்
 
வானம் தீண்டும் தூரம்
 
வளர்ந்து வாழ வேண்டும்
 
அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
 
பண்பு வேண்டும் பணிவு வேண்டும்
 
எட்டுத்திக்கும் புகழ வேண்டும்
 
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்
 
உலகம் பார்க்க உனது பெயரை
 
நிலவுத் தாளில் எழத வேண்டும்
 
சர்க்கரை தமிழள்ளி தாலாட்டு நாள்சொல்லி வாழ்த்துகிறோம் ...
 
பிறந்தநாள் வாழ்த்துகள் ... பிறந்தநாள் வாழ்த்துகள் ...
 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
 
-கவிஞர் அறிவுமதி
 
 
 
நன்றி.
அ.சுரேஷ்
Info@ValaiTamil.Com